குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Tuesday 31 July 2012

புதுமைப் பித்தன் - பதிவுலகில் முதல் விமர்சனம்

வணக்கம்


1958 ல் வெளிவந்த புதுமைப் பித்தன் திரைப்பட விமர்சனம் , வேறு எதையாவது எதிர்ப் பார்த்து ஏமாந்தால் கம்பெனி பொறுப்புக் கிடையாது.


நாட்டை ஆண்டுக் கொண்டிருக்கும் அரசரை சிறை வைத்து , இளவரசரை பைத்தியமாய் மாற்றி அரசவை மருத்துவர் , மற்றும் தளபதிகளின் துணையோடு நாட்டை கைப்பற்ற நினைக்கும் அரசரின் தம்பியிடமிருந்து நாட்டையும் , தந்தையையும் காப்பாற்றும் பித்தன் புதுமை பித்தன் .நாட்டையும் காப்பாற்றி காதலியையும் கைப்பற்றுகிறார். கதை என்னவோ அவ்வளவு தான்.


இளவரசராக நடித்து இருக்கும் எம்.ஜி.ராமச்சந்திரன் நடிப்பில் கொடி கட்டி பறக்கிறார். கத்திச் சண்டையில் பிரமாதப் படுத்தும் அதே நேரத்தில் பித்தனாக நடிக்கும் போது பின்னி எடுக்கிறார் . ( இப்போதுள்ள நடிகர்கள் அவசியம் படம் பார்க்க வேண்டும்  )


அடுத்து கவனிக்கப் பட வேண்டியவர்கள் இரண்டு பேர். ஒருவர் பி.எஸ்.சரோஜா அடுத்தவர் டி .ஆர்.ராஜ குமாரி . ஹன்சிகா நடித்தால் எப்படி இருக்கும் ? அப்படி இருக்கிறார் சரோஜா . அப்படி இருக்கிறார் அதற்கு மேல் நடிக்கிறார் . ஒரு தலையாய் காதலிக்கும் ராஜ குமாரி கண்களை மட்டும் வைத்துக் கொண்டு ஆண்களை ஒரு கை பார்க்கிறார்.


சந்திர பாபு சுவைக்காக , கவுண்டமணியை நினைவு படுத்துகிறார்.


தில்லானா பாட்டுப் பாடி என்ற பாடல் கண்டிப்பாய் வெளி வந்த நேரத்தில் வானொலியில் அடிக்கடி ஒலி பரப்ப பட்டிருக்கும். ஒன்பது பாடல்கள் தஞ்சை ராமையா தாஸ் எழுத்துக்களில் நன்று.


மிக முக்கியமாய் உருப்பிட வேண்டிய ஒன்று . படத்திற்கு கதை - வசனம் எழுதி இருப்பவர் மு.கருணாநிதி .


-  பட்டாபிசேகம் நடக்குறதுக்கு முன்னாடியே வாக்கை மீறுவது தான் அரசின்
    முதல் பாடம்.

-  கடலில் மட்டும் அல்ல , நாட்டிலும் பல திமிங்கிலங்கள் உண்டு.

-  மாற்றான் தோட்டத்திற்கு மனம் இருக்கும் சரி , உன் தந்தைக்கு மனம்    
   இருக்குமா ?

பல வசனங்கள் இன்றைய நடைமுறைக்கு ஒத்து வருகிறது.


இயக்கம் ரமான்னா - அவ்வளவு தான் .


பித்தர்களாக இருக்கும் மனிதனை மாற்றும் பித்தன் - புதுமைப் பித்தன்.

1 comment:

  1. நல்ல விமர்சனம்...
    படிக்கும் போது அந்தக்காலத்தில் படம் பார்த்த ஞாபகம் வந்தது...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

    ReplyDelete

கருத்து மேடை