குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Tuesday, 2 July 2013

சோற்றில் பூசணிக்காயை மறைக்க முடியும் - அரசியல்வாதிகள் கவனத்திற்கு

வணக்கம்


 மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பதிவிடுகிறேன்.( எழுதாம இருந்ததே நல்ல இருந்துச்சு. உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது ) நானும் பதிவு போடம இருந்தா யாரு நாட்டை காப்பாத்துவா.மறுபடியும் எழுத ஆரம்பித்தால் , எப்போதும் போல் மொக்கை பத்தி மொக்கையாய் ஒரு பதிவு போடலாம் என எண்ணினேன்.மொக்கை பத்தி யோசிக்கவே நெறைய ஹோம் வொர்க் செய்யணும் போல . (  ஹோம் வொர்க் என்றால் எதையாவது , எங்கயாவது சுடுவது ) அது இப்போ முடியல்ல , சீக்கிரம் அதுக்கு திரும்பிறேன்.

இப்போ பதிவின் உள்ளே போகலாம்.


முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த மாதிரி , என்று ஒரு பழமொழி அல்லது சொல் வாடை ஒன்று உள்ளது . அது எப்படி என நானும் யோசித்ததுண்டு . அப்படியே விட்ருவேன் எப்போதும் போல். சென்றவாரம் மகனின் பள்ளிக்கு சென்றேன் . அங்கு ஒருவர் மேடையில் இதற்கான காரணத்தை கூறினார் . சும்மா சொல்லக்கூடாது முன்னோர்கள் முன்னோர்கள் தான்.


ஒரு கிராமத்தில் ஒரு பையன் வேலை காரணமாக நகரத்திற்கு சென்று சில வருடங்களுக்குப் பிறகு திரும்பினான்.ஊரில் வந்து இறங்கியதும் , அவனைப் பார்த்து ,  அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள் .

அவன பாரு , யாருன்னு தெரியுதா ?

யாரு ?

தோப்புல பூசணிக்காய் திருடுன கந்தசாமி மகன்.

மகனும் அவர் தந்தையிடம் சென்று விளக்கம் கேட்டான்.அவரும் ஆமா தம்பி நீ ஊருக்கு போன சமயம் , தோப்பில் பூசணிக்காய் திருடுனேன் , அதன் அப்படி பேசிக்கிறாங்க .நீ அடுத்த முறை வரும் போது இந்த மாதிரி பேச்சு இருக்காது போய்  வா என்றார்.மகனும் கிளம்பி மீண்டும் சில வருடத்திற்குப் பிறகு மீண்டும் வந்தான். இந்த முறையும் அவனை  பார்த்து ஊரில் உள்ளவர்கள் பேசிக்கொண்டனர் .


அவன பாரு , யாருன்னு தெரியுதா ?

யாரு ?

நமக்கு எல்லாம் சோறு போட்டாரே , அவரோட புள்ள.


அவனுக்கு ஒன்று புரியவில்லை.தந்தையிடம் சென்று கேட்டான்.

அது ஒன்னும் இல்ல தம்பி .நீ போன முறை வந்த போது நான் பூசணிக்கா திருடுனேன்.அதுனால அப்படி பேசினாங்க . நீ போன பிறகு நான் இந்த ஊரில் இல்லாதவங்களுக்கு சோறு போட்டேன் , அவங்க இப்ப இப்பிடி பேசுறாங்க. இப்படிதான் நான் சோத்துல பூசணியை மறைச்சேன் என்றார்.

நீதி : முன்ன எப்படி இருந்திருந்தாலும் , நாம நம்முடைய நடவடிக்கை மாத்திகிட்டா நம்முடைய கேட்ட பேரு போயி நல்ல பேரு கிடைக்கும்.

மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா

2 comments:

  1. Hats off to you for sharing this info with us

    ReplyDelete
  2. அட, அந்த பழமொழிக்கு இதானா விளக்கம்?! அறிய தந்தமைக்கு நன்றி

    ReplyDelete

கருத்து மேடை