குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Sunday, 15 April 2012

கணக்குப் புலி எல்லாம் வாங்க 3 - கணக்கு விளையாட்டுக்கள்.

வணக்கம்


இரண்டு முறை கணக்கு விளையாட்டு பதிவை இட்டதில் நல்ல வரவேற்ப்பு இருக்கவே  மூன்றாவது முறை கணக்கு விளையாட்டு.வாங்க


ஒரு ஊருக்கு ஒரு பெரியவர் ஒருவர் வந்தார்.அவருக்கு பணத்தை இரட்டிப்பாக்கும் தந்திரம் தெரியும் என்று ஊரார் பேசிக் கொண்டார்கள்.அதை கேள்விப் பட்டதும் நம்ம கந்தசாமி அவரிடம் போனான்.பெரியவர் அவரின் என்னத்தை புரிந்து கொண்ட " உண்மை தான் தம்பி .பணத்தை இரட்டிப்பாக்கும் விதை எனக்குத் தெரியும் ,நீ நூறு ருபாய் கொண்டு வந்து இந்த மந்திரப் பெட்டியில் போட்டால் அது  உடனே இரு நூறு ரூபாயாக மாறிவிடும் " என்றார்.


கந்தசாமி தன்னுடைய பணத்தை எடுத்து அதிலிருந்து நூறு ரூபாய் போடப் போனான்.பெரியவர் தடுத்தார்." பொறு கந்தசாமி உன் பணத்தை கண்டிப்பாய் இரு மடங் செய்து தருகிறேன் ,ஆனால் ஒரு நிபந்தனை ஒரு முறை இரட்டிப்பாக 120 ரூபாய் எனக்கு காணிக்கை செலுத்த வேண்டும் என்றார்.கந்தசாமி ஒப்புக் கொண்டான்.


பெரியவர் மந்திரப் பெட்டியை திறந்தார்.கந்தசாமி தன்னிடமிருந்த பணத்தை எல்லாம் அதில் கொட்டினான்.பெரியவர் கண்களை மூடி எதோ மந்திரம் போட்டார்.பிறகு கண்ணை திறந்தார்.என்னே ஒரு ஆச்சரியம் . கந்தசாமி போட்ட பணம் இரு மடங்கு ஆகயிருந்தது.உடனே கந்தசாமி 120 ரூபாயை எண்ணி எடுத்து அவரின் பாதங்களில் காணிக்கையை வைத்தான்.மீதி பணத்தை எடுத்து பையில் போட்டுக் கொண்டான் .

ஆசை விடவில்லை .மீண்டும் மந்திரப் பெட்டியில் தன பணத்தைப் போட்டான்.பெரியவருக்கு மீண்டும் ருபாய் 120  காணிக்கை செலுத்தினான்.

மூன்றாம் முறையும் மந்திரப் பெட்டியில் தன்னிடமிருந்த பணத்தை எல்லாம் போட்டான்.மறு படியும் அந்தப் பணம் இரு மடங்கு ஆனது.வழக்கம் போல் பெரியவருக்கு காணிக்கை வைத்ததும் கந்தசாமி முகம் வாடிப் போனது.மனம் குழம்பியது.கண்களில் நீர் மல்கியது.ஏன் என்றால் , அவன் பையில் ஒரு ருபாய் கூட மீதி இருக்கவில்லை.பாவம் கந்தசாமி

பெரியவர் அவன் மேல் இறக்கம் கொண்டார்." தம்பி உழைத்துப் பிழை .அது தான் பெருமை தரும் வழி. கஷ்டப்பட்டு சம்பாதித்த காசு தான் நிற்கும்,அதுவே உனக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் " என்று அறிவுரை கூறினார்.


நாள் கதையாய் இருக்கே.அனால் எனக்கு ஒரு சந்தேகம் , கந்தசாமி அந்த பெரியவரிடம் போனப் போது , அவனிடம் இருந்தப் பணம் எவ்வளவு .


எவ்வளவு என்று பின்னூட்டாம் இடலாம் ,அல்லது என்னுடைய மின்னஞ்சலில் cvashree@gmail.com என்கிற முகவரியிலும் பதில் இடுங்கள்.

மீண்டும் சிந்திப்போம்

அவனி சிவா

2 comments:

கருத்து மேடை