வணக்கம்
இது ஒரு மீள் பதிவு , எம் ஜி ஆர் பிறந்த நாளை முன்னிட்டு . பழைய தலைப்பு கருப்பு எம்ஜியாருக்கு இது தெரியுமா ?
சம்பவம் 1
தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளரை தன்னுடைய
ஜீப்பில் அமரும் படி அடிக்க முயன்றது முயற்சி செஞ்சாரா இல்லை அடித்தாரா
என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம்
கட்சியின் m l a மூன்று பேர் வெளியேறியவுடன் விமான நிலையத்தில் நிருபரிடம் அவர் நடந்து கொண்ட விஷயம்
ஒருமுறை முதலவர் எம்.ஜி.ஆரின் வாகனத்தின் முன்புறம் சென்ற ஒரு ஆட்டோ டிரைவர் செய்த தவறால் எம்.ஜி.ஆரின் வாகனம் பிரேக் போட, பின்னால் வந்த போலீஸ் ஜீப் எம்.ஜி.ஆரின் காரின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் எம்.ஜி.ஆரின் கார் சேதமடைந்தது. வேறு காரில் எம்.ஜி.ஆர். சென்றுவிட்டார்.. விபத்து ஏற்பட
காரணமாக இருந்த ஆட்டோ டிரைவரை போலீஸ் ஸ் டே டேஷனுக்கு அழைத்து சென்றுவிட்டனர்.
வழக்கும் போட முடிவு எடுத்துவிட்டனர். எம்.ஜி.ஆர். கோட்டைக்குப் போனவுடன்
தனது செயலாளரை அழைத்து, ''அந்த ஆட்டோ டிரைவரை போலீஸ் இந்நேரம் கைது
செய்திருப்பார்கள். அவரை உடனே கோட்டைக்கு அழைத்து வாருங்கள்..''என்றார்.
பயந்து போய் எம்.ஜி.ஆர். முன் வந்து நின்ற ஆட்டோ டிரைவரிடம் எம்.ஜி.ஆர்.
கேட்ட முதல் கேள்வி, '' போலீஸார் உன்னை அடித்தார்களா? ''ஆட்டோ டிரைவர் அடி
வாங்கியிருந்தாலும் '' இல்லண்ணே ''என்றவுடன்,அவருக்கு புத்திமதி சொல்லி
சாலையில் பாத்து ஓட்ட வேண்டும். உனக்கு குடும்பம் உள்ளதை மனதில் வைத்து
ஓட்ட வேண்டும். எனக்கூறி ஆட்டோ டிரைவரை அனுப்பி வைத்தார்.. எம்.ஜி.ஆர்.
அன்று அந்த ஆட்டோ டிரைவரை பற்றி நினைக்காதிருந்தால் முதலமைச்சரின்
பாதுகாப்புக்கு ஊறுவிளைவித்தார் என்று எதாவது ஒரு பிரிவின் கீழ் சிறைக்குப்
போயிருப்பார்.
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
No comments:
Post a Comment
கருத்து மேடை