குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Monday 15 July 2013

குறும்பட இயக்குனர்களுக்கு ஜி.நாகராஜனின் நிமிஷ கதைகள்

வணக்கம்

1


'குத்தத்தை ஒத்துக்கிறயா ? ' என்று மாஜிஸ்ட்ரேட் கைதியைக் கேட்டார்.

'ஆமாங்க ' என்றான் கைதி.

'இந்த மாதிரிக் குத்தத்துக்கெல்லாம் ஆறு மாச தண்டனை கொடுக்கணும். ஆனால் நீ குத்தத்தை ஒத்துக்கிறதுனாலே, பொளச்சுபோ, மூணு மாச தண்டனை கொடுக்கிறேன் ' என்றார் மாஜிஸ்ட்ரேட்.

'அய்யய்யோ எசமான்! நீங்க மூணுமாசந்தான் போடுவீங்கன்னா, நான் என் குத்தத்தை ஒத்துக்கலே. கேசே நடத்திப் பாத்துரேன். கெடச்சா ஆறுமாசம் இல்லண்ணா ஒண்ணுமில்லேன்னு போகணும் ' என்றான் கைதி.

 அதற்குள் இன்ஸ்பெக்டர் எழுந்திருந்து, 'யுவர் ஆனர், கேஸ் நடந்தா தப்பிச்சாலும் தப்பிச்சிடுவான். 

அவன் கேக்கறபடி ஆறு மாசமே போட்டிடுங்க.
 ஒரு கன்விக்ஷன் என்றாவது டயரியில் வரும் ' என்றார்.

மாஜிஸ்ட்ரேட் ஆறு மாதத் தண்டனை விதித்தார்.

ஜெயித்தது யார் ? அந்த ஏழைக்கைதிதான்.

2.
மடத்துக்கு முன்னால் ஒரே கூட்டம்.
 ஊர் மக்கள் அனைவரும் திரண்டு வந்திருந்தனர். அத்தனை பேர் முகத்திலும் வருத்தம் தோய்ந்திருந்தது. குசுகுசு என்று மட்டும் பேசிக்கொண்டனர்.

'சாமியார் சமாதியாகிவிட்டார். ' 'இன்று காலை தியானத்தில் உட்கார்ந்திருந்தவர்தானாம், அப்படியே சமாதியாகிவிட்டார் ' என்றெல்லாம் பேசிக்கொண்டனர்.

ஊர்ச்சிறுவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
 கூட்டத்தின் நடுவே குறுக்கும் நெடுக்குமாக சென்று கொண்டிருந்தனர். 

என்னவென்று புரிந்து கொள்ளாமலேயே அவர்களும் 'சாமியார் சமாதியாகிவிட்டார் ' என்ற வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டனர். 

இறுதியில் மடத்துக்காரர்கள் சாமியாரை வெளியே கொண்டுவந்தனர். சாமியார் வெளியே தூக்கிக் கொண்டுவரப்படுவதையே உற்று நோக்கிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் திடாரென்று, 'டேய், சாமியார் செத்துப் போயிட்டாரு ' என்று கத்திக் கொண்டே கூட்டத்தைவிட்டு ஓடிவந்தான். உடனே அத்தனை சிறுவர்களும், 'மடத்துச் சாமியாரு செத்துப் போயிட்டாரு ' என்று அழுத்தம் திருத்தமாகக் கத்திக்கொண்டு ஓடினர். பெரியவர்கள் சிறுவர்களைக் கூட்டத்தை விட்டு அரட்டி மிரட்டி ஓட்டினர்.

3.

அவள் ஒரு விபச்சாரி. அவளை வைத்துக் கதை எழுத வேண்டுமென்று எழுத்தாளன் விரும்பினான். 
ஆகவே அவன் அவளிடம் சென்றான்.
'பெண்ணே! நீ இவ்வளவு கெட்ட நிலைக்கு வரக்காரணம் என்ன ? ' என்று எழுத்தாளன் கேட்டான்.

'என்ன ? ... கெட்ட நிலையா ? அப்படி ஒண்ணும் எனக்கு சீக்குக் கீக்குக் கிடையாது. ஒங்கிட்ட சீக்கில்லாமே இருந்தா அதுவே ஆண்டவன் புண்ணியம் ' என்றாள் விபச்சாரி.

'இல்லே, உனக்கு சமுதாயம் எவ்வளவு பெரிய கொடுமையை இழைத்துவிட்டது! ' என்றான் எழுத்தாளன்.

'கொடுமை என்ன கொடுமை! பசிக்கொடுமை எல்லோருக்குந்தானிருக்கு... இந்த போலீசுக்காரங்க தொந்தரவு இல்லாட்டி ஒண்ணுமில்லே ' என்றாள் விபச்சாரி.

'கண்ட கண்டவங்க கிட்டெல்லாம் போகிறது உனக்கு கஷ்டமாக இல்லை ? '
'யாரும் கண்ட கண்டவங்க கிட்டெல்லாம் போகல. எனக்குன்னு ஒரு புருஷன் இருக்காரு '
'மற்ற பெண்கள் எல்லாம் கட்டின புருஷனோடு மட்டும்தான் இருக்கிறார்கள். வேறு ஆண்பிள்ளைகளோடு சம்பந்தம் வைத்துக்கொள்வதில்லை தெரியுமா ? '

'அப்படியா ? '

'பின்பு ? '

'சரி, உங்களுக்கு பெஞ்சாதி இருக்குங்களா ? '

'ஊம், இருக்கு '

'நீங்க மட்டும் எங்கிட்ட வந்திருக்கீங்களே ஒங்களுக்கு வெக்கமா இல்லே ? .. சரி, அது கிடக்கட்டும்; நேரமாவுதுங்க '

கொடுமையிலும் கொடுமை, கொடுமையை கொடுமை என்று புரிந்து கொள்ளாததுதான். எழுத்தாளனுக்கு அது புரியவில்லையோ என்னவோ, விபச்சாரியைக் காட்டி, வாசகர்களின் கண்ணீரைப் பிதுக்கியெடுத்து, நாலு காசு சம்பாதிக்கும் எண்ணத்தை மட்டும் கைவிட்டான்.

4.

அவன் தாமரையைப் பற்றிக் கவிதைகளில் படித்திருக்கிறான். 
படங்களில் பார்த்திருக்கிறான். அதன் செம்மையும், மென்மையும், எழிலுருவும் அவன் உள்ளத்தைச் சுட்டெரித்தன. அதை அடைய விரும்பினான். 
தடாகத்துக்குச் சென்றான். 
அதோ! அங்கு மலர் தெரிகிறது. தண்ணீரின் மேல் கவலையற்று உறங்கிக் கிடக்கிறது. 'வா, வா ' என்று அவனைக் கள்ளப் பார்வை கொடுத்து அழைக்கிறது. அவன் தடாகத்துக்குள் காலெடுத்து வைத்தான்.

'யாரது ? தண்ணீரிலே இறங்காதே. ஒரே சகதி! தாமரைக் கொடி காலைச் சுத்திக்கிட்டா அப்புறம் உயிருக்கே ஆபத்து ' என்று எச்சரிக்கிறான் யாரோ ஒருவன்.

தாமரையைப் பார்த்து விரும்பிய அவனும் உடனே சட்டென்று நின்றுவிட்டான். மலரைப் பார்த்துப் பெருமூச்செறிந்து சற்று நேரம் நின்றுவிட்டு, அதோ அங்கே அவனும் தலை குனிந்து செல்கிறான். அவன் இன்னும் வாழ்கிறான். எனக்குத் தெரியும். ஆனால் என்றோ தற்கொலை புரிந்து கொண்டு விட்டான்!

- சரஸ்வதி, ஏப்ரல், 1961

 இந்த கதைகளை அழியாச்சுடர்  வலைப்பக்கத்திலிருந்து பதிவாக தருகிறேன் .அழியாசுடருக்கு நன்றி .

மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா

No comments:

Post a Comment

கருத்து மேடை