குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Monday, 1 April 2013

முட்டாள்களுக்கு ஒரு தினம் ? என்ன ஒரு முட்டாள் தனம்

வணக்கம்


ஏற்கனவே வாங்குபட்ட  வாய்ப்புகள் நிறைய உண்டு. படிக்கிற காலத்தில்  இருந்து பத்திரிக்கை படிக்கிற காலம் வரை அநேகமாய் முட்டாளாய் ஆனது உண்டு. கடைசியாய் ஆனது . கல்யாணத்தின் போது அய்யர் சொன்னது நல்ல நேரம் முடிய போகுது . பொண்ண வேகமா கூட்டிட்டு வாங்க . ( அப்ப இருந்து இன்னும் மீள முடியல்ல ) இப்போ பதிவுக்குப் போகலாம் . முட்டாள்களுக்கு ஒரு தினம் தான் இருக்குமா என்ன ? எழுத்தாளர் வா.மு.கோமு இன்று முகநூலில் பகிர்ந்த செய்தி .படித்துப் பாருங்கள் நாம் எந்த அளவிற்கு முட்டாளாய் இருக்கிறோம் என்று.






மீடியாக்கள் இன்று தங்கள் கட்டுக்குள் நம்மை வைத்துக்கொண்டிருக்கின்றன.
மின்சாரத் தட்டுப்பாட்டால் பலவீடுகளில் பல நாடகங்களின் தொடர்ச்சிகளை
பார்க்க முடியாமல் டென்சன் மிகுதியில் மின்சாரத்துறை அமைச்சரையும்,முதல்வரையும்
கடைசியாக வேலை முடித்து வரும் கணவனையும் திட்டி எரிந்து விழுகிறார்கள்.சீக்கிரமே
பலபேர் மனநோய் மருத்துவமனைக்கு சென்று மாத்திரை வில்லைகள் விழுங்க வேண்டி
நேரிடலாம்.


நாடகங்களில் பார்த்திர்கள் என்றால் வெள்ளிக்கிழமை நாளில் தான் பிணத்தை நடுவீட்டில்
போட்டு ஒப்பாரி வைத்துக்கொண்டிருப்பார்கள். 11 மணி நாடகத்தில் ஒரு ஆண் பிணம்
என்றால் 12 மணி நாடகத்தில் ஒரு பெண் பிணம். டிவி நடிகை ஒருத்தி சாப்பாட்டில் விஷம்
கலப்பாள். பார்வையாளர் வாய் விட்டே ,”இவ இருக்கா ஊரை ஒழிச்ச-----” என்பார்கள்.
சொந்த பந்தத்தில் யாரேனும் பெருசு மேலே போய்ச்சேர்ந்து விட்டால், அடக்கெரவம்
புடிச்ச கெழவியெ..சனி, ஞாயிறு பார்த்து செத்திருக்களாம்ல..இன்னிக்கி புதனாச்சே..
சீரியல் பார்க்கணுமே! என்று தான் வீட்டுப் பெண்கள் நினைக்கிறார்கள்.ஜப்பானில் நிலநடுக்கமாம் என்றால் ,காட்டறாங்ளா? என்று டிவி நோக்கி ஓடுகிறார்கள்.டிவி வாழ்வின்
அங்கமாக மாறி விட்டது.

பெட்ரோல் விலையேற்றத்திற்காக மத்திய அரசை கண்டித்து ஊர்வலம் போகிறோம்
வாருங்கள் என்றால்...இப்பத்தான் விஜய் அவரு தங்கச்சியெக் காப்பத்துறக்கு டுவாக்கி
எடுத்துட்டு பைக்ல சர்ர்ர்னு போறாரு..முன்னாடி போங்க பின்னாடி வர்றேன், என்கிறார்கள்.
அவர்கள் வாசல் தாண்டியதும் உள்ளார தூக்கிப் போட்டுட்டா அங்கபோய் எவன் சீரழியறது?
என்கிறார்கள். யாருக்காக இந்த போராட்டங்கள்? நோகாமல் நாம் எந்த நோம்பியை
கொண்டாடி இருக்கிறோம்?
பாக்கியராஜே ஈமு கோழி வளத்துறாராமா..நாமும் வளர்த்துவோம்...
சச்சின் டெண்டுல்கரே பூஸ்ட் சாப்டுட்டு தான் 6 அடிக்கறாராமா நாமும் பூஸ்ட் குடிப்போம்.
ரவீனா தாண்டனே சோத்துல உப்பு போட்டுதான் திங்கறாங்ளாமா ..நாமும் திம்போம்.ஒவ்வொன்றையும் நமக்கு டிவியில் கற்றுக் கொடுக்கிறார்கள்.நமக்குள்ளே
ஒரு கேள்வி வேண்டும். நம் மூளை சரியாக இயங்குகிறதா?
 
மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா  
 

No comments:

Post a Comment

கருத்து மேடை