குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Tuesday 30 July 2013

அந்தந்த வயசுக்கு அந்தந்த பீலிங்

வணக்கம்

KG பசங்க - லாஸ்ட் பெஞ்ச் ஸ்டுடண்ட்ஸ் 

மச்சான் நான் ரொம்ப அப்செட்டா இருக்கேண்டா

ஏன்டா

நேத்து அம்மு கூட டாயஸ் வாங்க ஷாபிங் போயிருந்தேண்டா , அங்க செம பிகர் 1 , மூணு வயசு இருக்கும் அவங்க அம்மா மடில படுத்துட்டு வாயில விரல வச்சு சிரிச்சா பாரு , அய்யோ

அப்புறம் என்னாச்சு

நானும் பலூன் எல்லாம் வச்சி , செம சீன் போட்டேன் .மச்சி அவ கண்டுக்கவே  இல்லடா , ரெண்டு நாள் ஆச்சு கார்ன் ப்ளக்ஸ் சாப்பிட்டு , அவ என் அஞ்சலடா

விடு மச்சி , அவள தொட்டியோட தூக்குவோம் .

------------------------------------------------------------------------------------------------------------


எக்ஸாம் நேரத்தில் படிக்கிற பக்கிகளின் பொலம்பல் 

1 std  3 std   -  தினமும் படிக்கிறேண்டா

4 std  6 std   -  கொஞ்சம் கஷ்டம்டா

7 std  10 std   - முக்கியமான கொஸ்டின் மட்டும் தான் படிக்கிறேன்

11 std  12 std - மைக்ரோ ஜெராக்ஸ் எடுக்கலாமா மச்சான்

காலேஜ்     -  என்னது இன்னைக்கா எக்ஸாம் .


----------------------------------------------------------------------------------------------------------------


கவுண்டமணி - நான் உன்கிட்ட என்ன வாங்கிட்டு வர சொன்னேன்

செந்தில்            - tube light வாங்கிட்டு வர சொன்னிங்க

கவுண்டமணி - எத்தன

செந்தில்            - ரெண்டு

கவுண்டமணி - ஒன்னு இங்க இருக்கு , இன்னொன்னு எங்க

செந்தில்            - அதான் இந்த பதிவ படிக்குது ????????

--------------------------------------------------------------------------------------------------------------

கந்தசாமி பையன் - அப்பா அப்ளிகேசன்ல “MOTHER TONGUE” கேட்ருக்கு என்ன போட 


கந்தசாமி                  - ரொம்ப நீளம்னு போடு 

---------------------------------------------------------------------------------------------

மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா 

Monday 29 July 2013

18 + ஐ முறைப்படுத்த 30 + கணினியில் செய்ய வேண்டியவை



வணக்கம்


மஜா கதைகள் , சாமி ? படங்கள் , பலான வீடியோ காட்சிகள் இப்படி பல மேட்டரை உங்க புள்ளக பார்ப்பதை எப்படி தடுப்பது என இனி யோசிக்க வேண்டாம் . நம்ம கூகிள் அதுக்கும் சில ஆப்சனை வச்சிருக்கு.

இன்டர்நெட் கனெக்சன் வாகின உடனே இப்படி பட்ட பக்கத்துக்குத் தான் , நாமும் போவோம் . இன்டர்நெட் எந்த அளவிற்கு நாம உபயோகமா பயன்படுத்துறது அப்படின்னு தெரியவே சில பல நாட்கள் ஓடுது.அதே போல் கூகிள் எதப் பத்தி கேட்டாலும் டப் டப்புன்னு காட்டி குடுக்கும் . அதுலயும் நல்லத நாம தேடுறதுக்கு சில பல நாட்கள் ஆயுடுத்து.முகப்புதகத்தையும் நாம் சரி வர பயன் படுத்துறது  கெடயாது. அப்படி நான் படிச்ச மேட்டர் தான் இந்தப் பதிவு . இத எல்லாருக்கும் ஷேர் பண்றதுக்குப் பதிலா ஒரு பதிவா போட்டா நாலு பேருக்கு போயி சேரும் என்கிற நம்பிக்கையில் ,இந்த பதிவு .



படித்ததில் பிடித்தது:

அன்பு சகோதரர்களே சகோதரிகளே !... அநேகமாக நம் எல்லோரது வீட்டிலும் லேப்டாப் இருக்கிறது இதனை நாம் ,மனைவி பிள்ளைகள் என எல்லோரும் தினசரி உபயோகப் படுத்துகிறோம் . பல தகவல்களை Google ல் நாம் தேடும் போது யதேச்சையாகவோ அல்லது தவறான ஸ்பெல்லிங் ஏற்படும் போதோ ஆபாசமான தகவல்கள், மற்றும் படங்கள் என வந்து மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது என்பது உண்மையே , இதனை சீர் செய்ய இந்த பதிவு மிகுந்த உபயோகமாக இருக்கிறது , எனவே முடிந்தவரை பலருக்கும் இதை SHARE செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்
ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?

நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .

...முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.

பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.

அல்லது

http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்..

Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் ,


அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.

Locking Process நடைபெறும்


பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.

அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.

இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .

நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.

google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள் ....

Setting போய் பாத்துட்டு அட ஆமா இருக்கு'ல ன்னு சும்மா இருக்காம... setting correct'ah பண்ணுங்க...

நண்பர்களிடமும் share பண்ணுங்க...

நன்றி:களஞ்சியம்


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா

Saturday 27 July 2013

சாப்பாடு ரூ 1 முதல் 12 - இவர்களை என்ன செய்யலாம் ?

வணக்கம் 


நம்ம காங்கிரஸ் மந்திரிங்க சாப்பாடு எங்க சாப்பிடறாங்கன்னு தெரியல்ல ? வாயிக்கி வந்த மாதிரி , ஆளாளுக்கு ஒரு வெலய சொல்றாங்க. பாவம் அவங்க என்ன செய்வாங்க , துட்டு குடுத்து சாப்பிட்டா தானே ? நாப்பது ரூபா கொடுத்தாலே நல்ல சாப்பாடு கெடைக்க குதிரை கொம்பா இருக்கு.சொன்னதில ராஜ் பப்பர் மட்டும் வருத்தம் தெரிவிச்சிருக்காரு.மத்தவங்க சொன்னத மறந்துட்டு வேற வேலைக்கு மாறிட்டாங்க போலிருக்கு.  


சொன்ன நேரத்திலிருந்து Facebook ல  வாங்கு ,வாங்குன்னு வாங்குப்பட்டாச்சு.இவங்களை என்ன செய்யலாம் அப்படின்னு யோசிச்ச போது தான் ஒரு பழைய காமெடி நினைவுக்கு வந்துச்சு.அது இது தான் 

இந்திய பாராளுமன்றம் அருகில் பெரிய ட்ராபிக் ஜாம் ஆகிவிட்டது.ஒரு லாரியின் கதவை தட்டினார் ஒருவர்,என்னாச்சுப்பா ஏன் இவ்வளவு ட்ராபிக்கா இருக்கு என்று லாரி டிரைவர் கேட்டார்.

ஒன்னும் இல்ல நம்ம காங்கிரஸ் கட்சிகாரங்க மொத்த பேரையும் தீவிரவாதிங்க புடிச்சி வச்சிருக்காங்க,100 கோடி ரூபாய் தந்தால் தான் விடுவேன்னு சொல்லுறாங்க,இல்லைன்னா பெட்ரோல் ஊத்தி கொளுத்திடுவேன்னு மிரட்டுறாங்க என்றார்.

அதான் நாங்கள் எல்லார்கிட்டையும் வசூல் பண்ணிக்கிட்டு வருகிறோம் என்றார்.

எல்லாரும் எவ்வளவு தந்தாங்க என்று கேட்டார் டிரைவர்.

எல்லாரும் ஆளுக்கு 2 லிட்டர் பெட்ரோல் குடுத்திருக்காங்க என்றார்.

முடிஞ்சா எல்லாரும் 2 லிட்டர் பெட்ரோல் வாங்கிட்டு வாங்க. 

மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா

Friday 26 July 2013

தனுஷ் வாங்கிய விருது ' செட்டியார் கடை ' விருதா ?

வணக்கம்


தமிழ் சினிமா ஆரம்பம் முதலே கதாநாயகர்களில் தலைமுறை,தலைமுறையாக இருவரையே சிறந்த அல்லது வெற்றி நாயகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

எம் கே டி - கிட்டப்பா 

எம் ஜி ஆர் - சிவாஜி 

ரஜினி - கமல் 

விஜய் - அஜித் 

விக்ரம் - சூர்யா 

தனுஷ் - சிம்பு 


கடைசியாக இருக்கும் மூன்று ஜோடிகளில் , ஒருவருக்காக இன்னொருவரை  
ஜோடிக்கப்பட்டது என்பது  பெரும்பாலான சினிமா விரும்பிகளுக்கு தெரிய வாய்ப்பிருக்கிறது. எம் கே டி - கிட்டப்பா காலங்களில்  நாயகர்களுக்கு  பாடும் திறமை கண்டிப்பாக இருக்க வேண்டிய  கட்டாயம் இருந்தது. எம் ஜி ஆர் - சிவாஜி காலாங்களில்  பாடும் திறமையை இருவரும் டி எம் எஸ் அவர்களிடம்  விட்டு விட்டனர்.பிறகு ரஜினி - கமல் காலாங்களிலும் எஸ் பி பி அவர்களிடம் அதனை  விட்டு வேறு பாதையில் பயணம் செய்தனர். அடுத்து வரும் மூன்று  ஜோடிகளும் அந்த இடங்களை  பிடிக்க  தெரிந்த எல்லா வித உத்திகளையும் கையாண்டு வருகின்றனர்.

இந்த வரிசைகளில் கமல் , விஜய் , சிம்பு , தனுஷ் ஆகியோர் திரைப்படங்களில் அவ்வப்போது பாடியும் வருகின்றனர் . ( மற்ற நாயகர்களுக்கும் ) இவர்களில் கமல் அதிக பாடல்களை பாடி இருப்பார்.

சமீபத்தில் நடிகர் தனுஷ் அவர்களுக்கு film fare ன்  சிறந்த பின்னணிப் பாடகர் விருதை வழங்கி இருந்தனர். தனுஷ்  இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக மெருகேரி வருகிறார். பத்திரிக்கை துறையில் மிக நீண்ட காலாமாக  இருந்து வரும் திரு . ஜி கௌதம் தனது பக்கத்தில் பகிந்த செய்தி தனுசின் நடிப்பு திறமைக்கு ஒரு சான்று.

எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித்.. என்ற வரிசையில் இனி சிலம்பரசனையும் தனுஷையும் மறந்தும்கூட ஒப்பிடாதீர்கள்!

சி’னா ஹீரோயின்களை (நிஜ வாழ்க்கையிலும்) லவ் பண்ணுவதற்காகவே சினிமாவில் நடிக்கிறார்..
த’னாவோ நடிப்பில் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறார்!

# மரியான் பார்த்த எஃபெக்ட்..
யாரையும் நினைவு படுத்தாமல் சொந்தமாக நடிக்கத் தெரிகிறது தனுஷுக்கு!

ஒருவேளை சட்டுப்புட்டுன்னு லவ் பண்ணி, பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு, காமத்தைக் கடந்ததுதான் தனுஷின் வெற்றிக்கு பிரதான காரணமோ?

சிம்பு இன்னமும் அங்கேயே நின்று கொண்டிருக்கிறாரே!

இதில் சிம்பு பல்பு வாங்கியதை உங்களுக்கு நினைவூட்ட விரும்பவில்லை.

தமிழ் மீடியா என்கிற இனைய செய்திபத்திரிக்கை இந்த சந்தேகத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது.

தனுஷுக்கு விருது கிடைத்தது எப்படி? 

 http://www.4tamilmedia.com/cinema/cinenews/15909-2013-07-25-07-26-43?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+4tamilmedia-feeds+%284tamilmedia+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29


'வொய் திஸ் கொலவெறி' பாடலுக்காக சிறந்த பாடகர் விருது கிடைதிருக்கிறது தனுஷுக்கு.

 இதை நினைத்து யாரும் கமுக்கமாக சிரிக்க வேண்டியதில்லை. (வாய்விட்டே சிரிக்கலாம்னு சொல்ல வந்தேன்) உலகம் முழுக்க இந்த பாடல் சென்று சேரக் காரணம் குரல் அல்ல, ட்யூன் என்பதுதான் உண்மை. நியாயமாக இந்த விருது இசையமைப்பாளர் அனிருத்துக்கு அல்லவா போய் சேர்ந்திருக்க வேண்டும்? அது போகட்டும்...



இந்த விருதை கொடுத்த அந்த ஆங்கில பத்திரிகை ஒவ்வொரு முறை விருதை அறிவிக்கும்போதும் கட்டாயம் தனுஷுக்கும் ஒரு விருதை ரிசர்வ் செய்து வைத்திருப்பார்கள். பல ஆண்டுகளாக இப்பழக்கம் தொடர்கிறது. இந்த முறையும் அப்படியே! ஏனிப்படி? சந்தேக சல்லடையை சலித்து பார்க்காமல் விட முடியாதே. வேறொன்றுமில்லை, இப்பத்திரிகையின் தமிழ் கன்டென்ட் ஆசிரியர்தான் தனுஷின் கால்ஷீட் மேனேஜர்!

வேப்பிலை சாறுல முக்கியெடுத்த வெல்லம்தான் இந்த விருது...



இனி என்ன , சந்தேகத்த உங்க காதில போட்டாச்சு. விஷயம் தெரிஞ்சவங்க விளக்கம் தாங்க .

மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா

 

 

 

 

 


Thursday 25 July 2013

டைம்பாஸ் இதழில் வரவேண்டிய விளையாட்டு - 18 +

வணக்கம் 


சில   படங்களை கீழே  இணைத்துள்ளேன்.அதனை கவனமாக சிலநிமிடங்கள் பாருங்கள். பார்த்த பின்பு இந்த  அழகிகளிடம் இருக்கும் ஒற்றுமை என்ன ? என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.



இந்த  படங்களை பார்த்த பின்பு பெண்களிடமும்,ஆண்களிடமும் இதே கேள்வி கேட்கப் பட்டது.பெண்கள் 15 வினாடிகளிலும் , ஆண்கள் 30 வினாடிகளிலும் பதில் கூறி உள்ளனர்.பெண்களில் 100 ல் 99 பேர் சரியான பதிலையும் , ஆண்களில் 100 பெரும் தவறான பதிலையே தந்துள்ளனர்.





சரியான பதில் - பதிவின் கடைசியில்



































எத்தனை முறை பார்த்தீங்க ? கரைட்டா கமெண்ட்ல போடுங்க பார்ப்போம்.

என்ன ஒற்றுமைன்னா ?
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
எந்த அழகிகளும் கழுத்தில் எந்த வித அணிகலன்களை அணியாமால் இருப்பார்கள் . ( விகடன் வாசகர்கள் கண்டிப்பாய் கண்டுபிடித்திருக்க வாய்ப்பு உண்டு.)


பெண்களின் கண்களுக்கு கழுத்து தெரிந்தது , பல ஆண்களுக்கு தெரியவில்லை .


மீண்டும் சிந்திப்போம்
 அவனி சிவா

Wednesday 24 July 2013

நஸ்ரியா - ரீமேக் செய்யப்பட நதியா

வணக்கம்


நல்ல படங்களை ரீமேக் செய்கிறேன் என்று மொக்கையாய் எடுப்பதுண்டு (சமீபத்தில் வந்த சில படங்கள் உதாரணம்).நயன்தாராபோலவே பானு என்று ஒரு நடிகை வந்தார் . வந்தவுடன் சின்ன திரைக்கு போய் ,பெரிய திரையை காப்பாற்றிவிட்டார்.( இதுவும் ஒரு உதாரணம் ).இப்போ மேட்டர் ......


என்னுடைய பள்ளிப்பருவத்தில் மீசை அரும்ப ஆரம்பித்தக நேரம்  , பெண்களின் மீது ஈர்ப்பு வந்த நேரம் , நடிகைகளை தேவதையாய் தெரிந்த நேரம், அந்த நேரத்தில் தான் , பெண்களும் பொறாமைப்பட்ட நேரம் வந்தது.எத்தனையோ நடிகைகள் வந்து ,பலரின் தூக்கத்தை கெடுத்தவர்கள் என்கிற குடிப்பினை கொண்டிருந்தாலும் , அந்த நேரத்தில் வந்தார் நதியா.


பசங்களின் புத்தகத்தில் ஒளிந்து கொள்வார் . பசங்களின் கனவுக் கன்னியாக , தேவதையாக இருந்தார். பெண்களின் அலங்காரப் பொருட்களில் வலம்வந்தார்.( நதியா பொட்டு, நதியா வளையல் ,நதியா புடவை பாவாடை,ஜாக்கெட் ) இப்படி எல்லோரையும் ஆக்கிரமித்தார்.


கவர்ச்சி இருக்காது,காமம் இருக்காதுஆனாலும் கவர்ந்திழுத்தார்.இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ( வருஷம் சரியா ) மீண்டும் ஒரு நதியாவை பார்த்தேன்,நஸ்ரியா உருவத்தில் .பார்க்கப் பார்க்கப் பிடிக்காமல் போகும் நடிகைகள் மத்தியில் , பார்த்துக் கொண்டே இருப்பதுப் போல் இருப்பது ,இப்போது நஸ்ரியா.


நதியாவை மட்டும் பார்த்து விட்டு நஸ்ரியாவை பார்க்காமல் இருக்கும் பங்காளிகளுக்கும் , நஸ்ரியாவை பார்த்து விட்டு ' இது போல வருமா ' என புலம்பும் பசங்களுக்கும் .....கீழே பார்த்துக் கொள்ளவும் .( ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் )


இது பங்காளிக காலம்



இது பசங்களின் நேரம் 







இது முழுக்க ,முழுக்க அழகின் மீது மட்டுமே பார்வை போன பாதை .குட்றதாஇருந்தாலும் குளிப்பாட்ட , இருந்தாலும் கொஞ்சம் பார்த்தே செய்ங்க.

மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா

Tuesday 23 July 2013

அடுத்த முதல்வராக இயக்குனர் விக்ரமனை தேர்ந்தெடுக்கலாம் .

வணக்கம்


நம்ம தமிழ்நாட்டு ஜனங்களுக்கு எந்த ஒரு நல்ல விசயத்தை சொல்லிக்கொடுத்தாலும் , எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும், மக்களின் நன்மைக்காக கருத்து சொன்னாலும் அத சொல்றது யாருன்னு தான் பார்ப்பாங்க .திரைப்பட உலகத்தில் இருந்து எவரேனும் சொன்னால் அதுவே வேத வாக்காக கொள்வதும் உண்டு .( திரைப்படத் துறையிலும் புண்ணியவான்கள் உண்டு , இது அவர்களை குறிப்பிட்டு சொன்னவை அல்ல..)


ஒரு காலத்தில் திரைப்பட இயக்குனர் ஆவது என்பது குதிரை கொம்பாக இருந்ததுண்டு.இப்போது அவ்வளவு கஷ்டம் கிடையாது.கற்பனை திறன் இருந்து ,நல்ல கருத்தை சொல்லும் ஆற்றலும் இருந்தால் இணையம் வழியே சென்று வெற்றி பெறலாம்.அல்லது குறும்படம் எடுத்து தன்னுடைய திறமையை நீருபித்து திரைப்படத்துறையில் வெற்றி பெற வாய்ப்பு உண்டு .





இயக்குனர் விக்ரமன் இயக்குனர் சங்க தலைவராக ஆன பின்பு சில நல்ல விசயங்களை செயல் படுத்தி வருகிறார் என்கிற செய்திகள் வந்த வண்ணம் இருந்தன .

விக்ரமன் அவர்களுக்கு  .உதவி இயக்குனர்களின் சிரமம் அவருக்கு தெரிந்ததினால் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் , பொருளாதார நிலையை உயர்த்தவும் உதவி இயக்குனர்களுக்கு மாத சம்பளம் கொடுக்கும் திட்டத்தை நடை முறை படுத்த உள்ளார்.

இப்படி பல நல்ல திட்டங்களை செயல் படுத்தும் எண்ணம் உள்ளவருக்கு , பேசாமால் செய்ய வேண்டாம் , பேசியே அவரை ஒரு பதவியில் அமர்த்திவிடலாம்.நமக்கும் நல்லது நடக்கவும் , நம்முடைய விருப்பபடி திரைப்பட துறையை சார்ந்ந்தவரே இருக்கும் . 

ஆதங்கத்தில் 
அவனி சிவா

Monday 22 July 2013

கலைஞர் கருணாநிதியின் தலை - ஆஸ்திரிய நாட்டில் பரபரபப்பு

வணக்கம் 

இந்தச் செய்தி எந்தளவுக்கு உண்மையோ.ஆஸ்திரிய நாட்டு மக்களுக்கும் , தி மு க தோழர்களுக்குத் தான் தெரியும்.ஆஸ்திரிய நாட்டில் கருணாநிதியின் தபால் தலை வெளியிடப்பட்டது என செய்தி வெளியாகி இருந்தது.மகிழ்ச்சியாய் தான் இருந்தது,அது இன்று காலை தினமலர் நாளிதழை படிக்கும் வரை . செய்தியின் தலைப்பு இதோ.

கருணாநிதிக்கு ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் தலை: "பேஸ்புக்' தகவலால் பெரும் பரபரப்பு.

 பதிவுலகிலும்,பேஸ்புக் பக்கத்திலும் அம்மாவை விமர்சிப்பதைக் காட்டிலும் அய்யாவை  விமர்சிப்பவர்கள் அதிகம். (அது என்ன மாயமோ , பயமோ தெரியவில்லை  அம்மாவை விமர்சனம் செய்தின் காரணம்.)

நான் படித்த செய்தி இதோ .



தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, ஆஸ்திரியா நாட்டில் வெளியிடப்பட்ட அஞ்சல் தலை, பணம் செலுத்தி, கோரிக்கையின் பேரில் பெறப்பட்ட அஞ்சல் தலை என, "பேஸ்புக்' பதிவர்கள் அம்பலப்படுத்தி உள்ளனர். இதனால், "பேஸ்புக்'கில் தி.மு.க.,வினர் கடுமையான கேலிக்கு உள்ளாகி வருகின்றனர்.

ஆஸ்திரிய நாட்டில் வாழும் தி.மு.க., ஆதரவாளரின் முயற்சியால், அந்நாட்டு தபால் துறை, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் படம் கொண்ட அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. இந்த அஞ்சல் தலை, கருணாநிதியின் படம், வயது மற்றும் தி.மு.க., கொடியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை ஆஸ்திரியாவின் உள்ளூர், வெளிநாட்டு அஞ்சல்களில் பயன்படுத்த முடியும்.

இதுகுறித்து, நேற்று "பேஸ்புக்'கில் கருணாநிதி கூறுகையில், "என்னுடைய தமிழ்ப் பணி - சமுதாயப் பணியை பாராட்டி, ஆஸ்திரிய நாடு கடந்த ஜூன் 3ம் தேதி அன்று வெளியிட்ட, "கலைஞர் 90' என்ற அஞ்சல் தலையை பெற்ற போது' என, புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து, "பேஸ்புக்' பதிவர்கள் "பேஸ்புக்'கில் கூறியிருப்பதாவது:பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியாவில் பணம் செலுத்தினால் யாருடைய அஞ்சல் தலையையும் வெளியிட முடியும். குழந்தைகளின் படத்தை கூட, அஞ்சல் தலையில் வெளிடலாம். நம் நாட்டிலும் கடந்த மே மாதம் முதல், இந்த வசதி துவக்கப்பட்டுள்ளது.சென்னை தபால் நிலையத்தில், 300 ரூபாய் செலுத்தினால், அரசியல் மற்றும் மதம் சாராத யாருடைய, தபால் தலையையும் வெளியிட முடியும். அப்படியிருக்க, ஏதோ கருணாநிதியின் சமுதாய சேவையை பாராட்டி ஆஸ்திரிய அரசே, அஞ்சல் தலை வெளியிட்டதாக, தி.மு.க.,வினரே சொல்லி கொள்கின்றனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒருவர் ஆஸ்திரிய நாட்டில், தபால் தலை வெளியிட விரும்புவோர், http://www.post.at/en/personal_stamps_philately_products_meine_marke_personalized_stamps.php என்ற இணைய தளத்தை பார்வையிடலாம் என, கூறியுள்ளார்."பேஸ்புக்'கில் கருணாநிதி குறித்த விமர்சனங்கள் குறைந்திருந்த நிலையில், அஞ்சல் தலை விவகாரத்தால், மீண்டும் "பேஸ்புக்' பதிவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


விஷயம் அறிந்தவர்கள் தெளிவுப் படித்தினால் நல்லது .


மீண்டும்  சிந்திப்போம்  
அவனி சிவா ,
Click Here

Saturday 20 July 2013

பாரதரத்னா யாருக்கு - ஹாக்கி ( தயான் ) அல்லது கிரிக்கெட் ( சச்சின் )

வணக்கம் 


இந்தியாவின் முதன்மையான விருதான ' பாரத ரத்னா " விருது , இது நாள் வரை கலை,இலக்கியம்,அரசியல்,அறிவியல் ,சமூகம் போன்ற பிரிவுகளில் உள்ளவர்களுக்கே அளிக்கப்பட்டு உள்ளன.

இந்த ஆண்டு புகழ் பெற்ற ஹாக்கி வீரர் தியான் சந்த மற்றும் சச்சின் பெயரை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை கடிதம் மூலம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, விளையாட்டுத் துறை அமைச்சகம் அனுப்பி வைத்து இருப்பதாக   செய்தி.







   இருவரில் ஒருவருக்குத் தான் என்பது உறுதியான நிலையில் , முதன் முதலில் பாரத ரத்னா விருது பெரும் விளையாட்டு வீரர் என்கிற புகழும் கிடைக்கும்.

சச்சினின் சாதனை நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு .( பெரும்பாலான பொது மக்களுக்கும் ) அதே வேளையில் தயான் சந்த் நிகழ்த்திய சாதனைகளை பார்க்கும் போது அவருக்கு கிடைக்கும் பட்சத்தில் அது சச்சினுக்கும் , கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெருமையாய் தான் இருக்கும் என எண்ணுகிறேன்.

அவரின் மிகப் பெரிய சாதனைகள்

1928,1932,1936 ஆகிய ஆண்டுகளில் இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றது .மூன்று போட்டிகளிலும் பதக்கம் வெல்ல காரணமாய் இருந்தவர்.

அவரைப்பற்றி தினமலர் - வாரமலரில் வந்திருந்த செய்தி



நாம், ஒரு காலத்தில் ஹாக்கி விளையாட்டில், நிகரற்றவர்களாகத் திகழ்ந்தோம். இந்திய ஹாக்கி அணியை, மைதானத்தில் பார்த்தவுடனேயே மற்ற நாட்டு அணியினரின் ரத்த அழுத்தம் உச்சத்தை தொடும். இந்திய அணிவீரர், மேஜர் தயான் சந்தை, "ஹாக்கி மகராஜ்' என்பர். எதிர் அணிக்குள் அவர் பந்தை எடுத்துச் செல்லும் அழகே தனி. அவர் விளையாட்டை ரசித்தவர்கள் கதை கதையாய் சொல்வர். "தயான்சந்த், ஹாக்கி மட்டையின் முனையில் பசை தடவி வைத்துள்ளார். அதனால் தான், பந்து அவர் ஹாக்கி மட்டையில் நழுவாமல் இருக்கிறது...' என்பர் சிலர். "தயான்சந்த்திற்கு மந்திரம் தெரியும். அதனால் தான், அவர் ஹாக்கி மட்டையை மந்திரக் கோலாக மாற்றி விட்டார். மந்திரவாதியை எப்படி எதிர்க்க முடியும்...' என்றும் சொல்வர்.
ஹாலந்து நாட்டில், அவர் ஹாக்கி விளையாடும் லாவகத்தை பார்த்தவர்கள், அவர் மட்டைக்குள் ஏதோ விசை உள்ளது என்று கருதி, அவர் மட்டையை உடைத்துப் பார்த்து ஏமாற்றமடைந்தனர்.

ஒரு நாட்டில் விளையாடும் போது, ஒரு வயதான கிழவி, முனை வளைந்த தன் கைத்தடியை கொடுத்து, "எங்கே, இதை வைத்து விளையாடு பார்ப்போம்...' என்றாளாம். அந்தக் கைத்தடியை வைத்து விளையாடி, பல கோல்கள் அடித்தார் தயான்சந்த் .

ஜெர்மனியிலுள்ள, பெர்லின் நகரில் 1936ல், ஒலிம்பிக் போட்டி நடந்தது. இதில், நம் இந்திய ஹாக்கி அணியும் கலந்து கொண்டது. தயான்சந்தின் விளையாட்டை, ஜெர்மன் நாளிதழ்கள் புகழ்ந்து எழுதின. "இந்தியாவிலிருந்து வந்திருக்கும் ஹாக்கி மந்திரவாதி' என்று, தலையங்கம் தீட்டின. தினமும், தயான்சந்த் பற்றிய செய்திகளை வாசித்த சர்வாதிகாரி ஹிட்லருக்கு ஒரே ஆச்சரியம். "உலகிலேயே, உயர்ந்த இனத்தவரான நம் ஜெர்மானிய வீரர்களை விட, இந்தியன் எப்படி சிறப்பாக விளையாட முடியும்...' என்று சந்தேகப்பட்ட ஹிட்லர், ஜெர்மனியும், இந்தியாவும் மோதும் இறுதிப் போட்டியை காண நேரில் வந்து விட்டார்.

இறுதிப் போட்டி ஆரம்பமாகியது. தயான்சந்தின் வேகத்திற்கு முன்னால் ஜெர்மானிய வீரர்கள் திணறினர். தயான்சந்த் பந்தை எடுத்தா‌லே, அது கோலாக மாறியது. மளமளவென்று தயான்சந்த் ஆறு கோல்கள் அடித்தார். மற்ற நம் வீரர்கள், இரண்டு கோல்கள் அடித்தனர். ஜெர்மனி திக்கித் திணறி, ஒரே ஒரு கோல் போட்டு, தோல்வியைத் தழுவியது.

ஹிட்லர் அப்படியே திகைத்துப் போய் விட்டார். அவர் கண்கள் தயான்சந்தை வெறித்து நோக்கின. அவரின், குறுகிய புத்தி வேலை செய்ய ஆரம்பித்தது. மறுநாள், தயான்சந்தை விருந்துக்கு அழைத்தார் ஹிட்லர். விருந்து முடிந்ததும், ஆசை வார்த்தைகளை அள்ளி விட்டார். "மிஸ்டர். தயான்சந்த், உங்கள் நாட்டில் என்ன இருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடக்கிறீர்கள். நான், உமக்கு ஜெர்மானியக் குடியுரிமை தருகிறேன்; எல்லா வசதிகளும் செய்து தருகிறேன்; ஏன், எங்கள் ராணுவத்தில் மிகப் பெரிய அதிகாரியாக்கி விடுகிறேன்; நிறைய சம்பளம்; நீர் ஒன்றே ஒன்று செய்தால் போதும். எங்கள் ஜெர்மனி அணிக்காக, ஹாக்கி விளையாட வேண்டும்...' என்றார். தயான்சந்த் பணிவுடன், "உங்கள் அழைப்பிற்கு நன்றி. ஒரு விளையாட்டு வீரன், அவன் பிறந்த நாட்டிற்காகத் தான் விளையாட வேண்டும். அது தான் நியதி. பணம், பதவிக்காக தாய்நாட்டை மறப்பது பாவம்...' என்று சொல்லி, விடைபெற்றார்.

"இப்படியும், ஒரு விளையாட்டு வீரனா!' என்று, ஹிட்லர் ஆச்சரியப்பட்டு போனார்.

மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா



வாலியின் 82 நினைவலைகள்



வணக்கம்


வாலியை பற்றி வலைபக்கத்திலும் , முகப்புத்தகத்திலும் , பத்திரிகையிலும்  வெளிவந்த தகவல்களை திரட்டி ஒரு பதிவு போட எண்ணியுருந்தேன்.பலரின் கருத்துகளை திரட்ட நேற்று இரவு வரை முயற்சித்து முடியாமால் போனது.ஆனாலும் மனம் கேட்க்க வில்லை .எப்படியாவது ஒரு பதிவை போட்டே விடுவது என்கிற நிலையில்,webduniya இணைய தளம் அவருடைய 82 நினைவலைகளை பதிவு செய்திருந்தது.அதனையே பதிவாக தருகிறேன் .

நன்றி - webduniya / தமிழ்







http://tamil.webdunia.com/entertainment/film/memorable/1307/19/1130719026_6.htm


1. பாடல் எழுதுவதற்கு சிலர் மூட் வேணும் என்பார்கள். வாலிக்கு அப்படியில்லை, எந்த சூழலிலும் எழுதுவார். பாடல் வ‌ரி எழுத வரலைன்னாதான் மூட் ச‌ரியில்லைன்னு வேடிக்கையாகச் சொல்வார்.

2. புதிய இசையமைப்பாளர் என்றால், நாலஞ்சு படம் பண்ணுங்க, அப்புறம் பார்த்துட்டு உங்க இசையில எழுதறேன் என்று திருப்பி அனுப்பி விடுவார். ஜென்டில்மேனுக்காக ரஹ்மானிடமும் அதேதான் சொன்னார். நான் சேகரோட மகன் என்று ரஹ்மான் சொன்னதும் ஆச்ச‌ரியப்பட்டு பாடல் எழுத சம்மதித்தார். அந்தப் பாடல்தான் ஜென்டில்மேனில் வரும் சிக்கு புக்கு ரயிலே.

3. இளம் கவிஞர்களின் பாடல் வ‌ரிகள் சிறப்பாக இருந்தால் பாராட்ட தயங்க மாட்டார். ந.முத்துக்குமார் சிவா மனசுல சக்தி படத்தில் எழுதிய, ஒரு கல் ஒரு கண்ணாடி பாடலை கேட்டு, எம்‌ஜிஆர் இருந்திருந்தால் இந்த பல்லவிக்கே ஒரு வீடு ப‌ரிசளித்திருப்பார் என பாராட்டியிருக்கிறார்.

4. வாலி எழுதிய சில பாடல்கள் பயங்கர எதிர்ப்பை சந்தித்தன. முக்கியமாக சகலகலாவல்லவனில் வரும் நேத்து ராத்தி‌ரி யம்மா, இந்துவில் வரும் சக்கரவள்ளி கிழங்கே சமைஞ்சது எப்படி. மிகப்பpய வார்த்தை தாக்குதல்களை சமைஞ்சது பாடலுக்காக வாலி எதிர்கொண்டார்.

5. வாலியும், நாகேஷும் வாடா போடா நண்பர்கள். வாய்ப்பு தேடிய காலத்தில் தி.நகர் காபி ஹவுஸில் இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்தனர். வாலிக்கு பேப்பர் வாங்கித் தந்து, எதையாவது எழுது என ஊக்கப்படுத்தியவர் நாகேஷ்.

6. இளையராஜா இசையில் வாலி முதலில் எழுதிய பாடல், பத்ரகாளி படத்தில் இடம்பெற்ற, வாங்கோண்ணா...

7. திருச்சி ஆல் இந்தியா ரேடியாவில் வாலி வேலை பார்த்த போது அவர் எழுதிய நாடகங்களுக்கு மனோரமா நடித்திருக்கிறார்.

8. வாலியின் தந்தை ஸ்ரீனிவாச அய்யங்கார், தாய் பொன்னம்மாள். வாலிக்கு ஒரு மூத்த சகோதரர், மூன்று மூத்த சகோத‌ரிகள்.

9. உழைப்பில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர். விடா முயற்சியும், உழைப்புமே தன்னை இப்படியொரு உயர்ந்த நிலையில் வைத்திருக்கிறது என்று அடிக்கடி சொல்வார். என்றாவது ஒருநாள் உங்கள் வியர்வை உங்கள் உயர்வை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் என்பார் வாலி.

10. சின்ன வயசிலேயே எழுத்தும், கவிதையும், ஓவியமும் வாலியை ஆக்கிரமித்துவிட்டன. ஸ்ரீரங்கத்தில் இருந்த போது நோதா‌ஜி என்ற கையெழுத்துப் பத்தி‌ரிகையை நடத்தினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் பிரபல எழுத்தாளர் கல்கி.

11. சிலேடைப் பேச்சில் வித்தகர். பாய்ஸ் படத்துக்காக பொருள் இல்லாமல் ஒரு பாடல் (டேட்டிங் பாடல்) வேண்டும் என வாலியிடம் இயக்குனர் ஷங்கர் கேட்ட போது வாலியின் பதில், பொருள் இல்லாமல் நான் பாடல் எழுதறதில்லை (அந்தப் பாடலுக்கு மட்டும் ஒரு லட்சம் பெற்றதாக கேள்வி).

12. வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். அவரை அவரது தயார் ரங்கப்பா என்றுதான் அழைப்பார்.

13. கண்ணதாசன் மீது அதிக ம‌ரியாதை கொண்டவர். அவர் இறந்த போது, எழுதப் படிக்கத் தெ‌ரியாதவர்களில் எமனும் ஒருவன். அழகிய கவிதைப் புத்தகத்தை கிழித்துவிட்டான் என்று எழுதினார்.

14. சென்னைக்கு பாடல் எழுதுவதற்காக முதலில் வந்த போது வாலி திருவல்லிக்கேணியில் உள்ள சுந்தர மூர்த்தி விநாயகர் தெருவில் நண்பர்களுடன் தங்கியிருந்தார். வாடகை மாதம் ஐந்து ரூபாய்.


15. நன்றி மறக்காதவர். எம்.எஸ்.விஸ்வநாதனை சந்தித்தப் பிறகுதான் தனக்கு இந்த வாழ்வு கிடைத்தது என்பதை எல்லா மேடைகளிலும் சொல்வார். எம்எஸ்வியை சந்திக்கும் முன்பு எனக்கு சோத்துக்கே வழியில்லை, அவரை சந்தித்த பிறகு சோறு திங்கவே நேரமில்லை என்றும், எம்எஸ்வியை சந்திப்பதற்கு முன் த‌ரித்திரம் என்னை தொட்டது, அவரை சந்தித்த பிறகு ச‌ரித்திரம் தொட்டது எனவும் கூறுவார்.

16. சக கலைஞர்களைப் பாராட்டி திடீர் கவிதை புனைவார். கவிஞர் முத்துலிங்கத்தை பற்றியும் எழுதியிருக்கிறார். பாடகி பி.சுசீலாவை குறித்து அவர் எழுதியது,

சுசீலாவே - நீ
விளைந்த இடம் விஜயவாடா
கடவுள் கலந்து வைத்தான்
நீ விளையும் போதே
குரல்வளையில் விஸ்கி, சோடா.

17. கண்ணதாசனுடன் எம்.‌ஜி.ஆருக்கு சிறிய மனக்கசப்பு ஏற்பட்டிருந்த நேரத்தில்தான் வாலி படகோட்டி படத்தின், கொடுத்ததெல்லாம் கொடுத்தான் பாடலை எழுதினார். அதனை கேட்ட எம்.‌ஜி.ஆர் அன்றிரவு நடந்த பொதுக் கூட்டத்தில் என்னுடைய படங்களின் பாடல்களை இனி வாலி எழுதுவார் என அறிவித்தார்.

18. ஏவிஎம் முக்காக வாலி எழுதிய முதல் பாடல், அவளுக்கென்ன அழகிய முகம்... சர்வர் சுந்தரம் படத்தில் இடம் பெறுவது. இரவு நேரம் தான் போதையில் இருந்த போது மெய்யப்ப செட்டியார் ஆள்விட்டு அழைத்து அந்தப் பாடலை எழுதி வாங்கியதாக வாலி தெ‌ரிவித்திருக்கிறார்.

19. வாலி கேமராமேன் மாருதிராவுடன் இணைந்து வடைமாலை என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

20. வாலிக்கு சென்டிமெண்டில் நம்பிக்கை உண்டு. ம வ‌ரிசையில் அவர் எழுதியப் பாடல்கள் வெற்றி பெற்றதை ரஹ்மான் சுட்டிக்காட்டிய பிறகு ம வ‌ரிசையில் பல பாடல்களை எழுதினார். அழகிய தமிழ்மகனில் வரும் முன்னால் முன்னால் வாடா... சில்லுன்னு ஒரு காதல் படத்தில் வரும் முன்பே வா அன்பே வா... ஆகியவை அப்படி எழுதியவை.

21. கருணாநிதியின் எங்கள் தங்கம் படத்தில் வரு‌ம் நாள் அளவோடு ரசிப்பவன் பாடல் வாலி எழுதியது. இரண்டாவது வ‌ரிக்காக அவர் யோசனையில் இருந்த போது, எதையும் அளவின்றி கொடுப்பவன் என இரண்டாவது வ‌ரியை சொன்னவர் கருணாநிதி.

22. வாலியின் மனைவி ரமண திலகம். தனது லவ் லட்டர் நாடகத்தில் கதாநாயகியாக நடிக்க வந்த அவரை யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்தார் வாலி.

23. வாலி பார்த்தாரே பரவசம், ஹேராம் உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். முதல் படம், பாலசந்த‌ரின் பொய்க்கால் குதிரை.

24. எம்.‌ஜி.ஆர். நெருக்கமானவர்களை அன்பு மிகுதியில் ஆண்டவனே என விளிப்பார். அப்படி விளிக்கப்பட்டவர்களில் வாலியும் ஒருவர்.

25. பாடல் எழுதி வாங்க வாலியின் வீட்டிற்கு எம்.எஸ்.வி. தொடங்கி ரஹ்மான்வரை அனேகமாக தமிழின் இன்றைய இசையமைப்பாளர்கள் அனைவரும் வந்திருக்கிறார்கள். இது வாலிக்கு மட்டுமே உள்ள சிறப்பு.

24. கோபக்காரர். வாலின்னாலே கோபம்தான் ஞாபகம் வரும் என்று கமல் ஒருமுறை கூறினார். இதையே ர‌ஜினியும் கூறியிருக்கிறார்.

25. சக கவிஞர்களை மதிப்பதில் வாலிக்கு நிகர் வாலிதான். அதேநேரம் சிறந்த பாடல்களை கேட்டால் எப்படி நாம் அதனை தவறவிட்டோம் என நினைக்கக் கூடியவர். கவிஞர் தாமரையின் ஒரு பாடலை கேட்டு இரவு தhங்க முடியலை என்று கூறியிருக்கிறார்.

26. பாடல் எழுதும் வாய்ப்பு வாலிக்கு சும்மா கிடைத்துவிடவில்லை. கே.வி.மகாதேவன் பாடல் வாய்ப்பு கேட்டுப் போன வாலியை அவர் காது படவே திட்டி அனுப்பியிருக்கிறார். எம்.எஸ்.வி.யும் வாலிக்கு சினிமாவுக்கு பாடல் எழுத வராது, பேசாமல் வானொலி வேலையை பார்க்கச் சொல் என்று வாலியின் நண்ப‌ரிடம், வாலி விஸ்வநதனை சந்திக்கச் சென்ற போது கூறியிருக்கிறார்.

27. எம்.‌ஜி.ஆருடன் வாலிக்கு 25 வருடகால நீண்ட நெருக்கமான பழக்கம் உண்டு. எம்.‌ஜி.ஆரை அண்ணா என்றுதான் அழைப்பார்.

28. வாலிக்கு நெடுங்காலமாக மது அருந்தும் பழக்கம் உண்டு. பேச்சிலராக இருந்த போது அவரது மாலைப்பொழுது ஸ்காட்ச் விஸ்கியுடன்தான் தொடங்கும்.

29. ரோஷக்காரர். பாரதவிலாஸ் படத்தில் வாலி எழுதிய இந்தியா என்பது என் வீடு பாடலுக்கு தேசிய விருது தருவதற்காக வாலியிடம் அவரது பயோடேட்டாவை கேட்டனர். வாலி தரவில்லை. அந்தப் பாட்டுக்கு தேசிய விருதுக்கான தகுதியிருந்தா யாரு எழுதினது என்று பார்க்காமல் விருது தரணும், எங்கிட்டயே நான் யார்னு கேட்டு தர்றதுக்கு எந்த விருதாக இருந்தாலும் வேண்டாம் என்று தேசிய விருதையே மறுத்தார்.

30. ஈகோ இல்லாமல் எதையும் முன் வைப்பவர். வாலி அவதார புருஷன் எழுதுவதற்கான தhண்டுதல்களில் ஒன்று, மு.மேத்தாவின் நபிகள் காவியம். ஒரு இந்து விளக்கை ஒரு இஸhமிய விளக்குதான் ஏற்றி வைத்தது என அதனை குறிப்பிட்டார்.

31. வாலியையும் வார்த்தையையும் பி‌ரிக்க முடியாதது போல அவருடன் இருந்த இன்னொரு பழக்கம் தாம்பூலம் போடுவது. ஐம்பது வருடங்களுக்கு மேல் தாம்பூலம் போட்டு வந்தார் வாலி. வார்த்தைகள் ச‌ரியாக அமையாத போது கவிஞரே தாம்பூலம் போடுங்க என்று நெருக்கமானவர்கள் சொல்வதுண்டு. தாம்பூலம் போட்டால் வாலி புத்துணர்ச்சியடைவார்.

32. பாடல் வ‌ரிகளில் சம்பந்தப்பட்டவர்களை இணைத்து விடுவதில் வாலி கில்லாடி. இளையராஜாவின் தாய் பெயர் சின்னதாய். தளபதியில் ஸ்ரீவித்யா சின்ன வயசிலேயே ர‌ஜினியை பெற்றெடுப்பார். அதனை பயன்படுத்தி சின்னதாய் அவள் என்று பாட்டு எழுதியிருப்பார்.
 33. வாலியை நாடகத்தின்பால் திருப்பியது, கருணாநிதியின் மருதநாட்டு இளவரசி படத்தின் வசனங்கள். அதன் பிறகே நாடகம் எழுதுவதில் வாலி ஆர்வம் காட்டினார்.

34. பு‌ரியாத வார்த்தைகளில் பாடல் புனைவதில் முன்னோடி. மாருகோ.. மாருகோ..., முக்காலா முக்காபுலா, டாலாக்கு டோல் டப்பிமா... சில உதாரணங்கள்.

35. தனித்தமிழை பயன்படுத்தாததற்கு வாலி வருத்தப்பட்டதில்லை. மாறாக அது ச‌ரிதான் என வாதிட்டிருக்கிறார். யானையை நால்வாய் என்றும், மானை புல்வாய் என்றும் சொன்னால் யாருக்கு தெ‌ரியும், மக்களை சென்றடைய வேண்டும் என்பதே பிரதானம் என்பார்.

36. எம்.‌ஜி.ஆருடன் நெருக்கமான நட்பை பேணி வந்தவராக இருந்தும், எம்.‌ஜி.ஆர், சிவா‌ஜி யார் நடித்தாலும் எம்.ஆர்.ராதா படத்தில் இருந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் அப்போது இருந்தது என்று உண்மையை வெளிப்படையாக கூறியவர் வாலி. இதற்காக எம்.‌ஜி.ஆர். ரசிகர்களின் கடும் கண்டனத்துக்கு அவர் ஆளாக நேர்ந்தது.

37. ஒரு இசையமைப்பாளர் வேண்டம் என்று திருப்பி அனுப்பிய பாடல்கள் வேறhரு இசையமைப்பாள‌ரின் இசையில் வெளிவந்து பpய ஹிட்டான ச‌ரித்திரம் வாலிக்கு உண்டு. வாலியின் எவர்கி‌ரின், கொடுத்ததெல்லாம் கொடுத்தான் யாருக்காக கொடுத்தான்… இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசனால் நிராக‌ரிக்கப்பட்டதுதான்
 38. வாலி மொத்தம் 17 படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். அதில் பாக்யரா‌ஜின் சாட்டை இல்லாத பம்பரம் படமும் ஒன்று.

39. வார்த்தை விளையாட்டில் வல்லவர். சட்டென்று வார்த்தையால் அடிக்கிற திறமை அவரைப் போல் சில‌ரிடம்தான் உள்ளது. மூப்பனாரை பற்றி பேசும் போது மூப்பனார் என் தோப்பனார் என்றார். அதேபோல் கற்பில் மேலானவர் மாதவியா கண்ணகியா என்று பட்டிமன்றம். நீர் யாரை சொல்றீர் என்று கண்ணதாசன் வாலியை கேட்க, வாலியின் பதில். இரண்டு பேருமே மேலானவர் இல்லை, இரண்டு பேருமே ஃபீமேல்.

40. நான் ஆணையிட்டால் பாடலை நான் அரசன் என்றால் என் ஆட்சி என்றால் என்றுதான் வாலி முதலில் எழுதியிருந்தாராம். ரொம்ப அதிகமாக இருக்கிறது என்று எம்.‌ஜி.ஆர். சொன்னதால் நான் ஆணையிட்டால் என்று மாற்றி எழுதினார்.

41. பாடல் எழுத கண்ணதாசன் முதற்கொண்டு பலரும் அசிஸ்டெண்டுகள் வைத்திருந்தனர். படி எடுப்பதற்கு அவர்கள் உதவுவார்கள். வாலி கடைசி காலம்வரை அசிஸ்டெண்டுகள் வைத்துக் கொண்டதில்லை. தனது வ‌ரியை தானே தன் கைப்பட எழுதுவார். கணினியும் உபயோகிப்பதில்லை.

42. நியூ படத்தில் வரும் சக்கரை இனிக்கிற சக்கரை பாடலின் சிச்சுவேஷனை எஸ்.ஜே.சூர்யா போனில் சொல்ல, சக்கர இனிக்கிற சக்கர... அதில் எறும்புக்கு என்ன அக்கறை.. நான் இக்கரை... நீ அக்கரை... என்று போனிலேயே வ‌ரிகள் சொல்லியிருக்கிறார். 
  43. பல நூறு படங்களுக்கு வசனம் எழுதியிருக்கும் ஆரூர்தாஸ் வாலியை, தென்றலே என்றுதான் விளிப்பார். விருதுகளுக்கெல்லாம் மேலானது என்பார் வாலி.

44. எதிர்நீச்சல் படத்தை நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் பார்த்த அண்ணா, அதில் வரும் வெற்றி வேண்டுமா போட்டுப்பாராடா எதிர்நீச்சல் பாடலை எழுதியது யார் என பாலசந்த‌ரிடம் கேட்டுத் தெ‌ரிந்து, ரொம்ப பிரமாதமாக இருக்கு என வாலியிடம் சொல்லச் சொல்லியிருக்கிறார்.

45. வாலி படிப்பாளி. பரந்த படிப்பில்தான் அறிவு வளரும் என்பதில் நம்பிக்கை உள்ளவர். நவீன இலக்கியத்தையும் விடுவதில்லை. சாரு நிவேதிதா, குட்டி ரேவதி போன்றவர்களின் ஆக்கங்களை சமீபத்தில் படித்ததாக அவரே குறிப்பிட்டுள்ளார். பிடித்த எழுத்தாளர் காண்டேகர். ஜெயகாந்தனையும் பிடிக்கும்.

46. சிவா‌ஜி கணேசன் வாலியை வாத்தியார் என்று அழைப்பதுண்டு. நாடகத்தில் வசனம் எழுதுகிறவர்களை அப்போது வாத்தியார் என்று அழைக்கும் மரபு இருந்தது.

47. ஆன்மீகவாதி ஆனால் ஆடம்பரவாதியல்ல. வாலியின் திருமணம் 1985 ஏப்ரல் 7 ஆம் தேதி அழைப்பிதழ், போட்டோ எதுவுமில்லாமல்தான் நடந்தது. அதிலும் அன்றைக்கு அவர் கவிஞராக உச்சத்தில் இருந்தார்.

48. ஏவி மெய்யப்ப செட்டியார் சொன்னதன் பpல் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரத்துக்கு முதல் பாட்டெழுதினார் வாலி. அப்போதும் சம்பளம் குறைவாக இருக்க தனக்கான நியாயமான ஊதியத்தை கேட்டு பெற்றுக் கொண்டார்.

49. பாடல் எழுத வாய்ப்புக் கிடைக்காமல் மதுரைக்கு டிவிஎஸ் சில் ஏதாவது வேலை பார்க்கலாம் என வாலி கிளம்ப தயாரான போது பி.பி.ஸ்ரீனிவாஸ் வாலியை பார்க்க வர, இன்னைக்கு என்ன பாடல் பாடினீங்க என்று வாலி அவ‌ரிடம் கேட்டிருக்கிறார். பி.பி.ஸ்ரீனிவாஸ் அன்று பாடியது, கண்ணதாசனின் மயக்கமா கலக்கமா வாழ்விலே குழப்பமா.. பாடல். அதைக் கேட்ட வாலி அந்த நிமிடமே உற்சாகமும் தன்னம்பிக்கையும் பெற்று ஊருக்குப் போகும் முடிவை ரத்து செய்தார்.

50. அதேபோல் அவரை பாடல் எழுத சென்னைக்கு வரவழைத்ததும் பாசவலை படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல்தான். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதியது.

குட்டி ஆடு தப்பி வந்தா
குள்ள ந‌ரிக்குச் சொந்தம்
குள்ள ந‌ரி தப்பி வந்தா
குறவனுக்குச் சொந்தம்
தட்டுக் கெட்ட மனிதர் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படிப் பார்க்கப் போனா
எட்டடிதான் சொந்தம்.

51. மது, தாம்பூல பழக்கத்தை பலர் சொல்லியும் வாலி விடவில்லை. எந்த கெட்டப்பழக்கமும் இல்லாத அவரது தந்தை திடீரென அகாலமடைந்ததால் ஏற்பட்ட விரக்தியும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் வாலிக்கு நெருக்கமானவர்கள்.

52. வாலியை அவரது தந்தை ஒவியம் கற்க அனுமதிக்கவில்லை. ஒருமுறை அவர்களின் வீட்டிற்கு வந்த தங்கம்மாள் என்ற அம்மையார் வாலி வரைந்திருந்த ஒரு படத்தைப் பார்த்து, என் தந்தையை அப்படியே இதில் பார்க்கிறேன் என்று அழுதார். அந்தப் படம் மகாகவி பாரதி. அழுதவர் பாரதியின் மகன் தங்கம்மாள் பாரதி. சென்னை ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் வாலியை அதன் பிறகு அவரது தந்தையே சேர்த்துவிட்டார்.

53. ஒருமுறைக்கு பலமுறை திருத்தி எழுதச் சொன்னால் வாலிக்கு கோபம் வரும். கமல்hசன் ஒருமுறை, இந்த ஃபீலிங் போதாது என்று கேட்க நாலுமுறை மாற்றி எழுதினார். கடைசியில் இதுக்கு மேல என்னால ஃபீல் பண்ண முடியாது என்று ரைட்டிங் பேடை தhக்கி எறிந்தார். பிறகு அவர் கடைசியாக எழுதியதே படத்தில் இடம்பெற்றது. அந்தப் பாடல்தான் அபூர்வசகோதரர்களில் வரும், உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே.

54. வாலி வெளிநாடு சென்றதில்லை. அதனால் அவரை பாஸ்போர்ட் இல்லா கவிஞன் என்பார்கள். நான் வெளிநாடுகள் போனதில்லையே தவிர பல வெளிநாடுகள் எனக்குள் போயிருக்கின்றன என தான் வெளிநாட்டு மதுபானம் அருந்துவதை சிலேடையாக சொல்லிக் காட்டுவார்.

55. முருக மற்றும் அம்மன் பக்தர். முருகனை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பாட்டில் இழுத்துவிடுவார். உதாரணம்,
வெள்ளிக்கிழமை விடியும் நேரம் வாசலில் கோலமிட்டேன்,
வள்ளிக்கணவன் பேரைச் சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்.

56. மனைவி ரமண திலகத்தின் மரணம் வாலியை கடுமையாக பாதித்தது. அவ‌ரின் மறைவுக்குப் பின் இப்படி எழுதினார்.
நீ என்னை வெளியே சுமந்த
கருப்பை. 
 57. வாலி சிலரைப் போல் வதவதவென்று ஒரு பாடலுக்கு பல்லவியும் சரணமும் எழுதுவதில்லை. யாராக இருந்தாலும் நான்கு பல்லவி, நான்கு சரணங்கள். அதிலேயே இயக்குனரும் இசையமைப்பாளர்களும் திருப்திப்பட்டுக் கொள்வார்கள்.

58. கவிஞன் வறுமையில் வாட வேண்டும் என்பதில் உடன்பாடு இல்லாதவர். 1964 முதல் வருமான வ‌ரி கட்டி வந்தார்.

59. எம்.எஸ்.வி.யும், வாலியும் இசையமைப்பாளர், பாலாசி‌ரியருக்கு மேலாக நட்பு வளர்த்துக் கொண்டவர்கள். கலங்கரை விளக்கம் கம்போஸிங். என்னை அசத்துற மாதி‌ரி பல்லவி எழுதினால் இதெல்லாம் உனக்குதான் என்று தனது கழுத்து சங்கிலியையும், ரோலக்ஸ் வாட்சையும் கழற்றி ஆர்மோனியத்தின் மீது வைத்தார் எம்.எஸ்.வி. வாலி பல்லவி சொன்னார். சங்கிலியும், வாட்சும் வாலிக்கு கிடைத்தது. அந்தப் பல்லவிதான், காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்.

60. வாலியிடம் அசிஸ்டெண்டாக சேர மூன்று பேர் முயன்றனர். ஒருவர் கிராமத்தைச் சேர்ந்தவர், இன்னொருவர் மெடிகல் hப் வைத்திருந்தவர். மூன்றாவது ஆள் நாடகம் எழுதுகிறவர். அவர்கள்தான் பிற்காலத்தில் பிரபலமான கங்கை அமரன், ராம.நாராயணன், ஆர்.சி.சக்தி

61. பாடல் எழுத தேவையான நேரம் எடுத்துக் கொள்வார். அரை மணியிலும் பாடல் தயாராகிவிடும். பழசிராஜாவில் இடம்பெறும் பாடல் முஸ்லீம் சம்பந்தப்பட்டது என்பதால் இளையராஜாவிடம் 3 மாதங்கள் காலஅவகாசம் வாங்கியதுதான் அதிகபட்சம்.
 62. எல்லோரையும் புகழ்கிறார் என்றhரு விமர்சனம் வாலி மீது உண்டு. எல்லோரையும் புகழ்றது தப்பில்லையே, தhஷணம் செய்தாதான் தப்பு என்பார்.

63. அவதார புருஷன் வாலியின் மாஸ்டர் பீஸ். அதில் பலராலும் பாராட்டப்பட்ட ஏராளமான வ‌ரிகளில் ஒன்று,

சர்ப்பத்தில் படுத்தவன் - கோசலையின்
கர்ப்பத்தில் படுத்தான்.

64. ஓவியர் வாலியைப் போல் ஓவியத்தில் சிறந்தவனாக வேண்டும் என்று ரங்கராஜன் என்ற பெயரை வாலியாக மாற்றிக் கொண்டார்.

65. பாடல்கள் எழுதி புகழ் பெற்ற பிறகு வாலிக்கு பாராட்டு கூட்டம் நடந்தது. வெறும் பாடலாசி‌ரியராக இருந்தால் போதாது என்று அவர் எழுதி வெளியிட்டதுதான் அவரது முதல் புத்தகமான அம்மா.

64. ஷங்கர் அமpக்கா செல்ல விசா அதிகா‌ரியை சந்தித்த போது, தமிழரான ஒரு அதிகா‌ரி இவர்தான் ஜென்டில்மேன், காதலன் படங்களின் இயக்குனர் என்று அறிமுகப்படுத்தினார். விசா வழங்கும் அதிகா‌ரி கண்டு கொள்ளவில்லை. நீங்க விரும்பி கேட்கும் முக்காலா முக்காபுலா பாடலை இயக்கியது இவர்தான் என்றதும் ஆச்ச‌ரியப்பட்ட அதிகா‌ரி உடனே விசா தந்திருக்கிறார். இது ஷங்கரே சொன்னது.


65. கும்பகோணம் தீ விபத்தில் பள்ளிக்குழந்தைகள் தீயில் கருகி மடிந்த போது
வாலி இப்படி எழுதினார்.
நிறைய கோயில்கள் கொண்ட ஊராமே
குடந்தை - அப்படியானால் இந்த அக்கிரமத்துக்கு
அத்துணை தெய்வங்களுமா
உடந்தை.

இதைப் படித்து, ஒரு நாத்திகனால் யோசிக்க முடியாததை எழுதிட்டீங்களே என்று போனில் வைரமுத்து வாலியை பாராட்டினார்.

66. ஸ்ரீரங்கத்தில் வாலி போட்ட முதல் நாடகம் தளபதி. துணைப்பாடத்தில் இடம்பெற்றிருந்த கிங்லியர் கதையை தழுவி இந்த நாடகத்தை வாலி எழுதியிருந்தார்.

67. நவீன பெண் கவிஞர்கள் உடலைக் கொண்டாடுதல் என்று உடல் உறுப்புகளின் பெயர்களை கவிதையில் எழுதுவதை பலர் எதிர்த்தனர். வாலியிடம் அது குறித்து கருத்து கேட்டபோது, ஆணுக்குள்ள எல்லா சுதந்திரமும் பெண்ணுக்கும் உண்டு. ஆண்டாள் எழுதாததா என்று ஒரே வார்த்தையில் எதிர்ப்பாளர்களை நிராக‌ரித்தார்.

68. உங்க பாடல் ச‌ரியில்லை என்று சொன்னால் வாலிக்கு கோபம் வரும். எம்.‌ஜி.ஆ‌ரிடம்கூட, உங்களுக்கு பு‌ரியலைன்னு சொல்லுங்க, ச‌ரியில்லைன்னு சொல்லாதீங்க என்று கோபித்திருக்கிறார்.

69. வாலி எழுதி பத்தி‌ரிகையில் பிரசுரமான முதல் சிறுகதை பிராந்தி. வெளியானது கி.வ.ஜா. வின் கலைமகள்.

70. வாலி சினிமாவுக்கு வருவதற்கு முன் எழுதிய பாடல், கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்... இந்தப் பாடலில் மனதை பறிகொடுத்துதான் வாலியை சினிமாவில் பாட்டெழுத சென்னைக்கு வரச்சொன்னார் டி.எம்.எஸ். பிறகு அந்தப் பாடலுக்கு இசையமைத்து அவரே பாடினார்.

71. வாலி நாடகத்துக்காக எழுதிய பாடல்கள் 1956 ல் புதையல் படத்துக்காக வாங்கப்பட்டது. என்றாலும் அப்பாடல்கள் புரட்சி வீரன் புலித்தேவனில்தான் பயன்படுத்தப்பட்டது.

72. வாலிக்கு பைபாஸ் சர்ஜ‌ரி செய்ய வேண்டும் என்ற போது அதற்கான முழுச் செலவை ஏற்றுக் கொண்டதுன், மருத்துவர்களிடம் தனிப்பட்ட முறையில் வாலியை பத்திரமாக கவனித்துக் கொள்ளச் சொன்னவர் கருணாநிதி. அதனால், எனக்கு மறுபிறவி தந்தவர் என்று கருணாநிதியை வாலி குறிப்பிடுவதுண்டு.

73. 1958 ல் அண்ணா கதைவசனத்தில் பா.நீலகண்டனின் இயக்கத்தில் எம்.‌ஜி.ஆர். நடித்த நல்லவன் வாழ்வான் படத்துக்கு வாலி பாட்டு எழுதினார். எம்.‌ஜி.ஆர். படத்துக்கு பாட்டெழுத வாய்ப்பு தந்ததே பpய விஷயம் என பா.நீலகண்டன் சொன்ன போது, சம்பளம் வேண்டும் என வாலி கேட்டுப் பெற்றது 250 ரூபாய்.

74. படகோட்டி படத்தின் அத்தனை பாடல்களையும் வாலி எழுதினார். கடைசிப் பாடலின் போது அவர் உடம்புக்கு முடியாமல் வீட்டில் இருந்த போது வேறு ஒருவரை வைத்து கடைசிப் பாடலை எடுப்பது என முடிவானது. எம்.எஸ்.வி. க்கு உடன்பாடில்லை. தனது அசிஸ்டெண்ட் மற்றும் ஆர்மோனியப்பெட்டியுடன் வாலியின் வீட்டிற்கே சென்று ட்டியூன் போட்டு பாட்டை எழுதி வாங்கினார்.

75. பாட்டுக்கு மெட்டு, மெட்டுக்குப் பாட்டு இரண்டிலும் வாலி வித்தகர். இளையராஜா முதல் ரஹ்மான்வரை அனைவ‌ரிடமும் இந்த இரண்டு முறையிலும் பாடல் எழுதியிருக்கிறார். சில்லுன்னு ஒரு காதல் படத்தில் வரும் நியூயார்க் நகரம் வாலி எழுதிய பின் ரஹ்மான் மெட்டமைத்தது.

76. 1958 ல் அழகர் மலைக்கள்ளன் படத்தில் எழுதிய, நிலவும் தாமரையும் நீயம்மா, உலகம் ஒருநாள் உனதம்மா பாடல்தான் வாலியின் முதல் திரையிசைப் பாடல்.

77. இரண்டே வ‌ரிகளில் அடிப்பதில் வாலியை அடிக்க ஆளில்லை. கோவலன் கதையை இரண்டே வ‌ரிகளில் சொல்ல முடியுமா என்று கேட்ட போது அவர் சொன்னது.

புகா‌ரில் பிறந்தான்
புகா‌ரில் இறந்தான்

78. எம்.‌ஜி.ஆர். படமென்றால் அரசியலை பாட்டில் நுழைக்காமல் இருக்க மாட்டார். அரசியலே இல்லாத அன்பே அன்பே படத்தில், உலகம் பிறந்தது எனக்காக பாடலில், உதயசூ‌ரியன் உதிக்கையிலே என்று எழுதினார். எதிர்பார்த்தது போல் சென்சா‌ரில் பிரச்சனையாகி புதிய சூ‌ரியன் என மாற்றினர்.

79. பிரபுதேவாவுக்கு டான்சராக புகழ் வாங்கித் தந்த பாடல்கள் அனைத்தையும் வாலியே எழுதினார். பிரபுதேவா முதலில் தனியாக சினிமாவில் நடமாடியது கதி‌ரின் இதயம் திரைப்படத்தில். ஏப்ரல் மாதத்தில் பசுமையே இல்லை என்ற அந்தப் பாடலை எழுதியவர் வாலி. ஜென்டில்மேன் சிக்குபுக்கு ரயிலே, வால்டர் வெற்றிவேல் சின்ன ராசாவே சித்தெறும்பு உன்னை கடிக்குதா... சூ‌ரியன் லாலாக்கு டோல் டப்பிமா.. எல்லோமே வாலி எழுதியவைதான்.

80. பாடலின் டியூன் சிச்சுவேஷனுக்கு அந்நியமாக இருந்தால் இசையமைப்பாளர்களிடம் சுட்டிக்காட்டி மாற்றச் சொல்வார். இளையராஜா முதல் ரஹ்மான்வரை எல்லா இயக்குனர்களும் அப்படி மாற்றியும் இருக்கிறார்கள். பார்த்தால் பரவசம் படத்துக்கு வாலியின் கையில் இரவு ஏழு மணிக்கு டியூன் கிடைக்கிறது. சிச்சுவேஷனுக்கு டியூன் ச‌ரியில்லை என திருப்பி அனுப்புகிறார். 10.30 க்கு ரஹ்மானே வாலியின் வீடு தேடி வருகிறார். 12 மணிக்கு புதிய டீயூன் தயாராகிறது. அந்தப் பாடல்தான், மூன்றெழுத்து கெட்ட வார்த்தை சிஷ்யா...

81. கவிஞர் கம்பதாசன் மீது ம‌ரியாதை கொண்டவர். ஒருமுறை போதையேறிய கம்பதாசனுடன் இரவில் சென்ற போது பாண்டிபஜார் போலீஸார் இருவரையும் லாக்கப்பில் அடைத்த அனுபவமும் வாலிக்கு உண்டு.

82. பாடல் எழுத வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்ட போது கண்ணதாசனுக்கு அசிஸ்டெண்டாக சேரும் வாய்ப்பு வாலிக்கு வந்தது. மாதச் சம்பளம் 300 ரூபாய். நான் கண்ணதாசனுக்கு எதிரே கடைவி‌ரிக்க வந்தவன் என்று கூறி அதனை மறுத்தார்.

அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும் 
அவனி சிவா 

Friday 19 July 2013

கடைய எப்ப சார் தொரப்பிங்க ? அரசுக்கு ஒரு அவசர வேண்டுகோள்.

வணக்கம் 


நம்ம தமிழ்நாட்டு மக்கள் எல்லாருக்கும் , எல்லா வயதினருக்கும் ஒரு ஒற்றுமை இருக்குன்னு நினைக்கிறேன்.வயது வாரியா சில ஒற்றுமை   பார்ப்போம் .பிறகு அரசின் வேண்டுகோளை வைப்போம்.இது இப்போ உள்ள மக்களின் அடிப்படையில் .

குழந்தைகள் - இவங்களுக்கு யாரு  சொல்லிக்கொடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை .அது எப்படி எல்லாரும்  டாம் & ஜெர்ரி பார்த்க்கிட்டு இருந்தாங்க , பின்பு டோராவுக்கு மாறினாங்க .இப்போ நிஞ்சா ஹட்டரிக்கு.என்ன மாயம் என்பதே புரியவில்லை.அது எப்படி எல்லா குழந்தைகளுக்கும் ஒரே வேவ் லென்த் .


வாலிபப்பசங்க - அந்தக் காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை இவர்களும் ஒரே மனநிலையில் . சினிமாவை மட்டும் எடுத்துக் கொள்வோம்.குஷ்பு பிடிச்சா எல்லாருக்கும் பிடிச்சது.பிறகு சிம்ரனை , இப்போ ஹன்சிகா .

வீட்டுப்  பெண்கள் - மாமியாரை போட்டு தாக்குறது , மருமகளை அடிச்சு நொருக்கிறது , ஆண்கள் எல்லாம் பாவாமாய் சித்தரிப்பது.இப்படி என்ன  
கருமாந்திர கதையை எடுத்தாலும் ,அது எல்லா பெண்களுக்கும் பிடிக்கிறது.

பொதுவா - அஞ்சி வருசத்துக்கு ஒரு முறை நமக்கு ஒரு வாய்ப்பு  குடுப்பாங்க , நாம நல்லா இருக்கிறதுக்கு .அப்போயும் பாரபட்சம் இல்லாமா ஒரேடியா ,ஒரே ஆட்கள கொண்டு வந்து நாசமா போறது.

இப்போ அரசுக்கு வேண்டுகோள்- இந்த டாஸ்மாக் கடைய காலை 10 மணிக்கு ஆரம்பிச்சு இரவு 10 மணி வரை குடிமகன்களுக்கு ஊத்திகுடுக்குது .  நான் என்னுடைய வீட்டிலுருந்து அலுவலகம் வரும் வரை இருக்கும் டாஸ்மாக் கடைகள் மொத்தம் 12 இருக்கு ( மெயின் ரோட்டில் உள்ளது மட்டும் ) அதில் சுமார் எட்டுகக்கடைகளில் காலை 6 மணிக்கு  போனாலும் பார் கதவை ஒரு மாதிரியா தொறந்து அருமையா வியாபாரம் நடக்குது.அதே போல் இரவு 10 மணிக்குப் பிறகும் நடக்குது . இன்னைக்கு மட்டும் இல்ல நாள் தோறும் நடக்கின்ற நிகழ்வு . இது போக மூன்று பெட்டிக் கடைகளிலும் சரக்கு கிடைக்கின்றன . 

ஆகவே , அரசு கவனத்தில் கொண்டு பொது மக்களை காப்பாற்ற முழுவதுமாய் மூடிவிடுவது நல்லது.அதற்கு எல்லாம்  சான்சே இல்லை எனும் பட்சத்தில் காலை 6 மணிக்கு திறந்து 12 மணி வரை திறந்து வைத்தால் . அடுத்த தேர்தலின் போது வாசிங் மிசின்,DVD , வாக்குவம் கிளீனர், இது போல் அணைத்து வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க ஏதுவா இருக்கும்.

இதுல என்ன ஒற்றுமை என்னன்னா இது எல்லா ஊரிலும்  நடக்கும் என நம்புகிறேன்.


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா

Thursday 18 July 2013

வாலி மறைந்தார் - ஆழ்ந்த இரங்கல்கள்




திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வாலி(82) உடல் நலக் குறைவால் இன்று மாலை காலமானார்.

நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்ட கவிஞர் வாலி(82) கடந்த ஜூன் 7-ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு வார காலத்துக்கு பின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதித்ததை அடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். கடந்த சில நாட்களாக அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அவரது உடல்நிலை நேற்று முன்தினம் இரவு மோசமானது.

அவருக்கு டாக்டர்கள் செயற்கை சுவாசம் பொருத்தி தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கவிஞர் வாலி இன்று மாலை காலமானார். அவரது மறைவிற்கு ஏராளமான திரையுலகத்தை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நன்றி - தினமணி 

வருத்ததுடன் 
அவனி சிவா

Wednesday 17 July 2013

வாழ்க்கையே ஒரு வங்கிக் கணக்குங்க


 வணக்கம் 


இந்த மேட்டர புத்தகம் , பட்டிமன்றம் , மேடைப் பேச்சாளர்கள், இணையத்தில் , இப்படி ஏதாவது ஒரு இடத்தில படித்திருக்க வாய்ப்பு உள்ளது . வேடிக்கை என்னவென்றால் நான் இதனை துணுக்காக புத்தகத்திலும்,அறிஞர்களின் மேடைப் பேச்சிலும் , இணையத்திலும் படித்தேன்,கேட்டேன் . படிக்காத , கேட்காத நண்பர்களுக்காக இந்தப் பதிவு. கமெண்ட் போடறப்ப கொஞ்சம் பார்த்து போடுங்க.



ஒரு சின்ன கற்பனை.

ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.

பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.

ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு.

அவை - 

1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும். 

2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்ற முடியாது. 

3) அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு.

4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக் கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400 ரூபாய் வரவு வைக்கப்படும்.

5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம். 

6) வங்கி - "முடிந்தது கணக்கு" என்று சொன்னால் அவ்வளவுதான். வங்கிக் கணக்கு மூடப்படும், மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.

இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? 

உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?

உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள் இல்லையா? உங்களுக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். ஏனென்றால் அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் - அப்படித்தானே? முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள்தானே?

உண்மையில் இது ஆட்டமில்லை - நிதர்சனமான உண்மை

ஆம்

நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை.

அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின் பெயர் - காலம். 

ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும் போது வாழ்க்கையின் அதியுன்னத பரிசாக 86400வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது. 

இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம் நமக்காக சேமித்து வைக்கப் படுவதில்லை. 

அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள் தொலைந்தது தொலைந்தது தான்.

நேற்றைய பொழுது போனது போனது தான். 

ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம் புதிதாக நம் கணக்கில்

86400நொடிகள். 
 
எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் வங்கி உங்கள் கணக்கை முடக்க முடியும். 

அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? 

உண்மையில் 86400வினாடிகள் என்பது அதற்கு சமமான அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும் மதிப்பு வாய்ந்தது அல்லவா? 

இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க மாட்டோமா? காலம் நாம் நினைப்பதை விட வேகமாக ஓடிவிடும். 

எனவே உங்களைப் பொன் போல பேணுங்கள் - சந்தோஷமாக இருங்கள் - சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் - வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்.


மீண்டும் சிந்திப்போம் 
அவனி  சிவா 

Tuesday 16 July 2013

ஜெயலலிதா இடத்தில தனுஷ் - விலையில்லா விளம்பரம்

வணக்கம் 


ஆதங்கம் 1


நம்ம அம்மாவை  இப்படி வாக்கியம் அமைதற்க்காக லக்கி லுக் மன்னிக்கவும் அதுவா வந்திருச்சு, நாஞ்சில் சம்பத் , பரிதி, பொன்னுசாமி ஆகியோர் ஆசைப்படும் படி பிரதமர் ஆக்கிட்டு , கல்கத்தா காளி மாயாவதி அம்மாவை நம்ம தமிழ் நாட்டுக்கு முதலமைச்சர் ஆக்கிட்டா நமக்கு விலையில்லா கோழி,மீன் போன்ற அசைவ மெடீரியல் நமக்கு கிடைக்கும்.அதே நேரத்தில் அம்மா பிரதமர் ஆயிட்டா இந்தியா முழுவதும் இந்த விலையில்லா திட்டத்தை அறிமுகப் படுத்தி அதனை பின்பற்றி அடுத்து வருகிற தலைவர்கள் , வேறு மாதிரியான பொருட்களை தருவார்கள் என்கிற நப்பாசை தான்.( தமிழன்டா )



ஆதங்கம் 2


காபித்தூள் ஆரம்பிச்சு காண்டம் வரைக்கு அம்மா நமக்கு விலையில்லாமால் தரும் காலம் வெகு தொலைவில் இல்லை .பாவம் அம்மா இவ்வளவு கஷ்டப்பட்டு ஒவ்வொரு மேட்டரா ஜனங்களுக்கு தந்துட்டு வந்தா , நம்ம நன்றி கேட்ட மக்கள் என்னவெல்லாம் செய்றங்கா தெரியுமா ?

சைக்கிள் பசங்களுக்கு குடுத்தா அத அவங்க மாமா , சித்தப்பா அப்படின்னு யாராவது எடுத்துட்டு போறாங்க ( அதுல அவங்க பேரு வேற போட்டு )

மிக்சி ,கிரைண்டர் , பேன் வாங்கிட்டு அத எவ்வளவு கம்மியா விக்க முடியுமோ வித்துட்டு நல்ல கறி விருந்து நாலு நாளைக்கு சாப்பிட வேண்டியது .

இதவிட பெரிய கொடுமை படிக்கிற பக்கிகளுக்கு , அறிவ வளக்கிறதுக்கு லேப் -டாப் கொடுத்து அத வைக்க ஒரு பேக் வேற . அதுல கொடுக்கிற அம்மா போட்டோ பிரிண்ட் போட்டு கொடுத்தா ( இத பார்க்கிற போதெல்லாம் ஒட்டு போடறதப் பத்தி யோசிக்கணும் என்கிற ஐடியாவில் ) அங்கன அதே அளவில தன்னோட தலைவர் தனுஷ் படத்த ஒட்டி ஒரு பக்கி போகுது ,. இன்னக்கி காலையில தான் பார்த்தேன் . எவ்வளவு கடுப்பா இருக்கும் அம்மாவுக்கு .



ஆதங்கம் 3

போற , வர்ற எல்லா சனங்களும் கையில 7000 ரூபாய்க்கு குறையாத செல் போன் வச்சிர்க்காங்க . எல்லா வசதியும் கொண்டது . இந்த மேட்டர போட்டா எடுக்கலாம்ன்னா என்கிட்டே இருக்கிறது பழைய செங்கல் மாடல் . நான் எப்போ நல்ல மொபைல் வாங்கி இந்த கருமத்த எல்லாம் உங்களுக்கு காட்றது .

மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா




Monday 15 July 2013

ஏசுவான உமா சங்கர் IAS - ஈஸ்வரா ?



வணக்கம் 


உமா சங்கர் ஒரு காலத்தில் கம்பீரமாய் அரசுப் பதவியில் இருந்தவர் .இப்போது மதப் போதகராக உள்ளார் . அதுக்காக இப்படியா ? 

அவரின்  எச்சரிக்கையை பாருங்கள்


கர்த்தாவே எங்களை இவரிடமிருந்து காப்பாற்றுங்கள்




உத்தரகண்டில் வெள்ளம் அனுப்பி இந்துக்களை தண்டிக்க போவதாக இயேசு முன்னமே என்னிடம் சொல்லி இருந்தார்.

இரட்டைக் கோபுரத்தின் மேல் விமானத்தை மோதவிட்டு கிறித்துவர்களைக் அழித்ததும் இயேசு.

பூகம்பத்தை ஏவி விட்டும் சுனாமியை சுழலவிட்டும் உலகெங்கும் உள்ள மக்களை அழித்ததும் இயேசு. 
 
 பேரழிவை ஏற்படுத்தி , இந்துக்களை தண்டிக்க போவதாக இயேசு என்னிடம் மார்ச் 8 அன்றே messenger மூல சொல்லி அனுப்பினார்

அதே போல உத்ராகண்ட் பேரழிவு ஏற்பட்டது .

நிருபர் : நீங்கள் உடனே அரசிடம் சொல்லி தகுந்த ஏற்பாடுகளை செய்து மக்களை காப்பாற்றி இருக்கலாமே.

உம்ஸ் : இல்லை அது போன்று எந்த அரசையும் எச்சரிக்க கூடாது என்றும் இயேசு சொல்லி அனுப்பி இருந்தார் .இந்த அழிவிலிருந்து தப்பிக்க ஒரே வலி இயேசுவை அனைவரும் சரணடைவதுதான் .

(நக்கீரன் பத்திரிகையில் , திரு.உமா ஷங்கர் ஐ.எ.எஸ் பேட்டி)
 
மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா  
 

குறும்பட இயக்குனர்களுக்கு ஜி.நாகராஜனின் நிமிஷ கதைகள்

வணக்கம்

1


'குத்தத்தை ஒத்துக்கிறயா ? ' என்று மாஜிஸ்ட்ரேட் கைதியைக் கேட்டார்.

'ஆமாங்க ' என்றான் கைதி.

'இந்த மாதிரிக் குத்தத்துக்கெல்லாம் ஆறு மாச தண்டனை கொடுக்கணும். ஆனால் நீ குத்தத்தை ஒத்துக்கிறதுனாலே, பொளச்சுபோ, மூணு மாச தண்டனை கொடுக்கிறேன் ' என்றார் மாஜிஸ்ட்ரேட்.

'அய்யய்யோ எசமான்! நீங்க மூணுமாசந்தான் போடுவீங்கன்னா, நான் என் குத்தத்தை ஒத்துக்கலே. கேசே நடத்திப் பாத்துரேன். கெடச்சா ஆறுமாசம் இல்லண்ணா ஒண்ணுமில்லேன்னு போகணும் ' என்றான் கைதி.

 அதற்குள் இன்ஸ்பெக்டர் எழுந்திருந்து, 'யுவர் ஆனர், கேஸ் நடந்தா தப்பிச்சாலும் தப்பிச்சிடுவான். 

அவன் கேக்கறபடி ஆறு மாசமே போட்டிடுங்க.
 ஒரு கன்விக்ஷன் என்றாவது டயரியில் வரும் ' என்றார்.

மாஜிஸ்ட்ரேட் ஆறு மாதத் தண்டனை விதித்தார்.

ஜெயித்தது யார் ? அந்த ஏழைக்கைதிதான்.

2.
மடத்துக்கு முன்னால் ஒரே கூட்டம்.
 ஊர் மக்கள் அனைவரும் திரண்டு வந்திருந்தனர். அத்தனை பேர் முகத்திலும் வருத்தம் தோய்ந்திருந்தது. குசுகுசு என்று மட்டும் பேசிக்கொண்டனர்.

'சாமியார் சமாதியாகிவிட்டார். ' 'இன்று காலை தியானத்தில் உட்கார்ந்திருந்தவர்தானாம், அப்படியே சமாதியாகிவிட்டார் ' என்றெல்லாம் பேசிக்கொண்டனர்.

ஊர்ச்சிறுவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
 கூட்டத்தின் நடுவே குறுக்கும் நெடுக்குமாக சென்று கொண்டிருந்தனர். 

என்னவென்று புரிந்து கொள்ளாமலேயே அவர்களும் 'சாமியார் சமாதியாகிவிட்டார் ' என்ற வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டனர். 

இறுதியில் மடத்துக்காரர்கள் சாமியாரை வெளியே கொண்டுவந்தனர். சாமியார் வெளியே தூக்கிக் கொண்டுவரப்படுவதையே உற்று நோக்கிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் திடாரென்று, 'டேய், சாமியார் செத்துப் போயிட்டாரு ' என்று கத்திக் கொண்டே கூட்டத்தைவிட்டு ஓடிவந்தான். உடனே அத்தனை சிறுவர்களும், 'மடத்துச் சாமியாரு செத்துப் போயிட்டாரு ' என்று அழுத்தம் திருத்தமாகக் கத்திக்கொண்டு ஓடினர். பெரியவர்கள் சிறுவர்களைக் கூட்டத்தை விட்டு அரட்டி மிரட்டி ஓட்டினர்.

3.

அவள் ஒரு விபச்சாரி. அவளை வைத்துக் கதை எழுத வேண்டுமென்று எழுத்தாளன் விரும்பினான். 
ஆகவே அவன் அவளிடம் சென்றான்.
'பெண்ணே! நீ இவ்வளவு கெட்ட நிலைக்கு வரக்காரணம் என்ன ? ' என்று எழுத்தாளன் கேட்டான்.

'என்ன ? ... கெட்ட நிலையா ? அப்படி ஒண்ணும் எனக்கு சீக்குக் கீக்குக் கிடையாது. ஒங்கிட்ட சீக்கில்லாமே இருந்தா அதுவே ஆண்டவன் புண்ணியம் ' என்றாள் விபச்சாரி.

'இல்லே, உனக்கு சமுதாயம் எவ்வளவு பெரிய கொடுமையை இழைத்துவிட்டது! ' என்றான் எழுத்தாளன்.

'கொடுமை என்ன கொடுமை! பசிக்கொடுமை எல்லோருக்குந்தானிருக்கு... இந்த போலீசுக்காரங்க தொந்தரவு இல்லாட்டி ஒண்ணுமில்லே ' என்றாள் விபச்சாரி.

'கண்ட கண்டவங்க கிட்டெல்லாம் போகிறது உனக்கு கஷ்டமாக இல்லை ? '
'யாரும் கண்ட கண்டவங்க கிட்டெல்லாம் போகல. எனக்குன்னு ஒரு புருஷன் இருக்காரு '
'மற்ற பெண்கள் எல்லாம் கட்டின புருஷனோடு மட்டும்தான் இருக்கிறார்கள். வேறு ஆண்பிள்ளைகளோடு சம்பந்தம் வைத்துக்கொள்வதில்லை தெரியுமா ? '

'அப்படியா ? '

'பின்பு ? '

'சரி, உங்களுக்கு பெஞ்சாதி இருக்குங்களா ? '

'ஊம், இருக்கு '

'நீங்க மட்டும் எங்கிட்ட வந்திருக்கீங்களே ஒங்களுக்கு வெக்கமா இல்லே ? .. சரி, அது கிடக்கட்டும்; நேரமாவுதுங்க '

கொடுமையிலும் கொடுமை, கொடுமையை கொடுமை என்று புரிந்து கொள்ளாததுதான். எழுத்தாளனுக்கு அது புரியவில்லையோ என்னவோ, விபச்சாரியைக் காட்டி, வாசகர்களின் கண்ணீரைப் பிதுக்கியெடுத்து, நாலு காசு சம்பாதிக்கும் எண்ணத்தை மட்டும் கைவிட்டான்.

4.

அவன் தாமரையைப் பற்றிக் கவிதைகளில் படித்திருக்கிறான். 
படங்களில் பார்த்திருக்கிறான். அதன் செம்மையும், மென்மையும், எழிலுருவும் அவன் உள்ளத்தைச் சுட்டெரித்தன. அதை அடைய விரும்பினான். 
தடாகத்துக்குச் சென்றான். 
அதோ! அங்கு மலர் தெரிகிறது. தண்ணீரின் மேல் கவலையற்று உறங்கிக் கிடக்கிறது. 'வா, வா ' என்று அவனைக் கள்ளப் பார்வை கொடுத்து அழைக்கிறது. அவன் தடாகத்துக்குள் காலெடுத்து வைத்தான்.

'யாரது ? தண்ணீரிலே இறங்காதே. ஒரே சகதி! தாமரைக் கொடி காலைச் சுத்திக்கிட்டா அப்புறம் உயிருக்கே ஆபத்து ' என்று எச்சரிக்கிறான் யாரோ ஒருவன்.

தாமரையைப் பார்த்து விரும்பிய அவனும் உடனே சட்டென்று நின்றுவிட்டான். மலரைப் பார்த்துப் பெருமூச்செறிந்து சற்று நேரம் நின்றுவிட்டு, அதோ அங்கே அவனும் தலை குனிந்து செல்கிறான். அவன் இன்னும் வாழ்கிறான். எனக்குத் தெரியும். ஆனால் என்றோ தற்கொலை புரிந்து கொண்டு விட்டான்!

- சரஸ்வதி, ஏப்ரல், 1961

 இந்த கதைகளை அழியாச்சுடர்  வலைப்பக்கத்திலிருந்து பதிவாக தருகிறேன் .அழியாசுடருக்கு நன்றி .

மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா