குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Tuesday 27 May 2014

லேடி , மோடி , டாடி , DD - காபி முதல் கண்டம் ( காண்டம் ) வரை

வணக்கம்


டீயா வேலை பார்த்து மோடி இப்போ பிரதமர் ஆகிட்டார் . இந்தியாவில தமிழ்நாட்டுல மட்டும் டீ சூடு ஆறிப் போய் வியாபாரம் மொத்தமா கவுந்துருச்சு.


பிரசார நேரத்தில் பிச்சிக்கிட்டு போன வசனம் தான் லேடி , மோடி , டாடி . இப்படி நாடு பலவாறு பல விசயங்களில் மாறிப் போனாலும் சில விஷயங்கள் மாறவில்லை . குறிப்பாக மின்சாரம் ( சம்சாரமும் தாங்க ) . இப்படியாக பட்ட நேரத்தில் எப்போதும் போல் நேத்து நைட்டு கரண்ட் போனது. அந்த நேரத்தில என்னோட பையன்  ஏதாவது விளையாட்டு விளயாடாலாம் என்றான். சரி வா ஒரு கை பார்த்துருவோம் ( கை பார்த்ததே ஒற்றை இலக்கத்தில் தான் ) விளையாட்டு என்னன்னா ஆங்கிலத்தில் ஏதாவது ஒரு எழுத்தை சொல்லி 15 நிமிடத்திற்குள் 100 வார்த்தை எழுத வேண்டும் என்றேன்.


பாராளுமன்ற தேர்தலில் நான் கடைசி பட்டனுக்கு ஓட்டுப் போட்டாலும் , அடி மனசில் இருக்கும் அம்மாவின் விசுவாசி என்பதனால் தானோ என்னவோ , மோடி , லேடி ,டாடி ,  எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் , என்னால் முதலில் லேடி என்கிற வார்த்தையை மனம் கோர்க்கிறது. ( பதிவுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் என்பதை பதிவின் இறுதியல் புரியும் என நினைக்கிறேன் ).


விதிகள் எல்லாம் கிடையாது கிடையாது . அது எந்தத் துறையை சேர்ந்த  விளையாடு, அரசியல் , சினிமா , ஆன்மிகம் , எழுத்தாளர் , விஞ்ஞானி , காமடியன் .கோமாளி,கூத்து கட்டுபவர்கள் , கின்னஸ் சாதனை புரிந்தவர்கள், இப்படி எவரின் பெயராகவும் இருக்கலாம்  . ஊர் பெயராக , நாட்டின் பெயராக , கண்டத்தின் பெயராகவும் இருக்கலாம் . பாடத்திட்டத்தில் உள்ள வார்த்தையாகவும் , புகழ் பெற்ற இடமாக இருக்கலாம் . இலக்கியத்தில் , இலக்கணத்தில் இருக்கலாம் . மருத்துவம் , பொறியியல் , இதனை போன்ற மற்ற துறைகளின் வார்த்தையாகவும் , அகராதி , மற்றும் நாம் அடிக்கடி புழங்கும் வார்த்தையாகவும் இருக்கலாம். தாவரங்கள் , செடிகள் , மரங்கள் , பூச்சிகள் , விலங்குகள் , உறவுமுறைகளின் பெயராக இருக்கலாம் . மளிகை பொருட்கள் , பழங்கள் , காய்கறிகள் பெயராகாவும் இருக்கலாம். சுருக்கமாக சொன்னால் காப்பி முதல் காண்டம் வரை எதுவாகவேணும் இருக்கலாம்.


உதாரனத்திற்க்கு c என்கிற எழுத்தை எடுத்துக் கொள்வோம்.

COFFEE , CASH , CREDIT , CANADA , COOCUMBAR ,CHINA , CRIME


இப்போ என் பையன் 10 நிமிடத்திற்குள் 63 எழுதி முடித்தான்.( நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவனிடம் இதைக் காட்டிலும் எதிர்ப் பார்ப்பதென்பது மகா தவறு என்று புரிந்தது , அந்த விளையாட்டினை நானே சுய பரி சோதனை செய்து பார்த்த போது தான் தெரிந்தது.


நானும் ஒரு எழுத்தை எடுத்து   எழுதிப் பார்த்தல் , சுய விபரம் தெரிகிறது. தத்துவஞானி பிராய்ட் சொன்னது போல் எனக்குள்ளே , பல விஷயங்கள் வார்த்தைகளின் வடிவில் வெளி வந்தன.


உங்களுக்கும் ஒரு சவால் R , U , O , P , Z , S , C , Q போன்ற எழுத்துக்களில் குறைந்தப் பட்சம் 10 நிமிடத்திற்குள் 100 எழுதிப் பாருங்கள் . உங்களின் சுயம் புரியம் . ( உண்மையாக மனதில் படும் வார்த்தையை  மட்டும் எழுதுங்கள் ) .


கருத்தை சொல்லுங்கள் . ( முடிந்தால் ,  முடிந்தால் தாங்கள் எழுதிய வார்த்தைகளையும் , சலனங்களையும் எதிர்பார்கிறேன் )


மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா