குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Saturday 13 October 2012

ஆசைபட்டா அம்மாவை கூட வாங்கலாம் - கரண்டை தான் வாங்க முடியாது

வணக்கம்

ஒரு மிக நீண்ட  இடை வெளியில் மீண்டும் இன்று பதிவிடுகிறேன் . சுமார் முப்பது நாட்கள் ஆகி விட்டது பதிவிட்டு . மறுபடியும் முதல்ல இருந்தா என யாரும் பயப் பட வேண்டாம். இந்த ஒரு வருடம் சில நல்ல பதிவையும் , பல சுமாரான .பதிவையும் , சில மோசமான பதிவையும் பதிவிட்டேன். . வாழ்த்தியவர்களுக்கும், வசைபாடினவர்களுக்கும் என்ன சொல்ல முடியும் , நன்றியை தவிர . நெஞ்சார்ந்த நன்றி .இனி பதிவிற்கு செல்வோம்.

இந்த ஒரு வருடத்தில் நான்கு வேலை மாறிவிட்டேன். எல்லா அலுவலகத்திலும் எனக்கு பதிவிட எங்கும் ஆட்சேபனை ஏற்பட்டது கிடையாது.. இப்போது வேலை பார்க்கும் அலுவலகத்தை தவிர. இடைப்பட்ட நேரத்தில் வெளியில் காசு கொடுத்து பதிவிடும் அளவிற்கு நல்ல வரவேற்ப்பு இருந்தது..இப்போ காசு கொடுத்துக் கூட பதிவிட முடியாத நிலை . ( காசு இல்லன்னு சொன்னாலும் ) கரண்டு சுத்தமாய் இல்லை.


ஆசைப்பட்ட   எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் . அம்மாவை வாங்க முடியுமான்னு ஒரு பாட்டு , துட்டு இருந்தா அம்மாவை கூட வாங்கலாம் , கரண்டை வாங்க முடியாதுன்னு இப்போ எழுதியுருப்பாங்க போலும். காலையில் ஆறு மணிக்கு எழுந்திருப்பது என் வழக்கம் . அப்போ இருக்காது.வேலைக்கு போகிற வரை வராது. . அலுவலகம் பத்து  போனா அங்கயும் இருக்காது.. இரண்டு மணிக்கு சாப்பிட வெளியே வந்தா அங்க அப்ப தான் போயுருக்கும் . திருப்பி அலுவலகம் போனா இப்போதான் வந்து போச்சு அப்படின்னு சொல்வாங்க ஒரு வழியா அலுவல் முடிச்சு ஆறு மணிக்கு கிளம்பி வீட்டுக்கு ஏழு மணிவாக்கில் போனா அங்கயும் இப்போ தான் போச்சுன்னு சொல்ல , சரி சனியன் வரும் போது வரட்டும் நம்ம வேலையாவது பார்க்கலாம் அப்படின்னு உட்காரும் போது ஒரு ஒன்பது வாக்கில் வந்துரும் . அப்பாடான்னு சாப்பிட உட்கார்ந்து பத்து நிமிடம் ஆகியுருக்கும் மறுபடியும் போயுரும் , நனைச்ச கையை மறுபடியும் கழுவதற்கு பதிலா சாப்பிட்டு முடிச்சு தூங்க போகும் போது வந்து நிம்மதியை கொடுக்கும்.. நல்லா தூக்கம் வரும் போது மறுபடியும் போயி துக்கம் வந்துரும்.அப்புறம் அப்பப்ப வந்து வந்து போகும் . மறுபடியும் விடியும் மறுபடியும் சனியன் பிடிக்கும்.


எனக்கு என்ன புரியல்லன்னா ஆற்காடு வாங்கின அளவுக்கு நத்தம் அவங்களுக்கு கிடைக்கல . அய்யாவை வாங்கு வாங்குன்னு வாங்கின் மீடியா அம்மாவை ஒண்ணும் செயல்ல .

இந்த பாராவை எழுதின பிறகு யாரும் நான் அய்யா கட்சியை சேர்ந்தவர்னு நினைக்க வேணாம் .


மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா 






4 comments:

  1. தினமும் சிரமம் தான்... நாளுக்கு நாள் மின் வெட்டு அதிகமாகிக் கொண்டே தான் வருகிறது...

    ReplyDelete
  2. அடுத்த தடவை பாமக கட்சி தலைவர் ராமதாசுக்கு வோட் போட்டு அவரை முதல்வராக்கினால் இந்த பிரச்சினைகள் அனைத்தும் தீரும், தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடும். மரங்கள் செழித்து வரும் (நாங்க ஆட்சிக்கு வந்தா யாரு மரத்தை வெட்டுவது)
    எந்த கூட்டணியில் இருப்பார் என்று இப்போது என்னால் கூறமுடியாது - நிச்சயமாக ஏதாவது கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பார்.

    தெரிவிப்பது - ராமதாஸ் அவர்களின் கால் செருப்பான தொண்டன் அருள் (ARUL GREEN )

    ReplyDelete
  3. //எனக்கு என்ன புரியல்லன்னா ஆற்காடு வாங்கின அளவுக்கு நத்தம் அவங்களுக்கு கிடைக்கல . அய்யாவை வாங்கு வாங்குன்னு வாங்கின் மீடியா அம்மாவை ஒண்ணும் செயல்ல .
    //

    உண்மை உண்மை எல்லாம் பயம் தான்

    ReplyDelete
  4. ஒரு வருடத்தில் நான்கு வேலைகளா? உங்கள் திறமைகேற்ற வேலை இன்னும் கிடைக்க வில்லையா? இல்லை வேற எதாச்ச்மா

    ReplyDelete

கருத்து மேடை