குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Wednesday 30 May 2012

நன்றி - இணையத்திற்கும் , ரஜினிக்கும்



வணக்கம்



* ரஜினி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மழை வந்ததால், மழை கேன்ஸல் செய்யப்பட்டது.

* ரஜினி ஒரு வங்கிக்கு செக் கொடுத்தார். வங்கி பவுன்ஸ் ஆனது.

* பரீட்சையில் கொடுக்கப்பட்ட கேள்வித்தாளில் ‘200 கேள்விகளில் ஏதேனும் 150-க்கு பதில் அளிக்கவும்' என்று இருந்தது. அதைப்பார்த்துக் கடுப்பான ரஜினி 200 கேள்விகளுக்கும் பதில் எழுதிவிட்டு கடைசியில் இப்படி எழுதினார், ‘இவற்றில் ஏதேனும் 150 பதில்களை மட்டும் திருத்தவும்'

* ரஜினிகாந்தின் மெயில் ஐடி. gmail@rajnikanth.com.

* ஒரு நாள் ரஜினிகாந்த் தனது ஒரு சதவிகித அறிவை உலகத்தோடு பகிர்ந்துகொள்ள முடிவு செய்தார். கூகுள் பிறந்தது!

* 2012&ல் உலகம் நிச்சயம் அழியாது. ஏனெனில் ரஜினிகாந்த் 3 வருட வாரண்டியோடு ஒரு லேப்டாப் வாங்கியிருக்கிறார்.

* And, the Rajnikant award goes to oscar.

* ரஜினி, ஒரேநாளில் 200 பாகிஸ்தான் தீவிரவாதிகளை கொன்றார் - ப்ளூடூத் வழியாக.

* ரஜினி ஒரு வங்கியில் வீட்டுக்கடன் வாங்கினார். அப்போதில் இருந்து அந்த வங்கி ரஜினிக்கு மாதா மாதம் இ.எம்.ஐ. செலுத்தி வருகிறது.

* ரஜினி, இந்தியன் கிரிக்கெட் டீமின் கோச்சராக நியமிக்கப்பட்டார். என்ன நடந்தது என்று யூகிக்க முடிகிறதா? அந்த வருடத்தின் ஹாக்கி கோப்பையையும் சேர்த்து இந்திய அணி வென்றது.

* கிரஹாம்பெல் டெலிபோனைக் கண்டுபிடித்தபோது, ஏற்கெனவே 10 மிஸ்டு கால்கள் ரஜினியிடம் இருந்து வந்திருந்தன.

* ரஜினி, தனது தோட்டத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு கிணறு வெட்டினார். கேரம் விளையாடுவதற்காக!

* நோக்கியா விளம்பரத்தில் கை குலுக்கிக்கொள்ளும் இரண்டு கரங்கள் யாருடையவை என்பது ரஜினிக்கு மட்டுமே தெரியும்.

* ரஜினி சமீபத்தில் இரண்டு யானைகளையும், இரண்டு குதிரைகளையும் தத்தெடுத்திருக்கிறார். எதற்குத் தெரியுமா? செஸ் விளையாட!

* ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தபோது, அதை முதன்முதலில் ரஜினியிடம் காட்டி சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று அவரைத் தேடி வந்தனர். ஆனால் அப்போது எதிர்பாராவிதமாக ரஜினி குடும்பத்துடன் வெளியூருக்கு சுற்றுலா சென்றுவிட்டார் - தன் ஹெலிஹாப்டரில்.

* ரொனால்டினோ: என் காலால் ஒரு முறை பந்தை உதைத்தால் 3 நிமிடங்களுக்கு விடாமல் சுற்றும்...
ரஜினிகாந்த்: தம்பி, இந்த பூமி ஏன் சுத்துதுன்னு உனக்குத் தெரியுமா?

* கடவுளுக்கும், ரஜினிக்கும் ஒருமுறை சண்டை வந்தது. யார் ஜெயித்திருக்கக்கூடும்? உங்களுக்கு ஒரு க்ளூ: கடவுள் சொர்கத்தில் இருக்கிறார். ரஜினி, இன்னமும் பூமியில் இருக்கிறார்.

* கடவுள் ரஜினி நடித்தப் படத்தைப் பார்த்துவிட்டு சொன்னார், ‘ஓ மை ரஜினிகாந்த்'

* ரஜினி ஒருமுறை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ‘ஓவர் ஸ்பீடு' என்று கைது செய்யப்பட்டார். அப்போது அவர் நடந்துசென்று கொண்டிருந்தார்.

* ரஜினியால் மட்டும்தான் மிஸ்டு காலுக்கு ஆன்ஸர் பண்ண முடியும்.

* ரஜினி தனது மகளுக்கு எப்படி துப்பாக்கியை பயன்படுத்துவது என்று சென்னையில் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார். குண்டு தவறுதலாகப் பாய்ந்து ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார்.

* ஒருமுறை ரஜினிகாந்த் விமானத்தில் சுவிர்சர்லாந்து மீது பறந்துகொண்டிருகும்போது தவறுதலாக அவரது பர்ஸ் விமானத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டது. சுவிஸ் பேங்க் உருவானது!

* ரஜினிகாந்த் சிறுவனாக இருந்தபோது எழுதிய டைரிக்கு பிற்காலத்தில் ‘கின்னஸ் உலக சாதனை புத்தகம்' என்று பெயர் வைத்துவிட்டார்கள்.

* சார்லஸ் பாபாஜ் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்ததன் உண்மைக் காரணம்: ரஜினியின் வால்பேப்பரை டவுண்லோட் செய்ய.

* ரஜினி 2&ம் வகுப்புப் படிக்கும்போது அவரது புத்தகப் பையை யாரோ திருடிவிட்டார்கள். பிற்காலத்தில் விக்கிபீடியா உருவானது.

* ரஜினிகாந்த் தனது ஃபேஸ்புக் அக்கவுண்ட்டில் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்ய, கால்குலேட்டரை பயன்படுத்துகிறார்.

* ரஜினிகாந்த் பள்ளிக்கூடம் படிக்கும்போது ஒருநாள் ஸ்கூலுக்குப் லீவு போட்டுவிட்டார். # ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான கதை இதுதான்

Monday 28 May 2012

சுவனப் பூங்கா - கல்லறைத் தோட்டம் - கைலாசபுரம்

வணக்கம் 


அப்போலோ டாக்டராக இருந்தாலும் , அமிஞ்சிக்கரை டாக்டராக இருந்தாலும்  இல்லை அந்தந்த ஊரில் இருக்கும் அப்பாடக்கர் டாக்டர்  ஆக இருந்தாலும் ஒரு நாள் மேலே குறிப்பிட்ட இடத்திற்குப் போயி ஆக வேண்டும். இனி வரும் காலங்களில் ஒரு வேளை உயிரின்  உன்னதத்தை கண்டுப் பிடித்து , வாழ்நாள் இன்றி வாழலாம் எனும் மருத்துவத்தை கண்டுபிடிக்காதவரை. உங்களிடம் கோடி ரூபாய் இருந்தாலும் , கோடி வீட்டில் வாழ்ந்தாலும் , நீங்கள் டாக்டராக இருந்தாலும் உடம்பு  கேடிற்கு பணத்தை செலவு செய்ய  வேண்டும் . இன்றைய அளவில் மருத்துவமனை என்பது , ஏதோ நாகரீகமாய் இருக்கும் அணைத்து விசயங்களும் அடங்கி இருக்கும். ஆனால் சமீபத்தில் நான் ஒரு மருத்துவமனைக்கு சென்றேன்.அதன் அனுபவமே இந்த பதிவு.

மதுரையின் மிக முக்கிய பகுதியான அண்ணா நகரில் இருக்கிறது சுந்தரம் கிளினிக். டாக்டரின் பெயர் நடராஜன் என்பதாகும்.இருவதுக்கு பத்து என்கிற அளவில் ஒரு இடம் .அதன் பிற்பகுதியில் அவருடைய வீடு. அந்த மொத அறையினில் நடுவில் ஒரு மேஜை போட்டு ஒரு இருக்கை .  அதுவே மருத்துவர் உட்காரும் இடம். அவருடைய வலது புறம் ஒரு பெஞ்ச் இரண்டு பேர் அமரும் வசதிக் கொண்டது. இடது புறமும் ஒரு பெஞ்ச் .முறையே ஆண்களுக்கும் , பெண்களுக்கும் . வலது  மூலையில் ஒருவர் படுத்துக் கொள்ளும் அளவு மேலும் ஒரு பெஞ்ச் .ட்ரிப்ஸ் எதாவது போட வேண்டியது வந்தால் அது உபயோகப் படுத்துவார் போலும். இடது பக்கம் ஒரு அலமாரி அதில் தான் மருந்துக்கள் இருக்கின்றன.

காலை பத்து முதல் மதியம் ஒரு மணி வரை , பிறகு இரவு ஏழு மணி முதல் நோயாளிகள் வரும் வரை பார்க்கிறார்.மிகப் பெரிய அதிசயம் என்னவென்றால் முதலில் நாம் போனாலும் பெயர் எழுத ஒரு சிகப்பு சுடிதார் போட்ட பிகர் கிடையாது. நாம் தான் வரிசையாக நகர வேண்டும்.ஊசி போட , மாத்திரை சீட்டு வழங்க கொண்டைப் போட்ட நர்ஸ் கிடையாது. அவரே நோயாளியை கவனிக்கிறார்.ஊசி போடுகிறார்.பிறகு மாத்திரை கொடுக்கிறார்.அதிகப் பட்சம் யாருக்கும் மாத்திரை எழுதி தருவதில்லை.
 டாக்டரின் செயல்கள் மேலும் ஆச்சர்யப் படுத்தின. எத்தனை பேர் இருந்தாலும் எடுத்த பொருள்களை அதே இடத்தில , எப்படி இருந்ததோ அப்படியே வைக்கிறார். அலமாரியில் இருந்து ஒரு மருந்து எடுத்து கொடுத்தால் , அதனை அவரின் மேஜை மேல் வைப்பதில்லை.அடுத்த பேசன்ட் இருந்தாலும் மீண்டும் அதே இடத்தில வைத்த பிறகு தான் அடுத்தவர். பெரும்பாலும் காய்ச்சல்,மூட்டு வலி, உடம்பு வலி எனும் தினசரி நாம் சந்திக்கும் விஷயங்கள் அடங்கிய நடுத்தர வசதி கொண்டவர்கள் தான் அதிகம் வருகிறார்கள் .ஊசிப் போட்டு , மாத்திரை கொடுத்த பிறகு ஒரே மாதிரி ஐம்பது ரூபாய் கட்டணமாக பெறுகிறார்.

வரவேற்பு மேஜை கிடையாது, மருத்துவம் செய்ய நர்ஸ் கிடையாது, உதவியாளர் என்று யாரும் கிடையாது. எல்லாமும் அவரே . இதில் என்ன அதிசயம் என்றால் , கிராமத்தில் , வளரும் நகரத்தில் தனியாய் ஒருவர் இப்படி இருக்கலாம் . மிகப் பெரிய நகரத்தில் முக்கியப் பகுதியில் தனி மனிதனாய் . ஆச்சரியம் என்னவெனில் அவருக்கு வயது 75 மேல் . நான் அங்கு போன காரணம் நண்பர் ஒருவருக்கு தன்னுடைய  அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டிய மருத்துவ சான்றிதழ் வாங்குவதற்கு. பழம் தின்று கொட்டைப் போட்ட அந்த டாக்டர் , அவ்வளவு  கூட்டத்திலும் எங்களுக்கு வழங்கினார். எந்த ஒரு அவசரம் கிடையாது. அப்படியா என கேட்டார்.பாரம் வாங்கிட்டு வந்தாச்சா , இல்லை என்றதும் வாங்கிட்டு வந்திருங்க என்றார். அவ்வளவு தான்.

மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா


இதுக்கு நீங்களே தலைப்பு வச்சிருக்கலாம்

வணக்கம்
 
முதல்ல ஒரு புலம்பல்

பிரிய துடிப்பவர்கள் எந்த சந்தர்பத்திலும் புரிந்துகொள்ள மாட்டார்கள் ....... புரிந்து கொண்டவர்கள் எந்த சந்தர்பத்திலும் பிரியமாட்டார்கள்

ரெண்டாவது ஒரு புத்திசாலித்தனம்
கந்தசாமி ஒரு நூறு ருபாய் வச்சிக்கிட்டு ஸ்டார் ஹோட்டலுக்கு சாப்பிடப் போனாரு , பில் ரெண்டாயிரம் வந்துச்சு.பணம் இல்லாததால மேனேஜர் போலீஸ்ல ஒப்படைசாறு.அங்க இருந்த நூறு ரூபாய வாங்கிட்டு விட்டுங்க.வெளிய வந்த கந்தசாமி a t m ல போயி மறுபடி நூறு ரூபா எடுத்தாரு.

மூணாவது ஒரு விளம்பரம்


 


நாலாவது ஒரு அதிசயம்

கரப்பான் பூச்சி எலியப் பாத்து பயப்படுது, எலி பூனையைப் பாத்து பயப்படுது , பூனை நாயைப் பாத்து , நாய் ஆண்களை பாத்து , ஆண்கள் பெண்களை பாத்து, பெண்கள் கரப்பான் பூச்சியைப் பாத்து .


அஞ்சாவது படிச்சதுக்கு பரிசு 







Wednesday 16 May 2012

கலகலப்பு - கண்டிப்பாய் திரை விமர்சனம் அல்ல

வணக்கம்      

 இது முழுக்க முழுக்க நம்ம கந்தசாமி மேட்டர்.அதுக்கு தான் இந்த தலைப்பு . தலைப்பை ஒரு வழியா கொண்டு வந்தாச்சு.
நம்ம கந்தசாமி பையன்  பாத்து வயசு தான்  ஒரு பொன்னை விரும்பினாறு .நேர போயி விருப்பத்தை சொல்லப் போனாரு .காலிங் பெல் அடிச்சாரு கொண்டு போன பூவை எடது வச்சிக்கிட்டு ரெடியா இருந்தார். கதவு திறந்தது , திறந்தது அப்பா , நம்ம பயனும் அலட்டிக்காம , அங்கிள் கண்டிப்பா அன்னா ஹசரேவுக்கு ஆதரவு அளிங்க அப்படின்னு போயிட்டான்.

--------------------------------------------------------------------------------------------------------------

இந்த படத்தைப் பாருங்க.அம்மணி மூக்கு மேல இருக்கிற அந்த சிகப்பு கலர் வண்ணத்தை ஒரு முப்பத்து வினாடி 
பாருங்க , பார்த்துட்டு வீடு சுவர் இல்ல எதவாது ஒரு வெற்றிடத்தை பாருங்க . 



            
-------------------------------------------------------------------------------------------------------------

கந்தசாமி ஒரு வேலைக்குப் போனாரு , அவங்களும் அவருக்கு நேர் கானல் நடத்தினாங்க , ஒரு புயல் வருது என்ன செய்விங்க ,அப்படின்னு கேட்டாங்க , ஒரு நங்கூரத்தை நாட்டுவேன் அப்படின்னார். மறுபடி புயல் வந்தா , மறுபடியும் நாட்டுவேன் . பத்து முறை வந்தா அப்பவும் நங்கூரத்தை நடுவேன்.உங்களுக்கு எப்படி நங்கூரம் கிடைக்கும் அப்படின்னு கேட்டாங்க.உங்களுக்கு புயல் எப்படி கிடைக்குமோ அப்படி தான் எனக்கும் என சொல்ல வேலை கிடைசுடிச்சு.

--------------------------------------------------------------------------------------------------------------

இப்போ இந்த படத்தை பாருங்க 





 இப்போ திருப்பி பாருங்க , எப்புடி 

----------------------------------------------------------------------------------------------------------------
இப்போ சர்தாஜி கந்தசாமி 

ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு
இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு..
எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க
ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப்
பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!
ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி ” டாக்டர்
அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது..” அப்படின்னாரு..
எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர்
ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.
அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம்
உதவியாள்கிட்டே ” யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு” ன்னாரு.. அதில இருந்த
லேகியத்தை நிறையா வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு..
சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, “தூ… தூ… இது எருமை சாணி..” அப்படின்னு
கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. ” அட.. உங்களுக்கு ருசி தெரிய
ஆரம்பிச்சுருச்சி” ன்னாரு..!
சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே
திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே..
மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..
அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி ” டாக்டர்.. எனக்கு பழசெல்லாம்
மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது..” அப்படின்னாரு.. இப்ப
அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்..
என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. சர்தாருக்கு
மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..
திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட..” அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு”
ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும்
தெரியலே…!!

---------------------------------------------------------------------------------------------------------------

ஜிம்மி, ஜாக்கி என்ற இரு நாய்களும் சர்தார் மாதவ் சிங்கும் ராக்கெட்டில்
விண்வெளிக்கு அனுப்பப் பட்டார்கள்.தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து
[த.க.நி.] ராக்கெட்டுக்கு ஆணைகள் பிறப்பிக்கப் பட்டன.
த.க.நி. ; ஜிம்மி…
ஜிம்மி ; லொள்.. லொள்..
த.க.நி. ; சிவப்பு பொத்தானை அழுத்து..! [ஜிம்மி அவ்வாறே செய்கிறது]
த.க.நி. ; ஜாக்கி….
ஜாக்கி ; லொள்..லொள்..
த.க.நி. ; நீல நிற கைப்பிடியை முன்னோக்கித் தள்ளு..[ ஜாக்கி சொன்னபடியே
செய்கிறது ]
த.க.நி. ; மாதவ்..
மாதவ் சிங் ; லொள்..லொள்..
த.க.நி. ; குரைக்கிறதை நிறுத்து.. ரெண்டு நாய்க்கும் சாப்பாட்டை வை.. வேற
எதுவும் பண்ணாதே.. ஏன்னா உனக்கு புத்திசாலித்தனமான விஷயங்கள் எதுவும்
புரியாது..!

-----------------------------------------------------------------------------------------------------------------

மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா     

Sunday 13 May 2012

இளையராஜா - வைரமுத்து இணைவார்கள் ?

வணக்கம்

வேலை காரணமாகவோ அல்லது குடும்பத்துடன் ஏதாவது சுற்றுலா பேருந்தில்  செல்லும் போதோ  , அல்லது டீ கடையில் டீ சாப்பிடும் போதோ,கல்யாண வீட்டில் , கோவில் விழாவில் , நடிகர்களின் மன்ற விழாவில் , இப்படி பல சமயங்களில் நம்மளை அறியாமல் இளையராஜா பாடல் கேட்டால் ஒரு வித சுகம் ஏற்படும். தொடர்ச்சியாக எண்பதுகளின் காலத்தில் பாடல்கள் கேட்டுக் கொண்டே வரும் போது ராஜா - வைரமுத்து கூட்டணி முறிவின் ஏக்கம் ஏற்படும் . அதே நேரத்தில் நண்பர்களுடன் இருந்தோம் எனில் கண்டிப்பாய் இது ஒரு விவாதம் ஆகா மாறி விடும்.இந்தப் பதிவு எழுதும் போது கூட ஹலோ f m ல் தொடர்ச்சியாக இருவரும் சேர்ந்து உருவாக்கிய பாடல்கள் ஒலி பரப்பி வருகிறார்கள்.மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டே பதிவிடுகிறேன்.

ராஜாவால் வைரமுத்து அவர்களுக்கு பெருமை கிடைத்ததா அல்லது வைரமுத்து வரிகளால் ராஜாவிற்கு பெருமை கிட்டியதா என்றால் சுலபமாக பதில் கூற முடியாது . பெருமை என்பது அவர்களின் கலைக்கு தான் .தனி மனிதர்களுக்கு அல்ல.ஆனாலும் இருவரில் எனக்கு ( மட்டும் அல்ல ) ராஜாவை தான் முதன்மைப் படுத்த முடியும்.

இதோ இந்த பதிவு இப்போது இடுவதற்கு காரணம் , இவர்களுடைய பாடல்கள் கேட்கும் போது மட்டும் இன்றி எங்கேனும் ,  அறிமுகம் இல்லாத நபர்கள் இவ்விசயதைப் பற்றி பேசிகொண்டிருந்தாலோ , இவர்களின் பிரிவை பற்றி ஏதானும் படித்தாலோ ,என்னை அறியாமல் ஏக்கம் அதிகருக்கும்.அப்படி தான் இன்று   9 - 5 - 12  ஆனந்த விகடனில்; தாமிரா அவர்கள் எழுதிய மௌனமான நேரம் சிறுகதை படித்த போது பதிவிட தோன்றியாது. அந்தக் கதையை படித்துப் பாருங்கள் . கதையின் கடைசி  வரிகள் பாதிக்கும், இதோ அந்தக் வரிகள்
 



  
 என்ன  செய்வது ... சமயங்களில்  சப்பரம்  தூக்குபவனின்   வலி உற்சவ
மூர்த்திகளுக்கு தெரிவது இல்லை.
------------------------------------------------------------------------------------------------------------------------------