வணக்கம்
நேற்று போட்ட பதிவிற்கு ( கணக்குப் புதிர் ) நல்ல வரவேற்ப்பு.எனவே அடுத்த கணக்குப் புதிரில் விடையை கொடுக்காமல் அடுத்த பதிவில் போடலாம் என எண்ணம்.
நம்மளை யாராவது உன்னால முடியாதுன்னு சீண்டிகிட்டே இருப்பாங்க.அவங்களுக்கு இதே வேலயாவும் இருக்கும்.
ஐன்ஸ்டீன் - அவரது ஆசிரியரால் ' மண்டு' சாமர்த்தியம் போதாது என்று ரிப்போர்ட் கார்டுடன் வெளியேற்றப் பட்டவர்.அப்போது கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து இருந்தால் உலகம் ஒரு மாபெரும் அறிவியலாரை இழந்திருக்கும்.
நோர்மா ஜீன் பேக்கர் - இந்தப் பெண்மணி மாடலாக ஆசைப்பட்டு ஒரு மாடலிங் கம்பெனிக்குப் போய் வாய்ப்பு கேட்டார்.' நீ பேசாமல் எதாவது கிளார்க் வேலைக்குப் போ .அல்லது கல்யாணம் செய்துக்கொள் ' இத இரண்டுக்கும் தான் நீ லாயக்கு என்று அவமானப் படுத்தி அனுப்பி விட்டார்கள்.நோர்மா தனது மாடலின் கனவை அத்தோடு விட்டிருந்தால் ' மர்லின் மன்றோ ' என்ற அற்புத நாயகி கிடைத்திருக்க மாட்டார்.
மைக்கேல் ஜோர்டான் - உலகப் புகழ் பெற்ற கூடை பந்தாட வீரரை ,அவர் பள்ளிக் கூட கூடை பந்தாட டீமில் விளையாட தகுதி இல்லாதவர் என்று ஒதுக்க பட்டவர் . அப்போது அவர் சோர்ந்திருந்தால் உலகப் புகழ் அடைந்திருக்க மாட்டார் .
இவ்வளவு என் இந்தப் பதிவை போடுவதற்குள் நான்கு முறை மின்சாரம் போயிட்டது.சரி ஆணியே புடுங்க வேண்டாம்னு எந்திரிச்சா திரும்பி கோவிச்சிட்டு போன சம்சாரம் மாதிரி திரும்பி வந்திருச்சு.பாருங்க நான் இந்தப் பதிவை போடனம்னு இருக்கு.நீங்க படிக்கணும்னு இருக்கு.
உண்மையுடன்
அவனி சிவா
No comments:
Post a Comment
கருத்து மேடை