வணக்கம்
போராட்டம் வேறு திசையில் , அதே நேரத்தில் சரியான பாதையில் போவது போல் தெரிகிறது.நான் குறிப்பிடுவது ஐ பி எல் கிரிக்கெட்டில் இலங்கை விளையாட்டு வீரர்களை ஆட அனுமதிக்க கூடாது என்பதற்கு ஒரு மித்த ஆதரவு கிடைத்துள்ளது . ஆனாலும் சில பிரபலங்கள் விளையாட்டை விளையாட்டாய் தான் பார்க்க வேண்டும் என தங்களின் கருத்தை முன் வைக்கின்றனர். அது அவர்களின் கருத்தாய் இருக்கட்டும்.
ஒரு செய்தியை இணையத்தில் பார்த்தபோது பகிர்ந்துக் கொள்ளத்தோன்றியது.
இலங்கை
கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் சென்னையில் ஆட அனுமதி மறுப்பு, வட இந்திய
ஊடகங்களிலும் வட இந்தியர்களின் பேஸ்புக் டிவிட்டர் பக்கங்களில்
விமர்சனத்துக்குள்ளாகிய தமிழர்கள்.
சென்னை கிங்ஸ் அணி இலங்கை
வீரர்களை வைத்து ஆடப்போவதில்லை என்றும் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் இலங்கை
வீரர்கள் சென்னயில் ஆடுவதற்கு தெரிவித்த எதிர்ப்பையும் தொடர்ந்து வட இந்திய
ஊடகங்களும், வட இந்திய ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் களில் தமிழர்கள் மேல்
கடும் வெறுப்பை உமிழ்ந்துள்ளார்கள்.
தமிழர்களின் இந்த எதிர்ப்பை
பொலிட்டிக்கல் ரேசிசம் என்றும் ரீஜினல் சாவனிசம் என்றும்
விமர்சிக்கிறார்கள். விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டுமாம்,
விளையாட்டில் அரசியலை கலக்க கூடாதாம் என்றெல்லாம் இலங்கைக்கு வக்காலத்து
வாங்கி வேதம் ஓதும் இவர்கள் தான் பாக்கிஸ்தான் வீரர்களை ஐபிஎல் லில்
சேர்க்காமலும் பாகிஸ்தானோடு பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடாமலும்
தேசபக்தியை காண்பிப்பவர்கள்.
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
No comments:
Post a Comment
கருத்து மேடை