குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Monday 30 April 2012

சூடான சோறு உண்டு ஆனால் சூடு சொரணை கூடாது

வணக்கம் 


அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்




தொழிலாளர் தினம் கொண்டாடப் படும் காரணம் அணைத்து தொழிலாளர்களுக்கும் எட்டு மணி நேர வேலை மட்டுமே செயல் பட வேண்டும் என போராடி பெற்ற தினம்.ஆனால் இன்று 


 எல்லாவிதமான பத்திரிகையிலும் வேலை வாய்ப்பு செய்திகள் தவறாமல் இடம் பெற்று வருகின்றன.மிகப் பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர், ஆடை அணிகலன் விற்கும் கடை,தங்க நகை கடை,பெரிய தொழிற்சாலைகள்,பன்னாட்டு நிறுவனங்கள், போன்ற பல வணிக நிறுவனங்கள் , சம்பளம் ,வேலை நேரம் , ஆகியவற்றை கூறுவதில்லை மாறாக ஒன்றே ஒன்றை கூறி வருகின்றனர்.அதாகப் பட்டது 

உணவு,மற்றும் தங்குமிடம் இலவசம் ( வெளியூர் நபர்களுக்கு முன்னிருமை )

இவர்களின் இலக்கு மிகப் பெரிய நகரத்தில் இருப்பவர்கள் அல்ல.உதரணமாக மதுரை என்று எடுத்துக் கொண்டால் நகரத்தில் இருந்து சுமார் முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் , திருமங்கலம்,மேலூர், வாடிப்பட்டி,நகர வாசிகள் , இவர்களுக்கு அடுத்து இந்த நகரை சுற்றி இருக்கும் கிராமத்தில் வசிக்கும் அடிமைகள். 


தமிழ்நாடு எங்கும் தன்னுடைய டிபார்ட்மென்ட் ஸ்டோரை விரிவு படுத்திக் கொண்டிருக்கும் கடையில் நான் ஒரு இரண்டு மாதம் கூட வேலைப் பார்க்க முடியவில்லை.அவர்களை பொறுத்த வரை எந்தவித விருப்பங்களுக்கு இடம் கொடுக்க முடியாது.காலையில் சாப்பிட்டு விட்டு 9 .30  மணிக்கு வந்து விட வேண்டும்.அப்படி வர தவறினால் அன்று விடுப்பு எடுத்ததாய் கணக்கில் எடுத்திக் கொள்ளப் படும்.இரவு எவ்வளவு நேரம் ஆகும் என்பது சத்தியமாய்  முதலாளி தவிர எவருக்கும் தெரியாது.


மாதத்திற்கு இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்..அதுவும் சண்டே அன்று கிடையாது. இப்படி பல சட்ட திட்டங்கள்.இவர்களுக்கு தொழிலாளர் தினம் என்று இருப்பது கிடையாது.இவ்வளவு ஏன் அன்று விடுமுறை கிடையாது .( கேட்டால் OT என்று சொல்வார்கள் )


இவர்களை போன்ற தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேரம் தான் வேலை பார்க்க வேண்டும் என்பது தெரியாது, ஆனால் வேலை வாங்கும் அவர்களுக்கு தெரியும்.இப்படி பல நிலைகளில் உண்டு..





மூன்று வேலை சூடான சோறு போடுவோம்.சூடு சொரணை வந்தால் விளக்கி விடுவார்கள் . நீ இல்லை என்றால் அவன் என மிக நம்பிக்கையோடு கடையை நடத்தி வருகிறார்கள்.


இந்த மாதிரி கடைகளுக்கு எப்படி அங்கீகாரம் தருகிறார்கள் என்றே தெரியவில்லை.காலை முதல் நள்ளிரவு வரை மின்சாரத்தை முறை கேடாக பயன்படுத்தியும்,விடுமுறை விடுவது என்பது கல்லை விட்டு எறிந்தால் தவிர கிடையாது.


இந்த நிலையில் தான் நாம் இன்னும் அடிமைகளை வளர்த்து , முதலாளிகளை மேலும் வளர்த்து விட்டு தொழிலாளர்கள் தினம் கொண்டாடி வருகிறோம்.


மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா 

1 comment:

கருத்து மேடை