குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Thursday 30 August 2012

டாஸ்மாக்கில் திருக்குறள் ( குரல் ) - குடிமகனின் தெளிவுரை

வணக்கம்


 திருக்குறளுக்கு பல்வேறு பேராசியர்கள் , அரசியல் தலைவர்கள் , அரசியல் 

 சார்பு இல்லா தலைவர்கள் , மற்றும் பல்வேறு அறிஞர்கள் தெளிவுரை எழுதி 

 உள்ளனர்.


 அரசுக்கு வோட்டும் , வாக்கும் , வருமானமும் , வாழ்க என்கிற கோஷங்களும் 

 எதை சொன்னாலும் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு குடிமகன் வாழ்ந்துக் 

 கொண்டிருக்கும் இடம் பச்சை வண்ணத்தில் காட்சி அளிக்கும் சிகப்பு நிற 

 வண்ணம் கொண்ட குருதியை உறிஞ்சும் டாஸ்மாக்.


 இவர்கள் சல்லாபிக்கும் இந்த கடைகளில் திருக்குறளின் தெளிவுரை எழுதி 

 இருந்தால் ( குடி மகன் ) எப்படி எழுதி இருப்பான் . இது ஒரு கற்பனையே .

 இதனை எவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டாம்.


 பான்ட் சைஸ் சில இடங்களில் மாறி இருக்கும் , சில இடத்தில கலர் இருக்கும்

 அதை எல்லாம் கண்டுக்காதிங்க , வேணும்னே செஞ்சது . குடிமகனுக்காக 



 குரல் ( குறள் ) 1

  மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

  அதாகப்பட்டது என்னவெனில் சாப்பிடட்ட மருந்தின் செரிமானம் ஆனதை தெரிந்துக்கொண்டு 

  மேலும் சாப்பிட்டால் நம்முடைய உடலுக்கு மருந்து தேவையில்ல. 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

   குரல் ( குறள் ) 2 
     
   
   இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை 

    அவன் கண் விடல் 


     இதுக்கு விளக்கம் என்னவெனில் எதனை பேர் போய் சரக்கு போட்டாலும் 

     யாரு சரக்கு போட்ட பின்னும் கணக்கு சரியா பார்த்தாங்கன்ன அவரிடமே

     பணத்தை அவனிடமே கொடுத்து வைக்கவும் .

-----------------------------------------------------------------------------------------------------------


குரல் ( குறள் ) 3


   எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் 

   மெய்ப்பொருள் காண்பது அறிவு.


   குடிமகனின் விளக்கம் -  குடிக்கும் போது பொதுவாய் அனைவரும் 

   நண்பர்களாக மாறி பேச்சு கொடுப்ப்பங்க , நாம தான் யாரோட பேச்சை 

   கேட்கனும் , யாரோட பேச்சை கேட்க்க கூடாதுன்னு கவனமா இருக்கனும் .


------------------------------------------------------------------------------------------------------------


குரல் ( குறள் ) 4


  உடுக்கை இழந்தவன் கைப்போல் அங்கே இடுக்கண் 

  களைவதாம் நட்பு 


 விளக்கம் -  சரக்கு வாங்கி சைடிசையும் வாங்கி குடிச்சு முடிச்சுட்டு போற 

 போது  கையில காசிருக்காது , அப்போ நம்ம பேர  சொல்லி  கூப்பிட்டு

 குடுப்பாங்க பாருங்க அது தான் நட்பு.
  

------------------------------------------------------------------------------------------------------------
  
எல்லா குறளுக்கும்  தெளிவுரை எழுத இரவு போயி சரக்கு போட்டு

யோசிக்கணும் . என்னால முடியாது வேற யாரவது எழுத நினச்சா

எழுதிக்காங்க .


மீண்டும் சிந்திப்போம்

அவனி சிவா 






Friday 24 August 2012

இதை தான் காதல் என்பதா ?

வணக்கம்


நான் வேலை பார்க்கும் அலுவலத்தில் புதிதாக இருவர் வேலைக்கு சேர்ந்தனர் . இருவரும் கணவன் - மனைவி இருவரும் காதல் மனம் புரிந்தவர்கள் . கணவர் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர் , மனைவி இந்து மதத்தை சார்ந்தவர்.





பிரச்னை இதுவல்ல இவர்களின் வயது தான் . இது சினிமாவாக இருந்திருந்தால் திருமணம் பல இன்னல்களுக்கு பிறகு முடிந்து காதல் வெற்றி பெற்றதாக அர்த்தம் கற்பிக்கப் பட்டிருக்கும் . அதற்குப் பிறகு அவர்களின் வாழ்வின் நிலைமையை பற்றி யாரும் கவலைப் பட மாட்டார்கள் . ( படம் எடுத்தவனும் , பார்த்த நம்மளும் ) 


கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கும் போதே இவர்களின் திருமணம் நடந்திருக்கிறது. திருமணம் இரண்டாம் வருடம் என்றால் , காதல் எந்த வயதில் புறப்பட்டிருக்கும் . 

இருவரும் படிப்பை இடையில் முடித்துக் கொண்டு தங்கள் ஊரில் இருந்து மதுரைக்கு வந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ( இனி கணவன் - மனைவி என்ற சொல் கிடையாது ) பையனுடைய ஊர் சிவகாசி , பொண்ணு ஸ்ரீவில்லிப் புத்தூர் . 

முதலில் இவர்கள் இழந்தது கல்வியை  , இத்தனைக்கும் பையனை விட பொண்ணு படிப்பில் சுட்டியாக இருக்கிறார். இனிமேல் படிக்காலாம் என்றால் முடியவில்லை. ஏனெனில் இவர்களுக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் எதை பற்றி கவலைபடாமல் இருந்ததால் கல்வி இவர்களை விட்டு மிக துராம் போயின . நட்பு வட்டம் எப்போதும் போல் கொஞ்சம் கொஞ்சமாய் விலகி போயிருக்கின்றனர்.


வேலைக்கு போனதும் ஒரே நிறுவனத்தில்.போன இடத்திலும் காதல் ? குறைய வில்லை . எப்போதும் போனில் பேச்சு , போனில் இல்லையென்றால் நேரில் . நிறுவனம் சும்மா இருக்குமா வேறு வேலை பார்த்துக் கொள் என்றவுடன் உடனே சரி என்று வந்து விட்டனர் . அவ்வளவு பொறுப்பு .


பெறோர்கள் இவர்கள் அருகில் இல்லை , உறவினர்கள் இல்லை ,நண்பர்கள் இல்லை . இத்தனைக்கும் இவர்களின் பெற்றோர்கள் பொருளாதார வசதியில் குறைந்தவர்களும் அல்ல .


ரம்ஜான் தினத்தன்று ஷாஜகானிடம் கேட்டேன் .அப்பாவிற்கு வாழ்த்து சொன்னாயா என்று . பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னான். லட்சுமியிடம் என்ன ரம்ஜான் பிரியாணி என்ன ஆச்சு என்று கேட்டேன் , முதல்ல அவன் பெயர மாத்தனும் அப்படின்னு சொல்லுது.

இவர்களின் படிப்பை சரியாக முடித்து சரியான வேலையில் அல்லது ஏதேனும் தொழிலில் ஈடுபட்டு வெற்றி அடைந்த பிறகு பெற்றோரிடம் தெளிவாக புரிய வைத்திருந்தால் காதலின் உண்மையான வெற்றி கிடைத்திருக்கும்.


காதல் என்பது புரிந்து வரும் போது காதலர்களைக் காட்டிலும் அருகில் இருப்பவர்கள் மகிழ்ச்சியாய் இருப்பார்கள்.


மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா


Tuesday 21 August 2012

பவர் ஸ்டார் இடத்தை பிடிப்பாரா டாக்டர் சரவணன்


வணக்கம்



கூட்டம் தானா சேர்ந்த கூட்டமா , இல்ல சேர்த்த கூட்டமா என்பது அவர்கள் செய்யும் செலவைப் பொறுத்ததே என்று அடிச்சு சொன்னவர் லத்திகா சீனிவாசன்.


மதுரையில் அவருடைய லத்திகா வெற்றி விழா நிகழ்ச்சியை பார்த்து தெரிந்துக் கொண்டேன் . நீயா ? நானா ? நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கோபிநாத்தை ஒரு கை பார்த்து உலகமெங்கும் புகழ் பெற்று , இன்று ஷங்கரின் படத்தில் நடிக்கும் அளவு தன்னை உயர்திகொண்டது வரலாறு .


 பவர் ஸ்டாரை தொடர்ந்து மதுரையிலிருந்து புறப்பட்டிருக்கும் மற்றும் ஒரு நடிகர் டாக்டர் சரவணன் . அஞ்சா நெஞ்சரின் காலத்தில் பிரபலமடைந்து மக்களின் மருத்துவராக பரினாமித்து உள்ளூர் சானல் நடத்தி மதுரையில் பவர் ஸ்டாராக வலம் வருபவர்.


அஞ்சா நெஞ்சரின் காலத்தில் இளமை ஊஞ்சலாடுகிறது என்கிற பெயரில் படம் எடுத்து இன்று வரை படம் வெளி வராதது யாருடைய துரதிர்ஷ்டம் என்று தெரியவில்லை . ( தப்பிச்சோம் அப்படின்னு நெனச்சுராதிங்க ) அவர் அன்றே வந்திருந்தால் ஒன்று ரித்திஷ் போல் எம் பி ஆகியிருக்காலாம் அல்லது பவர் ஸ்டார் ஆகியிருக்கலாம் .


விட்டேனா பார் என்று மீண்டும் வருகிறார் டாக்டர் சரவணன் . படத்தின் பெயர் அகிலன்  அதிலும் இரண்டு வேடம் . முன்பு போல் செய்யாமல் இந்த முறை நமீதா முன்னிலையில் பாடல் வெளிவந்துள்ளது . ( கூட உள்ள பிரபலங்கள் படம் பார்த்து தெரிந்து கொள்க )

படம் வெற்றி பெற பவர் ஸ்டார் ரசிகர் ( கள் ) சார்பாக வாழ்த்துவோம்.







மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா








Monday 20 August 2012

வாழ்வின் இறுதி வரை வரும் வாழைப்பழம்

வணக்கம் 


நான் உசிரோடு இருக்கும் வரை உன்னை விட்டு பிரிய மாட்டேன். உன்னோடவே வருவேன் இந்த மாதிரி வசனத்தை அல்லது வாக்கியத்தை நாம் நாடங்களிலும், திரைப்படங்களிலும், கதைகளிலும் படித்தும் , சில நேரங்களில் நம்முடைய வாழ்விலும் கேட்டிருப்போம் , நாம் கூட யாரைப் பார்த்தாவது சொல்லி இருப்போம் . 


யோசித்துப் பார்த்தால் அது இடையில் வந்து இடையிலேயே போயிருக்கும் . நான் எல்லாம் அப்படி இல்ல , எனக்கு யாரும் இப்படி சொல்லி மறந்ததில்ல , என்றால் நீங்கள் கண்டிப்பாய் கொடுத்து வைத்தவர்கள் . 


வாழைபழம் இந்தப் பழம் நம் வாழ்வில் தொடக்கத்தில் இருந்து தொலைதூரம் போகும் வரை நம்முடன்  இணைந்து வந்துக் கொண்டிருக்கிறது. நம்மை பலமாக வைத்துக் கொண்டிருக்கிறது. யோசித்துப் பாருங்கள் 


1. நாம் பிறந்தவுடன் , நமக்கு ஒரு குழந்தை பிறந்தவுடன் மலை வாழைப்பழம் கொடுக்கின்றோம் , நமக்கும் கொடுக்கப் பட்டிருக்கும்.

2. சிறிது காலம் வளர்ந்த பின்னரும் , குடும்பம் பொருளாதார வளர்ச்சி அடைந்திருந்தாலும் , அடையாமல் இருந்தாலும் பசிக்கு இவரே துணைக்கு வந்துக் கொண்டிருக்கிறார்.

3. படித்து அல்லது படிக்காமல் போனாலும் தூசி மிகுந்த இடத்தில நாம் இருந்தால் மறு நாள் நாம் ஸ்ஸ்ஸ் அப்பாடா என நம் கழிவுகளை வெளியேற்றவும் துணை புரிகிறது .

4 . நோய் வாய்ப்பட்டு நாம் இருக்கும் போது  பொதுவாய் மருத்துவர்கள்  எப்பேர்பட்ட நோயாளியாய் இருந்தாலும் இதனையே உணவாகவும் , உணவுக்கு மாற்றாகவும் கொடுக்க சொல்லி கொண்டிருக்கிறார்கள் 

5 . உடல் ஆரோக்கியதிற்கு துணை நிற்கும் அதே வேலையில் , நீங்கள் கோவிலுக்கு சென்றாலும் , வீடுகளில் ஏதேனும் கடவுளை வழிபட்டாலும் தட்டு நிறைய பழங்கள் தேவையில்லை . இரண்டு வாழைபழம் போதும் , நமக்கும் நிம்மதி கடவுளுக்கும்.

6 . ஒருவருடத்திற்கும் மேலாக ஓடிய கரகாட்டக்காரன் திரைப்படம் ஓடிய சில காரணங்களில் வாழப்பழ காமெடியும் ஒன்று.


7 . ஒரு வழியாய் நாம் இறந்து போய்விடுகிறோம் ( அப்பாடா ) தலைக்கு மேல் முதலில் வைப்பது இரண்டு வாழைப்பழம் தான் .


இப்படி ஏராள காரணங்கள் உண்டு யோசித்து பதிவு போடும் வேலையில் சில மறந்துப் போயின . உங்களுக்கு தோன்றினால் தாராளமாய் கருத்துகளில் போடுங்கள் .


ஒரு பொது அறிவிற்கு ( எனக்குத் தான் ) 

வாழைப்பழம் எத்தனை வகைப்படும் ?

1 . செவ்வாழை 
2 . ரஸ்தாளி 
3 . மலை வாழைப்பழம் 
4 . கற்பூர வள்ளி 
5 . பச்சை வாழைப்பழம் 
6 . நேந்திரன் வாழைபழம் 
7 . பூவன் 

நினைவிற்கு வந்தது இவ்வளவு தான். 

இறுதியாய் 


 


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா


Saturday 18 August 2012

நம்பிக்கை அது தானே எல்லாம் - கல்யான் பிரபு சொல்வது போல் கிடையாது

வணக்கம்



நாளைக்கு சண்டே பலரோட வீட்டுல டி வி ரிமோட்டுக்கு நடக்கும் சண்ட எனக்கு வேற ஒரு பயம் வேற இந்த விளம்பர பயம்.எல்லா விளம்பரமும் கிடையாது . இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் - கல்யான் ஜுவல்லர்ஸ் அப்படின்னு பின்னாடி ஒரு குரல் கேட்டதும், பிரபு வந்து நம்பிக்கை அது தானே எல்லாம் அப்படிம்பாரு , அதுக்கப்புறம் விளம்பரம் வரும் மக்கள் எல்லோரும் ஒரு இடத்தில கூடி போராட்டம் நடத்துவாங்க பிரபு தலைமையில் , மறுபடியும் சொல்லுவாரு நம்பிக்கை  தானே எல்லாம்.

எனக்கு ஒரு மண்ணும் புரியல்ல , சனங்க இன்னுமா இந்த மாதிரி விளம்பரத்தை நம்புறாங்க.கடையிலும் கூட்டம் வரத் தான் செய்யுது. அது எப்படி வேணா போகட்டும் . நம்பிக்கை அது தானே எல்லாம் இந்த ஒரு வார்த்தைக்கு நான் படிச்ச நாலு விசயத்த இங்க போடுறேன்.


இப்போ உங்களுக்கே புடிக்கும் - நம்பிக்கை அது தானே எல்லாம்.





ஒரு கிராமத்தில் அனைவரும் கூடி மழைக்காக பிரார்த்தனை செய்ய முடிவு செய்தனர் . அதன் படி அனைவரும் குறிப்பிட்ட நாளில் ஒன்று கூடினர். 

ஒரு சிறுவன் மட்டும் குடையுடன் வந்தான்   


---------------------------------------------------------------------------------------------

ஒரு வயது குழந்தையை எப்போது வேண்டுமானால் மேலே தூக்கிப் போடுங்கள் அந்த குழந்தை சிரித்துக் கொண்டே போகும் .


தன்னுடைய தந்தை தன்னை பிடித்து விடுவார் என்று தெரியும்.



---------------------------------------------------------------------------------------------------------------

தினம் தினம் நாம் இரவு படுக்கும் போது , மறு நாள் காலை எழுந்திருப்போம் என்பது உத்தரவாதமில்லை.


ஆனாலும் அதிகாலை அலாரம் வைத்து விட்டே உறங்குகிறோம் 


--------------------------------------------------------------------------------------------


ஒரு  டாக்டர் ஒரு கூட்டத்தில் சொன்னாராம் மனிதனுக்கு  தேவையான மருந்து அன்பும் , அக்கறையும் தான் என்று , கூட்டத்தில் ஒருவன் கேட்டானாம் இரண்டும் காட்டி அவன் மாறவில்லை என்றால் ?


மருந்தை இரண்டு மடங்கு அதிகமாகக்க வேண்டும்.



------------------------------------------------------------------------------------------------------------




மீண்டும் சிந்திப்போம் 

அவனி சிவா 










Thursday 16 August 2012

கழகம் கட்டெரும்பாய் ஆகப் போகிறது - ட்வீட் ஸ்பெசல்

வணக்கம் 


 இனி கலைஞரை முரசொலி இதழ் முதல் facebook , tweet ஆகிய இடங்களிலும் காணாலாம் . இது உண்மையில் மகிழ்ச்சி தரக் கூடிய செய்தி . இது அவரின் வயதை தொட்டவர்களும் , அவரின் வயதை கடக்கப் போகிறவர்களும் கணினி என்றவுடன் அதில் காமம் மட்டுமே பிரதானமாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கும் , கணினி என்பதே பொழுது போக்க என்றும் இது ஒன்றும் உருப்படியாக இருக்காது என நினைப்பவர்களுக்கும் கலைஞர் இணையத்தில் இணைந்திருப்பது ஒரு சிறந்த பதிலாகவும் ,மறுப்பாகவும் இருக்கும். 


ஏனெனில் கலைஞர் ஏதும் அறியாத மனிதர் அல்ல. எழுத்து , பேச்சு , உரையாடல் இது தவிர்த்து மிகச் சிறந்த அரசியல் வாதியாகவும் திகழ்ந்தவர்.இணையத்தில் எழுதும் என்னைப் போன்றவர்களுக்கு மிகுந்த மகிச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது. இதற்க்கு முன்  பிரபலங்கள் பலரும் இணையத்தில் இருந்தாலும் இவரின் வரவு எல்லாமட்ட மக்களிடமும் இணையம் சேரும் என நம்பலாம்.

நன்றி , நிற்க 


இந்த வயதில் இவர் இணையத்தில் இணைந்து தன்னுடைய கருத்தையும் தான் இருக்கும் கழகம்  செய்யும் சிறப்பான செயல்கள் எல்லா இடங்களில் சேரும் வேலையில் ......


திராவிடர் கழகத்தில் அண்ணா பிரிந்ததற்கும், தி மு க வில் இருந்து எம் ஜி ஆர் பிரிந்ததற்கும் அதே கழகத்தில் இருந்து வை கோ பிரிந்ததற்கும் சில அவர்களின் பார்வையில் காரணங்கள் உண்டு . இதற்கிடையில் வெளியேறிய சில அவர்களின் பெயர்களில் கழகத்தை ஆரம்பித்து கலகம் செய்து மீண்டும் இணைந்தும் இருக்கின்றனர் , சிலர் காணாமல் போனவர்களும் உண்டு . இப்படி நடப்பதை பற்றி கலைஞர் கவலைப் படாமால் போவதின் விளைவே 

மதுரையில் நாங்க எல்லாம் அண்ணன் தி மு க என்கிற போஸ்டர் . 


இதைப் பற்றி இவர் கண்டுக் கொள்ளாமல் போனால் , கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனா கதையாக கழகம் ஆவதற்கும் வாய்ப்பு உண்டு. இணையத்தில் இணைந்த இந்த வேலையில் , இந்த மாதிரி நடத்தைகளை வெளியேற்றினால் அவருக்கும் கழகத்திற்கும் நல்லது .


அம்புட்டு தான் 

மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா 



Friday 10 August 2012

உண்மைகள் எப்போதும் இனிக்கும் - கசக்காது


வணக்கம்


ஒரு முறை உண்மை பேசிவிட்டு மறந்து விட்டாலும் கூட சொன்ன ,கேட்ட , படித்த , செய்திகள் மீண்டும் எந்த வித நெருக்கம் இன்றி அப்படியே வரும் . பொய் பேசினாலோ , எழுதினாலோ ,சொன்னாலோ  அதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் . 

தமிழ் தாத்தா நம் வள்ளுவர் சில இடங்களில் பொய்யையும் உண்மைககாக்க பயன் படுத்தலாம் எனக் கூறுகிறார் , அது உண்மைத் தன்மை இழந்து விடாமல் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார் .

சில விசயங்களை நினைவுப் படுத்துகிறேன் . உண்மையின் வெளிச்சம் நமக்குப் புலப்படும் . நேற்று முன் தினம் நிகழ்ந்த ஒரு நிகழ்வு இது .


ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற நாடுகளில் அல்ஜிரீய நாட்டை சேர்ந்த ஓட்டப் பந்தய வீரர் கலந்துக் கொண்டார் . அவரின் தகுதி சுற்றில் அவர் பங்கேற்க முடியாது என ஒலிம்பிக் சங்கம் தெரிவித்தது , அதனை அந்த நாடு விளையாட்டு துறைக்கு அனுப்பி வைத்தது . தகுதி சுற்ற பங்கேற்ற்றப் நேரத்தில் அவரின் கால்கள் முறிவு ஏற்ப்பட்டு இருந்தாதால் அவரால் அவரின் திறனை வெளிக் கொண்டு வர முடியாமல் போனது . இதனை மிகத் தெளிவாக சம்மந்தப்பட்ட அனைவருக்கும் நடந்த உண்மையை விளக்கி , கடிதம் அவரின்  சார்பாக அந்த நாட்டின் விளையாட்டுத் துறையினரால் அனுப்பப்பட்டது . ஏற்றுக் கொண்டார்கள் ஒலிம்பிக் சம்மேளத்தினர் .


முடிவில் அவர் வென்றது தங்கத்தை ,இருக்கிற உண்மையை சொன்னால் கண்டிப்பாய் தங்கம் கிடைக்கும் அல்லது தங்கம் மாதிரி பொண்டாட்டி கிடைக்கும் . கல்யாணாம் முடிஞ்சவர்களுக்கு தகரம் கூட கிடைக்காது ( பொய் சொல்லி இருந்தால் )


முடிக்கிறதுக்கு முன்னாடி உண்மையை ஒரு தத்துவத்தோடு சொல்வோம் .


வெள்ளை என்பது ஒரு நிறம் தான் அழகு அல்ல .


ஆங்கிலம் என்பது ஒரு மொழி தான் அறிவு அல்ல .



இப்படி உண்மையா யோசிங்க கண்டிப்பாய் வெற்றி  கிட்டும் . அனைவரும் வெற்றிப் பெறவே , படம் பார்க்கவும்


உண்மையுடன் ( சின்ன சின்ன பொய்யுடன்  )
அவனி சிவா 





மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா

Tuesday 7 August 2012

அந்த மாதிரி ஜோக் - சின்னப் பசங்க எல்லாம் வேற பதிவப் படிங்க

வணக்கம்


நேரடியா மேட்டருக்குப் போயிடலாம்.


ஒரு பொண்ணு பேப்பர்ல ஒரு விளம்பரம் கொடுத்தாங்க. விளம்பரம் பின்வருமாறு.

என்னுடன் இணைந்து பணியாற்ற ஒரு ஆண் தேவை . தகுதிகள்


1. என்னை விட வேகமாய் முடிக்கக் கூடாது.

2. முடியாமல் ஓடக் கூடாது .

3. முக்கியமானது , என்னை கட்டிலில் திருப்திப் படுத்த வேண்டும்  , அதிக  
    பட்சம்  10  அளவு இருக்க வேண்டும் .



விளம்பரத்தைப் பார்த்து  ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார் . வரவேற்ற அவர் அவரைப் பார்த்து வியந்தார் வந்தவருக்கு கால் இரண்டும் முறிந்து இருந்தது .
viவிவரம் kகேட்டார் .

நீங்க யாரு என கேட்டார் . உங்க விளம்பரம் பார்த்துட்டு வந்தேன் , நான் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி என்று அறிமுகப் படுத்திக் கொண்டார் .

சரி சார் என்னுடைய கண்டிஷன் படிச்சிங்களா ? என கேட்டார் .

படிச்சேன் மேடம் என்னோட கை முறிஞ்சி போனாதால நீங்க முடிக்க சொன்னாலும் என்னால முடிக்க முடியாது , கால் ரெண்டும் முறிஞ்சி போனதால ஓடவும் முடியாது

அது சரி முக்கியமான மூணாவது கண்டிசன் ?


என்ன மேடம் இப்படி கேட்டிங்க , உங்க வீட்டு காலிங் பெல்லை எப்படி அடிச்சேன்னு நெனச்சிங்க  !!!!!!!!


----------------------------------------------------------------------------------------------------------


ஒரு தத்துவம்


At 15, a girl is a SURPRISE.
At 25, she is the RIGHT PRICE.
At 35, a GRAND PRIZE.
At 45, a CONSOLATION PRIZE.
At 55, she is a DOOR PRIZE, and
At 65, a GIVEAWAY PRIZE.

Saturday 4 August 2012

குஷிப் படுத்தும் எண்கள் - பரவசப்படுத்தும்

வணக்கம் 




1 x 8 + 1 = 9
12 x 8 + 2 = 98
123 x 8 + 3 = 987
1234 x 8 + 4 = 9876
12345 x 8 + 5 = 98765
123456 x 8 + 6 = 987654
1234567 x 8 + 7 = 9876543
12345678 x 8 + 8 = 98765432
123456789 x 8 + 9 = 987654321

1 x 9 + 2 = 11
12 x 9 + 3 = 111
123 x 9 + 4 = 1111
1234 x 9 + 5 = 11111
12345 x 9 + 6 = 111111
123456 x 9 + 7 = 1111111
1234567 x 9 + 8 = 11111111
12345678 x 9 + 9 = 111111111
123456789 x 9 +10= 1111111111

9 x 9 + 7 = 88
98 x 9 + 6 = 888
987 x 9 + 5 = 8888
9876 x 9 + 4 = 88888
98765 x 9 + 3 = 888888
987654 x 9 + 2 = 8888888
9876543 x 9 + 1 = 88888888
98765432 x 9 + 0 = 888888888 



அற்புதமாக இல்லை .

இதையும் பாருங்க .

1 x 1 = 1
11 x 11 = 121
111 x 111 = 12321
1111 x 1111 = 1234321
11111 x 11111 = 123454321
111111 x 111111 = 12345654321
1111111 x 1111111 = 1234567654321
11111111 x 11111111 = 123456787654321
111111111 x 111111111 = 12345678987654321


 

எது  100%? 


எது 101%?

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

எழுத்தின்  எண்கள் 


1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26.



H-A-R-D-W-O- R- K

8+1+18+4+23+ 15+18+11 = 98%


K-N-O-W-L-E-D-G-E

11+14+15+23+ 12+5+4+7+ 5 = 96%


A-T-T-I-T-U-D-E

1+20+20+9+20+ 21+4+5 = 100%


இப்போ இதைப் பாருங்க .



L-O-V-E-O-F- G-O-D

12+15+22+5+15+ 6+7+15+4 = 101%



அனைவருக்கும் அனைத்தும் பெற வாழ்த்துக்கள் .