குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Saturday 20 October 2012

வேண்டாங்க திறந்தவெளி - கழிப்பறை தான் நல்ல வழி

வணக்கம்


பருவம் தவறாமல் வெயில் ,  மழை  வருகிறதோ இல்லையோ நோய்கள் மட்டும் தவறாமல் வந்து விடுகிறது ஒவ்வொரு பருவத்திலும். சில ஆண்டுகளுக்கு முன் சிக்குன் குனியா வந்து பல பேருக்கு உடல் நலம் பதிக்கப் பட்டு பின்பு மீண்டு எழுந்தார்கள். இப்போது  டெங்கு காய்ச்சல் என்கிற பூதம் ஒன்று கிளம்பி சிலரின் உயிரை பறித்து கொண்டுள்ளது.அரசும் சில நடவடிக்கை எடுத்துக்கொண்டுள்ளன. போதிய அளவில் மருந்துகளை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கையுருப்பு வைத்துள்ளன.டெங்கு காய்ச்சல்களில் இருந்து நம்மை எப்படி பாதுகாப்பது என்றும்  அதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றும்  நடிகர்களை வைத்தும் பிரச்சாரம் செய்து அதனை திரை அரங்குகளிலும் , தொலைகாட்சிகளிலும் ஒளி பரப்பி வருகின்றனர். உண்மையில் பாராட்டப் பட வேண்டிய விஷயம் இது.இது ஒரு புறம் இருக்க மதுரை மாநகராட்சி ஒரு சுற்றறிக்கை நகர் முழுவதும் கொடுத்து வருகின்றனர். எல்லோருக்கும் சேர வேண்டும் என்கிற எண்ணத்தில் அதனை தருகிறேன்.


அதற்க்கு முன் ஒரு விஷயம் .என்ன தான் வெளியே போவதற்கு வெஸ்டர்ன் டோஇலேட் இருந்தாலும் நம்ம மக்கள் அந்த கடமையை செய்வதற்கு வெளியே தான் போகிறார்கள் . மாற்றி கொள்வார்கள் என்று நம்புவோம்.

இனி அதன் சாராம்சம்


நமது நாட்டில் நீர் தொடர்பான நோய்களால் ஒவ்வொரு பதினைந்து வினாடிக்கு ஒரு குழந்தை இறக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் 3.77 கோடி பேர் நீரால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்திய மக்கள் தொகையில் 58 விழுக்காடு பேர் திறந்த வெளியில் மலம் கழிகின்றனர்

 திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏரி , குளம் , சாலை ஓரம் , கண்மாய் , வயல் வெளிகள் சீர்கேடு அடைகின்றனர்.

 இருட்டும் வரை காத்திருந்து இயற்கை கடன்களை களிக்க செல்லும் பெண்கள் மலச்சிக்கல் உடல் குறைவு ,பாலியல் தொந்தரவு , விசக்கடிகள் , எதிர்பாராத விபத்துகள் உளநல பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு இடர்களுக்கு ஆளாகின்றனர்.

ஒரு கிராம் மலத்தில் 1 கோடி வைரஸ் கிருமிகள் ,10 லட்சம் பாக்டீரியா , 1000 ஒட்டுண்ணிகள் , 100 ஒட்டுண்ணி முட்டைகள் உள்ளன.

மனித கழிவுகளின் கிருமிகள் சுத்தமற்ற நம் கைகள் மூலமும், ஈக்கள் ,நீர் வாயிலாகவும் வாய் வழியாக நம் உடலுக்கு பரவுகின்றன.இதனால் மலேரியா படை, சொறி , சிரங்கு , வய்ற்றுப்போக்கு , இளம்பிள்ளை வாதம் , தொழு நோய் , டைபாடு உருவாகும்.

மனித கழிவு , செடியுலுள்ள காய்கறி , பழங்களில் ஒட்டி அதை கழுவாமல் சாப்பிடும் போது  கிருமிகள் நம் உடலுக்குள் செல்கின்றன.

 செருப்பு அணியாத கால்களால் நடக்கும் போது நம் பாதங்களில் ஓட்டும் மலம் வாயிலாக கொக்கிப் புழு தொற்று உடம்புக்குள் செல்கிறது . இதனால் ரத்த  சோகை ஏற்படுகிறது.


அதனால் நாம் மறக்காமல் செய்ய வேண்டியது


திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்டி முறையாக பயன் படுத்த வேண்டும்.

சொந்த கழிப்பறை இல்லாதவர்கள் பொது கழிப்பறையை பயன் படுத்துதல் வேண்டும் . அதனை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.


மலம் கழித்தப் பின்பு கை , கால் , முகத்தினை சோப் போட்டு கழுவ வேண்டும்.


மழை  நீர் வாய்காலில் மலம் , சலம் கழிக்காமலும் , கழிவு நீர், கழிவு நேர் கலக்காமலும் பாதுகாப்போம்.

டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் பெருகுவதை தடுக்க கண்ட இடங்களில் மழைநீர் மற்றும் தண்ணீர் தேங்கமால் பார்த்துக் கொள்வோம்.


மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா




No comments:

Post a Comment

கருத்து மேடை