வணக்கம்
செய்தி
பொங்கல் அன்று ஒரேநாளில் ரூ.94 கோடி மதுபானம் விற்பனை
நல்லா பொங்கிருச்சு பொங்கல்
-------------------------------------------------------------------
சமீபத்தில் வெளியாகி வெற்றிப் படமாய் ஓடிக் கொண்டிருக்கும் கும்கி படத்தில் இடம்பெற்ற குத்தாட்ட பாடலில் இருக்கும் தத்துவம் . உண்மையில் உணர வேண்டியது , இதோ அந்த பாடல் வரிகள்
கைளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நெனப்பே போதும் மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்
வானளவு விட்டத்திலே வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவையில்ல அது தான் பாசம் மச்சான்
நாம வேண்டிக் கொண்டாலும் வேண்டா விட்டாலும் சாமி கேக்கும் மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்
ஏடளவு எண்ணத்தில எழுத்தளவு சிக்கல் மச்சான்
அளவுக் கோலேயில்ல அது தான் ஊரு மச்சான்
நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே அதுவே போதும் மச்சான்
நாடு அளவு கஷ்டத்தில நகத்தளவு இஷ்டம் மச்சான்
அளவுக் கோலேயில்ல அது தான் நேசம் மச்சான்
நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க உறவு வேணும் மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்
-------------------------------------------------------------------------------------------------------------
என்னுடைய முகநூல் நண்பர் தன்னுடைய புத்தகத்தில் எழுதிய மாணவ , மாணவிகளுக்கு தேவையான சில டிப்ஸ் .
நன்றி - ஹேமமாலினி ரமேஷ்
1. எண்ணங்களில் தெளிவு.....
2. புரிந்துக்கொண்டு படிக்க முயலுதல்....
3. படித்தவைகளைத் தொகுத்து “பாயிண்ட்” வைஸ் எழுதப்பழகுதல்.....
4. சந்தேகம் இருக்கும் பாடங்களை உடனுக்குடன் கேட்டு சரி செய்தல்.....
5. கணிதமோ, குறியீடுகளோ, சமன்பாடோ, விதிகளோ படித்து அதனை ஒரு முறை எழுதிப் பழகி ஆழ்மனதில் பதிய வைத்தல் (சப் கான்ஷியஸ் லெவல்).....
6.தமிழ் , ஆங்கிலம் இவைகளைப் பிழை இல்லாமல் தெளிவாக எழுதிப் பழகும் ஆற்றல்
7. நாம் படித்ததை தோழிகளுடன் பகிர்ந்து அதனை மற்றவர்களுக்குப் புரிய வைத்தல் இன்னும் சிறப்பாகப் பயிலும் பயிற்சி
8. எடுத்துக்கொள்ளும் ஆகாரம் சத்துக்கள் நிறைந்தனவாய் இருத்தல் அவசியம்
9. தொலைக்காட்சி, கைப்பேசி, கணிணி இவைகளுக்கு விடுப்பு கொடுத்து கண்களுக்கு வலிமை சேர்க்க வேண்டும்
10. எப்போதும் படித்துக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை, படித்ததை அடிக்கடி நினைவுகொள்ள (ரீகால்) முயலுதல்.....
11. படிக்கும் நேரம் என்று நியமித்துக்கொள்ளவேண்டும்., விடிகாலை, மாலை, இரவு ....... எழுதிப் பழக மதியம்
12. படிக்கும் இடங்களையும் மாற்றிப் படித்தல் நினைவு ஆற்றலை அதிகப்படுத்தும்
13. வரலாறு படிக்கும் மாணவியர்கள் , சில அறிஞர்களின் பெயர்கள் நினைவில்
கொள்ள நம்முடன் தொடர்பு கொண்டவர்களின் பெயரையும், அவர்களின் பிறந்தநாள்,
தொலைபேசி எண்கள், வீட்டு முகவரி போன்ற வற்றை நினைவுகூர்ந்து அதனை இணைத்து
படித்தால் என்றும் மறக்காது......
14. தூக்கம் அதிகமாக வரும் போது
படிக்கும் இடத்தைவிட்டு அகன்றுவிட வேண்டும். எழுந்து முகம் கழுவி, வேறு
பாடத்தை எடுத்துப் பயில வேண்டும்......
15. கூடுமான வரை “படுத்துக்கொண்டு” படிப்பதை தவிர்த்தல் நல்லது....
16. பெரிய விடைகளை ஸ்பிளிட் பண்ணி, பாயிண்ட் வைஸ் படிக்கச் சொல்லு, ஈசியா
நினைவில் வைத்துக்கொள்ள முடியும், பெரிய கேள்வி என்ற பயமும் போய்விடும்....
(16ம் பெற்று பெறு வாழ்வு வாழ வாழ்த்துகின்றோம் முகநூல் சார்பாக)
பசங்க இனிமேலாவது படிச்சு பாஸ் பண்ணுங்க
--------------------------------------------------------------------------------------------------------------
அலெக்ஸ்பாண்டியன் படத்தை பார்த்த ஒரு நண்பனின் கதி
இதுக்கு மேல படத்தைப் பார்த்தா கம்பெனி பொறுப்பு கிடையாது
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
செம...கடைசி படம்.
ReplyDelete