குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Saturday, 20 July 2013

பாரதரத்னா யாருக்கு - ஹாக்கி ( தயான் ) அல்லது கிரிக்கெட் ( சச்சின் )

வணக்கம் 


இந்தியாவின் முதன்மையான விருதான ' பாரத ரத்னா " விருது , இது நாள் வரை கலை,இலக்கியம்,அரசியல்,அறிவியல் ,சமூகம் போன்ற பிரிவுகளில் உள்ளவர்களுக்கே அளிக்கப்பட்டு உள்ளன.

இந்த ஆண்டு புகழ் பெற்ற ஹாக்கி வீரர் தியான் சந்த மற்றும் சச்சின் பெயரை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை கடிதம் மூலம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, விளையாட்டுத் துறை அமைச்சகம் அனுப்பி வைத்து இருப்பதாக   செய்தி.   இருவரில் ஒருவருக்குத் தான் என்பது உறுதியான நிலையில் , முதன் முதலில் பாரத ரத்னா விருது பெரும் விளையாட்டு வீரர் என்கிற புகழும் கிடைக்கும்.

சச்சினின் சாதனை நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு .( பெரும்பாலான பொது மக்களுக்கும் ) அதே வேளையில் தயான் சந்த் நிகழ்த்திய சாதனைகளை பார்க்கும் போது அவருக்கு கிடைக்கும் பட்சத்தில் அது சச்சினுக்கும் , கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெருமையாய் தான் இருக்கும் என எண்ணுகிறேன்.

அவரின் மிகப் பெரிய சாதனைகள்

1928,1932,1936 ஆகிய ஆண்டுகளில் இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றது .மூன்று போட்டிகளிலும் பதக்கம் வெல்ல காரணமாய் இருந்தவர்.

அவரைப்பற்றி தினமலர் - வாரமலரில் வந்திருந்த செய்திநாம், ஒரு காலத்தில் ஹாக்கி விளையாட்டில், நிகரற்றவர்களாகத் திகழ்ந்தோம். இந்திய ஹாக்கி அணியை, மைதானத்தில் பார்த்தவுடனேயே மற்ற நாட்டு அணியினரின் ரத்த அழுத்தம் உச்சத்தை தொடும். இந்திய அணிவீரர், மேஜர் தயான் சந்தை, "ஹாக்கி மகராஜ்' என்பர். எதிர் அணிக்குள் அவர் பந்தை எடுத்துச் செல்லும் அழகே தனி. அவர் விளையாட்டை ரசித்தவர்கள் கதை கதையாய் சொல்வர். "தயான்சந்த், ஹாக்கி மட்டையின் முனையில் பசை தடவி வைத்துள்ளார். அதனால் தான், பந்து அவர் ஹாக்கி மட்டையில் நழுவாமல் இருக்கிறது...' என்பர் சிலர். "தயான்சந்த்திற்கு மந்திரம் தெரியும். அதனால் தான், அவர் ஹாக்கி மட்டையை மந்திரக் கோலாக மாற்றி விட்டார். மந்திரவாதியை எப்படி எதிர்க்க முடியும்...' என்றும் சொல்வர்.
ஹாலந்து நாட்டில், அவர் ஹாக்கி விளையாடும் லாவகத்தை பார்த்தவர்கள், அவர் மட்டைக்குள் ஏதோ விசை உள்ளது என்று கருதி, அவர் மட்டையை உடைத்துப் பார்த்து ஏமாற்றமடைந்தனர்.

ஒரு நாட்டில் விளையாடும் போது, ஒரு வயதான கிழவி, முனை வளைந்த தன் கைத்தடியை கொடுத்து, "எங்கே, இதை வைத்து விளையாடு பார்ப்போம்...' என்றாளாம். அந்தக் கைத்தடியை வைத்து விளையாடி, பல கோல்கள் அடித்தார் தயான்சந்த் .

ஜெர்மனியிலுள்ள, பெர்லின் நகரில் 1936ல், ஒலிம்பிக் போட்டி நடந்தது. இதில், நம் இந்திய ஹாக்கி அணியும் கலந்து கொண்டது. தயான்சந்தின் விளையாட்டை, ஜெர்மன் நாளிதழ்கள் புகழ்ந்து எழுதின. "இந்தியாவிலிருந்து வந்திருக்கும் ஹாக்கி மந்திரவாதி' என்று, தலையங்கம் தீட்டின. தினமும், தயான்சந்த் பற்றிய செய்திகளை வாசித்த சர்வாதிகாரி ஹிட்லருக்கு ஒரே ஆச்சரியம். "உலகிலேயே, உயர்ந்த இனத்தவரான நம் ஜெர்மானிய வீரர்களை விட, இந்தியன் எப்படி சிறப்பாக விளையாட முடியும்...' என்று சந்தேகப்பட்ட ஹிட்லர், ஜெர்மனியும், இந்தியாவும் மோதும் இறுதிப் போட்டியை காண நேரில் வந்து விட்டார்.

இறுதிப் போட்டி ஆரம்பமாகியது. தயான்சந்தின் வேகத்திற்கு முன்னால் ஜெர்மானிய வீரர்கள் திணறினர். தயான்சந்த் பந்தை எடுத்தா‌லே, அது கோலாக மாறியது. மளமளவென்று தயான்சந்த் ஆறு கோல்கள் அடித்தார். மற்ற நம் வீரர்கள், இரண்டு கோல்கள் அடித்தனர். ஜெர்மனி திக்கித் திணறி, ஒரே ஒரு கோல் போட்டு, தோல்வியைத் தழுவியது.

ஹிட்லர் அப்படியே திகைத்துப் போய் விட்டார். அவர் கண்கள் தயான்சந்தை வெறித்து நோக்கின. அவரின், குறுகிய புத்தி வேலை செய்ய ஆரம்பித்தது. மறுநாள், தயான்சந்தை விருந்துக்கு அழைத்தார் ஹிட்லர். விருந்து முடிந்ததும், ஆசை வார்த்தைகளை அள்ளி விட்டார். "மிஸ்டர். தயான்சந்த், உங்கள் நாட்டில் என்ன இருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடக்கிறீர்கள். நான், உமக்கு ஜெர்மானியக் குடியுரிமை தருகிறேன்; எல்லா வசதிகளும் செய்து தருகிறேன்; ஏன், எங்கள் ராணுவத்தில் மிகப் பெரிய அதிகாரியாக்கி விடுகிறேன்; நிறைய சம்பளம்; நீர் ஒன்றே ஒன்று செய்தால் போதும். எங்கள் ஜெர்மனி அணிக்காக, ஹாக்கி விளையாட வேண்டும்...' என்றார். தயான்சந்த் பணிவுடன், "உங்கள் அழைப்பிற்கு நன்றி. ஒரு விளையாட்டு வீரன், அவன் பிறந்த நாட்டிற்காகத் தான் விளையாட வேண்டும். அது தான் நியதி. பணம், பதவிக்காக தாய்நாட்டை மறப்பது பாவம்...' என்று சொல்லி, விடைபெற்றார்.

"இப்படியும், ஒரு விளையாட்டு வீரனா!' என்று, ஹிட்லர் ஆச்சரியப்பட்டு போனார்.

மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவாNo comments:

Post a Comment

கருத்து மேடை