குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Monday 22 July 2013

கலைஞர் கருணாநிதியின் தலை - ஆஸ்திரிய நாட்டில் பரபரபப்பு

வணக்கம் 

இந்தச் செய்தி எந்தளவுக்கு உண்மையோ.ஆஸ்திரிய நாட்டு மக்களுக்கும் , தி மு க தோழர்களுக்குத் தான் தெரியும்.ஆஸ்திரிய நாட்டில் கருணாநிதியின் தபால் தலை வெளியிடப்பட்டது என செய்தி வெளியாகி இருந்தது.மகிழ்ச்சியாய் தான் இருந்தது,அது இன்று காலை தினமலர் நாளிதழை படிக்கும் வரை . செய்தியின் தலைப்பு இதோ.

கருணாநிதிக்கு ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் தலை: "பேஸ்புக்' தகவலால் பெரும் பரபரப்பு.

 பதிவுலகிலும்,பேஸ்புக் பக்கத்திலும் அம்மாவை விமர்சிப்பதைக் காட்டிலும் அய்யாவை  விமர்சிப்பவர்கள் அதிகம். (அது என்ன மாயமோ , பயமோ தெரியவில்லை  அம்மாவை விமர்சனம் செய்தின் காரணம்.)

நான் படித்த செய்தி இதோ .



தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, ஆஸ்திரியா நாட்டில் வெளியிடப்பட்ட அஞ்சல் தலை, பணம் செலுத்தி, கோரிக்கையின் பேரில் பெறப்பட்ட அஞ்சல் தலை என, "பேஸ்புக்' பதிவர்கள் அம்பலப்படுத்தி உள்ளனர். இதனால், "பேஸ்புக்'கில் தி.மு.க.,வினர் கடுமையான கேலிக்கு உள்ளாகி வருகின்றனர்.

ஆஸ்திரிய நாட்டில் வாழும் தி.மு.க., ஆதரவாளரின் முயற்சியால், அந்நாட்டு தபால் துறை, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் படம் கொண்ட அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. இந்த அஞ்சல் தலை, கருணாநிதியின் படம், வயது மற்றும் தி.மு.க., கொடியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை ஆஸ்திரியாவின் உள்ளூர், வெளிநாட்டு அஞ்சல்களில் பயன்படுத்த முடியும்.

இதுகுறித்து, நேற்று "பேஸ்புக்'கில் கருணாநிதி கூறுகையில், "என்னுடைய தமிழ்ப் பணி - சமுதாயப் பணியை பாராட்டி, ஆஸ்திரிய நாடு கடந்த ஜூன் 3ம் தேதி அன்று வெளியிட்ட, "கலைஞர் 90' என்ற அஞ்சல் தலையை பெற்ற போது' என, புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து, "பேஸ்புக்' பதிவர்கள் "பேஸ்புக்'கில் கூறியிருப்பதாவது:பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியாவில் பணம் செலுத்தினால் யாருடைய அஞ்சல் தலையையும் வெளியிட முடியும். குழந்தைகளின் படத்தை கூட, அஞ்சல் தலையில் வெளிடலாம். நம் நாட்டிலும் கடந்த மே மாதம் முதல், இந்த வசதி துவக்கப்பட்டுள்ளது.சென்னை தபால் நிலையத்தில், 300 ரூபாய் செலுத்தினால், அரசியல் மற்றும் மதம் சாராத யாருடைய, தபால் தலையையும் வெளியிட முடியும். அப்படியிருக்க, ஏதோ கருணாநிதியின் சமுதாய சேவையை பாராட்டி ஆஸ்திரிய அரசே, அஞ்சல் தலை வெளியிட்டதாக, தி.மு.க.,வினரே சொல்லி கொள்கின்றனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒருவர் ஆஸ்திரிய நாட்டில், தபால் தலை வெளியிட விரும்புவோர், http://www.post.at/en/personal_stamps_philately_products_meine_marke_personalized_stamps.php என்ற இணைய தளத்தை பார்வையிடலாம் என, கூறியுள்ளார்."பேஸ்புக்'கில் கருணாநிதி குறித்த விமர்சனங்கள் குறைந்திருந்த நிலையில், அஞ்சல் தலை விவகாரத்தால், மீண்டும் "பேஸ்புக்' பதிவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


விஷயம் அறிந்தவர்கள் தெளிவுப் படித்தினால் நல்லது .


மீண்டும்  சிந்திப்போம்  
அவனி சிவா ,
Click Here

6 comments:

  1. ஊழல் நல்லா பண்ணின அரசியல்வாதின்னு பெருமை படுத்தி தபால்தலை வெளியிட்டுருப்பாங்க.

    ReplyDelete
  2. www.katturai.com/?p=5581

    ReplyDelete
  3. http://donashok.blogspot.in/2013/07/15.html

    ReplyDelete


  4. இதில் ஆச்சர்யப் படுவதற்கு எதுவுமே இல்லை. கலைஞர் பிறந்த நாளன்று வினையூக்கி வலைப்பூ எழுதிவரும் செல்வகுமார் என்கிற நண்பர் அவரின் முயற்சியால் இந்த 'கலைஞர் 90 'என்கிற ஸ்டாம்ப் வெளியிடப்பட்டதாக முகநூளில் அறிவித்தார்.

    ஒருவிசயத்தை தெளிவாக அறிய வேண்டும். இது திமுக மேல்மட்ட தலைவர்களின் முயற்சியாலையோ அல்லது ஆஸ்திரியா நாட்டினாலையே வெளியிடப்பட வில்லை. முக நூலில் இருக்கும் திமுக அபிமானிகள் தன் தலைவருக்கு பிறந்த நாள் பரிசாக வெளியிட்டது இது.

    இதில் கேலி செய்ய என்ன இருக்கிறது..? வேண்டுமானால் மற்ற தலைவர்களுக்கும் அவர்களின் தொண்டர்கள் இது மாதிரி வெளியிட்டுக் கொள்ளட்டுமே.

    ReplyDelete
  5. குத்து குத்து என்று குத்தி வெறியை தீர்த்துக் கொள்ள தபால் தலையை வெளியிட்டு இருப்பார்களோ ?

    ReplyDelete
  6. நாட்டிலே பலருக்கு செலக்டிவ் அம்னீசியா இருக்கு போல் தெரிகிறது! சென்ற வருடம் இது மாதிரி தான் வெளிநாட்டில் புலிகளுக்கு முத்திரை, புலி தலைவருக்கு முத்திரை, வெளிநாட்டின் அங்கீகாரம் என்று எல்லாம் செய்தி வெளியிட்டாங்க. பலர் வந்து புல்லரித்தார்கள். இப்போ கருணாநிதி என்றதும் தாக்குகிறார்கள்.

    ReplyDelete

கருத்து மேடை