குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Friday 24 August 2012

இதை தான் காதல் என்பதா ?

வணக்கம்


நான் வேலை பார்க்கும் அலுவலத்தில் புதிதாக இருவர் வேலைக்கு சேர்ந்தனர் . இருவரும் கணவன் - மனைவி இருவரும் காதல் மனம் புரிந்தவர்கள் . கணவர் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர் , மனைவி இந்து மதத்தை சார்ந்தவர்.





பிரச்னை இதுவல்ல இவர்களின் வயது தான் . இது சினிமாவாக இருந்திருந்தால் திருமணம் பல இன்னல்களுக்கு பிறகு முடிந்து காதல் வெற்றி பெற்றதாக அர்த்தம் கற்பிக்கப் பட்டிருக்கும் . அதற்குப் பிறகு அவர்களின் வாழ்வின் நிலைமையை பற்றி யாரும் கவலைப் பட மாட்டார்கள் . ( படம் எடுத்தவனும் , பார்த்த நம்மளும் ) 


கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கும் போதே இவர்களின் திருமணம் நடந்திருக்கிறது. திருமணம் இரண்டாம் வருடம் என்றால் , காதல் எந்த வயதில் புறப்பட்டிருக்கும் . 

இருவரும் படிப்பை இடையில் முடித்துக் கொண்டு தங்கள் ஊரில் இருந்து மதுரைக்கு வந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ( இனி கணவன் - மனைவி என்ற சொல் கிடையாது ) பையனுடைய ஊர் சிவகாசி , பொண்ணு ஸ்ரீவில்லிப் புத்தூர் . 

முதலில் இவர்கள் இழந்தது கல்வியை  , இத்தனைக்கும் பையனை விட பொண்ணு படிப்பில் சுட்டியாக இருக்கிறார். இனிமேல் படிக்காலாம் என்றால் முடியவில்லை. ஏனெனில் இவர்களுக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் எதை பற்றி கவலைபடாமல் இருந்ததால் கல்வி இவர்களை விட்டு மிக துராம் போயின . நட்பு வட்டம் எப்போதும் போல் கொஞ்சம் கொஞ்சமாய் விலகி போயிருக்கின்றனர்.


வேலைக்கு போனதும் ஒரே நிறுவனத்தில்.போன இடத்திலும் காதல் ? குறைய வில்லை . எப்போதும் போனில் பேச்சு , போனில் இல்லையென்றால் நேரில் . நிறுவனம் சும்மா இருக்குமா வேறு வேலை பார்த்துக் கொள் என்றவுடன் உடனே சரி என்று வந்து விட்டனர் . அவ்வளவு பொறுப்பு .


பெறோர்கள் இவர்கள் அருகில் இல்லை , உறவினர்கள் இல்லை ,நண்பர்கள் இல்லை . இத்தனைக்கும் இவர்களின் பெற்றோர்கள் பொருளாதார வசதியில் குறைந்தவர்களும் அல்ல .


ரம்ஜான் தினத்தன்று ஷாஜகானிடம் கேட்டேன் .அப்பாவிற்கு வாழ்த்து சொன்னாயா என்று . பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னான். லட்சுமியிடம் என்ன ரம்ஜான் பிரியாணி என்ன ஆச்சு என்று கேட்டேன் , முதல்ல அவன் பெயர மாத்தனும் அப்படின்னு சொல்லுது.

இவர்களின் படிப்பை சரியாக முடித்து சரியான வேலையில் அல்லது ஏதேனும் தொழிலில் ஈடுபட்டு வெற்றி அடைந்த பிறகு பெற்றோரிடம் தெளிவாக புரிய வைத்திருந்தால் காதலின் உண்மையான வெற்றி கிடைத்திருக்கும்.


காதல் என்பது புரிந்து வரும் போது காதலர்களைக் காட்டிலும் அருகில் இருப்பவர்கள் மகிழ்ச்சியாய் இருப்பார்கள்.


மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா


1 comment:

  1. /// பெற்றோரிடம் தெளிவாக புரிய வைத்திருந்தால் காதலின் உண்மையான வெற்றி கிடைத்திருக்கும். ///


    உண்மை...

    பல பேருக்கு 'மயக்கத்தில்' தெரிவதில்லை...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete

கருத்து மேடை