குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Thursday 13 October 2011

கந்தசாமியும், கடவுளும் ,காதலியும்

ஒரு சின்னக் கதை , ஒரு ஊருக்கு ஒரு சாமியார் வந்தார்.அவருக்கு தண்ணீர் தாகம் எடுத்தது .ஊர்வாசிகளிடம் தண்ணீர் கேட்டார்.எல்லோரும் அவரவர் வேலைகளில் மும்முரமாய் இருந்தார்கள்.யாருக்கும் கேட்கவில்லை.அவருக்கு கோபம் வந்தது , கேட்க்க வில்லை என்ற எரிச்சல் வேறு. அவர்களை பார்த்து சாபம் இட்டார்.பெருமாளே இந்த ஊரில் இனி மழை பெய்யகூடாது ,தண்ணீருக்கு தவிக்கணும்.( பெருமாள் சங்கை எடுத்து ஊதினால் தான் மழை வரும் என்பது ஐதீகம் , அதுவும் இல்லாம லாஜிக் எல்லாம் பார்க்கப்படாது ) பெருமாளும் சரின்னு ஓய்வெடுக்க சென்றார் .
             

ஆனா நம்ம கந்தசாமி மட்டும் வரப்ப வெட்ட ஆரம்பிச்சார்,அடுத்தடுத்த வேலைகளையும் செய்ய ஆரம்பிச்சார். பெருமாள் மேல இருந்து பார்த்து என்னடா இவன் மட்டும் ஏன் வேலை செய்றான், கேட்ருவோம் என வந்தார்.
ஏம்பா கந்தசாமி அதான் மழை எதுவும் வராதே நீ மட்டும் ஏன் இப்படி வேலை செய்ற என கேட்டார்.அதுக்கு கந்தசாமி " பெருமாளே நானும் எதுவும் வராதுன்னுசும்மா இருந்தேன் ,எனக்கு என்னோட வேலை எல்லாம் மறந்து போகும் , உனக்கும் சங்கை எந்த பக்கம் வச்சு ஊதுரதுன்னு மறந்துபோகும், சங்குல குப்பை,தூசி எல்லாம் சேர்ந்துரும் அப்படின்னார்.அட ஆமா அப்படின்னு சங்கை எடுத்து எதுவும் குப்பை அடைச்சிருக்க என ஊதிப் பார்த்தார் , மழை வந்தது.


இதுல என்ன நீதின்ன நாம எத்தனையோ வேலைகளை எதுக்காகவோ  பாதியில் கிடப்பில் போற்றுப்போம்.விடாம வேலை செஞ்சா கண்டிப்பா பலன் உண்டு. சீன முதுமொழி ஒன்று உண்டு
                        
" ஒரு மரத்தை நடுவதற்கு மிக சரியான காலம்
   இருபது ஆண்டுகளுக்கு முன்னால் வந்தது
   இப்போது மீண்டும் வந்திருக்கிறது "
------------------------------------------------------------------------------------------------------------------
இது சும்மா ஒரு அதுக்கு

கந்தசாமி அவருடைய காதலியோடு சுற்றுலா போனாரு ,போன எடத்தில நல்ல மழை ,ஊருக்கு திரும்ப முடியல ,சரி அங்கேயே இரவு தங்கி காலைல ஊருக்கு போகலாம் அப்படின்னு முடிவு பண்ணி ஒரு ஹோட்டல தங்கினாங்க .அது சிங்கிள் பெட் ரூம் , கந்தசாமிட்ட அவரோட காதலி இத பாருங்க இந்த கர்சீப நடுல வக்கிறேன்,நீங்களும் இந்த பக்கம் வரகூடாது , நானும் வரமாட்டேன் அப்பிடின்னங்க . அவரு சரி என்றார்.

மறுநாள் புறப்பட்டார்கள்,நடந்து வரும் வழியில் ஒரு பள்ளம் இருந்தது,அதை பார்த்த கந்தசாமி ,இங்கே பாரு எவ்வளவு பெரிய பள்ளம் ,இத நான் தாண்டவ என்றார். ஒடனே அவங்க ஆமாமா ஒரு கர்சிப தண்ட முடியல .இத தான்றராம்ம்

அத கேட்ட கந்த சாமி மொகத்துல  பிம்பிளிகி பிலாகி . 
               
--------------------------------------------------------------------------------------------------------------

கமென்ட் போடறதுன்னு முடிவு பண்ணிருந்தா ,இத மனசில வைங்க.

உங்களை கையால மூளையை பயன் படுத்துங்கள்.
மற்றவர்களை கையாள இதயத்தை பயன் படுத்துங்கள்.


மீண்டும் சிந்திப்போம்.



உண்மையுடன் 

அவனி சிவா

3 comments:

  1. முதல் ரெண்டு படங்களின் அளவை சிறுது பண்ணலாமே , பெரியதாக வலப்பக்கம் நீண்டு கொண்டு போகிறது .

    ReplyDelete
  2. //@ Labels: kathai, lovver //

    Labels- எல்லாம் தமிழில் குறிபிட்டால் திரட்டிகளில் வகை படுத்த எதுவாக இருக்கும் , அதே போல் நிறைய வகை குறிப்பிடுங்கள் , அப்போதான் அதிக நண்பர்கள் உங்க வலைபூவிற்கு வர வாய்ப்பு உள்ளது.

    ReplyDelete
  3. என் மூளை உங்களுக்கு இதயங்கனிந்த
    வாழ்த்துக்களை சொல்கிறது

    ReplyDelete

கருத்து மேடை