குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Saturday, 13 July 2013

கடவுள் - பக்தன், முதலாளி - தொழிலாளி ,ஆசிரியர் - மாணவன்



வணக்கம் 


மூன்று குட்டிக் கதை


கதை  - 1

முதலாளி தனது நண்பருடன் தொழிற்சாலைக்குள் சுற்றிவந்தார். வழியில் ஒரு எந்திரத்தின் முன் நின்றுகொண்டிருந்த தொழிலாளியை நெருங்கி ஏதோ சொன்னவர் மறுபடியும் நண்பருடன் இணைந்து நடக்கலானார்.
“அந்தத் தொழிலாளிகிட்ட என்ன சொன்னாய்?” கேட்டார் நண்பர்.

“வேலையை வேகமா செய்யணும்னு சொன்னேன்.” சொன்னார் முதலாளி.

“அவருக்கு எவ்வளவு சம்பளம் தர்ற?” கேட்டார் நண்பர்.

“மாசம் ஆறாயிரம் ரூபாய் தர்றேன்.” சொன்னார் முதலாளி.

“அவருக்குக் கொடுக்கிற சம்பளப்பணம் உனக்கு எப்படிக் கிடைக்குது?” கேட்டார் நண்பர்.

“பொருள்களை விற்பதால் கிடைக்குது.” சொன்னார் முதலாளி.

“அந்தப் பொருள்களைச் செஞ்சு கொடுக்கிறது யாரு?” கேட்டார் நண்பர்.

“அந்தத் தொழிலாளிதான்.” சொன்னார் முதலாளி.

“அவரு ஒரு நாளைக்கு எந்த அளவுக்கு பொருள்கள் செஞ்சு கொடுப்பாரு?” கேட்டார் நண்பர்.

“ஆயிரம் ரூபாய் இருக்கும்...” சொன்னார் முதலாளி.

“அப்படின்னா மாசம் முப்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களை அவரு செஞ்சுகொடுக்கிறாரு. ஆனா அவரு செய்ற வேலைக்கு நீ அவருக்கு நல்ல சம்பளம் கொடுக்கிறதுக்கு பதிலா, ‘வேகமா வேலை செய்யணும்’-னு நீ தினமும் சொல்றதுக்காக அவருதான் உனக்கு மாசம் இருபத்து நாலாயிரம் ரூபாய் கொடுக்கிறாரு, இல்லையா?” கேட்டார் நண்பர்.

“ம்...” என்று சொன்ன முதலாளி உடனே சுதாரித்துக்கொண்டு, ”ஆனா இந்த மெஷின்லாம் என்னோடதாச்சே,” என்றார்.

“இந்த மெஷின்களை நீ எப்படி வாங்கின?” கேட்டார் நண்பர்.

“பொருள்களை வித்து அதிலே கிடைச்ச பணத்திலேதான் வாங்கினேன்.” சொன்னார் முதலாளி.

“அந்தப் பொருள்களைச் செஞ்சது யாரு?” கேட்டார் நண்பர்.

இப்போது முதலாளி சொன்ன பதில்: “வாயை மூடிட்டு வா... அவன் காதிலே விழப்போவுது...”


-------------------------------------------------------------------------------------------------------------


கதை  - 2



ஒரு ஊரில் மன்னார்சாமி என்ற பெயருடைய மனிதர் ஒருவர் இருந்தார்.

அவரை எல்லோரும் முட்டாள் என்றும் பிழைக்கத் தெரியாதவர் என்றும் கேலி செய்து வந்தனர்.

இதைக் கேட்டுக் கேட்டு அந்த மனிதருக்கு வெட்கமாகிப் போய்விட்டது. அந்த ஊரின் எல்லையில் ஒரு முனிவர் இருந்தார். அவரிடம் சென்று அந்த மனிதர் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கேட்டார்.

"கடவுளை நினைச்சுத் தவம் செய். உனக்கு வேண்டிய வரத்தைக் கொடுப்பார்..." என்று அந்தச் முனிவர் கூறினார்.

மன்னார்சாமி கடுமையாகத் தவம் இருந்தார். பல நாட்கள் சென்ற பிறகு, கடவுள் அவர் எதிரில் தோன்றினார்.

"பக்தனே, உனக்கு என்ன வரம் வேண்டும்?'' கடவுள் கேட்டார்.

""தவம் செய்தால் கடவுள் வந்து வரம் கொடுப்பார்னு அந்த முனிவர் சொன்னார், அதான்...'' என்றார் மன்னார்சாமி.

""என்ன வரம் வேண்டும், கேள்...'' என்றார் கடவுள்.

"அதான் கேட்டேனே வரம்... அதை கொடு...'' என்றார் மன்னார்சாமி.

இப்போது கடவுளுக்கே குழப்பம் வந்து விட்டது. கடவுள் பிரத்யட்சம் செய்துவிட்டால் யாருக்காவது வரம் கொடுத்தே ஆக வேண்டும்....! அதுவும் தவம் செய்தவருக்குத் தவறாமல் வரம் கொடுத்தே ஆக வேண்டும்.

என்ன செய்யலாம்......!? - கடவுள் யோசித்தார்.

"பக்தா, இப்போது நீ என்ன நினைக்கிறாயோ, அதையே வரமாகக் கொடுக்கின்றேன்... பெற்றுக் கொள்... போ!''

"அய்...யய்ய....யோ... நான் ஒண்ணும் நினைக்கவே இல்லையே!''

"அதான்...'' என்று சொல்லிவிட்டுக் கடவுள் மறைந்து விட்டார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

பலனை நோக்கிய உழைப்புதான் உயர்வைத் தரும்! - எண்ணம் போல் வாழ்வும் கூட, மனதில் நல்லதை நினைப்போம் நல்வழி செல்வோம்... 

--------------------------------------------------------------------------------------------------------=-


கதை  - 3


 வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”

100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”

வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”

“ஒண்ணுமே ஆகாது சார்”

”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா...?”

“உங்க கை வலிக்கும் சார்”

“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா...”

“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”

“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”

“இல்லை சார். அது வந்து...”

“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”

“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”

”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”

------------------------------------------------------------------------------------------------------------


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா

1 comment:

கருத்து மேடை