குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Wednesday 27 March 2013

இலங்கைக்கு வந்தா ரத்தம் - தமிழனுக்கு வந்தா தக்காளி சட்னியா ?

வணக்கம்


போராட்டம் வேறு திசையில் , அதே நேரத்தில் சரியான பாதையில் போவது போல் தெரிகிறது.நான் குறிப்பிடுவது ஐ பி எல் கிரிக்கெட்டில் இலங்கை விளையாட்டு வீரர்களை ஆட அனுமதிக்க கூடாது என்பதற்கு ஒரு மித்த ஆதரவு கிடைத்துள்ளது . ஆனாலும் சில பிரபலங்கள் விளையாட்டை விளையாட்டாய் தான் பார்க்க வேண்டும் என தங்களின் கருத்தை முன் வைக்கின்றனர். அது அவர்களின் கருத்தாய் இருக்கட்டும். 


ஒரு செய்தியை இணையத்தில் பார்த்தபோது பகிர்ந்துக் கொள்ளத்தோன்றியது.



இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் சென்னையில் ஆட அனுமதி மறுப்பு, வட இந்திய ஊடகங்களிலும் வட இந்தியர்களின் பேஸ்புக் டிவிட்டர் பக்கங்களில் விமர்சனத்துக்குள்ளாகிய தமிழர்கள்.
சென்னை கிங்ஸ் அணி இலங்கை வீரர்களை வைத்து ஆடப்போவதில்லை என்றும் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் இலங்கை வீரர்கள் சென்னயில் ஆடுவதற்கு தெரிவித்த எதிர்ப்பையும் தொடர்ந்து வட இந்திய ஊடகங்களும், வட இந்திய ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் களில் தமிழர்கள் மேல் கடும் வெறுப்பை உமிழ்ந்துள்ளார்கள்.
தமிழர்களின் இந்த எதிர்ப்பை பொலிட்டிக்கல் ரேசிசம் என்றும் ரீஜினல் சாவனிசம் என்றும் விமர்சிக்கிறார்கள். விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டுமாம், விளையாட்டில் அரசியலை கலக்க கூடாதாம் என்றெல்லாம் இலங்கைக்கு வக்காலத்து வாங்கி வேதம் ஓதும் இவர்கள் தான் பாக்கிஸ்தான் வீரர்களை ஐபிஎல் லில் சேர்க்காமலும் பாகிஸ்தானோடு  பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடாமலும் தேசபக்தியை காண்பிப்பவர்கள்.


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா

No comments:

Post a Comment

கருத்து மேடை