குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Monday 5 December 2011

கசமுசா ...கட்டுப்பாடு ....காண்டம்

வணக்கம்


நடந்தது என்னன்னா ( எனக்கில்ல ) நம்ம கந்தசாமிக்கு , கந்தசாமிக்கு ஒரு 45 வயசு இருக்கும்,அவங்க வீட்டுக்கார அம்மாவுக்கு ஒரு 38  வயசு இருக்கும்,10 வது படிக்கிற ஒரு பையனும் ,3 வது படிக்கிற ஒரு பொண்ணும்
ஆகா மொத்தம் நாலு பேர் .

கந்தசாமிக்கு வருமானம் அப்படின்னு பார்த்தோம்னா அவரு செய்ற கூலி வேலையில அவருக்குண்டான செலவு போக வீட்டிற்கு 2500 ருபாய் தருவார்.அவங்க வீட்டு காரம்மா வீட்டு வேலை செஞ்சு ஒரு 1500 ரூபாயும் சேர்த்து 4000 ருபாய் வரும்.


வீட்டுவாடகை , சாப்பாட்டு செலவு , பசங்க பள்ளிகூட செலவு ,இதெல்லாம் போக நல்லது ,கெட்டது அதுகளுக்கு ஆகிற செலவு , இடை இடையே உடம்புக்கு எதாவது கேடு வந்துரும்.அதுக்கும் செலவு போக ஒன்னும் மிச்சம் தேறாது .

கந்தசாமிக்கு சொத்து அப்படின்னு ஒன்னும் பெரிசா எதுவும் கிடையாது.அதுனால வெளியில எங்கயும் ,( செலவு வைக்கிற ) விசயத்தில் எதிலும் கலந்துக்க மாட்டார். ஆனாலும் அவருக்கும் அப்பபோ ஆசை வரத் தான் செய்யும்.எல்லாரோடயும் வெளியில போகணும்னு. அது நடக்காது. இப்படி ஒரு 40 நாட்களுக்கு முன்னாடி ஊருல நல்ல மழை. வேலை முடிச்சுட்டு வீட்டுக்கு வந்தவர் ,சாப்டு தூங்க போனார்.ரெண்டு பசங்களும் அவங்க பாட்டி வீட்டுக்கு போனதால ,அவருக்கும்,அவங்களுக்கும் அந்த ஆசை அது தோணிச்சு.

கண்டுகேட்டு உன்டுஉயர்த்து  உற்றுஅறியும் ஐம்புலனும் 
ஒண்தொடி கண்ணே உள

அதாவது கண்டு ,கேட்டு ,உண்டு ,முகர்ந்து,தொடும் ஐம்புல இன்பமும் இவளிடமே உண்டு என்கிற குறள் படியும் ,ஏழைக்கு இலவசமாய் கிடைக்கிற சுகம் இது மட்டும் தானே.

பொழுது விடிந்தது .நாட்கள் கடந்தும் போனது.வீடுகாரம்ம தூரம் ஆகிறது, தூரமகிபோச்சு.அவசர அவசரமா போய் பரிசோதிச்சா ,அம்மா முழுகாம இருந்தாங்க .  கந்தசாமிக்கு தூக்கி வாரிப் போட்டுச்சு. இனிமே குழந்தை பெத்துக்கிட்டா வளக்கிறது கஷ்டம்,அதுவும் 15 வருசத்துக்கு அப்புறம் மறுபடியும் அப்படின்னு அபார்ஷன் செய்றது அப்படின்னு முடிவு பண்ணாங்க.

போனாங்க ,அபார்ஷன் முடிஞ்சது ,5000  ருபாய் செலவாச்சு.தவணைய வாங்கி அத ஒரு வழியா முடிச்சுட்டு,வீட்டு காரம்மா கிட்ட ,இனமே உன்ன தொடணும்ன 5000  ருபாய் வேணும் போல .

கதை முடிஞ்சது.எனக்கு என்ன புரியல்லன்ன அரசாங்கம் ரெண்டு குழந்தை மேல வேணாம் ,பிரசவத்தின் போதே ,கட்டுப்பாடு செஞ்சிருங்க அப்படின்னு சொல்லுது,அதுல ஒரு சிக்கல் இருந்து வருது.அப்பவே கட்டுப்பாடு செஞ்சா ஒரு ஆறு மாசமாவது ரெஸ்ட் எடுக்கனும். அப்படி ரெஸ்ட் எடுத்தா வருமானத்துக்கு எங்க போறது,அது வரைக்கும் செலவு எப்படி பண்றது. சரி அப்படி வேணாம் ஆம்பளைங்க கட்டுப்பாடு ரொம்ப ஈசியா அப்படின்னும் சொல்லுது.அது உண்மையும் கூட.ரெஸ்ட் வேணாம்,வருமானமும் போகாது.
இது ஏன் கந்தசாமி மாதிரி ஆளுகளுக்கு புரிய மாட்டேங்குது.

அத விடுங்க ,சாமி குடுக்கிறத தடுக்க முடியாதுன்னு கட்டுப்பாடு இல்லாம திரிஞ்சாலும்,நம்ம கவர்மென்ட் காண்டம் இலவசமா தருது, அதையும் வாங்க சங்கடமா இருந்தா , கடையில கலர் கலரா ,பல பிலேவர்ல விக்குது.இத ஏன் கந்தசாமி மாதிரி ஜனங்களுக்கு புரியிற மாதிரி தயாரிக்கிற கம்பெனியும் விளம்பரம்  எடுக்கிறதில்ல . அவங்களுக்கு ஏத்த விலையில விக்கிறதில்ல


இத விடுங்க ,ஒரு புனை கதை ஒன்னப் பாருங்க

ஒரு கிராமத்துக்கு குடும்பக்கட்டுப்பாடு பத்தி அதிகாரிங்க விளக்கம் சொல்ல வந்தாங்க.ஊருல எல்லாரும் ஒரே எடத்தில ஒன்னு கூடி என்ன சொல்றங்கனு பார்த்தாங்க .

காண்டம் எப்படி use பண்றதுன்னு சொல்லிக் கொடுத்தாங்க .எல்லார் கிட்டயும் புரிஞ்சத அப்படின்னு கேட்க ,அவங்களும் யானை மாதிரி தலை ஆட்டுனாங்க.
அவங்களும் சரி அடுத்த வருஷம் வர்றோம் அப்படின்னு சந்தோசமா போய்ட்டு,அடுத்த வருஷம் வந்தாங்க.


ஊரு ஜனங்க எல்லாம் அவங்க முன்னாடி ஆஜர் ஆனாங்க.அதிகாரிங்க அவங்களைப்பார்த்து நலம் விசாரிச்சப்ப தான் தெரிஞ்சது ,90 % பேரு உண்டாகி இருந்தாங்க.( பெண்கள் மட்டு தான் ) அதிகாரிகளுக்கு அதிரிச்சி.

எப்படிப்பா இப்படின்னு கேட்க ,நீங்க சொல்லிக் கொடுத்த மாதிரி தான் செஞ்சோம் அப்படின்னு கை விரல்ல காண்டத்த மாட்டி காட்டினாங்க.
 

அப்புறம் என்ன தண்ணி தவிச்சுப் போச்சு அதிகாரிகளுக்கு .



மீண்டும் சிந்திப்போம்.

அவனி சிவா









2 comments:

  1. அருமையனா கருதுக்கள் என்னை சிலிர்க்க வைத்தது

    ReplyDelete

கருத்து மேடை