குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Sunday, 13 May 2012

இளையராஜா - வைரமுத்து இணைவார்கள் ?

வணக்கம்

வேலை காரணமாகவோ அல்லது குடும்பத்துடன் ஏதாவது சுற்றுலா பேருந்தில்  செல்லும் போதோ  , அல்லது டீ கடையில் டீ சாப்பிடும் போதோ,கல்யாண வீட்டில் , கோவில் விழாவில் , நடிகர்களின் மன்ற விழாவில் , இப்படி பல சமயங்களில் நம்மளை அறியாமல் இளையராஜா பாடல் கேட்டால் ஒரு வித சுகம் ஏற்படும். தொடர்ச்சியாக எண்பதுகளின் காலத்தில் பாடல்கள் கேட்டுக் கொண்டே வரும் போது ராஜா - வைரமுத்து கூட்டணி முறிவின் ஏக்கம் ஏற்படும் . அதே நேரத்தில் நண்பர்களுடன் இருந்தோம் எனில் கண்டிப்பாய் இது ஒரு விவாதம் ஆகா மாறி விடும்.இந்தப் பதிவு எழுதும் போது கூட ஹலோ f m ல் தொடர்ச்சியாக இருவரும் சேர்ந்து உருவாக்கிய பாடல்கள் ஒலி பரப்பி வருகிறார்கள்.மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டே பதிவிடுகிறேன்.

ராஜாவால் வைரமுத்து அவர்களுக்கு பெருமை கிடைத்ததா அல்லது வைரமுத்து வரிகளால் ராஜாவிற்கு பெருமை கிட்டியதா என்றால் சுலபமாக பதில் கூற முடியாது . பெருமை என்பது அவர்களின் கலைக்கு தான் .தனி மனிதர்களுக்கு அல்ல.ஆனாலும் இருவரில் எனக்கு ( மட்டும் அல்ல ) ராஜாவை தான் முதன்மைப் படுத்த முடியும்.

இதோ இந்த பதிவு இப்போது இடுவதற்கு காரணம் , இவர்களுடைய பாடல்கள் கேட்கும் போது மட்டும் இன்றி எங்கேனும் ,  அறிமுகம் இல்லாத நபர்கள் இவ்விசயதைப் பற்றி பேசிகொண்டிருந்தாலோ , இவர்களின் பிரிவை பற்றி ஏதானும் படித்தாலோ ,என்னை அறியாமல் ஏக்கம் அதிகருக்கும்.அப்படி தான் இன்று   9 - 5 - 12  ஆனந்த விகடனில்; தாமிரா அவர்கள் எழுதிய மௌனமான நேரம் சிறுகதை படித்த போது பதிவிட தோன்றியாது. அந்தக் கதையை படித்துப் பாருங்கள் . கதையின் கடைசி  வரிகள் பாதிக்கும், இதோ அந்தக் வரிகள்
   
 என்ன  செய்வது ... சமயங்களில்  சப்பரம்  தூக்குபவனின்   வலி உற்சவ
மூர்த்திகளுக்கு தெரிவது இல்லை.
------------------------------------------------------------------------------------------------------------------------------

2 comments:

  1. நியாயமான ஏக்கம் நண்பா! இது எனக்கும் இருக்கிறது! அவர்கள் இருவரும் மறுபடியும் ஒன்று சேரணும்! இதுவே எம் பிரார்த்தனை !

    ReplyDelete
  2. நன்றி தோழர்

    ReplyDelete

கருத்து மேடை