குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Wednesday 30 January 2013

நீங்களும் விஸ்வரூபம் எடுக்கலாம் - பணம் சம்பாதிப்பதில்

வணக்கம் 


கமலின் விஸ்வரூபம் ஒரு வழியாய் வந்துவிட்டது . படம் எப்படியோ எனக்குத் தெரியவில்லை .எப்படி இருந்தாலும் பார்க்கத்தான் போகிறேன்,போகிறோம். இணையத்தில் படம் வெளி வர எத்தனை முயற்சிகள் நடந்து கொண்டிருந்தாலும் , அதனை தடுக்கவும் கமலின் தரப்பில் முயற்சித்து வருவதாக செய்திகள் வந்துகொண்டிருகின்றன.

 கமல் கலை ஆர்வத்தில் முயற்சிகள் செய்யும் பொழுது அது கடைகோடி மனிதனுக்கு சேர்கிறதோ இல்லையோ கலை ஆர்வம் உள்ள அனைவருக்கும் சேர்ந்து விடுகிறது.இது நாள் வரை அவர் பணம் சம்பாதிக்கும் நிலையில் புதிய உத்திகளை முயற்சித்ததில்லை.புதுமையை நிகழ்த்தப் போக , அது பலருக்கு ஜீரணிக்க முடியவில்லை.இனி வாழ்வில் அவர் மீண்டும் கலை பற்றிய நினைப்பில் இருக்க வாய்ப்பு உண்டு. 

விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வரப்போவதாகவும் செய்தி . அதுவும் வெற்றி பெற வாழ்த்துக்கள் . பதிவின் தலைப்பிற்கும் இந்த செய்திக்கும் என்ன சம்மந்தம் என நினைக்கும் அல்லது பணம் சம்பாதிக்கும் ஆர்வத்தில் இருக்கும் நண்பர்களுக்கும் ஒரு குபேர மந்திரத்தை சொல்லிகுடுக்கப் போகிறேன் . விளைவு ; முதலில் அந்த வித்தை 


நடு விரலையும் ஆள்கட்டி விரலையும் ஒன்றாக சேர்த்துகொண்டு கட்டை விரலோடு இணைத்து  .. மோதிர விரலையும் சுண்டு விரலை யும் உள்ளங்கையில் படுமாறு மடித்துக்கொள்ளுங்கள் எந்த விரலையும் அழுத்தக்கூடாது.. லேசாக வைத்துக்கொள்ளுங்கள்.. இரண்டு கைகளிலும்.... சுமார் முக்கால் மணிநேரம் தினமும் செய்யுங்கள்..... பணம் கொட்டுமாம்.. அதோடு எது நினைக்கிறோமோ அதெல்லாம் நடக்குமாம்...இதுக்கு குபேர முத்திரைன்னு பேரு


செய்து பார்த்து எவருக்காவது பணம் சேர்ந்தால் என் வங்கிகணக்கில் பணம் போடலாம் ? 

மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா 

Tuesday 29 January 2013

முதல்வன் முதல் முதல்வர் வரை மு க அழகிரி பிறந்த நாள் விழா

வணக்கம்


போஸ்டரை வைத்து வேறு பதிவு போடவே எண்ணியுருந்தேன் , மன்னிக்கவும் . இதனை வைத்து நான் அம்மா ஆள் , என்றும் அனைத்தும் படித்தப் பிறகு அதுவாகத் தான் என் நினைக்கும் அனைவருக்கும் நான் ஒரு பொது மனிதன். அதுலும் தமிழன் .

இந்தியாவில் உள்ள தமிழ் நாடு உட்பட அநேகமாக எல்லா நகரத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. மதுரையில் அக்றிணை மட்டும் இன்றி ஒருவரும் இடம் பெற்று சிறப்பு அடைந்துள்ளார் . அவர் தான் மு.க.அழகிரி , முதலில் ( எத்தனை முதல் ) 62 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.



மதுரையில் வசிக்கும் நபராக நீங்கள் இருந்தாலும் , அல்லது 2000 ஆம் ஆண்டு பிறகு உலகில் எங்கு வசித்தாலும் இதனை உணர வாய்ப்பு உண்டு.நிற்க 




மு. க. அழகிரி என்பவர் மதுரையில் ' அ ' என்கிற செல்ல பெயர் பெற்று அழைக்கப் படுகிறார் இன்றும்.. இத்தனைக்கும் அவர் எல்லோரையும் வசீகரம் செய்யும் சினிமா நட்சத்திரம் அல்ல, அதே வேளையில் ஒரு கட்டுரையாளர், எழுத்தாளார் ,  பேச்சாளார் ( தந்தையை போல் ) அல்ல , ஆனாலும் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தட்டுக் கடைகளில் கூட ஆம்லெட் கேட்பவர்கள் மத்தியில் நான் யார் தெரியுமா அ  ஆளுடா என்கிற சொல்லுகிற அளவுக்கு இருந்தது.


எனக்குத் தெருந்து அ வெளிவந்தது முதல்வன் படத்தை உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிப் பரப்ப செய்தது என்கிற சாதனை ஆரம்பம் ஆகிறது . பிறகு அவரின் உடன் பிறந்தோர் ( மு.க.அல்ல ) இவருக்காக எந்த விதமான காரியம் செய்தாலும் அவருக்கு பக்க பலமாக இருக்கிறார் , இன்று வரை ( இந்த செய்தியை அவருக்கு நெருக்கமான நண்பர்கள் படித்தால் , பத்திரிக்கையாளர்கள் உட்பட அவருக்கு தெரிவியுங்கள் , அவருக்கும் அவரை நம்பும் பொது மனிதருக்கும் பொருந்தும். ) 



முதல்வரின் புதல்வரே , எங்களின் முதல்வரே என்கிற போஸ்டர் மதுரை யை அலங்கராம் செய்துக் கொண்டிருக்கிறது..


இவர்களை விட உங்களை நம்பும் பொது மனிதருக்கு முதல்வராக இருந்தால் என்றும் நீங்கள் தான் மதுரையின் முதல்வர்.( அப்பாடா பொறந்த அன்னிக்கு நல்ல சேதி சொல்லியாசு )


மீண்டும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

மீண்டும்  சிந்திப்போம் 
அவனி சிவா       

Wednesday 23 January 2013

ஆப்பிள் சாப்பிட்டா ஹார்ட் அட்டாக் வரும் - எப்படி

வணக்கம்


இது ஒரு மொக்கை தான் இருந்தாலும் படிங்க



ஆப்பிள் சாப்பிட்டா விட்டமின் சேரும்

விட்டமின் சேர்ந்தா பவர்  கிடைக்கும்

பவர் இருந்தா வேலைய சரியா பார்ப்போம்

வேலைய சரியாப் பார்த்தா பணம் கிடைக்கும்

பணம் சேர்ந்தா பெண்தோழி ( தமிழ் ) கிடைக்கும்

பொண்ணு வந்தா டென்சனும் கூட வரும்

டென்சன் வந்தா அட்டாக் வரும்

அட்டாக் வந்தா சாவு வரும்


இப்படிதாங்க ஆப்பிள் சாப்டா ஹார்ட் அட்டாக் வரும் வழி ( வலி ) புரிஞ்சுதா .


----------------------------------------------------------------------------------------------------------------------------------


இந்த செய்தியை படிச்சுட்டு உங்களுக்கு கோவம் வரும் , வரணும் அதுக்காக ஒரு கிச்சு கிச்சு


ஒரு பொண்ணு தன்னோட வாத்தியார் கிட்ட ( அதுவும் அழகான பொண்ணு ) தான் எப்படியாவது பரிட்சையில் பாஸ் பண்ணனும் , அதுக்காக என்ன வேணா செய்ய தயார் அப்படின்னு சொல்லிச்சு வாத்தியார் மேல இருந்து கீழ வரைக்கும் பார்த்துட்டு

----


----


----

புஸ்தகத்தை எடுத்து ஒழுங்கா படி அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிட்டாரு .

என்ன வேற எதையாவது எதிர்பார்த்திங்களா ? பிம்பிலிக்கா பிளாபி


--------------------------------------------------------------------------------------------------------------------------------

மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா 





Tuesday 22 January 2013

கண்ணா களி திங்க ஆசையா ?

 வணக்கம்




ராஜ் பவுண்டேசன்..........1,89,008 கோடி
அர்சத்மேதா.................1,35,800 கோடி
லல்லு பிரசாத் யாதவ்.........28,900 கோடி
ராஜீவ் காந்தி..................19,800 கோடி
கருணாநிதி....................35,000 கோடி
சிதம்பரம்.......................32,000 கோடி
சரத் பவார்.....................28,000 கோடி
கலாநிதி மாறன்...............15,000 கோடி
HD குமாரசாமி................14,500 கோடி
JM சிந்தியா......................9,000 கோடி
கேடன் பிரகாஷ்..................8,200 கோடி
A ராஜா...........................7,800 கோடி
சுரேஷ் கல்மாடி..................5,900 கோடி




என்னோட சொத்து - 2 லட்சம் கடன் 




என்னத்த சொல்றது புரோட்டா ஆறிப் போனாலும் 5 - 6 வரைக்கும் சாப்பிடலாம் , பிட்சா ஆறிப் போனா ஒண்ணுக் கூட சாப்பிடமுடியாது. அந்த மாதிரி கொஞ்சம் கடன் இருந்தாலும் நிம்மதியா பொண்டாட்டி புள்ளைகளோட வாழலாம் . இப்படி சொத்து சேர்த்து நிம்மதியா வாழாமலும் கடைசியில் கழி தான் திங்க முடியும் . 


 மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா

Saturday 19 January 2013

பிரபல பதிவர்களுக்கு எச்சரிக்கை - 25,26,27 டாஸ்மாக் விடுமுறை

வணக்கம்


சரக்கை போட்டாதான் பதிவை போடமுடியும் என்கிற பதிவர்களுக்கும் , சரக்கு போட்டு பிறகு பதிவை போடும் பதிவர்களுக்கும் , பதிவில் சரக்கு இருக்குதோ இல்லையோ  என்னைப் போன்ற பதிவர்களுக்கும்  இதனால் அறிவிப்பது என்னவென்றால் வருகிற ஜனவரி 25,26,27 ஆகிய மூன்று நாட்களும் விடுமுறை அறிவிக்கப் பட்டிருக்கிறது . இந்த செய்தியை கேட்டவுடன் பதிவிற்கு விஷயம் தேடி அலையும் நேரத்தில் சரக்கை வாங்கி வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .




இப்படிக்கு

எதையும் விலை இல்லாமால் வாங்கி பழகிப் போனா தமிழ் நாட்டு மக்கள்.


-------------------------------------------------------------------------------------------------------------------------------------

பவர் ஸ்டார்  big fm பாலாஜியுடன்
பாலாஜி - நீங்க பிரபல நடிகராயிட்டீங்க. எப்படி உங்களைப் பத்தி கிசுகிசு எதுவும் வரலே?

சீனிவாசன் - இனிமே வரும் சார்
இது தான் பவர் ஸ்டார் நம்பிக்கை 
-----------------------------------------------------------------------------------------------
ஒரு தத்துவம் 
கடவுள் மீது நீங்கள் கோபம் கொண்டால் அவர் டாக்டரிடம் அனுப்பி வைப்பார் , சிகிச்சைக்கு 
டாக்டரிடம் நீங்கள் கோபம் கொண்டால் அவர் உங்களை கடவுளிடம் அனுப்பி வைப்பார் .
எவரிடத்தில் கோபம் கொண்டாலும் இவர்கள் மீது கோபம் கொள்ளாதிர்கள் .
----------------------------------------------------------------------------------------------
டிஸ்கி : பதிவில சரக்கே இல்லை என்று வருத்தப் பட்ட பதிவர்களுக்கு , முதல் பத்தியில் எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம் .

---------------------------------------------------------------------------------------------
மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா

 

Friday 18 January 2013

விடு விடு தலைவா - எவ்வளவோ பார்த்தாச்சு

 வணக்கம்


செய்தி 


பொங்கல் அன்று ஒரேநாளில் ரூ.94 கோடி மதுபானம் விற்பனை
 
நல்லா பொங்கிருச்சு பொங்கல் 
 
-------------------------------------------------------------------
சமீபத்தில் வெளியாகி வெற்றிப் படமாய் ஓடிக் கொண்டிருக்கும் கும்கி படத்தில் இடம்பெற்ற குத்தாட்ட பாடலில் இருக்கும் தத்துவம் . உண்மையில் உணர வேண்டியது , இதோ அந்த பாடல் வரிகள் 

கைளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நெனப்பே போதும் மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்
வானளவு விட்டத்திலே வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவையில்ல அது தான் பாசம் மச்சான்
நாம வேண்டிக் கொண்டாலும் வேண்டா விட்டாலும் சாமி கேக்கும் மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்

ஏடளவு எண்ணத்தில எழுத்தளவு சிக்கல் மச்சான்

அளவுக் கோலேயில்ல அது தான் ஊரு மச்சான்
நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே அதுவே போதும் மச்சான்

நாடு அளவு கஷ்டத்தில நகத்தளவு இஷ்டம் மச்சான்

அளவுக் கோலேயில்ல அது தான் நேசம் மச்சான்
நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க உறவு வேணும் மச்சான்

சொய் சொய்ங் சொய் சொய்ங்
-------------------------------------------------------------------------------------------------------------
என்னுடைய முகநூல் நண்பர் தன்னுடைய புத்தகத்தில் எழுதிய மாணவ , மாணவிகளுக்கு தேவையான சில டிப்ஸ் .
நன்றி - ஹேமமாலினி ரமேஷ் 

1. எண்ணங்களில் தெளிவு.....
2. புரிந்துக்கொண்டு படிக்க முயலுதல்....
3. படித்தவைகளைத் தொகுத்து “பாயிண்ட்” வைஸ் எழுதப்பழகுதல்.....
4. சந்தேகம் இருக்கும் பாடங்களை உடனுக்குடன் கேட்டு சரி செய்தல்.....
5. கணிதமோ, குறியீடுகளோ, சமன்பாடோ, விதிகளோ படித்து அதனை ஒரு முறை எழுதிப் பழகி ஆழ்மனதில் பதிய வைத்தல் (சப் கான்ஷியஸ் லெவல்).....
6.தமிழ் , ஆங்கிலம் இவைகளைப் பிழை இல்லாமல் தெளிவாக எழுதிப் பழகும் ஆற்றல்
7. நாம் படித்ததை தோழிகளுடன் பகிர்ந்து அதனை மற்றவர்களுக்குப் புரிய வைத்தல் இன்னும் சிறப்பாகப் பயிலும் பயிற்சி
8. எடுத்துக்கொள்ளும் ஆகாரம் சத்துக்கள் நிறைந்தனவாய் இருத்தல் அவசியம்
9. தொலைக்காட்சி, கைப்பேசி, கணிணி இவைகளுக்கு விடுப்பு கொடுத்து கண்களுக்கு வலிமை சேர்க்க வேண்டும்
10. எப்போதும் படித்துக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை, படித்ததை அடிக்கடி நினைவுகொள்ள (ரீகால்) முயலுதல்.....
11. படிக்கும் நேரம் என்று நியமித்துக்கொள்ளவேண்டும்., விடிகாலை, மாலை, இரவு ....... எழுதிப் பழக மதியம்
12. படிக்கும் இடங்களையும் மாற்றிப் படித்தல் நினைவு ஆற்றலை அதிகப்படுத்தும்
13. வரலாறு படிக்கும் மாணவியர்கள் , சில அறிஞர்களின் பெயர்கள் நினைவில் கொள்ள நம்முடன் தொடர்பு கொண்டவர்களின் பெயரையும், அவர்களின் பிறந்தநாள், தொலைபேசி எண்கள், வீட்டு முகவரி போன்ற வற்றை நினைவுகூர்ந்து அதனை இணைத்து படித்தால் என்றும் மறக்காது......
14. தூக்கம் அதிகமாக வரும் போது படிக்கும் இடத்தைவிட்டு அகன்றுவிட வேண்டும். எழுந்து முகம் கழுவி, வேறு பாடத்தை எடுத்துப் பயில வேண்டும்......
15. கூடுமான வரை “படுத்துக்கொண்டு” படிப்பதை தவிர்த்தல் நல்லது....
16. பெரிய விடைகளை ஸ்பிளிட் பண்ணி, பாயிண்ட் வைஸ் படிக்கச் சொல்லு, ஈசியா நினைவில் வைத்துக்கொள்ள முடியும், பெரிய கேள்வி என்ற பயமும் போய்விடும்....
(16ம் பெற்று பெறு வாழ்வு வாழ வாழ்த்துகின்றோம் முகநூல் சார்பாக)

பசங்க இனிமேலாவது படிச்சு பாஸ் பண்ணுங்க 

--------------------------------------------------------------------------------------------------------------
 
அலெக்ஸ்பாண்டியன் படத்தை பார்த்த ஒரு நண்பனின் கதி





இதுக்கு மேல படத்தைப் பார்த்தா கம்பெனி பொறுப்பு கிடையாது 
 
மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா  
 

Thursday 17 January 2013

என்றும் எம் ஜி ஆர் - 17.01.13




வணக்கம்


இது ஒரு மீள் பதிவு , எம் ஜி ஆர் பிறந்த நாளை முன்னிட்டு . பழைய தலைப்பு கருப்பு எம்ஜியாருக்கு இது தெரியுமா ?





சம்பவம் 1




தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளரை தன்னுடைய ஜீப்பில் அமரும் படி அடிக்க முயன்றது முயற்சி செஞ்சாரா இல்லை அடித்தாரா என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம் 
சம்பவம் 2

கட்சியின் m l a மூன்று பேர் வெளியேறியவுடன் விமான நிலையத்தில் நிருபரிடம் அவர் நடந்து கொண்ட விஷயம்  
இது கருப்பு எம்ஜிஆரின் வரலாறு. இனி ஒரிஜினல் எம்ஜிஆரின் வரலாறு .




ஒருமுறை முதலவர் எம்.ஜி.ஆரின் வாகனத்தின் முன்புறம் சென்ற ஒரு ஆட்டோ டிரைவர் செய்த தவறால் எம்.ஜி.ஆரின் வாகனம் பிரேக் போட, பின்னால் வந்த போலீஸ் ஜீப் எம்.ஜி.ஆரின் காரின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் எம்.ஜி.ஆரின் கார் சேதமடைந்தது. வேறு காரில் எம்.ஜி.ஆர். சென்றுவிட்டார்.. விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஆட்டோ டிரைவரை போலீஸ் ஸ் டே டேஷனுக்கு அழைத்து சென்றுவிட்டனர். வழக்கும் போட முடிவு எடுத்துவிட்டனர். எம்.ஜி.ஆர். கோட்டைக்குப் போனவுடன் தனது செயலாளரை அழைத்து, ''அந்த ஆட்டோ டிரைவரை போலீஸ் இந்நேரம் கைது செய்திருப்பார்கள். அவரை உடனே கோட்டைக்கு அழைத்து வாருங்கள்..''என்றார்.
பயந்து போய் எம்.ஜி.ஆர். முன் வந்து நின்ற ஆட்டோ டிரைவரிடம் எம்.ஜி.ஆர். கேட்ட முதல் கேள்வி, '' போலீஸார் உன்னை அடித்தார்களா? ''ஆட்டோ டிரைவர் அடி வாங்கியிருந்தாலும் '' இல்லண்ணே ''என்றவுடன்,அவருக்கு புத்திமதி சொல்லி சாலையில் பாத்து ஓட்ட வேண்டும். உனக்கு குடும்பம் உள்ளதை மனதில் வைத்து ஓட்ட வேண்டும். எனக்கூறி ஆட்டோ டிரைவரை அனுப்பி வைத்தார்.. எம்.ஜி.ஆர். அன்று அந்த ஆட்டோ டிரைவரை பற்றி நினைக்காதிருந்தால் முதலமைச்சரின் பாதுகாப்புக்கு ஊறுவிளைவித்தார் என்று எதாவது ஒரு பிரிவின் கீழ் சிறைக்குப் போயிருப்பார்.
இந்த தகவல் பழைய வரலாற்றை புரட்டிய போது கிடைத்தது .




மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா



Saturday 12 January 2013

புண்பட்ட நெஞ்சை 'மேலும் ' புகையை விட்டு ஆற்று

 வணக்கம்


 இது முழுக்க முழுக்க புகை பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டும் அல்லது படிக்க வேண்டிய விஷயம். அதாகப் பட்டது . டாஸ்மாக் பக்கத்தில் இருந்தால் கோழிக் கடை, பெட்டிக் கடை , மற்றும் பலான கடை , அதே போல் கோவில் இருந்தால் அருகில் பூசை சாமான  கடையும் , பத்தி , சூடம் விற்கும் கடையும் இருக்கும் .


இது என்னவோ பொதுவானது .  ITC எனும் மிகப் பெரிய நிறுவனம் செய்யும் தொழிலை பார்த்தல் புகையிலையை சார்ந்து மட்டும் இல்லாமால் நாம் உபயோகப் படுத்தும் அல்லது தவிர்க்க முடியாத sசில துறைகளில் உள்ளது .


சில துறைகளை பாருங்கள் .


பள்ளி , கல்லூரி  மாணவ , மாணவிகள் உபயோகப் படுத்தும் அணைத்து விதமான உபகரணங்கள் .

IT துறை

கட்டட கட்டுமானத் துறை


கணினி துறை

பத்தி , தீப்பெட்டி துறை


இது தவிர சில lதுறைகளிலும் வேரூண்டி உள்ளனர்


அணைத்து துறைகளிலும் இவர்கள் நுழைந்தாலும் இந்த நிறுவனம் சம்பாதித்த மிகப் பெரிய துறை புகையிலை .  ஆனாலும் இவர்களின் ஆசை இன்றும் இவர்களுக்கு விடவில்லை . நீங்கள் சிகெரெட் பயன்படுத்துவோர் ஆயின் உங்களுக்குத் தெரியும் .


கோல்ட் பிளாக் -   4 லிருந்து 5 ம்

சிசர் பில்டர்      -   3 லிருந்து 4ம்

மற்ற பிராண்டுகளும் சிகரட் ஒன்றுக்கு ருபாய் ஒன்று உயர்த்தப் பட்டன . இந்த இடைவேளையில் VST போன்ற மற்ற நிறுவங்களின் சிகரெட் அதே விலையில் விற்ற காரணத்தால் இவர்களும் பழைய விலைகளில் அதே பெயரில் கொஞ்சம் சிறிய வகையில் வடிவமைத்து  நகரங்களை தவிர்த்து மீண்டும் சம்பாதிக்க முயற்சி செய்து வருகிறது. அது அவர்களின் வணிகம் ஆகட்டும். புகை பிடிப்பதை விடச் சொல்லி அரசாங்கம் மற்றும் திரை பிரபலங்கள் , அரசியல் பிரமுகர்கள் , அரசியல் கட்சிகள் , தன்னார்வ தொண்டு நிறுவனகள் மேலும் சில அமைப்புகள் இயங்கி வருகின்றன.

பழையன கழிதலும் புதியன புகுதலும் நல்ல விசயங்களுக்கு ஆகட்டும் .


அனைவருக்கும் தமிழர் , உழவர் , தைத் திருநாள் வாழ்த்துக்கள்.


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா

Wednesday 9 January 2013

தீலிப் ரஹ்மான் ஆனா கதை


வணக்கம்

கண்டிப்பாய் இதை நான் எழுதவில்லை.ஆனாலும் படிக்க சுகமாய் இருந்ததால் இதை அப்படியே கொடுக்கிறேன்.

அந்த 11 வயதுச் சிறுவன் கோடம்பாக்கத்தில் ஒரு ரிக்கார்டிங் ஸ்டுடியோவின் வாசலில் தயங்கியபடி உள்ளே செல்கிறான்.

அவனுக்காகப் பல வாத்தியக்காரர்கள் காத்திருக்கிறார்கள். ''வாப்பா திலீப்... உனக்காகத்தான் காத்துட்டிருக்கோம். நீ கொண்டுவந்த சிந்தசைஸர்ல என்னவோ பிரச்னை. என்னன்னு பாரேன்'' என்கிறார் அர்ஜுனன் மாஸ்டர்.

சிறுவன் திலீப் அந்தக் கருவியின் பாகங்களைத் தொழில்நுட்ப நேர்த்தியுடன் அழகாக
 பிரிக்கிறான். எதையோ சரிசெய்து ஒன்று சேர்க்கிறான். சில நிமிடங்களில் அது மீண்டும் நன்றாக வேலை செய்ய ஆரம்பிக்கிறது.

அர்ஜுனன் மாஸ்டர் அவனை அன்புடன் அணைத்துக்கொள்கிறார்... ''கில்லாடிடா நீ!'' திலீப்பின் கண்கள் கலங்கியிருக்க, அவரும் மனம் கலங்குகிறார்.

''என்ன திலீப், அப்பா ஞாபகம் வந்திடுச்சா..?'' என்பவர், பெருமூச்சுவிடுகிறார். ''என்ன செய்றது... விதின்னுதான் சொல்லணும். சாகிற வயசா மனுஷனுக்கு? இப்பவும் உன் அப்பா இங்கேயே இருக்கிற மாதிரிதான் தோணுது திலீப்'' என்பவர், சிறுவனின் கைகளில் சில ரூபாய் நோட்டுகளைக் கொடுக்கிறார்.

யூனிவோக்ஸ், கிளாவியோலின் போன்ற மின் இசைக் கருவிகளை வாடகைக்கு விட்டதற்காகக் கொடுக்கப்படும் சிறிய தொகை அது.

`திலீப் அந்தப் பணத்தில் தன் சகோதரிகளுக்காக சாக்லேட்டுகளும் பிஸ்கட்டுகளும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வருகிறான். அம்மாவிடம் மிச்சப் பணத்தைக் கொடுக்கிறான். அவனைப் பார்க்கப் பார்க்க, அம்மாவின் மனம் நெகிழ்கிறது. 'சின்னப் பையன் மேல குடும்பப் பாரம் விழுந்துவிட்டதே! படிக்க வேண்டிய பையனை இப்படி ரிக்கார்டிங் தியேட்டர்களுக்கு அனுப்புகிறோமே' என்கிற வருத்தம்.

ஆனால், சிறுவன் திலீப்பின் கண்களில் மின்னிய விவரிக்க இயலாத ஒளியைக் கண்டபோது, அவன் சரியான பாதையில்தான் போகிறான் என்று அந்தத் தாயின் மனதுக்குப் புரிந்தது.

திலீப் பொதுவாக வீட்டில் யாருடனும் கலகலப்பாகப் பேச மாட்டான். வீடெங்கும் இறைந்துகிடக்கும் இசைக் கருவிகளும், இசைப்பதிவு இயந்திரங்களும்தான் அவனுக்குப் பிடித்த உலகம். தன் அறைக்குச் சென்று அவற்றை வாசிப்பதிலும் பிரித்துப் போட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பதும்தான் அவனுடைய விருப்பமான ஒரே விளையாட்டு.

மற்றபடி நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது, சினிமா, அரட்டை போன்ற வேறு பொழுதுபோக்குகள்..? ம்ஹூம்... எதுவும் இல்லை.

திலீப் தன் அறைக்குச் சென்று ஹார்மோனியத்தில் ஒரு பாட்டை வாசிக்க ஆரம்பிக்கிறான். அது அவனுடைய அப்பா இசையமைத்த ''பெத்லஹேமில் ராவில்...'' என்கிற பிரபல மலையாளப் படப் பாட்டின் மெட்டு.

அவன் வாசிப்பதைக் கேட்கும் அம்மா, தன் கணவரே நேரில் வந்ததைப் போல் மெய்ம்மறந்துபோகிறார். அந்த மெட்டில் அவன் சில மாற்றங்களையும் செய்து மிக இனிமையாக வாசிப்பதைக் கேட்கும்போது அந்தத் தாய்க்குச் சிலிர்க்கிறது. ஓடி வந்து தன் மகனை நெஞ்சார அணைத்துக்கொள்கிறார். அவர் கண்களில் கண்ணீர் வழிகிறது. ''நீ வாசிக்கிறதைக் கேக்கும்போது சந்தோஷமா இருக்குப்பா... ஆனா, கொஞ்சம் பயமாவும் இருக்கு.


 ''பயமா... ஏம்மா?'' ''உங்கப்பா ரொம்ப திறமைசாலிப்பா. எவ்வளவோ உயரத்துக்குப் போயிருக்க வேண்டியவரு. இந்த உலகம்தான் அவரைக் கடைசி வரை புரிஞ்சுக்கலை. இவ்வளவு சின்ன வயசுல உனக்கு இருக்கிற திறமை எனக்குத் தெரியுது.

ஆனா, உலகம் புரிஞ்சுக்குமான்னு பயமா இருக்கு'' என்கிறார் வாழ்க்கையின் பல பிரச்னைகளைப் போராட்டத்துடன் கடந்து வந்த அந்தப் பாசமிகு அம்மா.

உலகம் அந்தச் சிறுவனைப் புரிந்துகொண்டது.
இருகரம் நீட்டி அந்த இளம் இசை மேதையை வரவேற்கக் காத்திருந்தது.

அவனுக்கான பிரகாசமான எதிர்கால வெற்றிப் பாதை ஏற்கெனவே அமைக்கப்பட்டுவிட்டது.

நான்கு வயதிலேயே பெற்றோர்களால் பியானோ வகுப்புகளுக்கு அனுப்பப்பட்ட சிறுவன் திலீப், விரைவில் பள்ளிப் படிப்பைவிடப் போகிறான்.

தனராஜ் மாஸ்டரிடம் இசை கற்று, லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் ஸ்காலர்ஷிப் பெற்று, மேற்கத்திய கிளாசிக்கல் இசையில் பட்டம் பெறப்போகிறான்.
ரூட்ஸ், நெமிஸிஸ் அவின்யூ, மாஜிக் போன்ற சென்னை ஆங்கில இசைக் குழுக்களில் பங்கேற்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கப் போகிறது.

இன்னும் ஒரு சில வருடங்களில் எம்.எஸ்.வி, இளையராஜா போன்ற மாபெரும் இசைஅமைப்பாளர்களுக்கு கீ- போர்டு பிளேயராகவும், சில சமயங்களில் இசை கோப்பாளராகவும் பணியாற்றப்போகிறான்.

அவனுடைய திறமை விக்கு விநாயக் ராம், குன்னக்குடி வைத்தியநாதன், ஜாகிர் ஹுசேன் போன்றவர்களுடன் சேர்த்துவைக்கப்போகிறது.

அவர்களுடன் கச்சேரிகளில் பங்கேற்க உலகப் பயணம் செல்வான்.

அதன் பிறகு, 300-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கு இசை அமைப்பான்.

'பஞ்சதன்' என்கிற பெயரில் சொந்தமாக ஒரு ஹைடெக் ரிகார்டிங் ஸ்டுடியோவைக் கட்டுவான்.

அங்கேதான் இயக்குநர் மணிரத்னத்தைச் சந்திப்பான்.

'ரோஜா' என்கிற படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு அவனுக்குத் தரப்படும்.

அந்த இசையமைப்பு இந்தியத் திரை இசையின் ஸ்டைலையே மாற்றி அமைக்கும்.

முதல் படத்திலேயே தேசிய விருது பெறுவான்.

சொந்த வாழ்க்கையில் நடந்த சில புதிரான நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, அப்போது அவன் பெயரும் மாற்றம் செய்யப்பட்டிருக்கும்.

திலீப் என்கிற இளைஞன் ஏ.ஆர்.ரஹ்மான் என்கிற இசைக் கனவானாக மாறுவார்.

'ரோஜா'வில் ஆரம்பிக்கப் போகும் அந்த மகத்தான இசைக் கனவு ஆஸ்கர் விருதையும் கடந்து செல்லும்.

( ஆச்சரியம் .. ஆனால் உண்மை )

இளையராஜா திலீபின் அப்பாவிடம் கீபோர்டு வாசித்தார். திலீப் ஏ.ஆர்.ரஹ்மான் ஆனபின் இளையராஜாவிடம் கீபோர்டு வாசித்தார், இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர்ராஜா ஏ.ஆர் ரஹ்மானிடம் கீ போர்டு வாசித்தார்.
.

மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா 

Saturday 5 January 2013

அப்போ எனக்கு வயசு 6 - ஒரு சூப்பர் லவ் ஸ்டோரி

வணக்கம்


மொக்கை ஜோக் போட்டு ரொம்பநாள் ஆயுடுச்சு . சனிக்கிழமை வேற  சீரியஸ் பதிவ போட்டு மொக்க போடறதுக்குப் பதிலா மொக்கையே பதிவ போட்ரலாம் . அதகாப் பட்டது எனக்கு வந்த மின்னஞ்சலில் இருந்து சில மொக்கையை தருகிறேன்.


ஒரு சூப்பர் லவ் ஸ்டோரி 


ஒரு எறும்பும் யானையும் லவ் பண்ணிச்சு, எறும்போட பேரன்ட்ஸ் , சொந்த பந்தம் எல்லாம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாங்க ' அவன் ஜாதி வேற , நம்ம ஜாதி வேற அவன் மறந்திடுன்னு ' பட் எறும்பு கேட்கல்ல , எறும்பு ஏதோ சொல்ல அத கேட்ட எறும்போட  குடும்பமே நெஞ்சு வெடிச்சு செத்துப் போச்சு . அப்படி எறும்பு என்ன சொல்லிச்சு தெரியுமா 


அந்த யானையோட வாரிசு என் வயுத்துல வளருதுன்னு ?  


-----------------------------------------------------------------------------------------------------------------------------------


அப்போ எனக்கு வயசு ஆறு , நான் 1வது படிச்சு கிட்டு இருந்தேன் . என் நண்பர்கள் என்னை பாத்து நாலு பீர் இருக்கு , அத எப்பிடி அஞ்சி பேருக்கு பிரிச்சு குடுப்பேன்னு கேட்டாங்க. நான் சொன்னேன் 

' எனக்கு வேணாம் மச்சி , நான் ஒரு குவாட்டர் வாங்கிக்கிறேன் , அத அவங்களுக்கே குடுத்திரு '


நீதி ; எனக்கு அப்பவே நண்பர்கள் தான் முக்கியம் . பீர் இல்ல 


-----------------------------------------------------------------------------------------------------------------------------------

மிஸ்டர் பீன் : மும்பைலிருந்து நியூயார்க்கு எவ்வளவு நேரத்தில் ப்ளைட் போகும்

ரிசப்சனிட் “ ப்ளிஸ் , ஒன் செகன்ட் சார்

மிஸ்டர் பீன் : வாவ் , என்ன ஸ்பீடு

----------------------------------------------------------------------------------------------------------------------------------

ரசிகர் : ஹலோ பெப்சி உமாவா?எனக்கு துப்பாக்கி படத்துல இருந்து ஏதாவது பாட்டு போடுங்க.....

உமா : கொஞ்சம் பொறுங்க இன்னும் ரெண்டு நாள்ல படத்தையே போடுறோம்...
 
--------------------------------------------------------------------------------------------------------------
மீண்டும்  சிரிப்போம்
அவனி சிவா

Friday 4 January 2013

இந்த ஜென் கதை எந்த பிரபலங்களுக்கு பொருந்தும் .....

வணக்கம்


ஒரு ஜென் கதை...... இந்த ஜென் கதை எல்லோருக்கும் ஏதாவது ஒரு சமயத்தில் நமக்கும் நடந்திருக்கும் . ஆனாலும் சில அரசியல் , திரை பிரபலங்களுக்கு மிகச் சரியாக பொருந்தும்  உங்களுக்கு யாருக்குப்  பொருந்தும் எனத் தோன்றுகிறது. 

இனி கதை 


"ஒரு விவசாயி குதிரையையும், ஆட்டையும் வளர்த்து வந்தான். குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்கள். ஒரு நாள் அந்த குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால் அந்த விவசாயி குதிரைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான். மருத்துவர் அந்த குதிரையின் நிலையைபார்த்து, நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தை சாப்பிட்டு குதிரைஎழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனை கொன்றுவிட... வேண்டியது தான் என்று சொல்லி, அன்றைய மருந்தை கொடுத்துச் சென்றார்.
இவர்களது உரையாடலைஅந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது. மறுநாள், அந்த மருத்துவர் வந்து அன்றைய மருந்தைக் கொடுத்து சென்றார். பின் அங்கிருந்த ஆடு, அந்த குதிரையிடம் வந்து, "எழுந்து நடநண்பா, இல்லாவிட்டால் அவர்கள் உன்னை கொன்று விடுவார்கள்" என்று அந்த குதிரையை ஊக்குவித்தது.

மூன்றாம் நாளும் வந்துவிட்டது, மருத்துவரும் வந்து குதிரைக்கு மருந்து கொடுத்துவிட்டு, அந்த விவசாயிடம்"நாளை குதிரை நடக்கவில்லையெனில், அதனை கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கு பரவிவிடும்." என்றுசொல்லிச் சென்றார்.

அந்த மருத்துவர் போனதும், ஆடு குதிரையிடம் வந்து, நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். உன்னால் முடியும், எழுந்திரு! எழுந்திரு! என்று சொல்லியது. அந்த குதிரையும் முயற்சி செய்து எழுந்து நடந்துவிட்டது.
எதிர்பாராதவிதமாக அந்த குதிரையை விவசாயி பார்க்க வரும் போது, குதிரைஓடியதைப் பார்த்துசந்தோஷமடைந்து, மருத்துவரை அழைத்து அவரிடம்"என்ன ஒரு ஆச்சரியம். என் குதிரை குணமடைந்துவிட்டது. இதற்கு நிச்சயம்உங்களுக்கு ஒரு விருந்து வைக்க வேண்டும். சரி, இந்த ஆட்டை வெட்டுவோமா!!!" என்று சொன்னார்" என்று கதையை சொல்லி முடித்தார்.

பின் அவர்களிடம்"பார்த்தீர்களா! இந்த கதையில் உண்மையில் குதிரை குணமடைந்ததற்கு அந்த ஆடு தான் காரணம். ஆனால் மருத்துவரின் மருந்தால் தான் குதிரை குணமடைந்தது என்றுஎண்ணி, கடைசியில் அந்த ஆட்டையே பலி கொடுக்க நினைக்கிறார்கள்
ஆகவே இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்ததோ, அவர்களை விட, அந்த நன்மைக்கு அருகில் இருப்பவர்களுக்குத் தான் அதிக மரியாதை கிடைக்கும்." என்றுஇறுதியில் சொல்லி விடைபெற்றார்.
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா 

Tuesday 1 January 2013

2013 ஆம் ஆண்டின் சில முக்கிய தலைப்புச் செய்திகள்


வணக்கம்

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . போன வருஷம் அல்லது சென்ற வருடம் நான் எழுதிய ( சரி விடுங்க ) சில நண்பர்கள் தந்த நல்ல விசயங்களை ( நான் எழுதியதை விட அது நன்று என பாராட்டும் நண்பன் ஆகிய எதிரிகளுக்கு ) வேறு என்ன அவர்களுக்கும் நன்றி .

சம்மந்தப்பட்ட படம் எதுவும் கிடையாது.அதற்க்காவே எனக்கு நன்றி அல்லது கமெண்டை அளிக்கலாம். 

  இன்னும் 15 நாளில் கூடங்குளம் அணுஉலை செயல்பட துவங்கும் -நா.சு

  விரைவில் திமுக செயல் தலைவர் ஆகிறார் ஸ்டாலின்.

  தமிழகத்தில் மின்பற்றாக்குறை விரைவில் சீரமையும் -ஜெயா

  டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து சச்சின் ஒய்வு

  அரசியலுக்கு வர வேண்டிய நேரத்தில் வருவேன் - கோச்சுடையான் 
  ரீலிஸ்க்கு முன் ரஜினி

  தேசிய அளவில் மூன்றாம் அணி
  டாஸ்மார்க் இழுத்து முடுவோம் -மருத்துவர்

  யாருடனும் கூட்டணி இல்லை -கேப்டன்

  நயன்தாரா திருமணம்

  இந்தியா பொருளாதாரம் வலுப்படும் - மன்மோகன்

  ஆனந்ததொல்லை ரிலீஸ் - பவர்ஸ்டார்



இதனைத் தவிர உங்களுக்கு ஏதேனும் தோன்றினால் உங்களுடைய பதிவுகளில் எழுதலாம் , பத்திரிக்கைக்கு அனுப்பலாம் , அதையும் மீறி பதிவின் பதிலுக்குப் போடலாம் .






மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா