வணக்கம்
ஆதங்கம் 1
நம்ம அம்மாவை இப்படி வாக்கியம் அமைதற்க்காக லக்கி லுக் மன்னிக்கவும் அதுவா வந்திருச்சு, நாஞ்சில் சம்பத் , பரிதி, பொன்னுசாமி ஆகியோர் ஆசைப்படும் படி பிரதமர் ஆக்கிட்டு , கல்கத்தா காளி மாயாவதி அம்மாவை நம்ம தமிழ் நாட்டுக்கு முதலமைச்சர் ஆக்கிட்டா நமக்கு விலையில்லா கோழி,மீன் போன்ற அசைவ மெடீரியல் நமக்கு கிடைக்கும்.அதே நேரத்தில் அம்மா பிரதமர் ஆயிட்டா இந்தியா முழுவதும் இந்த விலையில்லா திட்டத்தை அறிமுகப் படுத்தி அதனை பின்பற்றி அடுத்து வருகிற தலைவர்கள் , வேறு மாதிரியான பொருட்களை தருவார்கள் என்கிற நப்பாசை தான்.( தமிழன்டா )
ஆதங்கம் 2
காபித்தூள் ஆரம்பிச்சு காண்டம் வரைக்கு அம்மா நமக்கு விலையில்லாமால் தரும் காலம் வெகு தொலைவில் இல்லை .பாவம் அம்மா இவ்வளவு கஷ்டப்பட்டு ஒவ்வொரு மேட்டரா ஜனங்களுக்கு தந்துட்டு வந்தா , நம்ம நன்றி கேட்ட மக்கள் என்னவெல்லாம் செய்றங்கா தெரியுமா ?
சைக்கிள் பசங்களுக்கு குடுத்தா அத அவங்க மாமா , சித்தப்பா அப்படின்னு யாராவது எடுத்துட்டு போறாங்க ( அதுல அவங்க பேரு வேற போட்டு )
மிக்சி ,கிரைண்டர் , பேன் வாங்கிட்டு அத எவ்வளவு கம்மியா விக்க முடியுமோ வித்துட்டு நல்ல கறி விருந்து நாலு நாளைக்கு சாப்பிட வேண்டியது .
இதவிட பெரிய கொடுமை படிக்கிற பக்கிகளுக்கு , அறிவ வளக்கிறதுக்கு லேப் -டாப் கொடுத்து அத வைக்க ஒரு பேக் வேற . அதுல கொடுக்கிற அம்மா போட்டோ பிரிண்ட் போட்டு கொடுத்தா ( இத பார்க்கிற போதெல்லாம் ஒட்டு போடறதப் பத்தி யோசிக்கணும் என்கிற ஐடியாவில் ) அங்கன அதே அளவில தன்னோட தலைவர் தனுஷ் படத்த ஒட்டி ஒரு பக்கி போகுது ,. இன்னக்கி காலையில தான் பார்த்தேன் . எவ்வளவு கடுப்பா இருக்கும் அம்மாவுக்கு .
ஆதங்கம் 3
போற , வர்ற எல்லா சனங்களும் கையில 7000 ரூபாய்க்கு குறையாத செல் போன் வச்சிர்க்காங்க . எல்லா வசதியும் கொண்டது . இந்த மேட்டர போட்டா எடுக்கலாம்ன்னா என்கிட்டே இருக்கிறது பழைய செங்கல் மாடல் . நான் எப்போ நல்ல மொபைல் வாங்கி இந்த கருமத்த எல்லாம் உங்களுக்கு காட்றது .
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
நான் எப்போ நல்ல மொபைல் வாங்கி இந்த கருமத்த எல்லாம் உங்களுக்கு காட்றது
ReplyDelete>>
கவலை படாதீங்க சகோ! அடுத்த தேர்தல்ல இலவசமா மொபைல் கொடுக்க போறங்களாம். கேமரா, ப்ளூடூத், 2சிம், 16ஜிபி மெமரி கார்டு வசதியோட...