குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Saturday 3 November 2012

டாஸ்மாக் கடைக்கு வந்த கடவுள் - கா ,கா , த , மொ நிறைந்த பதிவு

வணக்கம்


தலைப்பின் விளக்கம் முதலில் . காதல் , காமெடி ,தத்துவம் ,மொக்கை இதனை இப்படி முழுவதும் எழுதினால் பதிவ எப்போது படிப்பது , எனவே இப்போது வரும் திரைப் படத்தின் தலைப்பை போலவே சுருக்கமாக இருக்கிறது.பதிவை முழுவதும் படித்தால் கண்டிப்பாய் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் . மேட்டர்களை தந்த நண்பர்களுக்கு நன்றி . வாங்க போகலாம் .

---------------------------------------------------------------------------------------------------------------


 கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார் , நம் குடிமக்களை பார்த்து அப்படி என்ன தான் இருக்கு இந்த , TASMAC கடைக்குள் 'இங்க மட்டும் என்ன எப்பொவும் கூட்டம் எப்படி என  காண, உள்ளே சென்று ORDER செய்தார் , 5 BEER முழுவதும் முடிந்தது, ஒரு வித்தியாசமும் தெரியாததல் தொட்ர்ந்தார் , 2 FULL.. அப்பொழுதும் ஒண்ணும் ஆகல..

மீண்டும் ஆரம்பிதார் , 2 BEER..

கடைகாரர்க்கு ஆச்ச்ரியம் தாளாமல் , கேடடார் .. "யார் யா நீ?? இவ்வளவு சாப்பிட்டும் உனக்கு போதை எறல? மறுபடியும் கேட்குரே ?

" அதற்கு நம்ம கடவுள் " நான் தான் கடவுள் எனக்கு இந்த போதை ஒன்றும் செய்யாது" என்றார் .

கடைகாரர் : " தோ டா ..! தொரைக்கு இப்ப தான் ஏற ஆரம்பிச்சி இருக்கு..! நடக்கட்டும் ..! நடக்கட்டும் ..!"

------------------------------------------------------------------------------------------------------------


  கபீர் தாஸ் ஒரு நாள் பகலில் எழுதிக் கொண்டு இருக்கும் போது அவருடைய நண்பர் வந்து அமர்ந்தார். "எனக்கும் என் மனைவிக்கும் எப்போதும் வாக்குவாதம், சண்டை என என் வாழ்க்கையே நரகமாகி விட்டது. நான் என்ன செய்வது?" என்று கேட்டார்.

எழுதிக் கொண்டிருந்த கபீர்தாஸ் "சற்று உட்காருங்கள். இதை எழுதி முடித்துவிட்டு சொல்கிறேன்" என்றார். சொல்லிவிட்டு கபீர்தாஸ் உள்பக்கம் திரும்பி மனைவியை அழைத்து "சற்று விளக்கேற்றிக் கொண்டு வ
ருகிறாயா? என்னால் எழுத முடியவில்லை" என்று சொன்னார்.

நல்ல பகல் நேரம். வெளிச்சமாக இருக்கிறது. இவர் ஏன் விளக்கு கேட்கிறார் என்று ஒன்றும் புரியாமல் நண்பர் பார்த்துக் கொண்டு இருந்தார்.

மனைவி ஒரு சின்ன விளக்கு ஏற்றிக் கொண்டு வந்து கணவர் பக்கத்தில் வைத்து விட்டு போனார். கபீர்தாஸ் மறுபடியும் மனைவியை கூப்பிட்டு "எங்கள் இருவருக்கும் குடிக்க சற்று பால் கொண்டு வா" என்றார்.

கொஞ்சநேரத்தில் மனைவி இரண்டு டம்ளர்களில் பாலை கொண்டு வந்து கொடுத்து விட்டு உள்ளே போனார். கபீர் பாலை எடுத்து ஆனந்தமாக அருந்தினார். ஆனால் நண்பரால் குடிக்க முடியவில்லை. காரணம் பாலில் சர்க்கரை என்று நினைத்து அந்த அம்மையார் உப்பைப் போட்டு இருந்தார்.

உள்ளே இருந்து குரல் கேட்டது. "சர்க்கரை போதுமா? இல்லை, இன்னும் வேண்டுமா?"

"இல்லை, இல்லை, இதுவே அற்புதமாக இருக்கிறது" என்று சொன்ன கபீர் முழுவதுமாக குடித்து விட்டு காலி கோப்பையை கீழே வைத்தார்

பகலில் ஏன் விளக்கு என்று கணவர் மீது குற்றம் காணாத மனைவி, பாலில் ஏன் உப்பு போட்டாய் என்று மனைவி மீது குற்றம் காணாத கணவர். தம்பதிகள் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். குற்றம் அற்ற பார்ட்னர் கிடைப்பது அரிது.

நண்பருக்கு விடை கிடைத்து விட்டது. கபீரை நமஸ்கரித்து விட்டு புறப்பட்டுவிட்டார்!
-------------------------------------------------------------------------------------------------------------
  அடுப்பில் ஒரு வடை சட்டியும்.. குக்கரும் பக்கத்து பக்கத்துல இருந்துச்சாம். அப்போ வட சட்டிய பாத்து குக்கர் சொன்னதாம்.. நீ இவ்ளோ கறுப்பா இருக்குறீயே.. செவப்பா இருந்தா எம்பூட்டு அழகா இருப்பேனுதாம்..

உடனே வடசட்டி, “ நான் கறுப்பா இருக்கறப்பவே இப்படி நீ இவ்ளோ விசில் அடிக்கிறீயே.. செவப்பா இருந்திருந்தா.. எவ்ளோ சேட்டை
--------------------------------------------------------------------------------------------------------------
  ஓப்பன் பண்ணினா.. ஒரு அழகான கிராமம். ஊர் பூராம் கரெண்ட் இருக்கு..!

அடேங்கப்பா.. ரொம்ப செலவாகும் போலிருக்கே.. சின்ன பட்ஜெட்ல பண்ற மாதிரி கத சொல்லுங்க தம்பி 
--------------------------------------------------------------------------------------------------------------
 எடுக்கிறவன் அழுதா
அது சினிமா.
பாக்குறவங்க அழுதா
அது சீரியல்
--------------------------------------------------------------------------------------------------------------
 மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா 

2 comments:

  1. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com

    பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

    ReplyDelete
  2. ஹா... ஹா... கலக்கல்...

    /// ஓப்பன் பண்ணினா.. ஒரு அழகான கிராமம். ஊர் பூராம் கரெண்ட் இருக்கு..!

    அடேங்கப்பா.. ரொம்ப செலவாகும் போலிருக்கே.. சின்ன பட்ஜெட்ல பண்ற மாதிரி கத சொல்லுங்க தம்பி ///

    இன்றைய நிலைமை...

    ReplyDelete

கருத்து மேடை