குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Monday 28 May 2012

சுவனப் பூங்கா - கல்லறைத் தோட்டம் - கைலாசபுரம்

வணக்கம் 


அப்போலோ டாக்டராக இருந்தாலும் , அமிஞ்சிக்கரை டாக்டராக இருந்தாலும்  இல்லை அந்தந்த ஊரில் இருக்கும் அப்பாடக்கர் டாக்டர்  ஆக இருந்தாலும் ஒரு நாள் மேலே குறிப்பிட்ட இடத்திற்குப் போயி ஆக வேண்டும். இனி வரும் காலங்களில் ஒரு வேளை உயிரின்  உன்னதத்தை கண்டுப் பிடித்து , வாழ்நாள் இன்றி வாழலாம் எனும் மருத்துவத்தை கண்டுபிடிக்காதவரை. உங்களிடம் கோடி ரூபாய் இருந்தாலும் , கோடி வீட்டில் வாழ்ந்தாலும் , நீங்கள் டாக்டராக இருந்தாலும் உடம்பு  கேடிற்கு பணத்தை செலவு செய்ய  வேண்டும் . இன்றைய அளவில் மருத்துவமனை என்பது , ஏதோ நாகரீகமாய் இருக்கும் அணைத்து விசயங்களும் அடங்கி இருக்கும். ஆனால் சமீபத்தில் நான் ஒரு மருத்துவமனைக்கு சென்றேன்.அதன் அனுபவமே இந்த பதிவு.

மதுரையின் மிக முக்கிய பகுதியான அண்ணா நகரில் இருக்கிறது சுந்தரம் கிளினிக். டாக்டரின் பெயர் நடராஜன் என்பதாகும்.இருவதுக்கு பத்து என்கிற அளவில் ஒரு இடம் .அதன் பிற்பகுதியில் அவருடைய வீடு. அந்த மொத அறையினில் நடுவில் ஒரு மேஜை போட்டு ஒரு இருக்கை .  அதுவே மருத்துவர் உட்காரும் இடம். அவருடைய வலது புறம் ஒரு பெஞ்ச் இரண்டு பேர் அமரும் வசதிக் கொண்டது. இடது புறமும் ஒரு பெஞ்ச் .முறையே ஆண்களுக்கும் , பெண்களுக்கும் . வலது  மூலையில் ஒருவர் படுத்துக் கொள்ளும் அளவு மேலும் ஒரு பெஞ்ச் .ட்ரிப்ஸ் எதாவது போட வேண்டியது வந்தால் அது உபயோகப் படுத்துவார் போலும். இடது பக்கம் ஒரு அலமாரி அதில் தான் மருந்துக்கள் இருக்கின்றன.

காலை பத்து முதல் மதியம் ஒரு மணி வரை , பிறகு இரவு ஏழு மணி முதல் நோயாளிகள் வரும் வரை பார்க்கிறார்.மிகப் பெரிய அதிசயம் என்னவென்றால் முதலில் நாம் போனாலும் பெயர் எழுத ஒரு சிகப்பு சுடிதார் போட்ட பிகர் கிடையாது. நாம் தான் வரிசையாக நகர வேண்டும்.ஊசி போட , மாத்திரை சீட்டு வழங்க கொண்டைப் போட்ட நர்ஸ் கிடையாது. அவரே நோயாளியை கவனிக்கிறார்.ஊசி போடுகிறார்.பிறகு மாத்திரை கொடுக்கிறார்.அதிகப் பட்சம் யாருக்கும் மாத்திரை எழுதி தருவதில்லை.
 டாக்டரின் செயல்கள் மேலும் ஆச்சர்யப் படுத்தின. எத்தனை பேர் இருந்தாலும் எடுத்த பொருள்களை அதே இடத்தில , எப்படி இருந்ததோ அப்படியே வைக்கிறார். அலமாரியில் இருந்து ஒரு மருந்து எடுத்து கொடுத்தால் , அதனை அவரின் மேஜை மேல் வைப்பதில்லை.அடுத்த பேசன்ட் இருந்தாலும் மீண்டும் அதே இடத்தில வைத்த பிறகு தான் அடுத்தவர். பெரும்பாலும் காய்ச்சல்,மூட்டு வலி, உடம்பு வலி எனும் தினசரி நாம் சந்திக்கும் விஷயங்கள் அடங்கிய நடுத்தர வசதி கொண்டவர்கள் தான் அதிகம் வருகிறார்கள் .ஊசிப் போட்டு , மாத்திரை கொடுத்த பிறகு ஒரே மாதிரி ஐம்பது ரூபாய் கட்டணமாக பெறுகிறார்.

வரவேற்பு மேஜை கிடையாது, மருத்துவம் செய்ய நர்ஸ் கிடையாது, உதவியாளர் என்று யாரும் கிடையாது. எல்லாமும் அவரே . இதில் என்ன அதிசயம் என்றால் , கிராமத்தில் , வளரும் நகரத்தில் தனியாய் ஒருவர் இப்படி இருக்கலாம் . மிகப் பெரிய நகரத்தில் முக்கியப் பகுதியில் தனி மனிதனாய் . ஆச்சரியம் என்னவெனில் அவருக்கு வயது 75 மேல் . நான் அங்கு போன காரணம் நண்பர் ஒருவருக்கு தன்னுடைய  அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டிய மருத்துவ சான்றிதழ் வாங்குவதற்கு. பழம் தின்று கொட்டைப் போட்ட அந்த டாக்டர் , அவ்வளவு  கூட்டத்திலும் எங்களுக்கு வழங்கினார். எந்த ஒரு அவசரம் கிடையாது. அப்படியா என கேட்டார்.பாரம் வாங்கிட்டு வந்தாச்சா , இல்லை என்றதும் வாங்கிட்டு வந்திருங்க என்றார். அவ்வளவு தான்.

மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா


1 comment:

  1. Siva
    In Chennai Rayapuram also we have one Doctor who used to take Rs 10 from each patient in 2006 now I am not sure how much he is taking from Patient. May be 20 ?

    ReplyDelete

கருத்து மேடை