வணக்கம்
நம்ம தமிழ்நாட்டு ஜனங்களுக்கு எந்த ஒரு நல்ல விசயத்தை சொல்லிக்கொடுத்தாலும் , எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும், மக்களின் நன்மைக்காக கருத்து சொன்னாலும் அத சொல்றது யாருன்னு தான் பார்ப்பாங்க .திரைப்பட உலகத்தில் இருந்து எவரேனும் சொன்னால் அதுவே வேத வாக்காக கொள்வதும் உண்டு .( திரைப்படத் துறையிலும் புண்ணியவான்கள் உண்டு , இது அவர்களை குறிப்பிட்டு சொன்னவை அல்ல..)
ஒரு காலத்தில் திரைப்பட இயக்குனர் ஆவது என்பது குதிரை கொம்பாக இருந்ததுண்டு.இப்போது அவ்வளவு கஷ்டம் கிடையாது.கற்பனை திறன் இருந்து ,நல்ல கருத்தை சொல்லும் ஆற்றலும் இருந்தால் இணையம் வழியே சென்று வெற்றி பெறலாம்.அல்லது குறும்படம் எடுத்து தன்னுடைய திறமையை நீருபித்து திரைப்படத்துறையில் வெற்றி பெற வாய்ப்பு உண்டு .
இயக்குனர் விக்ரமன் இயக்குனர் சங்க தலைவராக ஆன பின்பு சில நல்ல விசயங்களை செயல் படுத்தி வருகிறார் என்கிற செய்திகள் வந்த வண்ணம் இருந்தன .
விக்ரமன் அவர்களுக்கு .உதவி இயக்குனர்களின் சிரமம் அவருக்கு தெரிந்ததினால் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் , பொருளாதார நிலையை உயர்த்தவும் உதவி இயக்குனர்களுக்கு மாத சம்பளம் கொடுக்கும் திட்டத்தை நடை முறை படுத்த உள்ளார்.
இப்படி பல நல்ல திட்டங்களை செயல் படுத்தும் எண்ணம் உள்ளவருக்கு , பேசாமால் செய்ய வேண்டாம் , பேசியே அவரை ஒரு பதவியில் அமர்த்திவிடலாம்.நமக்கும் நல்லது நடக்கவும் , நம்முடைய விருப்பபடி திரைப்பட துறையை சார்ந்ந்தவரே இருக்கும் .
ஆதங்கத்தில்
அவனி சிவா
சினிமா மோகத்தில் மண்ணாய் போய்கொண்டு நாட்டைத் திருத்த எந்த விக்ர'மண்'ணாலும் முடியாது !
ReplyDeleteஆதங்கம் என்று தான் சொன்னேன் அது தான் தங்கம் என்றல்ல
ReplyDeleteசினிமா மோகம் நம்மை ஆட்டுவிக்குது
ReplyDelete