குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Monday, 8 July 2013

பொய்யை சொன்னால் நம்பும் மனைவி (கள்)

வணக்கம் 


கல்லானாலும் கணவன் , புல்லானாலும் புருஷன் - கணவரின் பெயரை உச்சரிக்க தயங்கும் அல்லது கூச்சப்படும் மனைவிகள் ( எனக்கு ஒரு மனைவி தான் ) இப்படிப்பட்ட யுவதிகள் இந்தக் காலத்திலும் இருக்கத் தான் செய்கிறார்கள். இந்தக் காலம் எனில் மனித இனம் தொடங்கிய காலத்தில் இருந்து இன்றைய 21 ஆம் நூற்றாண்டு காலத்திலும் , தாலிக் கட்டிய கணவர்களுக்கு ( கணவான்களுக்கு ) ஏற்றவாறே இருக்கிறார்கள்.அதிலும் கணவர்கள் சொல்லும் பொய்யான காரணத்தை அதாவது மனைவியை மடக்க அவர்கள் அதிகம் சொல்லும் ஒரே விஷயம் , உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பது தான். ( இதனையே பல விதமாய் சொல்லுவார்கள் ) .

ஏமாந்துக் கொண்டிருக்கும் மனைவிகளுக்கு ஒரு சின்ன கதை .இதனை படித்தப் பிறகாவது பொய் பேசும் கணவரை புரிந்துக் கொள்ளுங்கள்.( பொய் பேசும் கணவரின் மனைவிகள் மட்டும்.)







முந்தைய நாள் அதிகம் குடித்ததால், பயங்கரத் தலைவலியுடன் ஒரு நாள் காலை கண் விழித்தான்.. படுக்கைக்கு அருகே, 2 ஆஸ்பிரின் மாத்திரைகளும், குளிர்ந்த நீரும் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தான்.

அத்துடன், சலவை செய்யப்பட்ட தனது  மாற்றுத் துணிகள் டேபிளில் இருப்பதையும் கண்டான் ! தனது அறையும் ஒழுங்காக்கப்பட்டு மிக சுத்தமாக இருந்தது! மொத்த வீடுமே படு சுத்தமாக இருந்தது!

மாத்திரைகளை விழுங்கும்போது, டேபிளில் ஒரு குறிப்பைப் பார்த்தான் :

டார்லிங், உங்கள் காலை உணவு அடுப்பின் மேல் சூடாகவே இருக்கும், சாப்பிடுங்கள், நான் ஷாப்பிங் செல்கிறேன், ஐ லவ் யூ

சமையலறைக்குச் சென்றால்,  மனைவியின் குறிப்பு சொன்னது போலவே, சூடான காலை உணவோடு, பத்திரிகையும் தயாராகவே இருந்தது.

  மகன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

  மகனைப் பார்த்து, நேற்று இரவு என்ன தான் நடந்தது? என்று வினவினான் .

  அப்பா, நீங்கள் அதிகாலை 3 மணிக்கு மிக அதிகமான போதையில் வீட்டுக்கு வந்தீர்கள், நாற்காலியை உடைத்தீர்கள், கூடத்திலேயே வாந்தி எடுத்தீர்கள், தடுமாறி கதவின் மீது மோதி நெற்றியில் அடிபட்டுக் கொண்டீர்கள்! என்றான்.

குழப்பத்தின் உச்சத்துக்குச் சென்ற நான் பின் எப்படி வீடே அலம்பி விட்டது போல சுத்தமாகவும்,  காலை உணவு தயாராகவும் உள்ளது ? நியாயமாக, என்னுடன் பெரிய சச்சரவுக்கு அல்லவா உன் அம்மா தயாராக இருந்திருக்க வேண்டும் ? என்றான்

  மகன் அமைதியாக அப்பா, நேற்றிரவு அம்மா உங்களை தரதரவென்று படுக்கையறைக்கு அழைத்துச் சென்று, உங்கள் உடைகளையும், காலணிகளையும் களைந்தபோது, நீங்கள், 'விடு என்னை, நான் திருமணமானவன், என் மனைவியை மிகவும் நேசிப்பவன்' என்றீர்கள் என்றான்


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா

2 comments:

  1. நிஜம்தான் சகோ! அடுத்தவர் மீது அன்பிருந்தால் எந்த தவறுக்கும் மன்னிப்பு உண்டு.

    ReplyDelete
  2. அவனுக்கே அவனை நேசிக்காத குடிகாரன்...

    ReplyDelete

கருத்து மேடை