குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Wednesday, 14 November 2012

ஆரோக்யமா வாழணம்ன்னா லவ் பண்ணுங்கப்பா.......வணக்கம்

காதலிப்பவர்களுக்கு கண் தெரியாது என்பது முட்டாள்களின் வாதம் என்று அதிரவைக்கின்றனர் ஆய்வாளர்கள். காதலில் விழுந்தவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்குமாம் அதற்கான ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும் என்று கூறி காதலர்களின் வாழ்வில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றனர் ஆய்வாளர்கள்.

கண்ட உடனே காதலில் விழுபவர்கள் சிலர். பேசி பழகிய பின் காதலிப்பவர்கள் சிலர் காதலில் 
 விழுந்துவிட்டால் அவர்களுக்கு இறக்கை முளைத்துவிடும். கண்களை திறந்து கொண்டே காதலிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்கின்றனர் நிபுணர்கள். காதலிக்க ஆரம்பித்த உடன் அவர்களின் உடலில் நிகழும் ரசாயன மாற்றம் என்னென்ன என்று நிபுணர்கள் பட்டியிலிட்டுள்ளனர். நீங்களும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.

பட்டாம்பூச்சி பறக்கும்


உங்களுக்கான நபரை நீங்கள் கண்ட உடன் மச்சி இவதாண்ட உன் ஆளு என்று மூளை மணியடிக்க ஆரம்பித்து விடுமாம் ( அப்படியா?) அப்போது மூளையில் டோபமைன் எனப்படும் ரசாயனம் சுரக்குமாம். அது உடலுக்கு சக்தியை தருவதோடு மூளையையும் சுறுசுறுப்பாக்குகிறதாம். அதனால்தான் காதலிப்பவர்களின் கனவுகளில் வானவில் வருகிறது. அவர்களுக்கு இறக்கை முளைக்கிறது. அவர்கள் செல்லும் இடமெங்கும் வண்ணத்துப்பூச்சி சிறகடிக்கிறது. ( இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள பழைய பாரதிராஜா படத்தை பார்க்கலாம்)

உடல் மெருகேறும்


காதலிப்பவர்கள் உடல் கட்டுப்பாட்டோடு அழகாக இருக்குமாம். அவர்களின் உடலில் ஆட்டோமேடிக்காக neurotransmitter அதிகரிக்குமாம். அட்ரீனலின் உற்பத்தி சிறிதளவு குறையுமாம். அதனால் அவர்களுக்கு பசி உணர்வே ஏற்படுவதில்லை. ஜிம் போகாமலேயே உடலில், முகத்தில் ஒரு பளபளப்பு ஏறியிருக்குமாம். அதனால் காதலில் விழுந்தவர்களை பையன் ஒரு மார்க்கமாவே இருக்கான் என்னன்னு கவனிங்க என்று அப்பா, அம்மாவிடம் உறவினர்கள் உசுப்பேற்றி விடுகின்றனர்.

புத்திசாலியாவார்கள்


காதலிப்பவர்கள் முட்டாள்களா? யார் சொன்னது. அப்படி சொல்பவர்கள்தான் முட்டாள்கள், காதலின் அருமை தெரியாதவர்கள். காதல் உண்மையிலேயே முட்டாளாக இருப்பவர்களைக் கூட அறிவாளியாக்குமாம். காதல் வசப்பட்டவர்களுக்கு மூளை செல்களை புதிதாக வளரச் செய்யும் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது என்று இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இளமை திரும்பும்


காதலிப்பவர்களுக்கு முதுமை ஏற்படாதாம். அவர்கள் என்றைக்கும் இளமையாக இருப்பார்களாம். அந்த அளவிற்கு அவர்களுக்கு இளமையை தக்கவைக்கும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன் சுரக்குமாம். காதலிப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பதால் அவர்களுக்கு கவலை என்பதே ஏற்படாதாம்.

நோய் தாக்காது

காதலிப்பவர்களை விட ஜோடி கிடைக்காமல் தனியாக இருப்பவர்கள்தான் விரைவில் மரணத்தை தழுவுகின்றனராம். காதலிப்பவர்களுக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாதாம். ரொமான்ஸ் மூடில் இருப்பவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பு குறைவாகத்தான் சுரக்குமாம். காதலிப்பவர்களுக்கு இதயநோய் என்பதே ஏற்படாதாம்.

காதலிப்பவர்களுக்கு இவ்வளவு நன்மைகள் இருக்கிறதாம். இன்னமும் ஏன் வெயிட் பண்றீங்க,போய் சீக்கிரம் லவ் பண்ணுங்கப்பா!
 
 
 
 
மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா     

2 comments:

கருத்து மேடை