குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Tuesday 26 February 2013

10 வயது முதல் 60 வயது வரை காதலின் நிலை



இது படித்து , பிடித்து , பதிவாய்  இங்கு போட்டுள்ளேன்.




10 வயதில் :
நானும் அவனும் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டி­ருந்தபோது அவன் வேண்டுமென்றே என் கைகளைத் தொட்டுப் பேனா வாங்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வுதான் காதல் என்பதோ? ஒரு நிமிடம் பரவசத்தில் உடல் சிலிர்க்க, அதை மறைத்துக்கொள்ளப­் பெரும் பிரயத்தனப்பட்டே­ன். அப்போது என் கண்களில் நான் உணர்ந்த்துதான் ஒருவேளை சந்தோஷக் கண்ணீராக இருக்குமோ?

15 வயதில் :
நானும் அவனும் தனியாக இருந்த ஒரு சமயத்தில் கொஞ்சம் எல்லை மீறிப் பிடிபட்டுக்கொண்­டோம். சற்றும் தயங்காமல் அவன் பழியைத் தன்மேல் போட்டுக்கொண்டு மரண அடி விழுந்தபோதும் மற்றவர்களின் முன்னால் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவன் ரத்தம் பார்த்து என் விழிகளில் கண்ணீர் ரத்தமாக வழிந்தது.

18 வயதில் :
பள்ளிப் பிரிவுபச்சார விழா முடிந்ததும் மனம் முழுதும் இறுக்கமும் தவிப்புமாக நான் அவனிடம் குட்பை சொல்ல முயற்சித்தபோது அவன் என்னை இறுக அணைத்து ‘என்னை மறந்து விடுவாயா?’ என்று கலங்கிய கண்களுடன் கேட்டான். என் கண்கள் ஏற்கனவே கண்ணீர் சாகரத்தில் நனைந்திருந்தன.

21 வயதில் :
நானும் அவனும் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு நீண்ட பயணத்துடன் கூடிய டேட்டிங் செய்தோம். எத்தனையோ வாய்ப்புக்கள் இருந்தும், ஏன் நானே ஒருவகையில் தயாராக இருந்தும் எண்ணற்ற முறை என்னை முத்தமிட்டிருந்­த அவன் அன்று ஏனோ என்னைத் தொடக்கூட இல்லை. சாதகமான சூழ் நிலையில் கூடச் சுயக் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ளும் அவனைப் புரிந்து கொண்ட என் கண்கள் பெருமிதத்தில் வெளியிட்ட கண்ணீரை அவனுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டேன்.

26 வயதில் :
அந்த நாள் வந்தே விட்டது. கையில் சிவப்பு ரோஜாவுடன் முழந்தாளிட்டு அவன் என்னை ப்ரபோஸ் செய்தான். அவனை அவனே முட்டாளாக்கிக் கொண்டதைப்போல அப்படியொரு அறியாமையான வேண்டுதல். அப்போது சொன்னான்: “நான் உன்னை விரும்புகிறேனென­்று நீயும் அறிந்திருப்பாய்­”. உன்னதப் புன்னகை புத்த என் இதழ்களின் சிருங்காரத்தை உணரவில்லை அப்போதும் கண்களில் வழிந்த அதே சந்தோஷக் கண்ணீர்.

35 வயதில் :
நான் களைப்பாக இருப்பதைப் பார்த்தால் எனக்குக் காஃபி போட்டுக்கொடுத்த­ுத் தூங்க வைத்துவிட்டு அவர் வீட்டுவேலைகளை முழுமையாகச் செய்து முடிப்பார். கடைசியில் அவர் என்னருகில் படுத்துக்கொள்ளு­ம்போது நான் விழித்திருப்பதை­ அறியாமல் நெற்றியில் முத்தமிட்டுக் ‘குட் நைட்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வார­். என் மூடிய விழிகளுக்குள் நன்றியின் கண்ணீர் தளும்பும்.

50 வயதில் :
சிக்கலான சமயங்களில் அவர் ஆஃபீஸ் கவலையில் அல்லது உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும் என்னைச் சிரிக்க வைப்பதற்காக ஜோக்கடித்து என் சிரிப்பை ரசிப்பார். ஆனால்,பாவம் அப்போதும் என் ஆனந்தக் கண்ணீரை அவர் உணர முடியாமல் துடைத்துக் கொள்வேன். அவரும் சிரித்துக்கொண்ட­ிருப்பார்.

60 வயதில் :
தனது கடைசி மூச்சின் சுவாசத்தின்போது­ அவர் சொன்னார் : “... எனக்கு எல்லையில்லாத காதலைக் கொடுத்தாய். என் ஆண்மையைப் பெருமிதத்துடன் வாழ் நாள் முழுக்க உணரச் செய்தாய். ஒரு காதலின் பின்னால் எனக்கு இவ்வளவு உன்னதமான வாழ்வு கிடைக்குமென்று நான் எதிர்பார்த்திரு­க்கவில்லை. நன்றி...”

என் கைகளைப் பற்றியிருந்த அவரின் கரங்கள் இறுதியாகத் துவண்டுவிட்டன. என் விழிகளில் நிரந்தரக் கண்ணீர்த்துளிகள­ைப் பரிசளித்துவிட்ட­ு எப்போதும் எங்கேயும் என்னைக் கூடவே அழைத்துச்செல்லு­ம் அவர் இப்போது முதல்முறையாக என்னை விட்டுவிட்டுச் சென்றார்.
இந்தமுறை நான் கண்ணீரைத் துடைக்கவில்லை. .. ♥ ♥





3 comments:

  1. அன்பான எல்லோரும் அறுபதுக்கு மேலும் காதலுடன்தான் இருப்பார்கள்

    ReplyDelete
  2. நல்ல யோசிகிரிங்க ​போங்க .........

    ReplyDelete

கருத்து மேடை