குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Friday 18 November 2011

முடியல்ல .....

வணக்கம்


நேத்து நாள் முழுசும் ஒரே யோசனை .இன்னக்கு என்ன பதிவு போடலாம் அப்படின்னு.யோசிச்சு, யோசிச்சு நாள் போச்சே ஒழிய ,எதைப் பத்தி எழுதறதுன்னு படிபடவே இல்ல.கருத்துக்கு அவ்வளவு பஞ்சமாகி போச்சான்னு ( எனக்கு தான் )என்ன பண்ணலாம்னு யோசிச்சு ,ஒரு முடிவு எடுத்தேன்.


திரட்டிகளில் எந்த பிரிவில் இந்தப் பதிவை இணைப்பது என்று ஒரு ஆப்சன் இருக்கு இல்லையா,அப்படி ஒரு ஆப்சன் எனக்குள்ள ஒடிச்சு.இன்னைக்கு ஆக்கபூர்வமான விஷத்தை ,மன்னிக்கவும் விசயத்தை பதிவ போட்டுறதுன்னு
முதல்ல கட்டுரை எழுதலாம் அப்படின்னு யோசிச்ச உடனே எதை பத்தி கட்டுரை எழுதறதுன்னு ஒரு உள்குத்து ஆகி நடப்பு செய்திகளை பத்தி விமர்சனம் எழுதலாம், அதுவும் நடுநிலையாய் என முடிவு எடுத்து இரவு முழுசும் மனசுக்குள்ளயே ஒரு வடிவம் கொடுத்து தூங்கிட்டு காலையில மொத நாம போட்றனும் அப்படி நெனைச்சு தூங்கப் போயிட்டேன்.காலையில எந்திருச்சு பார்த்த நாம நெனைச்ச சேதியே அக்கு வேறு,ஆணி வேற பிரிச்சு ,பதிவ போட்டுட்டு பல பேரு தூங்க போயிருக்காங்க.அதில ஒரு சந்தோசம் என்னன்னா நாம நெனைச்ச கருத்த அப்படியே பிரதிபலிச்சது தான்.

சரி இனி நடப்பு சேதியே நம்ம யோசிச்சு எழுதறதுக்குள்ள பல பேரு பதிவ போடறாங்க ,இது நமக்கு சரிப்படாது. தொழில்நுட்பம்,அறிவியல்,வரலாறு,சமூகம்,

 இதெல்லாம் நமக்கு படிக்கதான் தெரியும்.( அதே பெரிய விஷயம் ) கதை ,கவிதை இந்த மாதிரி எதாவது எழுதிருவோம் ,ம்ம்ஹும் திரும்பி முருங்கை மரம் தான்.சரி அந்த மாதிரி ,இந்த மாதிரி ஜோக்க எழுத வெண்டியதி தான் ,படிக்கிறவங்களுக்கும்,போட்ற எனக்கும் ( அய்யா பதிவ சொன்னேன்பா ) ஒரே குஜாலா இருக்கும் அப்படின்னு யோசிச்சா ,சொந்தமா எதுவும் ஓடல்ல ,படிச்ச பழசே நினைவுக்கு வருது.


எதுவும் சரிப்பட்டு வரல்ல ,முடிவா எத எழுதினாலும் சொந்த சரக்கா , அட படிக்கிற எல்லாரும் கொஞ்சம் நிப்பாட்டிட்டு ரெண்டு கைய உபயோகிச்சு கை தட்டுங்க . சரக்கு கெடச்சிருச்சு ,ஆமாங்க நான் சரக்கடிச்ச அனுபவம் தான் இந்தப் பதிவு.


முடியல்ல இல்ல , பயப்பட வேணாம் சரக்கு அடிச்சா கிடைக்கும் நன்மை,தீமை பத்தி கண்டிப்பா கிடையாது.அது அடிச்சி பார்த்து பார்த்துக்குங்க.
வாங்க என்ன நடக்குதுன்னு பாருங்க.


அப்போ எனக்கு 24 வயசு இருக்கும் ,இந்த பதிவை படிக்கும் என் நண்பர்கள் இந்த என்னை குறித்து கவலை படவேண்டாம்.கூட ,குறைய இருந்த அந்த வயசே மனசில நெனச்சுக்கிட்டு படிங்க.பரிசு சீட்டு நிறுவனத்தில் வேலை பார்த்துகொண்டிருந்தேன்.லாட்டரின்னு டமில்லேயே சொல்லியிருக்கலாம் விடுங்க ,நான் எதுவும் படிக்காத காரணத்தினால ( பதிவப் படிச்சவன், படிப்ப படிக்காதவன் ) எனக்கு நண்பர் வட்டம் குறைவு.பத்தாவது வரை என் கூட படிச்ச பலர் மேல போயிட்டாங்க  , (வாழ்க்கை தரத்தில் ) என் சிந்தனை ஒத்த உடைய ( வெங்காயம் ) சில நண்பர்கள் வட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


டாஸ்மாக் எல்லாம் அப்போ கிடையாது,எல்லாம் தனியார் வசம் தான் ,பெர்மிட் ரூமை காட்டிலும் பல கடைகளில் வசதி அதிகமா இருக்கும்.அதுவும் டவுன் ஹால் ரோட்ல இருக்கிற j p ஓய்ன்ஸ் ஷாப் தான் எங்களுக்கு பிடித்தமாக இருந்தது .என்னுடைய குடிக்கும் தகுதி ஒரு முழு பீர் ,அதற்கு மேல் எனக்குள் போனால் ,வீட்டிற்கு போக ஆட்டோவை தான் நட வேண்டி இருக்கும்.மத்தவங்க எல்லாம் ரெண்டு முழு பீர் சாப்பிடுவாங்க , நானும் ரெண்டுக்கு டிரை பண்ணி வாந்தி தான் எடுத்துருக்கேன் .

அது ஒரு பீர் காலம்.

விதி வசத்தால் ( ஓடிபோறதுக்கு ஒரு புனைக் காரணம் ) நண்பர்கள் தயவோடு சென்னையில் ஒரு வேலையில் சேர்ந்தேன்.நான் வேலைக்கு போன துறை கேபிள் டி வி அடிப்படயாக கொண்டது . பயங்கர சர்வ சாதாரணமாக ,நம்ப முடியாத ஆட்கள் பணக்காரர்கள் ஆகி கொண்டிருந்தார்கள் .( 1999 ல் நான் போனப்ப சார்) அதுனால காச,ரூபாய தண்ணி மாதிரி செலவு செய்வாங்க .எப்டி தண்ணியே மேட்ச் பண்ணிட்டேன்.


அலுவலக ரீதியா ஒரு நண்பர் அறிமுகமானார் .நிற்க பதிவு கொஞ்சம் நீளமா போறதால ,இதன் தொடர்ச்சி அடுத்த பதிவா போடறேன். அடுத்த பதிவு எல்லாம் வேணாம்னு பீல் பண்ணுனா. நிறுத்த ஒரு வழி இருக்கு அதாகப்பட்டது,இந்த பதிவிற்கு குறைந்த பட்சம் எல்லா திரட்டிகளிலும் 10 ஒட்டு விழனும்,இல்ல பின்னூட்டம் பிச்சிகிட்டு போகணும் ,இது ரெண்டும் நடந்த கண்டிப்பா தொடர் பதிவு கிடையாது , 

இது ரெண்டும் நடக்காது என்கிற உண்மையுடன் ,அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,



அவனி சிவா 



































1 comment:

  1. குடி வரலாறு தாங்க முடியலையே?

    ReplyDelete

கருத்து மேடை