குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Monday 17 December 2012

காவல் துறை பாதுகாப்போடு - டாஸ்மாக்

 வணக்கம்


  எங்கள் பகுதியில் ஒரே சாலையில் இரண்டு டாஸ்மாக் கடைகள் உண்டு. ( எந்த ஏரியா என்று கேட்க்கக் கூடாது ) கடை என்னவோ பாத்து மணிக்கு தான் திறப்பார்கள் . ஆனாலும் ஆறு மணி முதல் சரக்கு தாராளமாய் கிடைக்கும். இரண்டு கடைகள் போக அதனருகில் இருக்கும் அணைத்து பொட்டிக் கடைகளிலும் சரக்கு கிடைக்கும். குடிமகன்களின் அட்டகாசம் காலையில் இருந்து ஆரம்பித்து இரவு வரை நீடிக்கும். இன்று காலை ஒன்பது இருக்கும் எப்போதும் போல் அலுவலகம் நோக்கி கிளம்பி வந்துக் கொண்டிருந்தேன்.கடைகளின் முன்பு காவல் துறை ஆய்வாளர் கடையின் அருகே உட்கார்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தார் . ( காபி தான் ) நானும் ஏதோ நல்ல விஷயம் நடக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டேன். ஆனாலும் சரக்கு வியாபாரம் நடந்து தான் கொண்டிருந்தது. மின்சாரம் இருக்குமோ , இருக்காதோ என நினைத்ததில் இந்த விஷயம் மறந்துப் போனது. 



விஷயம் இப்போது  தான் விளங்கியது.


 

இன்று டாஸ்மாக் கடைகளில் பூரண போலீஸ் பாதுகாப்புடன் மது வாங்க ஏற்பாடு

பா.ம.க. இன்று டாஸ்மாக் கடைகளுக்குப் பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு செய்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள 6,823 மதுக் கடைகளுக்குப் போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
இன்று காலை கடை திறக்க முடியுமோ, முடியாதோ என்ற அச்சத்தில், கடை ஊழியர்களை நேற்று இரவே கடைகளில் தங்க வைத்தனர் போலீஸார்.  இதற்கு ஊழியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இரவில் பா.ம..கவினரோ அல்லது சமூக விரோதிகளோ வந்து தாக்குதல் நடத்தினால் யார் பொறுப்பு ஏற்பது என்று அவர்கள் புலம்பியதை போலீஸ் கண்டுகொள்ளவில்லை.
நேற்று இரவு ரோந்து போலீசாரையும், டாஸ்மாக் கடை பகுதியில் ரோந்து செல்லும்படி உயர் போலீஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


 தமில்நாடு வெளங்கிரும் . - சரக்கு பற்றின விஷயம் என்பதால் தமிழ்நாடு இப்படி ஆகிவிட்டது.


மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா 

 

No comments:

Post a Comment

கருத்து மேடை