வணக்கம்
அந்த விமர்சனம் இதோ
படம் தந்த கூகுளுக்கும் நன்றி
நீ தான் என் பொன்வசந்தம் என ராஜாவை பற்றி கூறி என்னைப்ப் போன்றவர்களுக்கு பால் வார்த்த லக்கி லுக் அவர்களுக்கு நன்றி .
கெளதம் மேனன் முதல் முறையாக இசை அரசனுடன் சேர்ந்த போதே இணையத்தில் மறைமுக எதிர்ப்புகள். ஹாரிஸ் , ரஹ்மான் இவர்கள் தான் சரியான இணை என்பது. கழுதைகளுக்கு தெரியுமா ? கற்பூர வாசனை .மேல குறிப்பட்ட இருவரும் நல்ல ( நல்ல என்றால் என்னவென்று விளங்கிக் கொள்ளவும் )
படம் வெளியான சமயத்தில் இருந்து பத்திரிக்கை , தொலைக்காட்சி , இணையம் இப்படி எந்த ஒரு வடிவத்தில் இருந்தாலும் மறக்கடிக்கப்பட்டது இசை அரசனின் இசை பற்றி .
ராஜாவை புரிந்துக் கொள்ள அவரின் இசையை கேட்டாலே போதும் .அவரைப் புரிந்துக் கொள்ள மட்டும் அல்ல ( புரிந்துக் கொள்ளுங்கள் )
தாமதமாய் எழுதினாலும் எதிர்ப் பார்த்ததை விட சிறப்பாய் எழுதியமைக்கு நன்றி . இதன் தொடர்பை ( லிங்க் ) தருவதைக் காட்டிலும் அவரின் விமர்சனத்தை அப்படியே தருகிறேன் . படித்து மகிழுங்கள் கூடவே அவரின் பதிவிற்கு சென்று பாராட்டுங்கள்.
அந்த விமர்சனம் இதோ
படம் தந்த கூகுளுக்கும் நன்றி
யானை விழுந்தால்
எழ முடியாது என்பார்கள். ஒருவேளை எழுந்துவிட்டால் முன்பைவிட கம்பீரமாக
நடக்கும். நடுநிசிநாய்களில் விழுந்த கவுதம் நீ.எ.பொ.வில், ராஜாவின் தோளில்
கைபோட்டு கம்பீரமாக எழுந்து நின்றிருக்கிறார். கடந்த பதினைந்து, இருபது
ஆண்டுகளில் வந்த அத்தனை காதல் படங்களின் உணர்வுகளையும் ஒரே படத்தில்
மொத்தமாக கொட்டித் தந்திருக்கிறார். உருகி, மருகி காதலித்த ஒருவராலேயே
இம்மாதிரி படமெடுக்க முடியும். கவுதம் நல்ல காதலன். கொஞ்சம் விட்டாலும்
‘குஷி’யாகி விடக்கூடிய ஸ்க்ரிப்ட்டை லாகவமாகக் கையாண்டிருக்கும் கவுதமின்
சாமர்த்தியத்தை எப்படி மெச்சுவதென்றே தெரியவில்லை. லைக் யூ கவுதம்.
‘நீதானே என் பொன் வசந்தம்’ உங்களுக்கு பிடிக்க வேண்டுமானால் கீழ்க்கண்ட சில தகுதிகளில் ஏதேனும் ஒன்றேனும் இருக்க வேண்டும்.
• நீங்கள் ஆணாக இருக்க வேண்டும். அல்லது பெண்ணாக இருக்க வேண்டும்.
• உங்களுக்கு பார்ப்பதிலோ, கேட்பதிலோ பிரச்சினை இருக்கக்கூடாது.
• குறைந்தபட்சம் ஒரே ஒரு முறையாவது ஒருதலையாகவாவது காதலித்திருக்க வேண்டும்.
• காதலி/காதலன் திருமண ரிசப்ஷனுக்கு தெரியாத்தனமாகப் போய், மனம் நொந்து விடிய விடிய சரக்கடித்து மட்டையாகி இருக்க வேண்டும்.
இதெல்லாம் இல்லாமலேயே கூட பிடிக்கலாம். காதலைப் பிடிக்குமென்றால்...
வருணும், நித்யாவும் மட்டுமே வாழும் ஓர் உலகம். அந்த உலகத்துக்குள் அவர்களுக்கு தெரியாமல் உங்களால் பார்வையாளராக பிரவேசிக்க முடிந்துவிட்டால் போதும். நீ.எ.பொ. ராஜபோதை கொடுக்கும். பின்னணிக்கு ராஜா. போதாதா?
ஐந்தரை நிமிடங்களுக்கு ஒரே ஷாட்டாக நீளும் இண்டர்வெல் ப்ளாக் தமிழ் சினிமாவில் நிகழ்த்தப்பட்டிருக்கும் மகத்தான சாதனைகளில் ஒன்று. இவ்வாண்டின் சிறந்த நடிகை சமந்தா என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஒரே ஷாட் என்றாலும் குளோசப், மிட், லாங் என்று கேமிராமேன் நிகழ்த்தியிருக்கும் மேஜிக்கை உணரமுடியாதவர்கள் சினிமா பார்ப்பதே வீண்.
இசை ஒரு படத்தை எந்தளவுக்கு உச்சத்துக்கு கொண்டுச் செல்லும் என்பதற்கு இப்படம் ஓர் உதாரணம். காதலும், இசையும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள். இதை உணர்ந்ததால்தான் கவுதம் ராஜாவை தேர்ந்தெடுத்திருக்கிறார். இருபது வருடங்கள் கழித்துக் கேட்டாலும் சிலிர்க்கவைக்ககூடிய இசையை இளையராஜா அள்ளித் தெளித்திருக்கிறார். ராஜா இன்றி இப்படம் சாத்தியமாகியிருக்க வாய்ப்பேயில்லை.
சகலகலா வல்லவன், மன்னன் என்று ஆணாதிக்க மனோபாவமாய் ரசித்து வளர்ந்தவர்களுக்கு நாயகன், நாயகி இருவரையும் ஸ்க்ரிப்ட்டில் பேலன்ஸ் செய்து, கழைக்கூத்தாடியாய் கயிற்றில் நடந்திருக்கும் ‘நீ.எ.பொ.’ மாதிரி சப்ஜெக்டுகளை உடனடியாக ஏற்றுக் கொள்வதில் தயக்கமிருப்பது இயல்புதான். பெண் பார்வையில் காதலை சொன்ன ‘பூ’வுக்கு நேர்ந்த கதிதான் நமக்கு ஏற்கனவே தெரியுமே?
ஆனாலும், ஐஸ்ப்ரேக்கர் என்கிறவகையில் இது முக்கியமான படம். அனுபவ நிகழ்வுகளை அப்பட்டமாக, கொஞ்சம் கூடுதல் புத்திசாலித்தனத்தோடு திரைக்குக் கொண்டுவந்திருக்கும் பரிசோதனை முயற்சி. பின்னால் வருபவர்கள் இதை பின்பற்றி நிச்சயம் சிகரமேறுவார்கள்.
வெர்டிக்ட் : சான்ஸே இல்லை மச்சான். சச் எ வொண்டர்ஃபுல் மூவி...

மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
No comments:
Post a Comment
கருத்து மேடை