குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Monday 14 November 2011

சரக்கு , சாமி , நாம்


வணக்கம்


முன் குறிப்பு --  உருவாக்குவதும் , அழிப்பதும் நம்மை போன்ற மனிதனே


என்னுடைய நெடு நாள் நண்பர் ( அலுவலக ரீதியில் ) பாண்டி கோவிலில் சாமி கும்பிடுதாகவும் அவசியம் வரவும் என தொலைபேசியில் அழைத்தார் .

 நான் போகலாம் என நினைத்தாலும் வேறு நண்பர்கள் எவரேனும் இருந்தால் எனக்கு துணையாய் இருக்கும் என்று சம்மந்தப்பட்ட நண்பரை அழைத்தேன்.
அவரும் தயாராய் இருந்தார். அவரின் வாகனத்தில் இரண்டுபேரும் புகைப்பட்டோம்.

நான் பாண்டி கோவிலுக்கு விருந்துக்கு செல்வது இது முதல் முறை. நண்பர் வேறு எதோ விசயத்துக்கு வேண்டி இருந்தார் போலும்.அது நடந்ததால் கடந்த 5 வருடங்களாக குடும்பத்தினருடன் , சொந்த பந்தங்களையும் , நண்பர்களையும் அழைத்து விருந்து கொடுத்து வந்திருக்கிறார்.

இந்த முறையும் இது மிக சிறப்பாக நடந்தது.நானும் கலந்து கொண்டேன்.


 நான் பார்த்த விஷயங்கள் எனக்கு புதிதாக இருந்தது.


 வசதி படைத்தவர்கள் மட்டுமே சில சாமிகளை வணங்கி வருகின்றனர் .அதை போலவே வசதியாய் இருப்பது போல் காட்டிகொண்டிருக்கும் நடு நிலை பொருளாதாரம் படைத்தவர்களும் சில சாமிகளை வணங்கி வருகின்றனர்.அதுக்கும் கீழே உள்ள மனிதர்களும் சில சாமிகளை வணங்கி வணங்கி வருகின்றனர்.


 திருப்பதி என்ற சாமி ஒரு சிலரின் நம்பிக்கை உருவான சாமியாக இருக்கிறார்.
 அம்மன் போன்ற சாமிகள் சில நடுத்தர குடித்தன மக்கள் அவர்களின் நம்பிக்கை உருவான சாமியாக உள்ளார். இதையும் மீறி பல மக்களின் கடவுளாக பல சாமிகள் உள்ளனர்.


 ஆனால் பாண்டி கோவில்ற்கு போன போது இது எதுவும் இல்லாதது போன்ற தோற்றம் உருவானது.ஏனெனில் அணைத்து வகை மனிதர்களும் ஒருங்கே சங்கமித்திருந்தனர்.வந்த காரணம் எல்லோருக்கும் புரிந்திருக்கும்  . அங்க அவ்வளவு சரக்கு ,அவ்வளவு கறி .


ஒரு சில காய் கறிகளை மற்றும் சில கறி வகைகளை ஒரு சிலரே சாப்பிட்டு வந்தும் ,இருக்கும் காய் கறிகளை வைத்து குடும்பம் நடத்தும் சிலரும் ,கிடைக்கும் கறிகளை வைத்து குடும்பம் நடத்தும் இந்த இந்தியாவில் தான் உள்ளனர்.


மதத்தில் உள்ள உட் பிரிவுகளை ஒழித்தாலே போதும். மத ஒழிப்பே தேவை இல்லை என நினைக்கிறேன்,



பின் முறிப்பு. -- யாருக்கு எந்த சரக்கு வந்துச்சு அப்படிங்கிறது இன்னொரு பதிவுல போடறேன்




1 comment:

கருத்து மேடை