குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Monday 23 July 2012

இப்படிதான் ஆரம்பிக்குது மூடநம்பிக்கைகள்


வணக்கம்


செவ்வாய் அன்று ஏதாவது ஒரு விசயத்தை செய்யப் போனால் , இன்னைக்கு வேணாம் செவ்வாய் வெறும் வாய் என வாய்க்கு வந்த மாதிரி சொல்லி நம்ம வாயை மூடப் பார்ப்பாங்க . நாம மூடினா முடிஞ்சது எல்லாம் , அடுத்து எத செஞ்சாலும் எதாவது ஒன்னச் சொல்லி எதுவும் செய்ய விட மாட்டங்க ஆனா அதே நேரத்தில செவ்வாய் வெரும் வாய் கிடையாது., வருவாய் அப்படின்னு சொல்லிப் பாருங்க எல்லாம் நல்லாவே நடக்கும்.எங்க கடவுள் எல்லா நாளையும் , எண்களையும்  , வண்ணங்களையும் , படைச்சது  நல்லதுக்குதான் இந்த மாதிரி நிறைய விஷயம் இருக்கு அதுல போனா பதிவு முடியாது.இந்த மாதிரி நம்பிக்கைகள் இப்படிதான் வந்திருக்கும் .




ஒவ்வொரு மனுஷனுக்கு ஒரு பீலிங் இருக்கிற மாதிரி , எல்லா மேட்டருக்கும் ஒரு கதை இருக்கும்.இந்தக் கதையை  படிங்க


ஒரு ஊர்ல ஒரு சாமியார் ஆசிரமம் இருந்துச்சு. அவருக்கு பல சீடர்கள் இருந்தாங்க , தினமும் பூஜை நடக்கும் . ஒரு நாள் பூஜையின் போது  குறுக்கும் , நெடுக்குமாய் ஒரு பூனை வந்தது .பூஜையின் போது இப்படி நடக்குதே அப்படின்னு பூனையை அருகில் இருக்கும் கம்பத்தில் கட்டி போட சொன்னாரு அதன் படியே செஞ்சாங்க.அந்த நாள் முடிஞ்சு அடுத்த நாள் ,அன்னைக்கும் அதே மாதிரி நடந்துச்சு.இப்படியே தினமும் நடந்துச்சு.அந்த பூனை அந்த ஆசிரமத்தில் இருந்ததால இத நிறுத்த முடியல . காலங்கள் போச்சு சாமியார் இறந்துப் போனார் . சில நாளில் அந்தப் பூனையும் இறந்துப் போனது.

சீடர்கள் அனைவரும் ஒரு மனதாக ஒருவரை சாமியாராக நியமித்து கொண்டார்கள் . புதிதாக வந்த சாமியார் பூஜை நடத்த தயாரானார் . கண்களை மூடியவர்.உடனே திறந்து , சீடர்களே பூஜை நடக்கும் போது ஒரு பூஜை கம்பத்தில் கட்டிப் போட  வேண்டும் என்பது  தெரியாதா என , அவரால் முடிந்த ஒரு நம்பிக்கையை பரப்பினார்.



மீண்டும் சிந்திப்போம்

அவனி சிவா 

3 comments:

  1. என்னுடைய முதல் வருகை என்னோடோ நீங்களும் வாங்க
    வந்துட்டேன்

    ReplyDelete
  2. ஹா..ஹா.. நல்லா சொல்லி இருக்கீங்க...
    நன்றி... தொடருங்கள்

    ஒரு பூஜை கம்பத்தில்...... - ஒரு பூனையை கம்பத்தில்.....
    என்று மாற்றவும். நன்றி..

    என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

    ReplyDelete
  3. இப்பூனைக் கதையை "இன்னதை இதற்காகத்தான் செய்வது எனும் ஆய்வின்றி ஒருவர் செய்தாரே என்பதற்காகத் தொடர்ந்து செய்வதற்காக " என் தந்தையார் வேறுமாதிரியாக இக்கதையை கூறக்கேட்டுள்ளேன்.
    ஒரு கிராம வைத்தியர் , அவர் பூனை ஒன்று வளர்க்கிறார், அப்பப்போது வாகடத்தில் உள்ள சில மருந்துகளை அரைப்பார். அப்போது அவருக்குக் கிட்டே வந்து பூனை உரசும், அப்பூனை உரோமம் அரைக்கும் மருந்துள் விழுந்து விடுமென்பதால், மருந்து அரைக்கும் போது பூனையைக் தன் குடிசையில் உள்ள கம்பம்ஒன்றில் கட்டிவிடுவார்.
    காலம் காலமாக இதை அவர் மகன் பார்க்கிறார்.
    இப்படியே குடிசை நல்ல பெரிய வீடாகிவிட்டது , மகனும் வளர்ந்து தந்தையிடம் வைத்தியக் கலையை கற்றுத் தேறி, நோயாளிகளைக் கவனிக்கிறார்.
    தந்தை காலமாகி விட்டார், பூனை இறந்து விட்டது.
    குறிப்பிட்ட ஒரு மருந்து , முடிவடைந்து விட்டது. அரைத்தேயாகவேண்டும். வாகடத்தைப் புரட்டிய , மகனுக்கு மருந்துக்குரிய இலைகுழையுடன், அப்பா பூனையை கம்பத்தில் கட்டுவது ஞாபகம் வர, தன் எடுபிடிகளிடன் ஒரு பூனையைக் கொண்டுவரும்படி கூறி , குடிசையில் கட்டக் கம்பம் இருந்தது; இந்த பெரிய வீட்டில் கம்பமில்லையென்பதால், நடுவீட்டில் கிடங்கு கிண்டி கம்பம் நட்டு, பூனையைக் கட்டி
    அந்த மருந்தை, அரைத்து முடித்தாராம்.
    அதாவது , அப்பா ஏன் ? பூனையைக் கட்டினார்.என்பதன் விளக்கம் அற்றவராக, பூனை கட்டுவதைச் சடங்காக்கி விட்டார்.
    இப்படிப் பலர் உள்ளார்கள்.
    போத்துக்கீசர், ஒல்லாந்தர் காலத்தில் இலங்கையில் கட்டாய மதமாற்றம் இருந்தது. அப்போ சைவசயம விரதங்கள் விழாக்கள் எதுவுமே கொண்டாட முடியாதாம். காவலாளிகள் ஒவ்வொரு சைவ வீட்டுக் குப்பை
    மேட்டை சோதனையிட்டு அதில் விரதத்துக்குக் சாப்பிட்டுவிட்டு போட்ட வாழையிலை கிடந்தால் அபராதம் விதிப்பார்களாம்.
    அதனால் அன்றைய நாட்களில் விரதச்சாப்பாடு சாப்பிட்டவர்கள் , உண்ட இலையை வீட்டில் கூரையுள்
    சொருகி வைத்து விடுவார்களாம்.
    இதுவே நாளடைவில் பழக்கமாகி , விரதம் சாப்பிட்ட இலைகள் கூரையில் செருகவேண்டுமெனும் சம்பிரதாயமானது.பின் ஆங்கிலேயர் ஆட்சி வந்து, 48ல் சுதந்திரம் வந்தபின்பும், என் ஆச்சி (அம்மாவின் தாயார்) 60ல் விரதத்துக்குச் சாப்பிட்ட இலையை , எங்கள் ஓட்டு வீட்டின் கூரையுள் செருகினார்.
    இப்படி பல பல கூறலாம்.

    ReplyDelete

கருத்து மேடை