குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Monday 24 December 2012

நீரிழிவு இருக்கா? இந்த காய்கறிளை சாப்பிடுங்க...


வணக்கம்


நன்றி - தின இதழ் கண்ணன் மற்றும் தன்னம்பிக்கை நண்பர்கள். படம் மட்டும் நானாக சேர்த்தது , அதற்கும் கூகுளுக்கு நன்றி .


தற்போது நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையில் இந்தியா முதலில் உள்ளது. ஏனெனில் இந்தியர்கள் எந்த ஒரு உணவிலும் சரியான கட்டுப்பாட்டுடன் இல்லாததால், பாரபட்சமின்றி நோய்கள் உடலைத் தாக்குகின்றன. அவ்வாறு தாக்கும் நோயில் ஒன்று தான் நீரிழிவு. அதிலும் அந்த நோய் வந்தால், அதற்கான டயட சார்ட்டை தயார் செய்வது என்பது மிகவும் கடினம்.

பழங்கள் மற்றும் காய்கறி கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தந்தாலும், நீரிழிவு நோயளிகளுக்கு சில நேரங்களில் அவை கெடுதலை விளைவிக்கும். ஏனெனில் நிறைய காய்கறிகளில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பொருள் உள்ளது. உதாரணமாக, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் போன்ற காய்கள் அனைத்தும் உடலுக்கு மிகவும் சிறந்தவை. ஆனால், அது நீரிழிவு உள்ளவர்களுக்கு சிறந்தது அல்ல.

ஆகவே இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எந்த ஒரு உணவை உண்ண வேண்டுமென்றாலும், மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. அதிலும் உண்ணும் காய்கறிகள் மற்றும் பழங்களில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நிச்சயம் இனிப்பு உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காய்கறிகள் தான் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம், அவற்றிலும் இனிப்புகள் அதிகம் இருக்கும் காய்கறிகளும் உள்ளன.

எனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், எந்த காய்கறிகளை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதைப் பார்ப்போமா....

பாகற்காய் :
நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த பாகற்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

வெந்தயக் கீரை :

கீரை வகைகளில் வெந்தயக் கீரையை சாப்பிட்டு வந்தால், நீரிழிவைத் தடுக்கலாம். இந்த கீரையில் உள்ள லேசான கசப்பு சுவையானது, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை குறைக்கிறது.

வெண்டைக்காய் :
 

வெண்டைக்காயை நறுக்கும் போது வரும் ஒருவித பசை போன்ற நீர்மம், நீரிழிவைக் கட்டுப்படுத்தும். அதற்கு இரவில் தூங்கும் போது வெண்டைக்காயை இரண்டாக கீறி, ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, அதிகாலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

சுரைக்காய்:
 
இன்சுலின் குறைபாட்டினால் வரும் நீரிழிவை, சுரைக்காயின் சாற்றை எடுத்து, காலையில் குடித்து வர சரியாகும்.

லெட்யூஸ் (Lettuce) :
இந்த பச்சை இலைக் காய்கறியில் நார்ச்சத்து அதிகமாகவும், சர்க்கரையின் அளவு குறைவாகவும் உள்ளது. ஆகவே இதனை சாப்பிடுவது நல்லது.

காலிஃப்ளவர்:
 
மற்ற காய்கறிகளைப் போன்று, காலிஃப்ளவர் இனிப்பு சுவையற்றது. ஆகவே இதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால், உடலானது நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இனிப்பு சுவை இல்லாத காய் என்பதால, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.

பூசணிக்காய் :

அனைவருக்குமே பூசணிக்காய் இனிப்பு சுவையுடையது என்பது தெரியும். ஆனால் அவற்றில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக இருக்கும். எனவே தான் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு காய்கறி.

பிரெஞ்சு பீன்ஸ்:

பிரெஞ்சு பீன்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. எனவே இதனை நீரிழிவு உள்ளவர்கள் உண்டால், நீரிழிவைத் தடுக்கலாம்.


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா 

5 comments:

  1. வெஜிடேரியனா மாறிடுங்கன்னு சொல்லாமல் சொல்றீங்க:)

    உணவில் பேலன்ஸ் டயட் ஒன்று மட்டுமே சிறந்த உணவு.ஹார்போ ஹைட்ரேட் குறைத்துக்கொள்வது சர்க்கரை வியாதிக்கு உதவக்கூடும்.பாகற்காய் சூஸ் குடிப்பதெல்லாம் தொடர்ந்து செய்ய இயலாத காரியம்.நண்பன் ஒருவர் முயற்சி செய்து விட்டு இட்லி,தொட்டுக்க இட்லிப்பொடி மாதிரி வருமான்னு விட்டு விட்டார்.

    நீரிழிவு நோய்க்காரர்களுக்கு உணவு கட்டுப்பாடும், ஊசியும்,மாத்திரையும் மட்டுமே சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.விடாமுயற்சியாக தினமும் யோகா செய்ய முயற்சி செய்யலாம்.

    ReplyDelete
  2. இன்னுமொன்று தோன்றியது காய்கறி ஜூஸ்ல சர்க்கரை குறையுமென்றால் எத்தனை ஜூஸ் செய்றோம்,இதை செய்ய மாட்டோமா என கார்பரேட் நிறுவனங்கள் ஒரு அஞ்சாறு பேருல சர்க்கரை பிராண்ட் நிறுவியிருப்பார்கள்.

    நமது உணவு அரிசியை அடிப்படையாக கொண்ட ஹார்போ ஹைட்ரேட் நுகர்வு என்பதால் உடலுக்கு நிறைய வேலை அவசியம்.அவசரம்,நீண்ட பயணம் தவிர பந்தாவுக்கு காரே ஓட்டக்கூடாது. முடிஞ்சா பைக்கையெல்லாம் விட்டுட்டு சைக்கிள் வாங்கி உபயோகிக்கலாம்.முன்பெல்லாம் ஐந்து மைல் எட்டு மைல் சைக்கிள் பயணமென்பதெல்லாம் சர்வ சாதாரணம்.

    ReplyDelete
  3. மிகவும் பயன் தரும் தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. மிகவும் பயன் தரும் தகவல்கள். நன்றி நன்றி நன்றி.

    ReplyDelete
  5. dhinandhORum kidaikkum kaaigaLil sarkkaraiyai kattuppaduththum vagaigaLai mattum paguththu ezhudhiya riyaaz ahamadhukku vaazhththukkaL nandRiyudan.

    ReplyDelete

கருத்து மேடை