குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Thursday, 12 April 2012

ஆயுள் காப்பிட்டு ஆலோசகர்களின் அப்பாடக்கர் ஆலோசனைகள்

வணக்கம் 

ஒரு ஐந்து வருடத்திற்கும் மேல் இருக்கும் . பொதுத்துறை நிறுவனத்திற்கு நிகராக தனியார் நிறுவனமும் ஆயுள் காப்பிட்டு துறையில் நுழைந்தது. போட்டி பலமாகத்தான் இருந்தது.எதில் என்றால் யார் யாருக்கு ஆலோசனை என்ற பெயரில் அவருடைய டவுசரை அவிழ்ப்பது என்பதில்.

வருடத்திற்கு வெறும் பத்து ஆயிரம் ஒரு மூணு வருசத்திற்கு கட்டுங்க.பத்தாவது வருஷம் ஒரு லட்சம் அதுக்கு மேலயும் கிடைக்கும் என்று கூவல்.இதில் தனியாருடன் அரசின் பொதுத் துறை நிறுவனமும் சளைக்காமல் போட்டியிட்டது.இதில் தான் தனியாருடன் அரசின் நிறுவனமும் போட்டியிட்டு அனைவரையும் டவுசரை அவிழ்க்க உதவியது.


அதாகப் பட்டது நாம் கொடுக்கும் பணத்தை நமக்குப் பதிலாக நிறுவனம் பங்குச் சந்தையில் போடும்.அது குட்டிப் போட்டு குட்டி குட்டிப் போட்டு நமக்கு பெருசா கிடக்கும் என்றார்கள்.( பெருசா என்ன கிடைச்சதுன்னு போட்டவங்களை கேட்டுப் பாருங்கள் ) 


நிறுவனம் ஒரு திட்டத்தை போடுகிறது , அதனை மக்களிடம் கொண்டுப் போய் சேர்ப்பது ஆலோசகர்களின் வேலை.அவர்கள் என்ன செய்ய வேண்டும் ,அதில் இருக்கும் உண்மைத் தன்மையினை விலக்கி பிறகு அந்த திட்டத்தில்  சேர்த்துவிட வேண்டும்.நடந்தது என்னவென்றால் ஆலோசகர்கள் எல்லோரும் என்னமோ அவர்களே பங்குச் சந்தையை நடத்துவதுப் போல் , எல்லோரிடமும் உங்கப் பணம் நாற்பது மடங்கு ஆவதற்கு நான் கியாரண்டி என்றாகள்.எல்லாம் அவர்களுக்கு கிடைக்கும் தரகிற்கு தான்.என்பது அப்போது பலருக்கு தெரியவில்லை.


சமீபமாக எல்லா ஆயுள் காப்பிடு நிறுவனத்திற்குப் போய் பாருங்கள்.LIC நிறுவனத்தையும் சேர்த்து . பதினைந்து ஆயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை பங்குச்சந்தை பற்றிய எந்தவித விபரம் தெரியாதவர்கள் , தங்களின் பணத்தினை இத்துடன் முடித்துக் கொண்டு எங்களுக்கு சேர வேண்டிய பணத்தினை கேட்க , நிறுவனமும் உங்களின் பணம் இப்போது வெறும் நாற்பது சதமே உள்ளது என்று சொல்ல , பாவம் அவர்கள் அந்த அதிகாரிகளிடம் சண்டையிட்டு சென்று கொண்டிருக்கிறார்கள்.


இவர்களிடம் பணத்தை வாங்கி இந்த திட்டத்தில் இணையக் காரணமாக இருந்த அரைகுறை அப்பாடக்கர் ஆலோசகர்கள் யாவரும் தொடர்பில் கிடையாது.


1 comment:

  1. all the above problems because of Agents only. we have to find a good insurance agent. if you cant find like that, we should not choose ULIP (Share market investment plan). Insurance is must needed for every one. Product should be traditional plan. and the term should be minimum of 15 years. A important thing is insurance is not an investment its a security for family

    ReplyDelete

கருத்து மேடை