குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Saturday 15 December 2012

பில்கேட்ஸ் ஆனாலும் மனைவி ஆனாலும் ....... நீதி வெல்லும்


வணக்கம்


ஒருநாள் பில்கேட்ஸ் இறந்து வானுலகம் சென்றார். அங்கே எமனுக்கு ஒரே குழப்பம்..
பில்கேட்ஸை பார்த்து 'எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது, உங்களை சொர்க்கத்திற்கு அனுப்புவதா , இல்லை நரகத்திற்கு அனுப்புவதா என்று,நீங்கள் கணணி விசயத்தில் எவ்வளவோ நல்லது செய்தாலும் மக்களை நீங்கள் ரொம்பவே ஏமாத்தி இருக்கிறீர்கள்.

நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.... நீங்களே எங்கு செல்லவேண்டுமென்று முடிவ
செய்துகொள்ளலாம்..'

இதை கேட்ட பில்கேட்ஸ் ' சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டார்?'

'நீங்களே ஒரு தடவை இரண்டையும் பார்த்து விடுங்களேன் ' என்று எமன் அவருக்கு சாய்ஸ் கொடுத்தார்.

முதலில் ஒரு இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கே அழகான அரண்மனை கடற்கரையில் இருந்தது, அழகான தேவதைகள்
ஆயிரகணக்கில் இருந்தனர். மொத்த இடமும் குளிர் பதன வசதி செய்யப்பட்டிருந்தது..
பில் கேட்ஸ்க்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.. இது என்ன இடம் என்று கேட்டார்.
நரகம் என்று பதில் வந்தது.. அட நரகமே இப்படின்னா சொர்க்கம் எந்த அளவுக்கு இருக்கும் என நினைத்து கொண்டார்.

அப்புறம் சொர்க்கத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கே சாதாரண சிறு சிறு வீடுகள், வெள்ளை மேகங்கள் , அழகான பெண்கள் பாடிக்கொண்டிருந்தனர்.


உடனே பில் கேட்ஸிடமிருந்து பளிச்சென்று பதில் வந்தது..நான் நரகத்திற்கே போறேன்.
உங்கள் விருப்பம் என்று பதில் வந்தது..


2 வாரம் கழித்து எமதர்மன், அமரர் பில்லியனர் எப்படி இருக்கிறார் என்று பார்த்துவரலாம்னு நரகத்திற்கு விசிட் அடித்தார்.

அங்கே ஒரு சுவரில் உடல் முழுவதும் ஆணி அடிக்கப்பட்டு , தீ ஜுவாலைகள் மத்தியில் , கருப்பு குகைக்குள் சாத்தான்களால் சித்திரவதை பண்ணப்பட்டு கொண்டிருந்தார்.

'எப்படி இருக்கிங்க பில் கேட்ஸ்'

'என்ன ஒரு கொடுமை, நீங்கள் காண்பித்த மாளிகை,கடற்கரை, தேவதைகள் எங்கே?' என்று கேட்டார்.

அதற்கு எமதர்மன் அமைதியாக

'ஓ அதுவா ! அது ஒரு ஸ்கிரீன் சேவர் ' (screen saver)


 -----------------------------------------------------------------------------------------------------------------------------------



 

ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்க ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் என்று போட்டிருந்தது.நிறையப்பேர் பணம் கொடுத்து சுற்றி வந்தனர்.கஞ்சனுக்கும் அவன் மனைவிக்கும் ஹெலிகாப்டரில் சுற்ற ஆசை.அதே சமயம் இவ்வளவு செலவாகுமே என்று நினைத்து வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் தயக்கத்தைப் பார்த்த ஹெலிகாப்டர் இயக்குபவர் அவர்களை அழைக்க,அவர்கள் வேண்டாம் என்றனர்.அவரும் விடாமல்,''நீங்கள

் ஹெலிகாப்டரில் ஏறுங்கள்.நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம்.ஆனால் ஒரு நிபந்தனை.நீங்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது சிறிது கூட சப்தம் போடக் கூடாது.சப்தம் போடாதிருந்தால் பணம் வேண்டாம்.ஆனால் சப்தம் போட்டால் உரிய கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும் என்றார்.உடனே மகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் ஏறினர்

ஹெலிகாப்டர் இயக்குனர் வானில் என்னென்னவோ வித்தைகள் செய்ய ஆரம்பித்தார்.குட்டிக் கரணம் போட்டார்.வேகமாக இயக்கினார்.ஆனாலும் சிறு சப்தம் கூட வரவில்லை. கீழே இறக்கியதும் இயக்குனர் அந்தக் கஞ்சனிடம், ''எப்படிங்க,நான் இவ்வளவு செய்தும் நீங்கள் சிறு சப்தம் கூட செய்யவில்லை?''என்று வியப்புடன் கேட்டார்.


அந்தக் கஞ்சனும் பெருமையாக,எனக்கே ஒரு சமயம் கத்த வேண்டும் போல இருந்தது.ஆனாலும் சமாளித்து விட்டேன், என்றான்.அவரும் எந்த தருணத்தில் என்று கேட்க,


கஞ்சன் சொன்னான்,என் மனைவி ஹெலிகாப்டரில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோதுதான்.


# நீதி

என்னதான் இருந்தாலும்... காசேதான் கடவுளடா...
(அப்பாடா.. இருநூறு ரூபாய் மிச்சம்)

 -----------------------------------------------------------------------------------------------------------------------------------

 மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா   
  

No comments:

Post a Comment

கருத்து மேடை