குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Friday 12 April 2013

செத்தப்பிறகு எரிச்சா என்ன ? பொதைச்சா என்ன ? பர பர பதில்கள்

வணக்கம்


இந்தப்பதிவிற்கு , இந்த கேள்விகளுக்கு இந்த பதில் தான் சொல்வீங்களா ? என்கிற தலைப்பை தான் சூட நினைத்தேன். காங்கிரசா ? பா.ஜ.க. வா ? என்கிற நிலைக்கு இப்படி முகநூலில் நண்பர் ஒருவர் சொல்லி இருந்தார் . கீழ் வருபவன எல்ல்லாம் கேள்வி - பதில் மேட்டர் தான் . நம்ம கந்தசாமி பதிலும் , உங்க பதிலும் ஒண்ணா இருந்தா நீங்க தான் அடுத்த மதிய அமைச்சர் .





கேள்வி  - உங்க மனைவிக்கு உங்க மேல மிகப்பெரிய சந்தேகம் எப்போது வரும் ? 

கந்தசாமி - ஐ லவ் யு அப்படின்னு SMS போடுங்க , ஆட்டம் முடிஞ்சது .


 -------------------------------------------------------------------------------------------------------------------------------

கேள்வி - நீங்க காதலிக்க ஆரம்பிச்சிட்டீங்க ? உடனே என்ன செய்வீங்க ?


கந்தசாமி - பஜார்ல சீப்பா ஒரு மொபைல வாங்க போவீங்க .

------------------------------------------------------------------------------------



கேள்வி - வசயானாவங்களுக்கும் - வயசு பசங்களுக்கும் என்ன வித்தியாசம் ?


கந்தசாமி - சிம்பிள் , பசங்களோட மொபைல்ல டார்லிங் நம்பரா இருக்கும் . பெருசங்க மொபைல டாக்டர் நம்பரா இருக்கும்.


-----------------------------------------------------------------



கேள்வி - நீங்க இரட்டைபிறவி கொண்ட பெண்ணை திருமணம் செய்து கொள்கிறீர்கள். உங்கள் மனைவியை எப்படி அடையாளம் கண்டுகொள்வீர்கள்?


கந்தசாமி - நான் ஏன் கண்டுபிடிக்கணும் 


------------------------------------------------------------------


கேள்வி - ஹிமாமிக்கும் சுனாமிக்கும் என்ன வித்தியாசம் ? 


கந்தசாமி - ஹிமாமி போட்ட FACE வாஷ் , சுனாமி போட்டா TOTAL வாஷ்.

-----------------------------------------------------------------

 மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா 

 

 




Thursday 11 April 2013

மொக்கை , மொக்கை , மரண மொக்கை

வணக்கம்


பதிவுல வரலாற்றில் முதல் முறையாக தலைப்பும் , லேபிளும் ஒருங்கே ஒரே மாதிரி அமைந்த அதிசயம் . ( இதுவே ஒரு மிகப் பெரிய மொக்கை என உள்ளுக்குள் புழுங்கும் பிரபல பதிவர்கள் ) . எதாவது ஒரு விஷத்தை ச்சி , விசயத்தை மிகப் பொறுப்போடு பதிவு போடலாம் என்றால் மொக்கயகி போகிறது . அதே சமயம் மொக்கையாய் எதாவது ஒரு பதிவு போட்டால் ஹிட்ஸ் குமியுது . என்ன பதிவுலகமோ ? போடற மொக்கை , மொக்கயாகவே இல்லை என சொல்பவர்களும் உண்டு . அவர்களுக்காக இப்போ திரட்டிய மொக்கைகள் . ( திரட்டியவை தான்  , எழுதியவை அல்ல )  வாங்க போகலாம் .



கணவன் - மனைவியை சிசரோடு என் ஒப்பிடுவார்கள் தெரியுமா ? 

ரெண்டு பெரும் எதிரும் புதிரும இருப்பாங்க , யாரவது உள்ளே புகுந்தா வெட்டி பொலி போட்ருவாங்க .

------------------------------------------------------------------------------------------------------------------------------------



கேர்ள் பிரண்டின் இலக்கணம் என்ன ? 


பிரச்சனைகளை கூட்டுவது 

இருக்கிற பணத்தினை குறைப்பது 

எதிரிகளை கூட்டுவது 

நண்பர்களை குறைப்பது 


என்னா ஒரு கணக்கா இருக்காங்க 


------------------------------------------------------------------------------------------------------------------------------------


பாப்பா கொசு அம்மா கொசுட்ட கேட்டுச்சாம் , " அம்மா இன்னக்கு தியேட்டருக்கு போகலாமா ? " 


அதுக்கு அம்மா கொசு சொன்னது , " போயுட்டு வா , கை தட்டும் போது  , ஜாக்கிரதை " 


அம்மான்னா சும்மா இல்லடா 


----------------------------------------------------------------------------------------------------------------------------------


ரெண்டு பசங்க ரெண்டு பொண்ணுங்களை விரட்டிடுப் போனாங்க ,

பொண்ணுங்க அவங்க கையில ராக்கி கட்டிட்டு சிரிச்சாங்க

பசங்களும் சிரிச்சுட்டு , மொத பையன் ரெண்டவாது பையனை பார்த்து

மச்சி நீ என் சிஸ்டரை கல்யாணம் பண்ணிக்கோ , நான் உன் சிஸ்டரை பண்ணிகிறேன் .


பசங்க எப்போயும் ராக்ஸ் 


------------------------------------------------------------------------------------------------------------------------------------


தேனிலவின் தத்துவம்


பசங்களின் கடைசி விடுமுறை

அதுக்கு அப்புறம் பாஸ் அவங்க தான்


 பசங்களின் கடைசி புலம்பல் 


------------------------------------------------------------------------------------------------------------------------------------



பசங்க வாழ்கையில் பெண்களின் விளையாட்டுகள்


நல்ல குணமுள்ள பொண்ணு பார்க்கிற மாதிரி இல்ல


பார்கிறதுக்கு நல்லா இருக்கிற பொண்ணு நல்ல குணம் இல்ல


நல்ல குணமும் , நல்லா பார்க்கிற மாதிரி இருக்கிறவங்க தனியாளா இல்ல.



நல்ல குணமும் , நல்லா பார்க்கிற மாதிரி இருக்கிறவங்க தனியாளா இருந்தாலும் அண்ணன் பயங்கரமா இருக்கார்.
 
 
 நல்ல குணமும் , நல்லா பார்க்கிற மாதிரி இருக்கிறவங்க தனியாளா இருந்தாலும் அண்ணன் பூச்சிய இருந்தாலும் நம்மல அண்ணன் அப்படின்னு சொல்லிடுத்து .



என்ன கொடுமை சரவணன் இது.  


---------------------------------------------------------------------------------------------

மீண்டும் சிரிப்போம்
அவனி சிவா 
 



Wednesday 10 April 2013

வடிவேலு கொடுத்தது 601- பார்த்திபன் திருப்பிக் கொடுத்தது 106

வணக்கம்


இது முழுக்க முழுக்க எனக்கும் , என் நண்பர்களுக்கும் வந்த குறுஞ்செய்திகள்.படிக்க கொஞ்சம் கடுப்பு வந்தாலும் , சில செய்திகள் சிரிப்பையும் சமயத்தில் சிந்தனையையும் கொடுத்துள்ளது.யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்கிற நோக்கில் ,படித்து இன்புற்று உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி மகிழ்ச்சியை ? பகிர்ந்துக் கொள்ளுங்கள். சில அந்த மாதிரியும் உண்டு .





வடிவேலு : ஹலோ என்ன இது 601 ரூபா கடன் வாங்கிட்டு , 106 ரூபா கொடுக்கிறிங்க ?

பார்த்திபன் : இது தான் கடன திருப்பி கொடுக்கிறது .



----------------------------------------------------------------------------------------------------------------------------------


முருகனுக்கு மொட்டை போடு, பெருமாளுக்கு நாமம் போடு , ஜீசசுக்கு சிலுவை போடு , என் செல்லம் நீ டெய்லி ஜட்டி போடு , மறக்காமா தொவசுப் போடு .



---------------------------------------------------------------------------------------------------------------------------------



ஆப்பிள் செவந்து பழுத்தா - சாப்பிட ரெடி

பொண்ணு பெரியமனுசி ஆகி கொஞ்ச நாள் ஆனா
-
-
-
-
-
-




ஒட்டு போடா ரெடி


------------------------------------------------------------------------------------------------------------------------------------



hello அப்படின்னு ஆங்கிலத்தில் சொல்வதின் அர்த்தம் என்ன தெரியம்மா ?


H= How r u?
E= Every thing OK
L= Like to c u
L= love 2 hear from u
O=Obviously I Miss u!



-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

1000, 2000 செலவு செஞ்சு ஊட்டி, கோடை அப்படின்னு ஊரு சுத்தினா TOUR அப்படிங்கிறாங்க.10 பைசா செலவில்லாமா ஊர் சுத்தினா தண்டச் சோறுன்னு சொல்றாங்க . 
என்ன உலகமட இது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

எங்க மானேஜர் ஒரு கங்காரு மாதிரி

எப்படி


எப்பவும் ஒரு குட்டியோடு தான் இருப்பார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------


ஹலோ குட்  மார்னிங் அப்படின்னு ஒரு பொண்ணு சொன்னா ' செகரட்ரி '


டியர் இட்ஸ் மார்னிங் அப்படின்னு சொன்ன ' பெர்சனல் செகரட்ரி '


-------------------------------------------------------------------------------------------------------------------------------------


மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா 

Monday 8 April 2013

ஜி. நாகராஜனின் நிமிஷக்கதைகள் -


 நன்றி - திரு . சிங்காமணி அவர்களின் தொகுப்புகள் இணையதளதிற்கு. அழியாச்சுடர் என்கிற இலக்கிய தளத்தைப் போன்று , ஒரு மிகச்சிறந்த இலக்கிய தளம் . தளத்திற்கு சென்று பாருங்கள் . பரவசப்படுவீர்கள். தளத்தின் முகவரி - http://thoguppukal.wordpress.com



1
‘குத்தத்தை ஒத்துக்கிறயா ? ‘ என்று மாஜிஸ்ட்ரேட் கைதியைக் கேட்டார்.
‘ஆமாங்க ‘ என்றான் கைதி.
‘இந்த மாதிரிக் குத்தத்துக்கெல்லாம் ஆறு மாச தண்டனை கொடுக்கணும். ஆனால் நீ குத்தத்தை ஒத்துக்கிறதுனாலே, பொளச்சுபோ, மூணு மாச தண்டனை கொடுக்கிறேன் ‘ என்றார் மாஜிஸ்ட்ரேட்.
‘அய்யய்யோ எசமான்! நீங்க மூணுமாசந்தான் போடுவீங்கன்னா, நான் என் குத்தத்தை ஒத்துக்கலே. கேசே நடத்திப் பாத்துரேன். கெடச்சா ஆறுமாசம் இல்லண்ணா ஒண்ணுமில்லேன்னு போகணும் ‘ என்றான் கைதி. அதற்குள் இன்ஸ்பெக்டர் எழுந்திருந்து, ‘யுவர் ஆனர், கேஸ் நடந்தா தப்பிச்சாலும் தப்பிச்சிடுவான். அவன் கேக்கறபடி ஆறு மாசமே போட்டிடுங்க. ஒரு கன்விக்ஷன் என்றாவது டயரியில் வரும் ‘ என்றார்.
மாஜிஸ்ட்ரேட் ஆறு மாதத் தண்டனை விதித்தார்.
ஜெயித்தது யார் ? அந்த ஏழைக்கைதிதான்.



2.
மடத்துக்கு முன்னால் ஒரே கூட்டம். ஊர் மக்கள் அனைவரும் திரண்டு வந்திருந்தனர். அத்தனை பேர் முகத்திலும் வருத்தம் தோய்ந்திருந்தது. குசுகுசு என்று மட்டும் பேசிக்கொண்டனர்.
‘சாமியார் சமாதியாகிவிட்டார். ‘ ‘இன்று காலை தியானத்தில் உட்கார்ந்திருந்தவர்தானாம், அப்படியே சமாதியாகிவிட்டார் ‘ என்றெல்லாம் பேசிக்கொண்டனர்.
ஊர்ச்சிறுவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கூட்டத்தின் நடுவே குறுக்கும் நெடுக்குமாக சென்று கொண்டிருந்தனர். என்னவென்று புரிந்து கொள்ளாமலேயே அவர்களும் ‘சாமியார் சமாதியாகிவிட்டார் ‘ என்ற வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டனர். இறுதியில் மடத்துக்காரர்கள் சாமியாரை வெளியே கொண்டுவந்தனர். சாமியார் வெளியே தூக்கிக் கொண்டுவரப்படுவதையே உற்று நோக்கிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் திடாரென்று, ‘டேய், சாமியார் செத்துப் போயிட்டாரு ‘ என்று கத்திக் கொண்டே கூட்டத்தைவிட்டு ஓடிவந்தான். உடனே அத்தனை சிறுவர்களும், ‘மடத்துச் சாமியாரு செத்துப் போயிட்டாரு ‘ என்று அழுத்தம் திருத்தமாகக் கத்திக்கொண்டு ஓடினர். பெரியவர்கள் சிறுவர்களைக் கூட்டத்தை விட்டு அரட்டி மிரட்டி ஓட்டினர்.



3.
அவள் ஒரு விபச்சாரி. அவளை வைத்துக் கதை எழுத வேண்டுமென்று எழுத்தாளன் விரும்பினான். ஆகவே அவன் அவளிடம் சென்றான்.
‘பெண்ணே! நீ இவ்வளவு கெட்ட நிலைக்கு வரக்காரணம் என்ன ? ‘ என்று எழுத்தாளன் கேட்டான்.
‘என்ன ? … கெட்ட நிலையா ? அப்படி ஒண்ணும் எனக்கு சீக்குக் கீக்குக் கிடையாது. ஒங்கிட்ட சீக்கில்லாமே இருந்தா அதுவே ஆண்டவன் புண்ணியம் ‘ என்றாள் விபச்சாரி.
‘இல்லே, உனக்கு சமுதாயம் எவ்வளவு பெரிய கொடுமையை இழைத்துவிட்டது! ‘ என்றான் எழுத்தாளன்.
‘கொடுமை என்ன கொடுமை! பசிக்கொடுமை எல்லோருக்குந்தானிருக்கு… இந்த போலீசுக்காரங்க தொந்தரவு இல்லாட்டி ஒண்ணுமில்லே ‘ என்றாள் விபச்சாரி.
‘கண்ட கண்டவங்க கிட்டெல்லாம் போகிறது உனக்கு கஷ்டமாக இல்லை ? ‘
‘யாரும் கண்ட கண்டவங்க கிட்டெல்லாம் போகல. எனக்குன்னு ஒரு புருஷன் இருக்காரு ‘
‘மற்ற பெண்கள் எல்லாம் கட்டின புருஷனோடு மட்டும்தான் இருக்கிறார்கள். வேறு ஆண்பிள்ளைகளோடு சம்பந்தம் வைத்துக்கொள்வதில்லை தெரியுமா ? ‘
‘அப்படியா ? ‘
‘பின்பு ? ‘
‘சரி, உங்களுக்கு பெஞ்சாதி இருக்குங்களா ? ‘
‘ஊம், இருக்கு ‘
‘நீங்க மட்டும் எங்கிட்ட வந்திருக்கீங்களே ஒங்களுக்கு வெக்கமா இல்லே ? .. சரி, அது கிடக்கட்டும்; நேரமாவுதுங்க ‘
கொடுமையிலும் கொடுமை, கொடுமையை கொடுமை என்று புரிந்து கொள்ளாததுதான். எழுத்தாளனுக்கு அது புரியவில்லையோ என்னவோ, விபச்சாரியைக் காட்டி, வாசகர்களின் கண்ணீரைப் பிதுக்கியெடுத்து, நாலு காசு சம்பாதிக்கும் எண்ணத்தை மட்டும் கைவிட்டான்.


4.
அவன் தாமரையைப் பற்றிக் கவிதைகளில் படித்திருக்க�
��றான். படங்களில் பார்த்திருக்கிறான். அதன் செம்மையும், மென்மையும், எழிலுருவும் அவன் உள்ளத்தைச் சுட்டெரித்தன. அதை அடைய விரும்பினான். தடாகத்துக்குச் சென்றான். அதோ! அங்கு மலர் தெரிகிறது. தண்ணீரின் மேல் கவலையற்று உறங்கிக் கிடக்கிறது. ‘வா, வா ‘ என்று அவனைக் கள்ளப் பார்வை கொடுத்து அழைக்கிறது. அவன் தடாகத்துக்குள் காலெடுத்து வைத்தான்.
‘யாரது ? தண்ணீரிலே இறங்காதே. ஒரே சகதி! தாமரைக் கொடி காலைச் சுத்திக்கிட்டா அப்புறம் உயிருக்கே ஆபத்து ‘ என்று எச்சரிக்கிறான் யாரோ ஒருவன்.
தாமரையைப் பார்த்து விரும்பிய அவனும் உடனே சட்டென்று நின்றுவிட்டான். மலரைப் பார்த்துப் பெருமூச்செறிந்து சற்று நேரம் நின்றுவிட்டு, அதோ அங்கே அவனும் தலை குனிந்து செல்கிறான். அவன் இன்னும் வாழ்கிறான். எனக்குத் தெரியும். ஆனால் என்றோ தற்கொலை புரிந்து கொண்டு விட்டான்!
- சரஸ்வதி, ஏப்ரல், 1961
Thinnai 1999 December 17




Thursday 4 April 2013

அம்பானி பிரதர்சும் அப்பிராணி மக்களும்


வணக்கம்


அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் , நீ அழுற மாதிரி அழுவனும் . இது தமிழ்நாடு மக்களுக்கு ரொம்பவும் பிட்சுப் போன மேட்டர். ஒரு பக்கம் மாறன் பிரதர்ஸ் கொடிகட்டி பிரபல பணக்காரகளில் முதல் நூறு இடத்தில் ( உலக அளவில் ) இடம் பிடித்து தமிழர்களின் பெருமையை உயர்த்துவார்கள். இன்னொரு பக்கம் இந்த்யாவின் பெருமையை உலகுக்கு உணர்த்த அம்பானி பிரதர்ஸ். 


அம்பானி தன்னுடைய சொத்தை காப்பாற்ற என்னவெல்லாம் செய்தார்கள் ? என்பதை சவுக்கு , வினவு போன்ற தளங்கள் புட்டு வைத்தால் நல்லது. சரி மீட்டருக்கு , சீ மேட்டருக்கு வருவோம். இனி மேல் அண்ணன் தம்பி உறவு எல்லாம் கிடையாது . சொத்தை பிரித்து சேவை செய்து வந்த பிரதர்ஸ் மீண்டும் இணைகிறார்கள் . மக்களுக்கு மேலும் சேவை செய்ய இன்னும் என்னவெல்லாம் நாடகம் நடத்தப் போராங்களோ ? வாழ்க பிரதர்ஸ் சம்மந்தப்பட்ட செய்த இதோ 


4ஜி சேவைக்காக பிரிந்த அம்பானி சகோதரர்கள் கைகோர்ப்பு 
 
 
சொத்துக்களைப் பிரித்துக் கொண்டு தனித்தனியே தொழில் செய்துவந்த அம்பானி சகோதரர்கள் முதன்முறையாக 4ஜி சேவைக்காக ரூ.1200 கோடிக்கு புதிய ஒப்பந்தம் செய்து கொண்டு இணைந்து களமிறங்குகின்றனர்.

பிரபல தொழிலதிபர் திருபாய் அம்பானியின் மறைவுக்கு பின்னர், அவரது மகன்கள் முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் கடந்த 2005 ஆம் ஆண்டில் சொத்துகளை பிரித்துக் கொண்டு பிரிந்தனர். அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 1 லட்சத்து 20 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு ஆப்டிகல் பைபர் கேபிளை பதித்துள்ளது. இதன் மூலம், அந்நிறுவனம் தொலை தொடர்பு சேவைகளை வழங்கி வருகிறது.

முகேஷ் அம்பானியும் 2010 ஆம் ஆண்டில் தொலைத்தொடர்பு துறையில் காலடி பதித்தார். ரிலையன்ஸ் ஜியோ என்ற அவரது நிறுவனம் 4ஜி சேவைகளை வழங்க உள்ளது. இந்நிறுவனத்துக்கு புதிதாக ஆப்டிகல் பைபர் கேபிள்களை பதிப்பதற்கு பதிலாக, அனில் அம்பானி நிறுவனத்தின் ஆப்டிகல் கேபிள்களை பயன்படுத்தி கொள்ள முடிவெடுத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் இரு நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.1,200 கோடியை, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு வழங்கும். இதுதவிர ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் செல்போன் கோபுரங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. புதிய ஒப்பந்தத்தால், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பங்குகள் விலை 17.08% உயர்ந்தது.
 
மீண்டும் சிந்திப்போம் 
 
அவனி சிவா
 

Monday 1 April 2013

முட்டாள்களுக்கு ஒரு தினம் ? என்ன ஒரு முட்டாள் தனம்

வணக்கம்


ஏற்கனவே வாங்குபட்ட  வாய்ப்புகள் நிறைய உண்டு. படிக்கிற காலத்தில்  இருந்து பத்திரிக்கை படிக்கிற காலம் வரை அநேகமாய் முட்டாளாய் ஆனது உண்டு. கடைசியாய் ஆனது . கல்யாணத்தின் போது அய்யர் சொன்னது நல்ல நேரம் முடிய போகுது . பொண்ண வேகமா கூட்டிட்டு வாங்க . ( அப்ப இருந்து இன்னும் மீள முடியல்ல ) இப்போ பதிவுக்குப் போகலாம் . முட்டாள்களுக்கு ஒரு தினம் தான் இருக்குமா என்ன ? எழுத்தாளர் வா.மு.கோமு இன்று முகநூலில் பகிர்ந்த செய்தி .படித்துப் பாருங்கள் நாம் எந்த அளவிற்கு முட்டாளாய் இருக்கிறோம் என்று.






மீடியாக்கள் இன்று தங்கள் கட்டுக்குள் நம்மை வைத்துக்கொண்டிருக்கின்றன.
மின்சாரத் தட்டுப்பாட்டால் பலவீடுகளில் பல நாடகங்களின் தொடர்ச்சிகளை
பார்க்க முடியாமல் டென்சன் மிகுதியில் மின்சாரத்துறை அமைச்சரையும்,முதல்வரையும்
கடைசியாக வேலை முடித்து வரும் கணவனையும் திட்டி எரிந்து விழுகிறார்கள்.சீக்கிரமே
பலபேர் மனநோய் மருத்துவமனைக்கு சென்று மாத்திரை வில்லைகள் விழுங்க வேண்டி
நேரிடலாம்.


நாடகங்களில் பார்த்திர்கள் என்றால் வெள்ளிக்கிழமை நாளில் தான் பிணத்தை நடுவீட்டில்
போட்டு ஒப்பாரி வைத்துக்கொண்டிருப்பார்கள். 11 மணி நாடகத்தில் ஒரு ஆண் பிணம்
என்றால் 12 மணி நாடகத்தில் ஒரு பெண் பிணம். டிவி நடிகை ஒருத்தி சாப்பாட்டில் விஷம்
கலப்பாள். பார்வையாளர் வாய் விட்டே ,”இவ இருக்கா ஊரை ஒழிச்ச-----” என்பார்கள்.
சொந்த பந்தத்தில் யாரேனும் பெருசு மேலே போய்ச்சேர்ந்து விட்டால், அடக்கெரவம்
புடிச்ச கெழவியெ..சனி, ஞாயிறு பார்த்து செத்திருக்களாம்ல..இன்னிக்கி புதனாச்சே..
சீரியல் பார்க்கணுமே! என்று தான் வீட்டுப் பெண்கள் நினைக்கிறார்கள்.ஜப்பானில் நிலநடுக்கமாம் என்றால் ,காட்டறாங்ளா? என்று டிவி நோக்கி ஓடுகிறார்கள்.டிவி வாழ்வின்
அங்கமாக மாறி விட்டது.

பெட்ரோல் விலையேற்றத்திற்காக மத்திய அரசை கண்டித்து ஊர்வலம் போகிறோம்
வாருங்கள் என்றால்...இப்பத்தான் விஜய் அவரு தங்கச்சியெக் காப்பத்துறக்கு டுவாக்கி
எடுத்துட்டு பைக்ல சர்ர்ர்னு போறாரு..முன்னாடி போங்க பின்னாடி வர்றேன், என்கிறார்கள்.
அவர்கள் வாசல் தாண்டியதும் உள்ளார தூக்கிப் போட்டுட்டா அங்கபோய் எவன் சீரழியறது?
என்கிறார்கள். யாருக்காக இந்த போராட்டங்கள்? நோகாமல் நாம் எந்த நோம்பியை
கொண்டாடி இருக்கிறோம்?
பாக்கியராஜே ஈமு கோழி வளத்துறாராமா..நாமும் வளர்த்துவோம்...
சச்சின் டெண்டுல்கரே பூஸ்ட் சாப்டுட்டு தான் 6 அடிக்கறாராமா நாமும் பூஸ்ட் குடிப்போம்.
ரவீனா தாண்டனே சோத்துல உப்பு போட்டுதான் திங்கறாங்ளாமா ..நாமும் திம்போம்.ஒவ்வொன்றையும் நமக்கு டிவியில் கற்றுக் கொடுக்கிறார்கள்.நமக்குள்ளே
ஒரு கேள்வி வேண்டும். நம் மூளை சரியாக இயங்குகிறதா?
 
மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா