குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Sunday 24 June 2012

போதும்டா உங்க அலம்பு - வாழ்க டாக்டர் ராஜ சேகர்

வணக்கம்

அலம்பு - ஒன்று

வெள்ளிகிழமை ஊர் முழுவதும் விஜய் பற்றிய பிறந்த நாள் வாழ்த்துப் போஸ்டர், அதுல அதிகப் பட்ச அதிர்ச்சி , பிரணாப்,சங்மா இவங்களை எல்லாம் புறந்தள்ளி ஜனாதிபதியே என்று ஒரு போஸ்டர் . முடியல்ல இருந்தாலும் ஆல் இஸ் வெல்.


அலம்பு - இரண்டு
உங்க ரசிப்புத்தன்மைக்கு ஒரு அளவு கிடையாதா . இயற்கையை பார்த்ததும் போட்டோ எடுக்கிறாராம்.குழைந்தையை எங்க வச்சிருக்கிறார் பாருங்க.எதிர்காலம் வெளங்கிரும்.









அலம்பு - மூன்று

முளைச்சு நாலு எலை விடல என்கிட்டே கேட்டாங்க . சென்னைக்கும் - மதுரைக்கும் 450 கிலோமீட்டர் , மதுரைக்கும் - சென்னைக்கும் 450 கிலோமீட்டர் , சரிதான் அடுத்து , தரை தளத்தில் இருந்து பத்தாவது மாடி பாத்து மாடி , அதே போல் அங்கிருந்து கீழே வரை அதே பாத்து மாடி ,அப்புறம் கேட்டாங்க திங்கள் முதல் வெள்ளி வரை ஐந்து நாள்.அப்போ வெள்ளி முதல் திங்கள் அஞ்சு நாள் தான வரணும்.- நாம இன்னும் நல்ல வளரனும் .

அலம்பு - நான்கு

வாடா , போடா,அடா,இப்படி டா போட்டு பதிவு போட்ட என்னோட அலம்பு , மன்னிக்கனும் அப்படின்னு நெனைச்சா என்னை மன்னிச்சுருங்க , வேற எதாவது முடிவு செஞ்சிங்கன்ன தலைப்பை தந்து உதவிய டாக்டர் ராஜ சேகரிடம் பேசிக்கொள்ளவும். 

 அலம்பு - ஐந்து 
  
கருத்தை மட்டும் கொஞ்சம் கவனமா போடுங்க

Wednesday 20 June 2012

நியுஸ் , செஸ் , கோல்ட் ,ஜோக் - தமிழ் நல்லா வளருது


 

வணக்கம்


அதிகாலை எழுந்து நியுஸ் படிச்சு அப்புறம் டீ குடிச்சு டே புல்லா நல்ல எனர்ஜியோட வேலை செய்யணும். ஒரு aim வச்சிக்கிட்டு ஜோக் அடிச்சு ,

போதும் போதும் என்கிற அளவில் இப்படி பேசிக் கொண்டு , படித்துக் கொண்டு , எழுதிக் கொண்டு வளர்கிறது தமிழ் .


கருணாநிதி புண்ணியத்தில் கலாம் என்கிற வார்த்தைக்கு பல அர்த்தம் கிடைச்சு , தமிழின் பெருமை மீண்டும் நிருபிக்கப் பட்டுள்ளது.


தினமும் இப்படி பல வார்த்தைகள் தமிழாகிப் போனாலும் , தமிழின் தமிழனின் ஒரு மிகப் பெரிய கொடை பிற மொழிகளையும் அரவணைத்துக் கொண்டுப் போவது . சில ஆங்கில வார்த்தைகளின் விளக்கம் , உங்கள் பார்வைக்கு 





NEWS     -    NORTH EAST WEST SOUTH

CHESS   -    CHARIOT,HORSE,ELEPHANT,SOLDIERS

COLD     -    CHRONIC OBSTRUCTIVE LUNG DISEASE

JOKE      -    JOY OF KIDS ENTERTAINMENT

AIM        -    AMBITION IN MIND

DATE     -    DAY AND TIME EVOLUTION

EAT        -    ENERGY AND TASTE

TEA        -    TASTE AND ENERGY ADMITTED

PEN        -    POWER ENRICHED IN NIB

SMILE    -    SWEET MEMORIES IN LIP EXPRESSION

BYE        -    BE WITH YOY EVERYTIME

Friday 1 June 2012

பெருமாள் - இவருக்கே தண்ணி காட்டிய பக்தர்கள்

வணக்கம்

நான் வசிக்கும் பகுதியில் ஒரு பெருமாள் கோவிலை நிர்மாணித்து , இன்று கும்பாபிஷேகம் இனிதே  முடிந்தது. பல பேர் ஆசிர்வாதம் வாங்கிப் போனார்கள்.இரவு வானவேடிக்கை நிகழ்சிகள் உண்டு . பார்க்க காத்திருக்கிறேன் குழந்தைகளுடன். பகுதியில் அணைத்து கடைகளும் அடைக்கப்பட்டு , அவரவர் சொந்த பந்தங்களுடன் வந்திருந்தனர்.காலையில் இருந்து விளையாடமால் இருந்த சிறுவர்கள் , பக்தர்களை சோதிக்கும் விளையாட்டை ஆரம்பித்தனர்.

அதாகப்பட்டது என்னவெனில் ஒரு கிழிந்த பத்து ரூபாய் நோட்டு அவர்களுக்கு கிடைத்திருக்கிறது.அதை வைத்து யாரோ ஒரு புண்ணியவான் விளையாட்டை ஆரம்பித்தான்.பெருமாளை பார்க்க வரும் பக்தர்கள் தரிசிக்க  ஒரே வழி தான் இருந்தது. ( வேறு வழிகள் வேலை நடைபெற்று வருகிறது ) அது தான் நண்பர்களுக்கு வசதியாய் போனது.உள்ளே செல்ல ஏழு படிகள் உண்டு , ஏதாவது ஒரு படியில் அந்த நோட்டை வைக்க வேண்டியது அதற்குப் பிறகு எல்லோரும் ( சுமார் நாற்பது பேர் ) ஒரு ஓரத்தில் நிற்க, மேலே செல்லும் அணைத்து பக்தர்களும் அந்த நோட்டை எடுத்து உள்ளே வைக்கப் போக ஊ வென கூச்சல் போட்டு அதனை வங்கி மறுபடியும்.

இது என்னடா விளையாட்டு என நான் ஒருவனிடம் கேட்டேன்.அனைவரும் சுற்றி வந்து ஒரே குரலில் சொன்னார்கள் , இந்த நோட்டை எடுக்கும் எவரும் இது யாருடையது என்று கேட்கும் வரை  விளையாட இருப்பதை சொன்னார்கள்.இரண்டு மணி நேரம் யாரும் கேட்க்க வில்லை.பெரிய மனிதர்கள் போங்கடா என விரட்டி விட்டார்கள்.

பாவம் பெருமாள் , வந்த எவனும் ( மன்னிக்கவும் ) பயந்து தான் வந்திருக்கிறார்கள் , எவரும் பக்திக்கு வரவில்லை.

ரஜினிகாந்த் சொன்னா கேட்கணுமா என்ன ?

வணக்கம்

ஒரு முன் குறிப்பு - பின் குறிப்பில் குறிப்பிடுகிறேன்

சில தினங்களுக்கு முன் தென்னிந்தியாவின் பிரபல நடிகரின் பிறந்த நாள் விழாவில் நம் சூப்பர் ஸ்டார் புகை பிடிப்பதை நிறுத்திவிட்டதாக கூறி இருந்தார்.அவர் எதை சொன்னாலும் கேட்பதற்கு பல லட்சம் அபிமானிகள் உண்டு.கொடுமை என்னவென்றால் , தம்மை நிறுத்துங்க , அப்படின்னு சொன்னா , சொன்னது ரஜினி காந்த் ஆனாலும் கேட்பது மிகப் பெரிய விசயமாய் இருக்கிறது.அவர் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும் , புகைப் பிடிப்பதால்   என்னவெல்லாம் நிகழும் என்பதை நினைத்துப் பார்த்தல் , கண்டிப்பாய் நிறுத்தவே தோன்றும்.

புகையிலையில் 4000 நச்சுப் பொருட்கள் உள்ளன.( விவரம் தேவை என்றால் அடுத்தப் பதிவில் குறிப்பிடுகிறேன் ) புகை பிடிப்பதினால் வாய் புற்றுநோய் , தொண்டை புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய் ,நுரையீரல் புற்றுநோய் , குரல்வளை புற்றுநோய் , உணவுக்குழல் ,வயுற்று , கர்ப்பப்பை ,இரத்தப் புற்றுநோய் வருவதற்கு சிவப்பு கம்பளம் உண்டு.

இது வரை புகை பிடிப்பதை வழக்ககமாக வைத்திருப்போர் , நிறுத்திய இருபது நிமிடங்களில் ரத்த அழுத்த நாடித்துடிப்பு சீராகும் .எட்டு மணி நேரத்தில் கார்பன் மோனாக்சைடு நம் உடலை விட்டு வெளியேறும் .இருபத்தி நான்கு மணி நேரத்தில் மாரடைப்பு வரும் அபயம் குறைகிறது.48  மணி நேரத்தில் நிகோடின் நம் உடலை விட்டு வெளியேறிவிடும்,ருசி நுகரும் திறன் அதிகரிக்கும்,சுவாசம் சுலபமாகும்.இரண்டு முதல் பனிரெண்டு வாரங்களில் ரத்த ஓட்டம் சீராகும்.மூன்று முதல் ஒன்பது மாதங்களில் சுவாசக் கோளாறு , இருமல் போன்றவை நீங்கும்.ஐந்து வருடங்களுக்குய் பின் இருதய நோயின் வாய்ப்பு குறைகிறது.பதினைந்து வருடங்களுக்குய் பின் இருதய நோய்க்கான வாய்ப்பு நூறு சதம் குறைந்து ஆரோக்கியாமை வாழலாம்.

பின்குறிப்பு .-  இந்தப் பதிவிற்கு குறைந்த பட்சம் ஆறு கருத்துகள் வந்தால் , வந்த நேரத்தில் இருந்து நானும் புகைப் பிடிப்பதை நிறுத்தி விட உத்தேசம் .

மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா