குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Monday 30 January 2012

தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்



வணக்கம்

நன்றி --- யோகன்ன யாழினி  










1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது
2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்
3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்
5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்
4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்
பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..

தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .

நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .

வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.
நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு .
வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம் .
தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்
உண்மையுடன்

அவனி சிவா

.நம்பிக்கை இப்படி நச்சுன்னு இருக்கனும்

வணக்கம்


ஒரு பழ மொழி உண்டு .செருப்பு இல்லேன்னு கவலைப் படாதே , சிலருக்கு காலே இல்லாம இருக்கு. எல்லாபழமொழிகளும் எதாவதை உணர்த்துகிறது.
இந்த நம்பிக்கையை பாருங்கள் .




இது தான் நம்பிக்கையோ

Saturday 28 January 2012

இப்படி சேலைக் கட்டினா ( காட்டினா ) சிம்பு என்ன பண்ணுவார்.

வணக்கம்


இந்தப் படத்தப் பாருங்க சந்தோசமாகவும் அதே சமயத்தில் கொஞ்சம் சங்கடமாகவும் இருக்கும் 
இந்தப் படத்தப் பார்த்து சிம்பு  விரலை வச்சி என்ன செய்வாரோ ,ஆனா இந்த விரல்களை பாருங்கள் .





























பார்த்து சந்தோசப் பட்டுக்காங்க


உண்மையுடன் 
அவனி சிவா

Wednesday 18 January 2012

கொலைவெறி யாருக்கு ,ரஜினிக்கா,கமலுக்கா


 வணக்கம் 

திரு . வே. மதிமாறன் தொடர்ந்து எழுதும் கேள்வி - பதில் தான் ,ஆனாலும் யாருக்கு கொலைவெறி அப்படின்னு தெரியவில்லை.
















‘கொலைவெறி’ பாடல் பற்றி, ஏன் எழுதவில்லை?
-வெ. பாலாஜி, சென்னை.
ஏன் எழுதணும்? அப்படிங்கறதனாலதான் எழுதல.
‘ஏன் இந்த கொலவெறி?’ நடிகர் வடிவேலுவால் புகழ்பெற்ற இந்த வாக்கியத்தை அவரிடம் இருந்து திருடி, ‘வொய் திஸ் கொலைவெறி’யாக மாற்றி இருக்கிறார்கள்.
யாரு வேண்டுமானாலும் எளிதில் பாடிவிட முடிகிற, பேசுவது போன்றே அமைந்த பாடல். பொறுப்பற்று. ஊதாரித்தனமாக இருப்பதை நியாயப்படுத்துகிற வார்த்தைகள். ஆங்கிலம் தெரியாதவர் எப்படி ஆங்கில வார்த்தைகளை கொச்சையான முறையில், பயன்படுத்துவாரோ அதுபோன்ற மொழி நடை.
இந்த நடை இந்தியா முழுக்க பெரும்பான்மையானவர்களால், பேசப்படுகிற, புரிந்துகொள்ளப்படுகிற நடை. இவைகளால்தான் அந்த பாடல் ‘இந்திய தேசிய பாடலாக’ நாடு முழுவதும் பிரபலமாகியிருக்கிறது.
எல்லா மதக்காரர்களும் தாங்கள் வணங்குகிற கடவுள் பற்றிய பக்திப் பாடல்களில் தரக் குறைவான, பொறுப்பற்ற வார்த்தைகள் வந்தால், கெலைவெறி கொள்கிற அளவிற்கு மாறிவிடுவார்கள்.
இப்படி, தங்கள் இறை நம்பிக்கையில் ஒழுக்கமானவர்களாக, நேர்மையானவர்களாக அடையாளப்படுத்திக் கொள்பவர்கள், சமூகம் சார்ந்து வியாபாரம், அரசியல், சினிமா, பத்திரிகை, திரை இசை என்று வருகிறபோது அதில் எவ்வளவு சீர்கேடுகள் இருந்தாலும், அதை பொறுத்துக்கொள்கிறார்கள், விரும்புகிறார்கள். பல நேரங்களில் அந்த சீர்கேடுகளை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள், என்பதை நிரூபிக்கிறது இந்தப் பாடல்.
பிரதமர் மன்மோகன் சிங் நடிகர் தனுசுக்கு கொடுத்த விருந்தின் மூலம் அந்த முறையை அங்கீகரித்திருக்கிறார். இனி, இந்தியாவின் தேசிய கீதமான ‘ஜன கன மன’ வையும் தனுஷை வைத்து, இதுபோன்றே பாட வைக்கப்பாரோ!.
குறிப்பு:
‘சூப்பர் ஸ்டாரின் மருமகன், உலக நாயகனின் மருமகனாக மாறுகிற முயற்சிகளில் இருக்கிறார்’ என்று வருகிற பத்திரிகை செய்திகளைப் பார்த்தால், தனுஷ் மீது ரஜினிதான் ‘கொலவெறி’யில் இருப்பார் போல.
அதுசரி. பாடலுக்கு இடையில் தனுஷ், “மாமாநோட்ஸ் எடுத்துக்கோஅப்படியே கையில ஸ்னாக்ஸ் எடுத்துக்கோ..” என்று யாரை சொல்கிறார்?
சூப்பர் ஸ்டாரையா? உலக நாயகனையா?


 அவனி சிவா

இந்தக் காலப் பொண்ணுங்க

 இரு பொருட்கள் எப்பொழுதும் இவர்கள் கைகளில்... இருக்கும்.ஒன்று கைக்குட்டை மற்றொன்று மொபைல், இரண்டுமே சின்னதாக இருக்கும்.மேலும் வெள்ளை அல்லது பிங்க் நிறத்தில் காணப்படும்.  கைப்பேசியில் பேசும்பொழுது,காதருகு முடி ஒதுக்குவதையும் அல்லது கழுத்துச்சங்கிலியை வருடுவதையும் நாம் காணலாம்.  இதுவரை எந்த பெண்ணும் பொய்யே சொன்னதில்லை அல்லது சொன்னதாக ஒப்புக்கொண்டதும் இல்லை.  “ஐ டோண்ட் குக்”,”ஐ நெவர் பீன் டு கிச்சன்”- பொதுவாக இளம் நங்கைகளிடம் நாம் கேட்கலாம்.  நான் ஸ்ட்ரெயிட் பார்வேர்டு –ன அனைத்து பெண்களும் சொல்வது.”என்ன கொடுமை சார் இது ?”  ஐந்து ஆண்களுக்கு மேல் ஒரு பெண்ணுக்கு நண்பர்கள் இருந்தால் அவள் தன்னை சோசியல் / ஜோவியல் டைப் என்று சொல்லிக்கொள்வாள். “எனக்கு ஐஸ்க்ரீம் ரொம்ப பிடிக்கும் “ –எல்லா பெண்களும் சொல்வது. உண்மையில் ஆண்கள்தான் அவர்களைவிட அதிகம் உண்பவர்கள்.  எல்லா பெண்களும், எல்லா நாட்களிலும் சொல்லும் ஒரு வரி - “நான் டயட்டில் இருக்கிறேன்”.  “எனக்கு டி வி சீரியல் பிடிக்காது” என்பார்கள் நன்பர்களிடம்.  கி.பி 2000 திற்கு பிறகு கல்லூரிக்கு செல்லும் எந்த பெண்ணும் இந்தியாவில் பிறந்ததில்லை. பயணம் செய்கையில் பொதுவாக தனது ஆண் நண்பர்களிடம் கைப்பேசியில் பேசுவது அவர்களது வழக்கம்.  எந்தப்பெண்ணும் 3000 நிமிடம் பேசினாலும் 75 ரூபாய்க்கு மேல் மொபைல் பில் கட்டியதில்லை.(மிஸ்டு கால் மின்மினிகள்!)  எல்லா பெண்களும் சொல்லும் ஒரு வரி - “ உனக்கு ட்ரெஸ்ஸிங் சென்ஸே இல்லை “.(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....)  இரவு 12 மணிக்கு முன்னே தூங்கிவிட்டால் அந்த பெண் கல்லூரி செல்லும் பெண் இல்லை என்று பொருள். இதுக்கு மேலே  சொல்றதுக்குள்  அவளுக்கு போன் வந்து விட்டது... அப்புறம்  பக்கலாம். 





மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா



Tuesday 17 January 2012

அங்கவை சங்கவை - ஒரு நிஜம்

 வணக்கம் 

அங்கவை சங்கவை

நிழல்: சிவாஜி படத்தில் அங்கவை சங்கவை கதாபாத்திரத்தில் நிறம் கருப்...பாக இருக்கும் பெண்கள்

நிதர்சனம் : அங்கவை சங்கவை ஆகியோர் சங்க காலத்தில் வாழ்ந்த இரு சகோதிரிகள் ஆவர். இவர்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியமான புறநானூற்றில் கிடைக்கிறது.
http://ta.wikipedia.org/wiki/அங்கவை_சங்கவை
 நன்றி
 மீண்டும் சிந்திப்போம் 
 அவனி சிவா

 

Sunday 15 January 2012

உங்கப் ப்ளட் யாருக்கு சேரும்

 வணக்கம்


எங்கெங்கோ எப்படி எல்லாம் இருக்கிறோம்,ஆனா இப்படித் தான் இருக்கணும்னு சில போடோக்கள் காட்டுது







அடுத்தப் படம் , நடிப்புல சிவாஜியே மிஞ்சின சின்ன அனுஷ்கா







நெக்ஸ்டு , எதையும் செய்வாள் பத்தினி ( அங்க இதையும்  செய்றாங்களோ )






இப்போ கடைசியா சீதாப் பிராட்டி ( எல்லாரும் கண்ணுல ஒத்திக்கத் தேவை இல்லை )








மீண்டும் சிந்திப்போம்


அவனி சிவா



பின் குறிப்பு   - எழுதலாம் என்று யோசித்தால் ,நடப்பு நிகழ்சிகளை யாரவது எழுதி விடுகிறார்கள் .மத்தப் படி எது எழுதினாலும் எங்கயோ படிச்ச நினைவே வருது.



மீண்டும் மீண்டும் சிந்திப்போம்

அவனி சிவா










Friday 13 January 2012

முத்ததிற்காக அழுத இசைஞானி



       1990 களில் இதயம் பேசுகிறது இதழில் " கடைசிப் பக்கத்தை " எழுதி வந்தவர் திரு.எஸ் .சத்யமூர்த்தி .அவரின் தொகுப்பில் இருந்து ஒரு சிறு பகுதி .

 இது கமலின் குருதிப் புனல் திரைப்படம் வெளிவந்தநேரம்.


   குருதிப் புனல் என்றாலே வாயடைப்பு.கமல் அதனை அழகாக முத்தமிட்டு இருக்கிறார்.அதைப் பற்றி சல சலப்பு ஏற்ப்படுதாமல் இருக்க சரிகாவின் வாயையும் அடைத்திருக்கிறார்.ஆனால் உலகிலேயே அற்ப்புதமான முத்தப் படம் ஆல்பிரட் எச்சொண்டாட்எடுத்தது.லைப் பத்திரிக்கைக்காக.சாதாரண காமிராவில் அவர் கிளிக் செய்த படத்தில் தான் எத்தனை நுணுக்கம்.இரண்டாம் உலகப் போரின் வெற்றிக்குப் பின் வீடு திரும்பிய அமெரிக்க வீரனை முத்தமிட்டு வரவேற்கும் காட்சி .அமெரிக்க நங்கைகள் உரசல்களில் உயர்வான உதட்டு உரசல் அது தான்.


இதை விட உலகப் புகழ் பெற்ற இன்னொரு முத்தம் .... தரப்பாடாத முத்தம்.இசைஞானிக்கு பிரான்சு அரசி தராததால் இசைஞானி மனமொடிந்து அழுதாராம் . நான் மொசார்டை தான் சொல்கிறேன். இளையராஜாவை அல்ல.




எப்புடி,உங்களைப் போலவே நானும் அதிர்ச்சி அடைந்தேன் .படித்தவுடன்.

மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா 

Thursday 12 January 2012

கல்யாணம் - ஒரு எச்சரிக்கை ,தைத் திரு நாள் சிறப்பு


அனைவருக்கும் போகிப் பண்டிகை,தைத் திருநாள்,தைப் பொங்கல்,தமிழர் திருநாள்,கானுப் பொங்கல் ,உழவர் தினம் ,திருவள்ளுவர் தினம் ,தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் .











எப்பா நான் தான் பதிவுலகில் இந்த வாழ்த்துக்களை சொன்னவன்,இப்ப என்ன அவசரம் என்கிறீகளா , அன்னைக்குத் தான் பிரபல பதிவர்கள் எல்லாம் அந்த எடத்தப் புடிச்சு நம்மத படிக்க மாட்றாங்க.( இல்லன்னலாலும் )


------------------------------------------------------------------------------------------------------------------

இப்போ எச்சரிக்கை ,இதுக்குத் தானே ஆசைப் பட்றீங்க , படுங்க படுங்க



கல்யாணத்திற்கு முன்னால் கண்ணை அகலத் திறந்து வைத்துக் கொள்.அதற்குப் பின் அரைதுக்காம் அவசியம்.


பெண் கல்யாணத்திற்கு முன்பு புரியாதப் புதிர் .கல்யாணதிற்குப் பின் பிடிபடாத ரகசியம்.


கன்னத்தில் மச்சம் கவர்ச்சியாக இருக்கிறது,அதற்காக பெண்ணையே மொத்தமாக குத்தகைக்கு எடுக்க வேண்டுமா.


திருமண வாழ்க்கை கசந்துப் போய் விட்டதா கவலைப் படார்திகள்.எத்தனையோப் பேர் இடிந்தே போயிருக்கிறார்கள்.


கல்யாணம் ஒரு டைட்டான ட்ரஸ் .அணிவது எளிது ,அவிழ்ப்பது கடினம்.


ஆபிசிலிருந்து திரும்பி வரும் போது சினிமாவுக்கு போயிருந்தா , தேனிலவு முடிந்து விட்டது.


பக்கத்துக்கு வீட்டுக்காரன் உன் மனைவியை தள்ளிக் கொண்டு போய் விட்டானா, கலங்காதே அவனுக்கு சரியான தண்டனை உன் மனைவி அவனோடு இருப்பது தான்.


கன்னத்தில் குழியா , கல்யாணம் என்று சொல்லி அதற்குள் தலை குப்புற விழுந்து விடாதே.


மனைவியை பிடிக்கவில்லையா ... அவள் மாற மாட்டாள்.மனைவியை மாற்றினாலும் வருபவளும் அதே திருகுவழித் தான்.


எல்லா ஆண்களும் குணத்தில் ஒன்று தான்.முகம் மட்டுமே வேறு .இல்லையேல் உன் புருஷனை எப்படி கண்டுபிடிப்பாய்.


டி.வி,பிரிட்ஜ் ,குக்கர்,வாசிங் மிசின் ,வாக்குவம் கிளீனர் இன்ன பிற ஐட்டங்களும் வாங்கி விட்டார் அப்பா.வரன் தேடுகிறார் . இன்று வரை மக்கர் செய்யாத மலிவான எந்திரம் கணவன் மட்டும் தானே.


கல்யாணம் செய்துக் கொள் .குடும்பஸ்தன் ஆவாய்.இல்லையேல் கட்டாயம் ஞான ஆவாய் 



மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா 





Wednesday 11 January 2012

இது வளர்ச்சியா அல்லது வீக்கமா


ஒரு புலம்பல்,ஒரு எரிச்சல்


ஒரு பக்கம் அரசு மின்விசிறி,மிக்சி,கிரைண்டர்,டி வீ ,மடிக்கணினி இதல்லாம் இல்லாம விவசாயிகளுக்கு ஆடு,மாடு கூட இலவசமா தருது .மறுபக்கம் கரண்ட் விலைய கூட்டுது.

 இரு சக்கரம்,கார்,பைக் இப்படி தினமும் ஒரு மாடல் வந்துக்கிட்டு இருக்கு.மறுபக்கம் டீசல்,பெட்ரோல்,காஸ் விலையும் கூடுது.


 இட்லி,தோசை,பூரி,சப்பாத்தி இதெல்லாம் போய் இப்போ பிட்சா,பர்கர் இப்படி தினுசு,தினுசா வந்துகிட்டு இருக்கு ,ஆனா ஒரு கப் காபி பத்து ரூபா.


பன்னாட்டு நிறுவனத்தில வேல பார்க்கிறவங்க கவலை படத் தேவையில்ல.அந்த நிறுவனமே எல்லா அலவன்ச கூட்டிருது.அரசு ஊழியர்கள் (அது மத்திய,மாநில ) இவங்களுக்கும் கவலை இல்ல . கொஞ்சம் கஷ்டம் வந்தாலும் போராட்டம் செஞ்சிரலாம் .

இந்த கடை,கண்ணில வேலைப் பார்க்கிறவங்க நெலமைய நெனைச்சாலே பயமா இருக்கு ( நானும் இந்த ஜாதி தான் ) 5000 ரூபா சம்பளத 5500 வாங்குறதுக்கு படரப் பாடு, அப்பா சொல்லி மாளாது.

இந்த தங்கம் விலைய பாருங்க ,எப்படி ஏறி இருக்கு 




இப்படி நம்ம நெலமையும் மாறினாத் தானே வாழ்க்கை வெலங்கும்.


மீண்டும் சிந்திப்போம்.
அவனி சிவா



Monday 9 January 2012

108 ன் அவசியத்தை புரிந்துக் கொள்ளுங்கள்

 வணக்கம் 

என்னுடைய முகநூல் நண்பர் கார்த்திக் facebook ல் அவரின் ஆதங்கத்தை சொல்லியுருந்தார்.அதனை அப்படியே தருகிறேன்.என்னுடைய வலைப்பக்கத்திற்கு வரும் நண்பர்களும் அதனை படிக்கவே .

நன்றி - THE HINDU

108 ஆம்புலன்ஸ் சேவை என்பது மக்களுக்கு உதவுவதற்காக சென்ற ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட ஒரு உன்னத சேவை. இந்த சேவையின் மூலம் நேரத்தில் இலவச ஆம்புலன்ஸ் கிடைக்கப்பெற்று உயிர் பிழைத்தவர்களை நான் அறிவேன்.

ஆனால் பாருங்கள் ஒரு நாளில் இவர்கள் பெறும் 25000 அழைப்புகளில் சுமார் 4000 அழைப்புகள்தான் உண்மையானவை. மற்ற 85% கிண்டல், கேலி, பொய்யான அழைப்புகள், குழந்தைகளின் விளையாட்டு அழைப்புகளாம்.

நம் வீட்டுக் குழந்தைகளுக்கு இவ்வாறு செய்யக் கூடாது என்று அறிவுருத்துவது இங்கே இந்த நேரத்தில் மிகவும் அவசியம் எனத் தெரிகிறது. குழந்தைகள் தெரிந்து செய்வதில்லை. எனவே, இந்த சேவையின் முக்கியத்துவம் குறித்த பாடத்தை ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு எடுப்பது அவசியம் ஆகிறது. குழந்தைகள் மட்டுமன்றி, நாமும் இத்தகைய செயல்களைச் செய்து இந்த உன்னத சேவைக்கு பங்கம் விளைவிக்காமல் இருப்பதும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

கடலூரிலிருந்து ஒரே எண்ணிலிருந்து ஒரு மனிதர் 1473 அழைப்புகளைச் செய்திருக்கிறாராம். மன அழுத்தம் கொண்ட நபர்கள் / குடிபோதையில் இருப்பவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. ஆனால், அவர்கள் உணர மறுக்கும் ஒரு உண்மை என்னவென்றால், அவர்கள் வீட்டிலும் என்றேனும் எவருக்கேனும் அவசர மருத்துவ உதவி தேவைப்படலாம் என்பதுதான்.

இந்த விஷயத்தில் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு இதுகுறித்த தேவையான விழிப்புணர்வை வழங்குமாறு நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

 


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா

Friday 6 January 2012

எதையும் பிளான் பண்ணி பண்ணனும்


 வேலை முடித்து வீடு திரும்பும் வழியில் ,விரலில் அடிபட்டுக் காயமடைந்த ஒருவர் எங்காவது மருத்துவ உதவி கிடைக்குமா என்று இன்னொருவருடன் விசாரித்தார்.அந்த நபர் கைக் காட்டிய ஒரு கட்டிடத்துக்குள் நுழைந்தார். உடலுக்கு - மனதிற்கு என்ற அறிவிப்புடன் இரண்டு கதவுகள் இருந்தன.உடலுக்கு என்கிற கதவினை திறந்துக் கொண்டு நுழைந்தார்.அங்கு எலும்பு - தசை என்று அறிவித்த இரண்டு கதவுகளில் தசையை திறந்துக் கொண்டு உள்ளே போனார். 

அங்கும் இரண்டு கதவுகள் ,அறுவை சிகிச்சை - தெரபி என்று அறிவித்தன.அறுவைசிகிச்சை கதவைத் திறந்தார்.உள்ளே புகுந்தார்.மேஜர் -மைனர் என்று பளிச்சிட்ட இரண்டு கதவுகள் அவரை அன்புடன் வரவேற்றன.மைனர் திறந்து உள்ளே சில அடி தூரம் சென்றார்...கட்டிடத்தின் வெளியே வந்துவிட்டார்.

உள்ளே உங்களுக்கு தேவையான உதவி கிடைச்சுதா என்று யாரோ கேட்டார்கள்.

உதவி கிடைக்கலே ,ஆனா இவ்வளவு கச்சிதமா பிரமாதமான ஒழுங்கு முறையோடு இருக்கும் ஒரு இடத்தை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை என்று அதியசயப்பட்டார்.



மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா

Thursday 5 January 2012

நீங்களும் இழக்கலாம் ஒரு கோடி

வணக்கம்

விஜய் டி வி அடுத்து நடத்த இருக்கும் நாடகத்திற்கு மன்னிக்கவும் பொது அறிவு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் அவர்கள் கேட்க்கும் கேள்விற்கு ( கேள்வி படு பயங்கரமாக இருக்கும் ) நாம் தொலைபேசியில் சொல்லலாம்.அல்லது sms ம் அனுப்பலாம்.அனுப்பினா என்ன நடக்கும் இந்த விவரதப் பாருங்க.



மீண்டும் சிந்திப்போம்

அவனி சிவா


Wednesday 4 January 2012

எதுவும் சுலபம் அல்ல .... ஆனால் எல்லாம் சாத்தியம் தான்.

வணக்கம்

               ஒரு வழியாய் புத்தாண்டு பிறந்துவிட்டது.நாம் எதுவும் செய்யாமல் இருந்தாலும் அது பிறந்தே இருக்கும்.எத்தனை விதமான வாழ்த்துக்கள்.நேரில்,தொலைபேசியில்,குறுஞ்செய்திகளில்,மின்னஞ்சலில் இப்படி மட்டும் அல்லது முகம் அறியா நண்பர்களும் சந்திக்கும் போது வாழ்த்துக்கள் பரிமாறிக் கொண்டார்கள்,கொண்டேன்.பதிவுலகமும் மிக சிறப்பாக இருந்தது.சிறப்புப் பதிவு,கடந்த ஆண்டின் அரசியல்,சமூக,கலாச்சார,இயல்,இசை,திரை என அலசி ஆராய்ந்த பதிவுகள்.இனி இப்படி எல்லாம் நடக்க வேண்டாம்,இப்படித்தான் நடக்க வேண்டும் என்கிற ரீதியில் பதிவுகள் , மகிழ்ச்சி.

                   ஒவ்வொரு நல்ல நாட்களில் நல்ல நாள் என்பது பலருக்கு பலவகைப் படலாம்.ஆங்கிலப் புத்தாண்டு,தமிழ்ப் புத்தாண்டு,தெலுகு வருடப் பிறப்பு,அவரவர் மதங்களின் அடிப்படையில் வரும் பண்டிகை நாட்கள் ,சமூக மாற்றங்கள் ஏற்ப்படுத்திய நாட்கள்,நாட்டின் முக்கிய விசேச நாட்கள்,நம்முடைய பிறந்த நாள்,திருமண நாள்,குழைந்தைகளின் பிறந்த நாட்கள்,நம்முடைய துணையின் பிறந்த நாள் இப்படி ஏராளமாய் .அந்த ஒவ்வொரு நாட்களிலும் நாம் செய்த தவறை திருத்திக் கொள்ளவும் ,சரி செய்யவும் என நினைத்து எதவாது ஒரு வகையில் ஒரு சபதம் ,லட்சியம்,எண்ணம் தோன்றும்.அப்படி நடந்துருக்குமாயின் இப்படி ஒரு எண்ணம் தோன்றாது என நினைக்கிறேன்.தவறு செய்வது மனித மனம் தான்.குறிப்பாக மனித இனம்.தவறின் அளவு கோள் சிறிது குறைந்தாலே மனிதனுக்கும்,சமூகத்திற்கும்,குடும்பத்திற்கும் நல்லது நடக்கும்.

                  அதே வேளையில் எந்த எண்ணம் ஏற்ப்பட்டாலும் அதில் எதிர் மறை எண்ணங்களை தவிர்த்தாலே சிறப்பு உடையதாய் இருக்கும்.பல கதைகளும்,சம்பவங்களும் ,கட்டுரைகளும் நம்மை மெருகேற்றவே செய்கின்றன.எத்தனையோ உதாரணங்கள் உண்டு.அதில் ஒன்றை நினவு படுத்திக் கொள்வோம். 
                      வெற்றியின் சின்னமாக நாம் கருதுவது ,நான்கு விரல்களை மடக்கி,கட்டை விரலை உயர்த்திக் காட்டுவது.அதனின் விளக்கங்களை பார்த்தால் மிகவும் வியப்பாக இருக்கிறது.
நம் கை விரல்களில் இருக்கும் ஐந்து விரல்களில் சுண்டு விரல் என்பது ,நாம் எதாவது என்னை எண்ணினாலோ அல்லது வரிசைப் படி யாரையாவது குறிப்பட செய்தாலோ முந்திக்கொண்டு வருவது இந்த விரல் தான்.இப்படி முந்திரித் தனமாய் எல்லாம் செய்யாமல் யோசித்து செய்தோம் எனில் சிறந்ததாக இருக்கும்.அடுத்து சுண்டு விரலுக்கு அருகில் இருக்கும் விரலின் பெயர் மோதிர விரல்.இது நம்முடைய பகட்டை காட்டும். பகட்டை காட்டாமலும் இருந்தால் மிகவும் நன்று . அடுத்த விரல் இருக்கும் விரல்களில் மிகப் பெரியது இதைப் போலவே நான் தான்பெரியவன் என எண்ணம் கொண்டால் நிலைமை அதோ கதிதான். பெரிய விரலுக்கும் கட்டை விரலுக்கும் இடையில் இருப்பதின் பெயர் ஆட் காட்டி விரல் .நாம் செய்யும் தவறுகளை அடுத்தவர் மேல் திணிப்பதே இதன் பொருளாக எடுத்துக் கொள்வோம்.

இப்படி முந்திக்கொண்டு,நான் தான் மிக பொருள் படைத்தவன் ,நான் தான் மேலாவனவன்,எனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என அடுத்தவரை கை காட்டுவதும் ,இதை எல்லாம் மடக்கி கட்டை விரலை உயர்த்திக் காட்டினால் வெற்றி நம் வசமே..

கல்வியில் , தொழிலில்,பணியில்,சமூகத்தில்,குடும்பத்தில்,உறவுகளில் இப்படி எந்த வகையுலும் பல வித நிலை இருந்தாலும் எதுவும் சுலபம் அல்ல ...ஆனால் எல்லாம் சாத்தியம் தான்.


பின் குறிப்பு : 2012 ல் முதல் பதிப்பு .கடந்த பத்து நாட்களும் மேலாக உங்களை கொடுமை படுத்தாமால் இப்போது ஆரம்பிக்கிறேன்.


பின் பின் குறிப்பு : இது உங்களுக்கு உபயோகமாக இருக்குமோ இல்லையோ ,நான் கண்டிப்பாய் பின் பற்ற வேண்டும்.



மீண்டு சிந்திப்போம்

அவனி சிவா