குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Monday 25 February 2013

மூதேவி வரம் கொடுத்தாலும் நல்லது நடக்கும்



வணக்கம்  




செல்வம் என்ற வியாபாரிக்கு மிகவும் பசித்தது


அப்போது தூரத்தில் ஒரு மாமரம் தென்பட்டது.அதனருகில் சென்றான்.மாமரத்தில் காய் கனிகள் காய்த்து தொங்கின.அதன் கீழே ஒரு முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார்.செல்வன் தனது பசியை போக்க மாம்பழம் பறித்து சாப்பிட எண்ணினான்.ஆனால் எட்டவில்லை.எனவே அவன் கல்லை எடுத்து ஒரு பழத்தை குறி வைத்து எறிந்தான்.ஆனால் பழம் விழவில்லை.அந்த கல்தான் மரத்தில் பட்டு  மீண்டும் வந்து அந்த முனிவரின் தலையை பதம் பார்த்தது.

அவர் உனக்கு மன்னிப்பே கிடையாது.இதோ வாங்கிக்கொள் என் சாபத்தை;இன்னும் ஒரு வருடத்தில் நீ இறப்பாய்.”

அவன் கெஞ்சினான் கதறினான்.அவனைக் கண்டு முனிவர் மனமிறங்கினார்.

“கொடுத்த சாபம் கொடுத்ததுதான்.நீ இறந்தே தீருவாய்.ஆனால் ஒன்று மட்டும்தான் என்னால் கூற முடியும்.நம்பிக்கையோடு இரு.ஒருவேளை உனக்கு விமோசனம் கிடைக்கலாம்.” என்று கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு சென்றார்.

“எப்படியும் ஒரு வருடத்தில் இறக்கப்போகிறோம்;அதனால் இனிமேலாவது நல்லது செய்வோம்.அப்போதுதான் நமக்கு சொற்கமாவது கிடைக்கும்.” என்ற முடிவுடன் தனது ஊருக்கு சென்றான்.தனது சொத்துக்களை எல்லாம் விற்று ஏழைகளுக்கு உதவி செய்து வந்தான்.எட்டு மாதங்கள் ஓடின.அவன் சொத்துக்கள் அனைத்தும் கரைந்தன.எனவே அவன் துறவறம் மேற்கொள்ள நினைத்தான்.

எனவே ஒரு துறவற மடத்தில் சேர்ந்தான். 

“சீடர்களே! இன்று உங்களூக்கு தவத்தை பற்றி கூறப்போகிறேன்.நமது ஐம்புலங்களையும் கட்டுப்படுத்தி ஒரு நோக்கத்திக்காக ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வேண்டி செய்வதுதான் தவம்....” இவ்வாறாக அவர் கூறிக்கொண்டிருந்தார்.

“குருவே நான் ஸ்ரீதேவியிடம் ஒரு வரம் கேட்கவேண்டும். எத்தனை காலங்கள் தவம் செய்தால் எனக்கு ஸ்ரீதேவியின் தரிசனம் கிடைக்கும்?” என்று ஒருவன் கேட்டான்.

“ஒரு வருடம் கடுமையான தவம் செய்தால் ஸ்ரீதேவி திரிசனம் கிட்டும்.” என்று குரு கூறினார்.

“மூன்று மாதங்கள் தவம் செய்தால் எந்த கடவுளின் தரிசனம் கிடைக்கும்?” என்று செல்வன் கேட்டான்.ஏனென்றால் அவன் இன்னும் உயிரோடு இருக்கப் போவது நான்கு மாதங்கள்தானே.

குருவுக்கு கோபம் வந்துவிட்டது.

“மூன்று மாதங்கள் தவம் செய்தால் மூதேவி தரிசனம்தான் கிடைக்கும்.” என்று ஒருவித எரிச்சலோடு கூறினார்.அவனோ அதை நம்பிவிட்டான்.

ஆனால் மூதேவி என்னும் தெய்வம் நமக்கு கஷ்டங்கள் கொடுப்பது.அதனால் யாரும் அதனை வேண்டி தவம் செய்யமாட்டார்கள்.ஆனால் இவனோ தவம் செய்ய முடிவெடுத்துவிட்டான்.
இறுதியில் மூதேவி மகிழ்ந்து அவன் கண்முன் தோன்றினாள்.
“மானிடா! உன் தவத்தைக் கண்டு மெச்சினோம்;என்ன வரம் வேண்டும் கேள்!”

“நான் நூறு வயது வரை உயிரோடு வாழ வேண்டும்.எனக்கு அந்த வரத்தைக் கொடுத்தருளுங்கள்.”

“நான் யாருக்கும் வரம் கொடுப்பதில்லை.ஆனால் உன் நம்பிக்கையான தவம் உன்னை காப்பாற்றியது.நீ கேட்டவாறே நடக்கட்டும்” என்று வரம் வழங்கி சென்றுவிட்டாள்.

அப்போது ‘உன் நம்பிக்கை உனக்கு விமோசனம் தரும்’ என்று முனிவர் கூறியது ஞாபகம் வந்தது.தனது குருவிடம் நடந்தவற்றை கூறினான்.அவரும் அவனது நம்பிக்கையை பாராட்டினர்.

அவன் கடைசிவரை சன்னியாசியாக இருந்து நிறைய தவ வலிமை பெற்று மக்களுக்கு நிறைய வரங்கள் கொடுத்தான்.இறுதியில் நூறு வயதில் இறந்து சொர்க்கம்  சேர்ந்தான்.

மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா

No comments:

Post a Comment

கருத்து மேடை