குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Wednesday 18 July 2012

ஆடி வந்த , ஆடி அமாவசை நினைவுகள் - பக்தியையும் தாண்டியது

வணக்கம்

 பதிவு எழுத எத்தனையோ விஷயம் இருந்தாலும் , நாம் எழுதிய சில எழுத்துக்கள் படிக்கும் போது ஒரு பரவசம் ஏற்படும் . இந்தப் பதிவு நான் எழுதிய பதிவையே திருப்பி வேறு ஒரு தலைப்பில் இடுகிறேன் . இதனின் லிங்க் கொடுத்தால் பார்த்து படிக்க உங்களின் இதயம் இடம் கொடுத்தாலும் மனம் கொடுக்காது. எனவே அதனை அப்படியே கொடுக்கிறேன். படித்தப் பாருங்கள் .நிறைவாய் இருந்தால் மகிழ்ச்சி . இல்லாமல் போனாலும் மகிழ்ச்சி.இந்தப் பதிவு எழுதிய காலம் சென்ற வருடம் அக்டோபர் மாதம்.




எங்கள் வீட்டிலிருந்து மீனாக்ஷி கோவிலுக்கு பேசிக் கொண்டே நடந்தால் கூட பத்து நிமிடங்களில் சென்று விடலாம்.அவ்வளவு அருகில் வீடு இருந்தது .பண்டிகை காலத்திலும் , செவ்வாய் ,வெள்ளி போன்ற நாட்களிலும் ,தெருவின் முனையில் பிள்ளையார் இருந்தாலும்,அவரை பார்த்து விட்டு கோவிலுக்கு செல்வது வழக்கமாகி இருந்தது.என்னுடைய பால்ய வயதில்.அப்போது எல்லாம் தெருவில் இருக்கும் பெண்கள் அனைவரும் தினமும் செல்வது ஒரு பழக்கமாகவே கொண்டிருந்தார்கள்.


அப்போது சிறுவர்கள் நாங்களும் அடிக்கடிசென்று வருவோம் .அதிலும் குறிப்பாக ஆடி அமாவாசையின் அன்று கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் அதிகாலையில் நீராட போவோம்.எங்கள் வீடு அருகில் இருந்த காரணத்தினால் தொடர்ந்து சில வருடங்கள் சென்று குளித்து வந்தோம் .அந்த நாட்களில் மதுரையின் பல பகுதிகளில் இருந்தும் ,அருகில் இருக்கும் ஊர் மக்கள்,அந்த நாளில் நீராட வேண்டும் என்பதற்காக மதுரை அல்லாத பல ஊர்களில் இருந்தும் வருவார்கள்.

எங்களுக்கு அது ஒரு விஷேச நாட்களை அமைந்தது.தெருவில் இருக்கும் எங்கள் நண்பர்கள்,சுற்றத்தில் இருப்பவர்கள்,சொந்தபந்தங்கள் அனைவரும் கூடிவிடுவோம்,காலை நான்குமணிக்கு எழுந்து விடுவோம் .எங்களை கூட்டி செல்ல பெரியவர்கள் சிலரும் எங்களுடன் வருவார்கள்.பனி எவ்வளவு பெய்தாலும் ,அங்கு சென்று குளித்து வந்தோம்.எங்களுக்கு அது ஒரு சின்ன சுற்றுலா போல இருக்கும்..கோவிலை சுற்றி பிறகு வந்து சாப்பிடுவோம்.அது ஒரு ஏகாந்த காலம்.அப்போது இருந்த குளத்தை பாருங்கள்.




இன்று காலை கோவிலுக்கு சென்றிருந்தேன் .இடையில் பல முறை போயிருந்தாலும் இன்று தான் இரண்டு மணி நேரம் இருந்தேன்,இன்று வெள்ளியாக இருந்தாலும் ,கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.தரிசனம் முடித்து வந்து குளத்தில் அமர்ந்தேன்.பொற்றாமரைகுளத்தை பார்த்தப்போது வருத்தமாக இருந்தது .குளத்தில் தண்ணீர் இல்லை .குளிக்க மட்டும் காலை கூட நனைக்கமுடியது.சுற்றிலும் கம்பி போட்ட வேலிகள். மதுரையை தவிர்த்து தமிழ் நாட்டின் ,இந்தியாவின் ஏன் உலகில் பல பகுதிகளில் இருந்து வந்தவர்களுக்கு அந்த குளம் நினைவுப் புகைப்படம் எடுக்க மட்டும் பயன் படுகிறது .அவர்களை போல் நாமும் எத்தனை இழந்திரிப்போம்.


எதைப் பெற்று இதை இழந்தோம் , இப்போது அந்த குளத்தை பாருங்கள்




பால்ய நினைவுகளை மீட்டு கொடுத்த இந்த குளத்திற்கும் உயிர் இருப்பதாகவே கருதுகிறேன் .



மீண்டும் சிந்திப்போம்.


உண்மையுடன்

அவனி சிவா


1 comment:

கருத்து மேடை