குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Wednesday, 27 February 2013

சிரிப்பா சிரிக்குது ( திருமண ) பொழப்பு

வணக்கம்

.
இது முழுக்க முழுக்க கந்தசாமி மேட்டர் தான்.



கந்தசாமி தன்னுடைய டாக்டரை பார்க்கப் போனார்.டாக்டரிடம் தான் அதிக நாட்கள் வாழ்வதற்க்கு என்ன செய்ய வேண்டும் என கேட்டார். அவரும் தன பங்கிற்கு திருமணம் சேது கொள் என்றார்.கந்தசாமிக்கு வியப்பு , அது எப்படி டாக்டர் கல்யாணம் செஞ்சா அதிக நாள் வாழ முடியும் என் கேட்க ,

அதற்க்கு கல்யாணம் செஞ்சா அதிக நாள் வாழ் முடியாது . ஆனா கல்யாணம் செஞ்சா வாழணும்னு நெனைக்கிற ஆசை வரவே வராது . என்றார்.


--------------------------------------------------------------------------------------------------------------------

கந்தசாமி தரும் மூன்று பாய்ண்ட்ஸ் ( இது சிரிக்க அல்ல சிந்திக்க )



விட்டுக் கொடு விருப்பம் நிறைவேறும்

மன்னிப்பு கொடு தவறு குறையும்

மனம் விட்டு பேசு அன்பு பெருகும்



-------------------------------------------------------------------------------------------------------------------------


கந்தசாமி ஒரு இண்டர்வியுக்கு போனார் அது வக்கீல் அலுவலகம்.அவரிடம் இப்படி கேள்வி கேட்கப் பட்டது.

கே - நல்ல வக்கீலுக்கும் கெட்டிகார வக்கீலுக்கும் என்ன வேறு பாடு ?


கந்தசாமி - நல்ல வக்கீலுக்கு சட்டம் தெரியும் , கெட்டிகார வக்கீலுக்கு நீதிபதியை தெரியும் .


கந்தசாமிக்கு வேலை உடனே கிடைச்சது.


--------------------------------------------------------------------------------------------------------------------------


இது எனக்கு வந்த sms
 
How kumki songs are related to Exams?
-----------------------------------------------

When we r studing? :-
ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல..!
...
During exams while looking for answers at Girls :-
நீ எப்போ புள்ள சொல்லப்போற!

After getting the answers :-
சொல்லிட்டாளே.. அவ ஆன்சர..!

If we get 40% and above :
ஐயையோ.. ஆனந்தமே!

If we get below 40 :
சொய்.. சொய் :)


-------------------------------------------------------------------------------------------------------------------


மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா







Tuesday, 26 February 2013

10 வயது முதல் 60 வயது வரை காதலின் நிலை



இது படித்து , பிடித்து , பதிவாய்  இங்கு போட்டுள்ளேன்.




10 வயதில் :
நானும் அவனும் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டி­ருந்தபோது அவன் வேண்டுமென்றே என் கைகளைத் தொட்டுப் பேனா வாங்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வுதான் காதல் என்பதோ? ஒரு நிமிடம் பரவசத்தில் உடல் சிலிர்க்க, அதை மறைத்துக்கொள்ளப­் பெரும் பிரயத்தனப்பட்டே­ன். அப்போது என் கண்களில் நான் உணர்ந்த்துதான் ஒருவேளை சந்தோஷக் கண்ணீராக இருக்குமோ?

15 வயதில் :
நானும் அவனும் தனியாக இருந்த ஒரு சமயத்தில் கொஞ்சம் எல்லை மீறிப் பிடிபட்டுக்கொண்­டோம். சற்றும் தயங்காமல் அவன் பழியைத் தன்மேல் போட்டுக்கொண்டு மரண அடி விழுந்தபோதும் மற்றவர்களின் முன்னால் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவன் ரத்தம் பார்த்து என் விழிகளில் கண்ணீர் ரத்தமாக வழிந்தது.

18 வயதில் :
பள்ளிப் பிரிவுபச்சார விழா முடிந்ததும் மனம் முழுதும் இறுக்கமும் தவிப்புமாக நான் அவனிடம் குட்பை சொல்ல முயற்சித்தபோது அவன் என்னை இறுக அணைத்து ‘என்னை மறந்து விடுவாயா?’ என்று கலங்கிய கண்களுடன் கேட்டான். என் கண்கள் ஏற்கனவே கண்ணீர் சாகரத்தில் நனைந்திருந்தன.

21 வயதில் :
நானும் அவனும் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு நீண்ட பயணத்துடன் கூடிய டேட்டிங் செய்தோம். எத்தனையோ வாய்ப்புக்கள் இருந்தும், ஏன் நானே ஒருவகையில் தயாராக இருந்தும் எண்ணற்ற முறை என்னை முத்தமிட்டிருந்­த அவன் அன்று ஏனோ என்னைத் தொடக்கூட இல்லை. சாதகமான சூழ் நிலையில் கூடச் சுயக் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ளும் அவனைப் புரிந்து கொண்ட என் கண்கள் பெருமிதத்தில் வெளியிட்ட கண்ணீரை அவனுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டேன்.

26 வயதில் :
அந்த நாள் வந்தே விட்டது. கையில் சிவப்பு ரோஜாவுடன் முழந்தாளிட்டு அவன் என்னை ப்ரபோஸ் செய்தான். அவனை அவனே முட்டாளாக்கிக் கொண்டதைப்போல அப்படியொரு அறியாமையான வேண்டுதல். அப்போது சொன்னான்: “நான் உன்னை விரும்புகிறேனென­்று நீயும் அறிந்திருப்பாய்­”. உன்னதப் புன்னகை புத்த என் இதழ்களின் சிருங்காரத்தை உணரவில்லை அப்போதும் கண்களில் வழிந்த அதே சந்தோஷக் கண்ணீர்.

35 வயதில் :
நான் களைப்பாக இருப்பதைப் பார்த்தால் எனக்குக் காஃபி போட்டுக்கொடுத்த­ுத் தூங்க வைத்துவிட்டு அவர் வீட்டுவேலைகளை முழுமையாகச் செய்து முடிப்பார். கடைசியில் அவர் என்னருகில் படுத்துக்கொள்ளு­ம்போது நான் விழித்திருப்பதை­ அறியாமல் நெற்றியில் முத்தமிட்டுக் ‘குட் நைட்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வார­். என் மூடிய விழிகளுக்குள் நன்றியின் கண்ணீர் தளும்பும்.

50 வயதில் :
சிக்கலான சமயங்களில் அவர் ஆஃபீஸ் கவலையில் அல்லது உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும் என்னைச் சிரிக்க வைப்பதற்காக ஜோக்கடித்து என் சிரிப்பை ரசிப்பார். ஆனால்,பாவம் அப்போதும் என் ஆனந்தக் கண்ணீரை அவர் உணர முடியாமல் துடைத்துக் கொள்வேன். அவரும் சிரித்துக்கொண்ட­ிருப்பார்.

60 வயதில் :
தனது கடைசி மூச்சின் சுவாசத்தின்போது­ அவர் சொன்னார் : “... எனக்கு எல்லையில்லாத காதலைக் கொடுத்தாய். என் ஆண்மையைப் பெருமிதத்துடன் வாழ் நாள் முழுக்க உணரச் செய்தாய். ஒரு காதலின் பின்னால் எனக்கு இவ்வளவு உன்னதமான வாழ்வு கிடைக்குமென்று நான் எதிர்பார்த்திரு­க்கவில்லை. நன்றி...”

என் கைகளைப் பற்றியிருந்த அவரின் கரங்கள் இறுதியாகத் துவண்டுவிட்டன. என் விழிகளில் நிரந்தரக் கண்ணீர்த்துளிகள­ைப் பரிசளித்துவிட்ட­ு எப்போதும் எங்கேயும் என்னைக் கூடவே அழைத்துச்செல்லு­ம் அவர் இப்போது முதல்முறையாக என்னை விட்டுவிட்டுச் சென்றார்.
இந்தமுறை நான் கண்ணீரைத் துடைக்கவில்லை. .. ♥ ♥





Monday, 25 February 2013

மூதேவி வரம் கொடுத்தாலும் நல்லது நடக்கும்



வணக்கம்  




செல்வம் என்ற வியாபாரிக்கு மிகவும் பசித்தது


அப்போது தூரத்தில் ஒரு மாமரம் தென்பட்டது.அதனருகில் சென்றான்.மாமரத்தில் காய் கனிகள் காய்த்து தொங்கின.அதன் கீழே ஒரு முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார்.செல்வன் தனது பசியை போக்க மாம்பழம் பறித்து சாப்பிட எண்ணினான்.ஆனால் எட்டவில்லை.எனவே அவன் கல்லை எடுத்து ஒரு பழத்தை குறி வைத்து எறிந்தான்.ஆனால் பழம் விழவில்லை.அந்த கல்தான் மரத்தில் பட்டு  மீண்டும் வந்து அந்த முனிவரின் தலையை பதம் பார்த்தது.

அவர் உனக்கு மன்னிப்பே கிடையாது.இதோ வாங்கிக்கொள் என் சாபத்தை;இன்னும் ஒரு வருடத்தில் நீ இறப்பாய்.”

அவன் கெஞ்சினான் கதறினான்.அவனைக் கண்டு முனிவர் மனமிறங்கினார்.

“கொடுத்த சாபம் கொடுத்ததுதான்.நீ இறந்தே தீருவாய்.ஆனால் ஒன்று மட்டும்தான் என்னால் கூற முடியும்.நம்பிக்கையோடு இரு.ஒருவேளை உனக்கு விமோசனம் கிடைக்கலாம்.” என்று கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு சென்றார்.

“எப்படியும் ஒரு வருடத்தில் இறக்கப்போகிறோம்;அதனால் இனிமேலாவது நல்லது செய்வோம்.அப்போதுதான் நமக்கு சொற்கமாவது கிடைக்கும்.” என்ற முடிவுடன் தனது ஊருக்கு சென்றான்.தனது சொத்துக்களை எல்லாம் விற்று ஏழைகளுக்கு உதவி செய்து வந்தான்.எட்டு மாதங்கள் ஓடின.அவன் சொத்துக்கள் அனைத்தும் கரைந்தன.எனவே அவன் துறவறம் மேற்கொள்ள நினைத்தான்.

எனவே ஒரு துறவற மடத்தில் சேர்ந்தான். 

“சீடர்களே! இன்று உங்களூக்கு தவத்தை பற்றி கூறப்போகிறேன்.நமது ஐம்புலங்களையும் கட்டுப்படுத்தி ஒரு நோக்கத்திக்காக ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வேண்டி செய்வதுதான் தவம்....” இவ்வாறாக அவர் கூறிக்கொண்டிருந்தார்.

“குருவே நான் ஸ்ரீதேவியிடம் ஒரு வரம் கேட்கவேண்டும். எத்தனை காலங்கள் தவம் செய்தால் எனக்கு ஸ்ரீதேவியின் தரிசனம் கிடைக்கும்?” என்று ஒருவன் கேட்டான்.

“ஒரு வருடம் கடுமையான தவம் செய்தால் ஸ்ரீதேவி திரிசனம் கிட்டும்.” என்று குரு கூறினார்.

“மூன்று மாதங்கள் தவம் செய்தால் எந்த கடவுளின் தரிசனம் கிடைக்கும்?” என்று செல்வன் கேட்டான்.ஏனென்றால் அவன் இன்னும் உயிரோடு இருக்கப் போவது நான்கு மாதங்கள்தானே.

குருவுக்கு கோபம் வந்துவிட்டது.

“மூன்று மாதங்கள் தவம் செய்தால் மூதேவி தரிசனம்தான் கிடைக்கும்.” என்று ஒருவித எரிச்சலோடு கூறினார்.அவனோ அதை நம்பிவிட்டான்.

ஆனால் மூதேவி என்னும் தெய்வம் நமக்கு கஷ்டங்கள் கொடுப்பது.அதனால் யாரும் அதனை வேண்டி தவம் செய்யமாட்டார்கள்.ஆனால் இவனோ தவம் செய்ய முடிவெடுத்துவிட்டான்.
இறுதியில் மூதேவி மகிழ்ந்து அவன் கண்முன் தோன்றினாள்.
“மானிடா! உன் தவத்தைக் கண்டு மெச்சினோம்;என்ன வரம் வேண்டும் கேள்!”

“நான் நூறு வயது வரை உயிரோடு வாழ வேண்டும்.எனக்கு அந்த வரத்தைக் கொடுத்தருளுங்கள்.”

“நான் யாருக்கும் வரம் கொடுப்பதில்லை.ஆனால் உன் நம்பிக்கையான தவம் உன்னை காப்பாற்றியது.நீ கேட்டவாறே நடக்கட்டும்” என்று வரம் வழங்கி சென்றுவிட்டாள்.

அப்போது ‘உன் நம்பிக்கை உனக்கு விமோசனம் தரும்’ என்று முனிவர் கூறியது ஞாபகம் வந்தது.தனது குருவிடம் நடந்தவற்றை கூறினான்.அவரும் அவனது நம்பிக்கையை பாராட்டினர்.

அவன் கடைசிவரை சன்னியாசியாக இருந்து நிறைய தவ வலிமை பெற்று மக்களுக்கு நிறைய வரங்கள் கொடுத்தான்.இறுதியில் நூறு வயதில் இறந்து சொர்க்கம்  சேர்ந்தான்.

மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா