குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Thursday, 11 July 2013

பெண்கள் புத்தி எப்போதும் முன் புத்தியே ....

வணக்கம்


பெண்கள் புத்தி எப்போதும் பின் புத்தி என ஒரு சொல் வாடை உண்டு.இது எதற்க்காக கூறப்பட்டது , அல்லது இதனின் முழு அர்த்தம் என்ன என்பது சரி வர தெரியவில்லை . என்ன, நம்முடைய முன்னோர்கள் ஏதேனும் ஒரு காராணத்தை வைத்து இதனை சொல்லி இருக்கலாம் .ஆனால் வாழ்க்கையில் இது போல் இருப்பது போல் தோன்றவில்லை.இதற்க்கு ஒரு இரண்டு உதாரணத்தை  பார்ப்போம்.

ஒன்று ; இது இப்போது நடந்த செய்தி நண்பர் ஒருவர் பகிர்ந்துக் கொண்ட செய்தி.அதனை  அப்படியே  தருகிறேன்.


எண்களை தமிழில் சொல்ல தெரியுமா?

பத்தாம் வகுப்பு படிக்கும் பக்கத்து விட்டுப் பெண்ணிடம், தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். அதில், 1-ல் இருந்து 0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி கேட்கப் பட்டிருந்தது. எனக்கு, அது தெரியாது என்பதால், அப்பெண்ணிடமே கேட்டேன்.

உடனே அப்பெண், "1 2 3 4 5 6 7 8 9 0 என்ற எண்ணுக்கு முறையே, க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, 0' என்றாள். "இதை எப்படி மனப்பாடம் செய்தாய்?' எனக் கேட்டேன். அத்தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி, வாக்கியமாக்கி மனப்பாடம் செய்ததாக கூறினாள்.

அதாவது, "க'டுகு, "உ'ளுந்து, "ங'னைச்சு, "ச'மைச்சு, "ரு'சிச்சு, "சா'ப்பிட்டேன், "எ'ன, "அ'வன், "கூ'றினான்; "ஓ' என்றாள்.

இதைக்கேட்டு, வியந்து பாராட்டினேன். இக்காலப் பெண்கள், எதிலும் சளைத்தவர்கள் அல்ல எனப் புரிந்தது. தமிழின் சுவையை, அவ்வாக்கியத்தின் மூலம் அறியவும் செய்தேன். "தமிழுக்கு அமுதென்று பேர்...' என சும்மாவா சொன்னர்கள்?

— மா.தனலட்சுமி மாரிமுத்து, விருதுநகர்.


இரண்டு : ஒரு கதை 

 
 இங்கிலாந்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் ஒரு முறை கிராமங்களை சுற்றிப் பார்க்க குதிரையில் கிளம்பிச் சென்றார்.அப்போது வயலில் ஒரே ஒரு பெண் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தார்.

மன்னர் அவரிடம்,''மற்றவர்கள் எல்லாம் எங்கே?''என்று கேட்க, விசாரிப்பது மன்னர் என்பதை அறியாத அந்த பெண் ,''அவர்கள் எல்லாம் மன்னரைப் பார்க்கப் போயிருக்கிறார்கள்,'' என்று சொன்னார்.

''அப்படியானால் நீங்கள் மட்டும் ஏன் போகவில்லை?''என்று மன்னர் கேட்டார்.

அதற்கு அந்தப்பெண்,''மன்னரைப் பார்ப்பதற்காக ஒருநாள் கூலியை இழக்கும் அளவிற்கு நான் முட்டாள் இல்லை.எனக்கு ஐந்து குழந்தைகள்.அவர்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது.அதனால்தான் போகவில்லை,''என்றார்.

மன்னர் அவரது கையில் சில நூறு பவுண்டு பணத்தைக் கொடுத்துவிட்டு,''உங்களது நண்பர்களிடம் சொல்லுங்கள்.நீங்கள் எல்லாம் மன்னரைப் பார்க்க சென்றீர்கள்.ஆனால் மன்னரோ என்னைப் பார்க்க வந்தார் என்று..''என்றார்.


மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா

No comments:

Post a Comment

கருத்து மேடை