குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Friday, 27 July 2012

சிற்றிம்பம் - பெருந்துன்பம் - சார்ந்திருப்பதின் சங்கடங்கள்

வணக்கம் வாழ்கையில் நாம் யாரையோ சார்ந்தே வாழ்கிறோம். எல்லா உறவுகளும் நமக்கு நெருக்கத்தையும் , உருக்கத்தையும் , கிறக்கத்தையும் தருபவை . பணம் , புகழ் , வெளிச்சம் இது நமக்கு தொடர்ந்து தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றன . சிறு வயதில் விளையாட்டிலும் , வாலிப வயதில் காதலிலும் ,நடுத்தர வயதில் பயத்திலும் , முதுமை காலத்தில் அன்பிலும் வாழ்க்கை ஓடி விடுகின்றன.இவையல்லாம் இயல்பாய் இருப்பவை தான் . நடுத்தர வயதில் பணமும் , புகழ் சம்பாதிக்க குடும்பத்தினரை மட்டும் ,அதிலும் ஒருவரை மட்டும் சார்ந்து கால மாற்றத்தில் ஒன்றும் இல்லாமலும் போவதும் உண்டு. குடும்பத்தினர் மட்டும் அல்லாது நண்பர்கள் , பணியாற்றும் நண்பர்கள் உண்டு.


இன்று காலையில் ஒருவரை சந்தித்தேன் . அவரின் தோற்றம் என்னை நிலைகுலைய செய்யவில்லை .அடிமனதில் சிறு மகிச்சியை உணர்ந்தேன். அவரிடம் பணம் பெற்று , குடுக்க முடியாமல் அவரிடம் அவமானப் பட்டு மீண்டும் அவரிடமே பணத்திற்காக போய் நின்றுள்ளேன் .


மதுரையில் இன்று லலிதா நகை மாளிகை இருந்த ஒரு பகுதியில் இருந்தது கோல்டன் ஜுவல் பாரடைஸ். நகை வியாபாரம் மட்டும் இன்றி வீட்டு மனை வியாபாரத்திலும் ஈடுபட்டார்.அப்போது எல்லாம் இப்போது இருப்பதை போன்று ஜடாமுனி , தெற்கு ஆவணி வீதிகளில் மட்டுமே நகை கடைகள் இருந்தன . மிகப் பிரமாண்டமாய் இவர் நகைக்கடை திறந்தார். கூடவே பர்னிச்சர் கடையும் , இதுவே இவரும் முதல் வியாபாரம். ஆட்சியில் இருந்தவர்களும் , காவல் துறையும், ஆட்சியரும் , முக்கிய பிரமுகர்களும் அவரின் வியாபார நடைமுறைகளுக்கு மிகவும் உதவியாய் இருந்தனர்.அவருக்கு மூன்று தம்பிகள் , ஒருவரை தவிர மற்ற இருவரும் அவருடைய நிழலிலும் , அவருடைய வியாபாரத்தையும் பணம் கொடுக்கல் , வாங்கல் தொழிலும் ஈடுபட்டனர்.( எல்லா மட்டத்திலும் அவருக்கு அப்போது செல்வாக்கு இருந்ததால் ) சில காலங்களுக்கு பிறகு அவரின் உண்மை முகம் வெளியே வர , தவறும் வரிசையாக வந்தது. சமயத்தில் சரியானவையும் , தவறாகவே அமைந்தது. விதி அவரை வீதிக்கு அழைத்து வந்தது .


அவருடைய தம்பிகளில் ஒருவர் ஊரை விட்டு ஓடிப் போனார். ஒருவர் பர்னிச்சர் கடையில் வேலைப் பார்த்து வருகிறார்.


அவரை சாராமல் இருந்த இன்னொருவர் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஏதோ சார்ந்திருந்தால் தவறே நடக்கும் என்கிற மாதிரி எடுத்துக் கொள்ள வேண்டாம் . 


வாழ்க்கை என்பது யாரோ ஒருவரை ஒருவர் சார்ந்து தான் போகும் . அண்ணலும் நம்முடைய தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்தால் மகிழ்சியாய் இருக்கும் என்பதை காலையில் பார்த்த மனிதரை பார்த்ததும் புரிந்தது 


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா 

2 comments:

 1. வாழ்க்கை என்பது யாரோ ஒருவரை ஒருவர் சார்ந்து தான் போகும் . அண்ணலும் நம்முடைய தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்தால் மகிழ்சியாய் இருக்கும் என்பதை காலையில் பார்த்த மனிதரை பார்த்ததும் புரிந்தது//

  மிகச் சரியான கருத்து
  எந்த நிலையில் இருந்தாலும்
  தனித்துவத்தைக் காப்ப்தே என்றும் நல்லது
  நல்ல வழிகாட்டும் பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. நன்று..

  ReplyDelete

கருத்து மேடை