ஒரு புலம்பல்,ஒரு எரிச்சல்
ஒரு பக்கம் அரசு மின்விசிறி,மிக்சி,கிரைண்டர்,டி வீ ,மடிக்கணினி இதல்லாம் இல்லாம விவசாயிகளுக்கு ஆடு,மாடு கூட இலவசமா தருது .மறுபக்கம் கரண்ட் விலைய கூட்டுது.
இரு சக்கரம்,கார்,பைக் இப்படி தினமும் ஒரு மாடல் வந்துக்கிட்டு இருக்கு.மறுபக்கம் டீசல்,பெட்ரோல்,காஸ் விலையும் கூடுது.
இட்லி,தோசை,பூரி,சப்பாத்தி இதெல்லாம் போய் இப்போ பிட்சா,பர்கர் இப்படி தினுசு,தினுசா வந்துகிட்டு இருக்கு ,ஆனா ஒரு கப் காபி பத்து ரூபா.
பன்னாட்டு நிறுவனத்தில வேல பார்க்கிறவங்க கவலை படத் தேவையில்ல.அந்த நிறுவனமே எல்லா அலவன்ச கூட்டிருது.அரசு ஊழியர்கள் (அது மத்திய,மாநில ) இவங்களுக்கும் கவலை இல்ல . கொஞ்சம் கஷ்டம் வந்தாலும் போராட்டம் செஞ்சிரலாம் .
இந்த கடை,கண்ணில வேலைப் பார்க்கிறவங்க நெலமைய நெனைச்சாலே பயமா இருக்கு ( நானும் இந்த ஜாதி தான் ) 5000 ரூபா சம்பளத 5500 வாங்குறதுக்கு படரப் பாடு, அப்பா சொல்லி மாளாது.
இந்த தங்கம் விலைய பாருங்க ,எப்படி ஏறி இருக்கு
இப்படி நம்ம நெலமையும் மாறினாத் தானே வாழ்க்கை வெலங்கும்.
மீண்டும் சிந்திப்போம்.
அவனி சிவா
//இது வளர்ச்சியா அல்லது வீக்கமா//
ReplyDeleteசந்தேகமே வேண்டாம். வீக்கம் கூட இல்லை.ஆப்பு.