குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Monday, 20 August 2012

வாழ்வின் இறுதி வரை வரும் வாழைப்பழம்

வணக்கம் 


நான் உசிரோடு இருக்கும் வரை உன்னை விட்டு பிரிய மாட்டேன். உன்னோடவே வருவேன் இந்த மாதிரி வசனத்தை அல்லது வாக்கியத்தை நாம் நாடங்களிலும், திரைப்படங்களிலும், கதைகளிலும் படித்தும் , சில நேரங்களில் நம்முடைய வாழ்விலும் கேட்டிருப்போம் , நாம் கூட யாரைப் பார்த்தாவது சொல்லி இருப்போம் . 


யோசித்துப் பார்த்தால் அது இடையில் வந்து இடையிலேயே போயிருக்கும் . நான் எல்லாம் அப்படி இல்ல , எனக்கு யாரும் இப்படி சொல்லி மறந்ததில்ல , என்றால் நீங்கள் கண்டிப்பாய் கொடுத்து வைத்தவர்கள் . 


வாழைபழம் இந்தப் பழம் நம் வாழ்வில் தொடக்கத்தில் இருந்து தொலைதூரம் போகும் வரை நம்முடன்  இணைந்து வந்துக் கொண்டிருக்கிறது. நம்மை பலமாக வைத்துக் கொண்டிருக்கிறது. யோசித்துப் பாருங்கள் 


1. நாம் பிறந்தவுடன் , நமக்கு ஒரு குழந்தை பிறந்தவுடன் மலை வாழைப்பழம் கொடுக்கின்றோம் , நமக்கும் கொடுக்கப் பட்டிருக்கும்.

2. சிறிது காலம் வளர்ந்த பின்னரும் , குடும்பம் பொருளாதார வளர்ச்சி அடைந்திருந்தாலும் , அடையாமல் இருந்தாலும் பசிக்கு இவரே துணைக்கு வந்துக் கொண்டிருக்கிறார்.

3. படித்து அல்லது படிக்காமல் போனாலும் தூசி மிகுந்த இடத்தில நாம் இருந்தால் மறு நாள் நாம் ஸ்ஸ்ஸ் அப்பாடா என நம் கழிவுகளை வெளியேற்றவும் துணை புரிகிறது .

4 . நோய் வாய்ப்பட்டு நாம் இருக்கும் போது  பொதுவாய் மருத்துவர்கள்  எப்பேர்பட்ட நோயாளியாய் இருந்தாலும் இதனையே உணவாகவும் , உணவுக்கு மாற்றாகவும் கொடுக்க சொல்லி கொண்டிருக்கிறார்கள் 

5 . உடல் ஆரோக்கியதிற்கு துணை நிற்கும் அதே வேலையில் , நீங்கள் கோவிலுக்கு சென்றாலும் , வீடுகளில் ஏதேனும் கடவுளை வழிபட்டாலும் தட்டு நிறைய பழங்கள் தேவையில்லை . இரண்டு வாழைபழம் போதும் , நமக்கும் நிம்மதி கடவுளுக்கும்.

6 . ஒருவருடத்திற்கும் மேலாக ஓடிய கரகாட்டக்காரன் திரைப்படம் ஓடிய சில காரணங்களில் வாழப்பழ காமெடியும் ஒன்று.


7 . ஒரு வழியாய் நாம் இறந்து போய்விடுகிறோம் ( அப்பாடா ) தலைக்கு மேல் முதலில் வைப்பது இரண்டு வாழைப்பழம் தான் .


இப்படி ஏராள காரணங்கள் உண்டு யோசித்து பதிவு போடும் வேலையில் சில மறந்துப் போயின . உங்களுக்கு தோன்றினால் தாராளமாய் கருத்துகளில் போடுங்கள் .


ஒரு பொது அறிவிற்கு ( எனக்குத் தான் ) 

வாழைப்பழம் எத்தனை வகைப்படும் ?

1 . செவ்வாழை 
2 . ரஸ்தாளி 
3 . மலை வாழைப்பழம் 
4 . கற்பூர வள்ளி 
5 . பச்சை வாழைப்பழம் 
6 . நேந்திரன் வாழைபழம் 
7 . பூவன் 

நினைவிற்கு வந்தது இவ்வளவு தான். 

இறுதியாய் 


 


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா


3 comments:

  1. விளக்கங்கள் அருமை...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. வாழைப்பழம் நல்லது தான், ஆனால் கார்பைடு கற்களை வைத்து பழுக்க வைக்கிறார்கள், எனவே காயாக வாங்கி ஒரு கோணியில் கட்டி வைத்து பழுக்க வைக்கலாம், [கொஞ்சம் லேட் ஆகும்], அல்லது கார்பைடு கற்களை பயன்படுத்தாமல் பழுக்க வைக்கப் பட்டதா என உறுதி செய்து கொண்டு வாங்கலாம்.

    ReplyDelete

கருத்து மேடை